Friday, 31 October 2025

பரதனின் ஏற்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் – 127 (62)

The arrangements of Bharata | Yuddha-Kanda-Sarga-127 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை வரவேற்பதற்கு அயோத்தியில் நடந்த ஏற்பாடுகள்; இராமனை வரவேற்கச் சென்ற பரதன்; புஷ்பக விமானத்தை குபேரனிடம் திருப்பி அனுப்பிய ராமன்...

Bharata carries Rama's sandals in his head

சத்தியவிக்ரமனும், பகை வீரரை அழிப்பவனுமான பரதன், அதைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்து, மகிழ்ச்சியுடன் இருந்த சத்ருக்னனைப் பார்த்து {பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "நகரத்தின் சைத்யங்களிலுள்ள சர்வ தைவதங்களும் {கோவில்களில் உள்ள அனைத்து தெய்வங்களும்} சுகந்த மாலைகளாலும், வாத்தியங்களாலும் சுசயர்களான நரர்களால் {தூய மனிதர்களால்} அர்ச்சிக்கப்படட்டும்.(2) ஸ்துதி புராணஜ்ஞர்களான {துதிகளையும், புராணங்களையும் அறிந்தவர்களான} சூதர்கள், அதேபோல சர்வ வைதாளிகர்கள் {அரசரைப் புகழ்ந்து பாடுபவர்கள்}, சர்வ வாதித்ரகுசலர்களின் சங்கங்கள் {வாத்தியங்களில் திறன்பெற்றவர்களின் கூட்டங்கள்}, கணிகையர் {விலைமாதர்கள்},{3} ராஜதாரங்கள் {அரசரின் மனைவியர்}, அதே போல அமைச்சர்கள், சேனாகண அங்கத்தினரான சைனியத்தார் {படைப்பிரிவுகளைச் சேர்ந்த படைவீரர்கள்}, ராஜர்கள் {க்ஷத்ரியர்கள்}, பிராமணர்கள், சிறந்த தலைவர்கள் {வைசியர்கள்},{4} அதேபோல கணங்கள் {பின்தொடர்பவர்கள் / சூத்திரர்கள்} ஆகியோர் சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான ராமரின் முகத்தைக் காணச் செல்லட்டும்" {என்றான் பரதன்}.(3-5அ) 

யுத்த காண்டம் 127ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்³விம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Bharata carries Rama's sandals in his head

ஷ்²ருத்வா து பரமானந்த³ம் ப⁴ரத꞉ ஸத்யவிக்ரம꞉ |
ஹ்ருஷ்டமாஜ்ஞாபயாமாஸ ஷ²த்ருக்⁴னம் பரவீரஹா || 6-127-1

தை³வதானி ச ஸர்வாணி சைத்யானி நக³ரஸ்ய ச |
ஸுக³ந்த⁴மால்யைர்வாதி³த்ரைரர்சந்து ஷு²சயோ நரா꞉ || 6-127-2

ஸூதா꞉ ஸ்துதிபுராணஜ்ஞாஹ் ஸர்வே வைதாலிகாஸ்ததா² |
ஸர்வே வாதி³த்ரகுஷ²லா க³ணிகாஷ்²சைவ ஸங்க⁴ஷ²꞉ || 6-127-3
ராஜதா³ராஸ்ததா²மாத்யா꞉ ஸைன்யா꞉ ஸேநாக³ணாங்க³னா꞉ |
ப்³ராஹ்மணாஷ்²ச ஸராஜன்யா꞉ ஷ்²ரேணிமுக்²யாஸ்ததா² க³ணா꞉ || 6-127-4
அபி⁴நிர்யாந்து ராமஸ்ய த்³ரஷ்டும் ஷ²ஷி²னிப⁴ம் முக²ம் |

ஹனுமான் சொன்ன விருத்தாந்தம் | யுத்த காண்டம் சர்க்கம் – 126 (55)

Story told by Hanuman | Yuddha-Kanda-Sarga-126 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் நீண்ட பயணத்தையும், அவன் சந்தித்தவர்களையும் குறித்து விளக்கிச் சொன்ன ஹனுமான்...

Lord Hanuman speaking to Bharata

{பரதன்}, "பல வருஷங்களாக மஹத்தான வனத்திற்குள் சென்றிருக்கும் என் நாதரின் பிரீதிகரமான கீர்த்தனத்தை {இனிமையான துதியை} இப்போது நான் கேட்கிறேன்.(1) "ஒரு நரன் ஜீவந்தனாக இருந்தால் {ஒரு மனிதன் பிழைத்திருந்னானால்}, நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஆனந்தத்தை அடைவான்" என்ற இந்த லௌகிகக் கதை {உலகமொழி} எனக்கு கல்யாணமாக {மங்கலமாக} ஒலிக்கிறது {உண்மையாகத் தெரிகிறது}.(2) இராகவருக்கும், கபிக்களுக்கும் {குரங்குகளுக்கும்} இடையிலான சந்திப்பு எந்த தேசத்தில், ஏன் ஏற்பட்டது? கேட்கும் எனக்கு உள்ளபடி தெரிவிப்பாயாக[1]" {என்றான் பரதன்}.(3)

யுத்த காண்டம் 126ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்³விம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Lord Hanuman speaking to Bharata

ப³ஹூனி நாம வர்ஷாணி க³தஸ்ய ஸுமஹத்³வனம் |
ஷ்²ருணோம்யஹம் ப்ரீதிகரம் மம நாத²ஸ்ய கீர்தனம் || 6-126-1

கல்யாணீ ப³த கா³தே²யம் லௌகிகீ ப்ரதிபா⁴தி மே |
ஏதி ஜீவந்தமானந்தோ³ நரம் வர்ஷஷ²தாத³பி || 6-126-2

ராக⁴வஸ்ய ஹரீணாம் ச கத²மாஸீத்ஸமாக³ம꞉ |
கஸ்மிந்தே³ஷே² கிமாஷ்²ரித்ய தத்த்வமாக்²யாஹி ப்ருச்ச²த꞉ || 6-126-3

Wednesday, 29 October 2025

நந்திகிராமம் | யுத்த காண்டம் சர்க்கம் – 125 (46)

Nandigrama | Yuddha-Kanda-Sarga-125 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் அனுப்பப்பட்ட ஹனுமான், ராமனின் வரவை குஹனிடமும், பரதனிடமும் அறிவிப்பது...

Hanuman Bharata and Shatrugna

பிறகு, துரிதவிக்ரமனும், பிரியத்தை விரும்புகிறவனுமான ராகவ ராமன், அயோத்தியை நினைத்து பிரியமானதைக் குறித்துச் சிந்தித்தான்.(1) மதிமிக்கவனும், தேஜஸ்வியுமான அவன் இவ்வாறு சிந்தித்துவிட்டு, வானரர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தி, பிலவங்கமனான ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, சீக்கிரம் துரித கதியில் அயோத்திக்குச் சென்று, நிருபதிமந்திரத்தில் {அரசமாளிகையில்} உள்ள ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிவாயாக.(3) 

யுத்த காண்டம் 125ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சவிம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Hanuman Bharata and Shatrugna

அயோத்⁴யாம் து ஸமாலோக்ய சிந்தயாமாஸ ராக⁴வ꞉ |
ப்ரியகாம꞉ ப்ரியம் ராமஸ்ததஸ்த்வரிதவிக்ரம꞉ || 6-125-1

சிந்தயித்வா ததோ த்³ருஷ்டிம் வானரேஷு ந்யபாதயத் |
உவாச தீ⁴மாம்ஸ்தேஜஸ்வீ ஹனூமந்தம் ப்லவங்க³மம் || 6-125-2

அயோத்⁴யாம் த்வரிதோ க³ச்ச² க்ஷிப்ரம் த்வம் ப்லவகோ³த்தம |
ஜானீஹி கச்சித்குஷ²லீ ஜனோ ந்ருபதிமந்தி³ரே || 6-125-3

Monday, 27 October 2025

பரத்வாஜரின் வரம் | யுத்த காண்டம் சர்க்கம் – 124 (23)

The boon given by Bharadwaja | Yuddha-Kanda-Sarga-124 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தில் இறங்கி, தன் தாய்மார், பரதன் ஆகியோரின் நலனை அவரிடம் இருந்து அறிந்து கொண்ட ராமன்...

Rama meeting sage Bharadwaja

நியதனான லக்ஷ்மணாக்ரஜன் {பணிவுள்ளவனும், லக்ஷ்மணனின் அண்ணனுமான ராமன்}, பதிநான்கு வருஷங்கள் பூரணமான பஞ்சமியில் {மாதத்தின்} ஐந்தாம் நாளில்[1] பரத்வாஜாஷ்ரமத்தை அடைந்து முனிவரை {பரத்வாஜரை} வணங்கினான்.(1) தபோதனரான அந்த பரத்வாஜரை வணங்கிய அவன் {ராமன், பின்வருமாறு} விசாரித்தான், "பகவானே, புரம் அன்னமயமான சுபிக்ஷத்துடன் {அயோத்தி நகரம் அபரிமிதமான உணவுடனும், பிணியில் இருந்து விடுபட்டதாகவும்} இருப்பது குறித்துக் கேள்விப்பட்டீரா?{2} அந்த பரதன் யுக்தமாக இருக்கிறான் {ஏற்ற பொறுப்புக்குப் பொருத்தமாக நடந்து கொள்கிறான்} என்றும், என் மாதாக்கள் ஜீவித்திருக்கின்றனர் என்றும் நம்புகிறேன்" {என்று கேட்டான் ராமன்}.(2,3அ) 

யுத்த காண்டம் 124ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சதுர்விம்ஷ²த்யதி⁴க ஷ²ததம꞉ ஸர்க³꞉

Rama meeting sage Bharadwaja

பூர்ணே சதுர்த³ஷே² வர்ஷே பஞ்சம்யாம் லக்ஷ்மணாக்³ரஜ꞉ |
ப⁴ரத்³வாஜாஷ்²ரமம் ப்ராப்ய வவந்தே³ நியதோ முனிம் || 6-124-1

ஸோ(அ)ப்ருச்ச²த³பி⁴வாத்³யைனம் ப⁴ரத்³வாஜம் தபோத⁴னம் |
ஷ்²ருணோஷி கச்சித்³ப⁴க³வன் ஸுபி⁴க்ஷாநாமயம் புரே || 6-124-2
கச்சித்ஸ யுக்தோ ப⁴ரதோ ஜீவந்த்யபி ச மாதர꞉ |

Friday, 24 October 2025

கிஷ்கிந்தையில் நின்றது | யுத்த காண்டம் சர்க்கம் – 123 (57)

Halt at Kishkindha | Yuddha-Kanda-Sarga-123 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தாங்கள் தங்கியிருந்த இடங்களையும், போர்க்களத்தையும், நளசேதுவையுமென அயோத்தி வரை அனைத்து இடங்களையும் புஷ்பக விமானத்தில் இருந்து சீதைக்குச் சுட்டிக் காட்டிய ராமன்...

Sugreeva summoning Tara

இராமனின் அனுமதியுடன், ஹம்சங்களுடன் கூடிய அந்த உத்தம விமானம், காற்றால் ஏவப்படும் மஹாமேகத்தைப் போல ஆகாசத்தில் எழுந்தது.(1) அப்போது, ரகுனந்தனனான ராமன், அனைத்துப் பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தியபடியே, சசியைப் போன்ற முகத்தைக் கொண்ட மைதிலியான சீதையிடம் {பின்வருமாறு} கூறினான்:(2) "வைதேஹி, கைலாச சிகரத்தின் வடிவிலான திரிகூட சிகரத்தில் விஷ்வகர்மனால் நிர்மிதம் செய்யப்பட்டு நிலைத்திருக்கும் லங்கையைப் பார்ப்பாயாக.(3) சீதே, மாமிசம், சோணிதத்தால் சேறாகியிருப்பதும், ஹரீக்கள், ராக்ஷசர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியதுமான இந்த மஹத்தான போர்க்களத்தைப் பார்.(4) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, வர தத்தம் பெற்றவனும், பிரமாதியும் {மக்களைத் துன்புறுத்தியவனும்}, உனக்காக என்னால் கொல்லப்பட்டவனுமான ராக்ஷசேஷ்வரன் ராவணன் {சாம்பலாகி} இங்கே கிடக்கிறான்[1].(5)

யுத்த காண்டம் 123ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்ரயோவிம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Sugreeva summoning Tara

அனுஜ்ஞாதன் து ராமேண தத்³விமானமனுத்தமம் |
உத்பபாத மஹாமேக⁴꞉ ஷ்²வஸனேனோத்³த⁴தோ யதா² || 6-123-1

பாதயித்வா ததஷ்²சக்ஷு꞉ ஸர்வதோ ரகு⁴நந்த³ன꞉ |
அப்³ரவீன்மைதி²லீன் ஸீதாம் ராம꞉ ஷ²ஷி²னிபா⁴னனாம் || 6-123-2

கைலாஸஷி²க²ராகாரே த்ரிகூடஷி²க²ரே ஸ்தி²தாம் |
லங்காமீக்ஷஸ்வ வைதே³ஹி நிர்மிதான் விஷ்²வகர்மணா || 6-123-3

ஏததா³யோத⁴னம் பஷ்²ய மான்ஸஷோ²ணிதகர்த³மம் |
ஹரீணான் ராக்ஷஸானான் ச ஸீதே விஷ²ஸனம் மஹத் || 6-123-4

அத்ர த³த்தவர꞉ ஷே²தே ப்ரமாதீ² ராக்ஷஸேஷ்²வர꞉ |
தவ ஹேதோர்விஷா²லாக்ஷி ராவணோ நிஹதோ மயா || 6-123-5

Thursday, 23 October 2025

புறப்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் – 122 (28)

Set to depart | Yuddha-Kanda-Sarga-122 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் ஆணையின் பேரில் வானரர்கள் அனைவருக்கும் வெகுமதியளித்த விபீஷணன்; அனைவருடன் சேர்ந்து ராமனும், லக்ஷ்மணனும், சீதையும் அயோத்திக்குப் புறப்படுதல்...

Pushpaga Vimana flying in the sky

விபீஷணன், "அந்தப் புஷ்பக விமானம், புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்டு ஆயத்தமாக இருக்கிறது" என்று அருகில் நின்று கொண்டிருந்த ராமனிடம் சொன்னான்.(1) கைகள் கூப்பிய வினீதனான {பணிவுடன் கூடிய} அந்த ராக்ஷசேஷ்வரன் {விபீஷணன்}, "{இன்னும்} நான் செய்ய வேண்டியதென்ன?" என்று ராகவனிடம் அவசரமாகக் கூறினான்.(2) 

யுத்த காண்டம் 122ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³வாவிம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Pushpaga Vimana flying in the sky

உபஸ்தி²தம் து தம் க்ருத்வா புஷ்பகம் புஷ்பபூ⁴ஷிதம் |
அவிதூ³ரே ஸ்தி²தோ ராமமித்யுவாச விபீ⁴ஷண꞉ || 6-122-1

ஸ து ப³த்³தா⁴ஞ்ஜலிபுடோ வினீதோ ராக்ஷஸேஷ்²வர꞉ |
அப்³ரவீத்த்வரயோபேத꞉ கிம் கரோமீதி ராக⁴வம் || 6-122-2

Tuesday, 21 October 2025

விபீஷணனின் விருப்பம் | யுத்த காண்டம் சர்க்கம் – 121 (30)

The wish of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-121 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்திக்குப் புறப்படத் தயாரான ராமன்; ராமன் அயோத்தியை அடைய புஷ்பக விமானத்தை ஏற்பாடு செய்த விபீஷணன்...

Rama Lakshmana Vibheeshana

அரிந்தமனான {பகைவரை அழிப்பவனான} ராமன், அந்த ராத்திரியைக் கழித்து, சுகமாக எழுந்ததும், "ஜயமா" என்று கேட்டுவிட்டு, விபீஷணன், தன் கைகளைக் கூப்பிக் கொண்டு, {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "ஸ்நானத்திற்குரிய அங்கராகங்கள் {நறுமணப் பொருள்கள்}, வஸ்திரங்கள், ஆபரணங்கள், சந்தனங்கள், விதவிதமான திவ்ய மாலைகள் ஆகியவற்றுடன்,{2} ராகவரே, பத்மங்களை {தாமரைகளைப்} போன்ற கண்களைக் கொண்டவர்களும், அலங்காரம் செய்வதில் திறன்மிக்கவர்களுமான இந்த நாரியைகள் {பெண்கள்}, விதிப்படியான உமது ஸ்நானத்திற்காக {நீராடலுக்காக} வந்திருக்கின்றனர்.(2,3) 

யுத்த காண்டம் 121ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகவிம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Rama Lakshmana Vibheeshana

தாம் ராத்ரிமுஷிதம் ராமம் ஸுகோ²தி³தமரிந்த³மம் |
அப்³ரவீத் ப்ராஞ்ஜலிர்வாக்யம் ஜயம் ப்ருஷ்ட்வா விபீ⁴ஷண꞉ || 6-121-1

ஸ்னானானி சாங்கா³ராகா³ணி வஸ்த்ராண்யாப⁴ரணானி ச |
சந்த³னானி ச மால்யானி தி³வ்யானி விவிதா⁴னி ச || 6-121-2
அலங்காரவித³ஷ்²சைதா நார்ய꞉ பத்³மனிபே⁴க்ஷணா꞉ |
உபஸ்தி²தாஸ்த்வாம் விதி⁴வத் ஸ்னாபயிஷ்யந்தி ராக⁴வ || 6-121-3

Sunday, 19 October 2025

மாண்டவர் உயிர்த்தெழல் | யுத்த காண்டம் சர்க்கம் – 120 (24)

Resurrection of the dead | Yuddha-Kanda-Sarga-120 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஒரு வரம் வேண்டுமாறு ராமனிடம் கேட்ட இந்திரன்; போரில் உயிரிழந்த வானரர்கள், கரடிகளின் உயிரை மீட்க விரும்பிய ராமன்; அவர்களை உயிர்ப்பித்த இந்திரன்...

Indra's boon to Rama

காகுத்ஸ்தன் {தசரதன்} திரும்பிச் சென்றதும், பரம பிரீதியடைந்தவனும், பாகசாசனனுமான மஹேந்திரன் {பாகன் என்ற அசுரனைக் கொன்றவனுமான பெரும் இந்திரன்}, கைகளைக் கூப்பி நின்று கொண்டிருந்த ராகவனிடம் {பின்வருமாறு} கூறினான்:(1) "இராமா, நரரிஷபா {மனிதர்களில் காளையே}, உனக்கு எங்கள் தரிசனம் அமோகமானதாக {வீண்போகாததாக} இருக்க வேண்டும். நாங்கள் பிரீதியடைந்தோம். எனவே, உன் மனத்தால் எதை விரும்புகிறாயோ அதை நீ சொல்வாயாக" {என்று கேட்டான் இந்திரன்}.(2)

யுத்த காண்டம் 120ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ விம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Indra's boon to Rama

ப்ரதிப்ரயாதே காகுத்த்²ஸே மஹேந்த்³ர꞉ பாகஷா²ஸன꞉ |
அப்³ரவீத் பரமப்ரீதோ ராக⁴வம் ப்ராஞ்ஜலிம் ஸ்தி²தம் || 6-120-1

அமோக⁴ம் த³ர்ஷ²னம் ராம தவாஸ்மாகம் நரர்ஷப⁴ |
ப்ரீதியுக்தா꞉ ஸ்ம தேன த்வம் ப்³ரூஹி யன்மனஸேப்ஸிதம் || 6-120-2

Saturday, 18 October 2025

தசரதன் வருகை | யுத்த காண்டம் சர்க்கம் – 119 (39)

Enter Dasharatha | Yuddha-Kanda-Sarga-119 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரிடம் தசரதனை அழைத்து வந்த மஹேஷ்வரன்; மூவரையும் ஆசீர்வதித்து, அயோத்திக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்ட தசரதன்...

King Dasharatha in ethereal form addressing Rama in the presence of Shiva

மஹேஷ்வரன் {சிவன்}, ராகவனால் சொல்லப்பட்ட இந்த சுபமான வாக்கியங்களைக் கேட்டபோது, மேலும் சுபமான {பின்வரும்} வாக்கியத்தை மொழிந்தான்:(1) "புஷ்கராக்ஷா {தாமரைக் கண்களைக் கொண்டவனே}, மஹாபாஹோ {பெருந்தோள்களைக் கொண்டவனே}, மஹாவக்ஷா {அகன்ற மார்பை உடையவனே}, பரந்தபா {எதிரிகளை அழிப்பவனே}, தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனே, நற்பேற்றால் இந்தக் கர்மம் {செயல்} உன்னால் நிறைவேற்றப்பட்டது.(2) சர்வ லோகங்களிலும் கடும் இருளை அதிகரித்ததும், ராவணனிடம் பிறந்ததுமான பயம் {ஆபத்து}, நற்பேற்றால் உன்னால் போரில் நீக்கப்பட்டது.(3) 

யுத்த காண்டம் 119ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகோனவிம்ஷ²த்யதி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

King Dasharatha in ethereal form addressing Rama in the presence of Shiva

ஏதச்ச்²ருத்வா ஷு²ப⁴ம் வாக்யம் ராக⁴வேண ஸுபா⁴ஷிதம் |
இத³ம் ஷு²ப⁴தரம் வாக்யம் வ்யாஜஹார மஹேஷ்²வர꞉ || 6-119-1

புஷ்கராக்ஷ மஹாபா³ஹோ மஹாவக்ஷ꞉ பரந்தப |
தி³ஷ்ட்யா க்ருதமித³ம் கர்ம த்வயா ஷ²ஸ்த்ரப்⁴ருதாம் வர || 6-119-2

தி³ஷ்ட்யா ஸர்வஸ்ய லோகஸ்ய ப்ரவ்ருத்³த⁴ம் தா³ருணம் தம꞉ |
அபாவ்ருத்தம் த்வயா ஸங்க்²யே ராம ராவணஜம் ப⁴யம் || 6-119-3

Friday, 17 October 2025

அக்னியின் கட்டளை | யுத்த காண்டம் சர்க்கம் – 118 (22)

The command of Agni | Yuddha-Kanda-Sarga-117 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: : எரியும் சிதையில் இருந்து சீதையின் தூய்மையை நிரூபிக்கும் வகையில் அவளைத் தன் மடியில் ஏந்தி வந்த அக்னி தேவன்; அவளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட ராமன்...

Agni giving Sita to Rama

பிதாமகன் {பெரும்பாட்டனான பிரம்மன்} மொழிந்த இந்த சுப வாக்கியத்தைக் கேட்ட விபாவசு {ஒளியுடல் கொண்ட அக்னி தேவன்}, தன் அங்கத்தில் {மடியில்} வைதேஹியை ஏற்றிக் கொண்டு எழுந்து வந்தான்.(1) அப்போது ஹவ்யவாஹனன் மூர்த்திமானான உடனேயே {ஹவ்யங்களை தேவர்களிடம் எடுத்துச் செல்லும் வாகனமான அக்னி தேவன், புலப்படும் வடிவம் எடுத்த உடனேயே} அந்த சிதையை அசைத்து, ஜனகாத்மஜையான அந்த வைதேஹியை அழைத்துக் கொண்டு வெளிப்பட்டான்.(2) இளம் ஆதித்யனைப் போல் ஒளிர்பவளும், தப்த காஞ்ச பூஷணங்களுடன் கூடியவளும் {புடம்போட்ட பொன்னாலான ஆபரணங்களுடன் கூடியவளும்}, சிவந்த அம்பரங்களை {ஆடைகளைத்} தரித்தவளும், பால்யையும் {சிறுமியும்}, நீலகுஞ்சித மூர்தஜையும் {அழகிய சுருண்ட கரிய கூந்தலைக் கொண்டவளும்},{3} வாடாத புஷ்ப மாலையை ஆபரணமாகப் பூண்டவளும், {முன்பிருந்த} அதே ரூபத்துடன் கூடியவளும், அநிந்திதையுமான {நிந்திக்கத்தகாதவளுமான} வைதேஹியை விபாவசு {அக்னி}, தன் அங்கத்தில் {மடியில்} ஏற்றிக் கொண்டு வந்து ராமனிடம் கொடுத்தான்.(3,4)

யுத்த காண்டம் 118ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டாத³ஷா²தி⁴க ஷ²ததம꞉ ஸர்க³꞉

Agni giving Sita to Rama

ஏதச்ச்²ருத்வா ஷு²ப⁴ம் வாக்யம் பிதாமஹஸமீரிதம் |
அங்கேநாதா³ய வைதே³ஹீமுத்பபாத விபா⁴வஸு꞉ || 6-118-1

விதூ⁴யாத² சிதாம் தாம் து விஅதே³ஹீம் ஹவ்யவாஹன꞉ |
உத்தஸ்தௌ² மூர்திமாநாஷு² க்³ருஹீத்வா ஜனகாத்மஜாம் || 6-118-2

தருணாதி³த்யஸங்காஷா²ம் தப்தகாஞ்சனபூ⁴ஷணாம் |
ரக்தாம்ப³ரத⁴ராம் பா³லாம் நீலகுஞ்சிதமூர்த⁴ஜாம் || 6-118-3
அக்லிஷ்டமால்யாப⁴ரணாம் ததா²ரூபாமனிந்தி³தாம் |
த³தௌ³ ராமாய வைதே³ஹீமங்கே க்ருத்வா விபா⁴வஸு꞉ || 6-118-4

Thursday, 16 October 2025

இராம ஸ்துதி | யுத்த காண்டம் சர்க்கம் – 117 (34)

The hymn in praise of Rama | Yuddha-Kanda-Sarga-117 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: : விமானங்களில் லங்கையை அடைந்து, ராமனை அணுகிய தேவர்கள்; இராமனின் தெய்வீகத் தன்மையை அறிவித்து, அவனது புகழைப் பாடிய பிரம்ம தேவன்...

Brahma and Rama

தர்மாத்மாவான ராமன், இவ்வாறு புலம்பியவர்களின் அழுகுரலைக் கேட்டபோது, கண்கள் நிறைந்த கண்ணீருடனும், துயரத்துடனும் ஒரு முஹூர்த்தம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.(1)

யுத்த காண்டம் 117ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தத³ஷா²தி⁴கஷ்²ததம꞉ ஸர்க³꞉

Brahma and Rama

ததோ ஹி து³ர்மனா ராம꞉ ஷ்²ருத்வைவம் வத³தாம் கி³ர꞉ |
த³த்⁴யௌ முஹூர்தம் த⁴ர்மாத்மா பா³ஷ்பவ்யாகுலலோசன꞉ || 6-117-1

Tuesday, 14 October 2025

அக்னிப்ரவேசம் | யுத்த காண்டம் சர்க்கம் – 116 (37)

Entering into fire | Yuddha-Kanda-Sarga-116 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: : இராமனுக்குத் தகுந்த மறுமொழி கொடுத்து, சிதை உண்டாக்குமாறு லக்ஷ்மணனை வேண்டி, அக்னி தேவனை வணங்கி, நெருப்புக்குள் நுழைந்த சீதை...

Sita Agni Pravesha

இவ்வாறு ரோஷத்துடன் கூடிய ராகவனால் ரோமஹர்ஷணத்தை ஏற்படுத்தும் வகையில் கடுமையாக சொல்லப்பட்டதைக் கேட்ட வைதேஹி பெரும் கலக்கமடைந்தாள்.(1) அந்த மைதிலி, மஹத்தான ஜனங்களின் மத்தியில் பூர்வத்தில் கேட்கப்படாத, கோரமான பர்த்தாவின் சொற்களைக் கேட்டபோது, லஜ்ஜையால் {வெட்கத்தால்} தலைகுனிந்தவள் ஆனாள்.(2) அந்த ஜனகாத்மஜை, தன் சொந்த காத்திரங்களுக்குள் சுருங்குவதை {உடல் கூனிக்குறுகியதைப்} போன்று, சல்லியங்களுடன் கூடிய அந்த வாக்குச் சரங்களால் துளைக்கப்பட்டவளைப் போலப் பெரிதும் கண்ணீர் வடித்தாள்.(3)

யுத்த காண்டம் 116ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷோட³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Sita Agni Pravesha

ஏவமுக்தா து வைதே³ஹீ பருஷம் லோமஹர்ஷணம் |
ராக⁴வேண ஸரோஷேண ப்⁴ருஷ²ம் ப்ரவ்யதி²தாப⁴வத் || 6-116-1

ஸா தத³ஷ்²ருதபூர்வம் ஹி ஜனே மஹதி மைதி²லீ |
ஷ்²ருத்வா ப⁴ர்த்ருவசோ ரூக்ஷம் லஜ்ஜயா வ்ரீடி³தாப⁴வத் || 6-116-2

ப்ரவிஷ²ந்தீவ கா³த்ராணி ஸ்வான்யேவ ஜனகாத்மஜா |
வாக்ஷல்யைஸ்தை꞉ ஸஷ²ல்யேவ ப்⁴ருஷ²மஷ்²ரூண்யவர்தயத் || 6-116-3

Monday, 13 October 2025

இராமனின் கடுமை | யுத்த காண்டம் சர்க்கம் – 115 (25)

The harshness of Rama | Yuddha-Kanda-Sarga-115 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: : வெற்றி அடைந்ததற்கான தன் முயற்சிகளை சீதையிடம் சொன்ன ராமன்; சீதை எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் என்று சங்கடமான முறையில் கூறியது...

Rama Disowns Sita

இராமன், தன் பக்கத்தில் தலைகுனிந்து நின்று கொண்டிருந்த மைதிலியைக் கண்டு, தன் ஹிருதய அந்தரங்கத்தின் உணர்வுகளை வெளிப்படுத்தத் தொடங்கினான்:(1) "பத்ரே {மென்மையானவளே}, போர்முனையில் சத்ரு வீழ்த்தப்பட்டு, நீ வென்றெடுக்கப்பட்டிருக்கிறாய். பௌருஷத்தால் {ஆண்மையால்} எது அனுஷ்டிக்கப்பட வேண்டுமோ, அஃது என்னால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.(2) கோபத்தின் அந்தத்தை {எல்லையை} அடைந்து விட்டேன். அவமதிப்புக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அவமானமும், பகைமையும் ஒரே நேரத்தில் என்னால் அழிக்கப்பட்டன.(3) இப்போது என் பௌருஷம் {ஆண்மை} காணப்பட்டது. இன்று என் சிரமம் பலனளித்துள்ளது. இப்போது என் பிரதிஜ்ஞை தீர்க்கப்பட்டது {உறுதிமொழி நிறைவேற்றப்பட்டது}. இப்போது ஆத்ம பிரபு ஆகிவிட்டேன் {என் சுயத்தின் தலைவன் ஆகிவிட்டேன் / சுதந்திரமடைந்துவிட்டேன்}.(4) சஞ்சல சித்தம் கொண்ட ராக்ஷசனால் கொண்டு செல்லப்பட்டு எப்படி {என்னிடம் இருந்து} நீ  பிரிக்கப்பட்டாயோ, அப்படிப்பட்ட தைவ சம்பாத்ய தோஷம் {தெய்வத்தால் / விதியால் வருவிக்கப்பட்ட தீமை} மானுஷனான என்னால் வெல்லப்பட்டது.(5)

யுத்த காண்டம் 115ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Rama Disowns Sita

தாம் து பார்ஷ்²வே ஸ்தி²தாம் ப்ரஹ்வாம் ராம꞉ ஸம்ப்ரேக்ஷ்யே மைதி²லீம் |
ஹ்ருத³யாந்தர்க³தம் பா⁴வம் வ்யாஹர்துமுபசக்ரமே || 6-115-1

ஏஷாஸி நிர்ஜிதா ப⁴த்³ரே ஷ²த்ரும் ஜித்வா ரணாஜிரே |
பௌருஷாத்³யத³னுஷ்டே²யம் மயைதது³பபாதி³தம் || 6-115-2

க³தோ(அ)ஸ்ம்யந்தமமர்ஷஸ்ய த⁴ர்ஷணா ஸம்ப்ரமார்ஜிதா |
அவமானஷ்²ச ஷ²த்ரஷ்²ச யுக³பன்னிஹதௌ மயா || 6-115-3

அத்³ய மே பௌருஷம் த்³ருஷ்டமத்³ய மே ஸப²ல꞉ ஷ்²ரம꞉ |
அத்³ய தீர்ணப்ரதிஜ்ஞோ(அ)ஹம் ப்ரப⁴வாம்யத்³ய சாத்மன꞉ || 6-115-4

யா த்வம் விரஹிதா நீதா சலசித்தேன ரக்ஷஸா |
தை³வஸம்பாதி³தோ தோ³ஷோ மானுஷேண மயா ஜித꞉ || 6-115-5

Sunday, 12 October 2025

இராமனின் இங்கிதங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 114 (36)

The gestures of Rama | Yuddha-Kanda-Sarga-114 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் பணிக்கப்பட்ட விபீஷணன் சீதையை ராமன் முன்பு அழைத்து வந்தது; லக்ஷ்மணன், சுக்ரீவன், ஹனுமான் ஆகியோர் ராமனின் இங்கிதங்களைக் கண்டு வருந்துவது...

Sita Rama Vibheeshana and Lakshmana

மஹாபிராஜ்ஞனான பிலவங்கம் {பெரும் புத்திசாலியும், தாவிச் செல்பவனுமான ஹனுமான்}, சர்வதனுஷ்மதர்களில் {வில்லாளிகள் அனைவரிலும்} சிறந்தவனும், வசனமர்த்தஜ்ஞனுமான {வசனங்களின் பொருளை அறிந்தவனுமான} அந்த ராமனை அணுகி {பின்வருமாறு} சொன்னான்:(1) "எவளின் நிமித்தம் இந்தக் கர்மங்களை ஆரம்பித்தீரோ, எவளுக்கான பலன் கிடைத்திருக்கிறதோ, அந்த மைதிலி தேவியின் சோகசந்தாபத்தை நீர் காண்பதே தகும்.(2) கண்ணீர் நிறைந்த கண்களுடன் சோகத்தில் மூழ்கியிருக்கும் அந்த மைதிலி, உமது விஜயத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள்.(3) பூர்வத்தில் என் மீது கொண்ட பற்றுறுதியில் விளைந்த விசுவாசத்தால் அவள் என்னிடம், "கிருதார்த்தரும் {காரியம் நிறைவேறியவரும்}, லக்ஷ்மணருடன் கூடியவருமான என் பர்த்தாவை {கணவரை} நான் காண விரும்புகிறேன்" என்று கூறினாள்" {என்றான் ஹனுமான்}.(4)

யுத்த காண்டம் 114ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ சதுர்த³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Sita Rama Vibheeshana and Lakshmana

தமுவாச மஹாப்ரஜ்ஞமபி⁴க³ம்ய ப்லவங்க³ம꞉ |
ராமம் வசனமர்த²ஜ்ஞோ வரம் ஸர்வத⁴னுஷ்மதாம் || 6-114-1

யந்நிமித்தோ(அ)யமாரம்ப⁴꞉ கர்மணாம் ச ப²லோத³ய꞉ |
தாம் தே³வீம் ஷோ²கஸந்தப்தாம் மைதி²லீம் த்³ரஷ்டுமர்ஹஸி || 6-114-2

ஸா ஹி ஷோ²கஸமாவிஷ்டா பா³ஷ்பபர்யாகுலேக்ஷணா |
மைதி²லீ விஜயம் ஷ்²ருத்வா தவ ஹர்ஷமுபாக³மத் || 6-114-3

பூர்வகாத்ப்ரத்யயாச்சாஹமுக்தோ விஷ்²வஸ்தயா தயா |
ப⁴ர்தாரம் த்³ரஷ்டுமிச்சா²மி க்ருதார்த²ம் ஸஹலக்ஷ்மணம் || 6-114-4

Friday, 10 October 2025

கரடியின் கீதம் | யுத்த காண்டம் சர்க்கம் – 113 (54)

A song of a bear | Yuddha-Kanda-Sarga-113 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் வெற்றிச் செய்தியை சீதையிடம் சொன்ன ஹனுமான்; செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த சீதை; கரடி பாடிய கீதம்...

Hanuman speaking to Sita

இவ்வாறு ஆணையிடப்பட்ட மாருதாத்மஜன் {வாயு மைந்தன்} ஹனுமான், நிசாசரர்களால் {இரவுலாவிகளான ராக்ஷசர்களால்} பூஜிக்கப்படும் லங்காம்புரீக்குள் பிரவேசித்தான்.(1) அவன் லங்காம்புரீக்குள் பிரவேசித்து, விபீஷணனைப் பின்தொடர்ந்தான். அப்போது அந்த ஹனுமான் விருக்ஷவாடிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டான்.{2} சீதைக்குத் தெரிந்தவனான அந்த ஹரி {குரங்கான ஹனுமான்} எது நியாயமோ அந்த விதிப்படியே உள்ளே பிரவேசித்தான். சசி {சந்திரன்} இல்லாமல் {நீராடாமல்} களையிழந்த ரோகிணியைப் போலிருந்தவளைக் கண்டான்.{3} அவள், ராக்ஷசிகள் சூழ விருக்ஷமூலத்தில் {மரத்தடியில்} ஆனந்தமற்றவளாக இருந்தாள். அவன் அமைதியாக அவளை அணுகி, பணிவுடன் வணங்கி நின்றான்.(2-4)

யுத்த காண்டம் 113ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்ரயோத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Hanuman speaking to Sita

இதி ப்ரதிஸமாதி³ஷ்டோ ஹனூமான்மாருதாத்மஜ꞉ |
ப்ரவிவேஷ² புரீம் லங்காம் பூஜ்யமானோ நிஷா²சரை꞉ ||6-113-1

ப்ரவிஷ்²ய ச புரீம் லங்காமனுங்ஞ்ப்ய விபீ⁴ஷணம் |
ததஸ்தேநாப்⁴யனுஜ்ஞாதோ ஹனூமான் வ்ருக்ஷவாடிகாம் ||6-113-2
ஸம்ப்ரவிஷ்²ய யதா²ந்யாயம் ஸீதாயா விதி³தோ ஹரி꞉ |
த³த³ர்ஷ² ஷ²ஷி²னா ஹீனாம் ஸாதங்காமிவ ரோஹிணீம் ||6-113-3
வ்ருக்ஷமூலே நிரானந்தா³ம் ராக்ஷஸீபி⁴꞉ பரீவ்ருதாம் |
நிப்⁴ருத꞉ ப்ரணத꞉ ப்ரஹ்வ꞉ ஸோம்அபி⁴க³ம்யாபி⁴வாத்³ய ச ||6-113-4

மீண்டும் விபீஷணப் பட்டாபிஷேகம் | யுத்த காண்டம் சர்க்கம் – 112 (27)

Vibheeshana's coronation yet again | Yuddha-Kanda-Sarga-112 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவலோகம் திரும்பிய மாதலி; இலங்கையின் மன்னனாக நிறுவப்பட்ட விபீஷணன்; ஹனுமான் மூலம் சீதைக்கு செய்தி அனுப்பிய ராமன்...

Lakshmana consecrating Vibheeshana

அதே வேளையில் ராவண வதத்தைக் கண்ட அந்த தேவ, கந்தர்வ, தானவர்கள், சுப கதைகளைக் கதைத்துக் கொண்டே {மங்கல பேச்சுக்களைத் தங்களுக்குள் பேசிக் கொண்டே} தங்கள் தங்கள் விமானங்களில் சென்றனர்.(1) இராவணனின் வதத்தையும், ராகவனின் பராக்கிரமத்தையும், வானரர்களின் நல்ல யுத்தத்தையும், சுக்ரீவனின் மந்திரத்தையும் {ஆலோசனைகளையும்},{2} சௌமித்ரியான லக்ஷ்மணனின் பற்றையும், வீரியத்தையும், சீதையின் பதிவிரதாத்வத்தையும் {பதிவிரதா தன்மையையும்}, ஹனூமதனின் பராக்கிரமத்தையும்{3} மகிழ்ச்சியுடனும், பெரும் மதிப்புடனும் பேசிக் கொண்டே வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்றனர்.(2-4அ) 

யுத்த காண்டம் 112ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³வாத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Lakshmana consecrating Vibheeshana

தே ராவணவத⁴ம் த்³ருஷ்ட்வா தே³வக³ந்த⁴ர்வதா³னவா꞉ |
ஜக்³மு꞉ ஸ்வை꞉ ஸ்வை ர்விமானைஸ்தே கத²யந்த꞉ ஷு²பா⁴꞉ கதா²꞉ || 6-112-1

ராவணஸ்ய வத⁴ம் கோ⁴ரம் ராக⁴வஸ்ய பராக்ரமம் |
ஸுயுத்³த⁴ம் வானராணாம் ச ஸுக்³ரீவஸ்ய ச மந்த்ரிதம் || 6-112-2
அனுராக³ம் ச வீர்யம் ச ஸௌமித்ரே ர்லக்ஷ்மணஸ்ய ச |
பதிவ்ரதாத்வம் ஸீதாயா ஹனூமதி பராக்ரமம் || 6-112-3
கத²யந்தோ மஹாபா⁴கா³ ஜக்³முர்ஹ்ருஷ்ட யதா²க³தம் |

ராக⁴வஸ்து ரத²ம் தி³வ்யமிந்த்³ரத³த்தம் ஷி²கி²ப்ரப⁴ம் || 6-112-4
அனுஜ்ஞாய மஹாபா³ஹுர்மாதலிம் ப்ரத்யபூஜயத் |

ராக⁴வேணாப்⁴யனுஜ்ஞாதோ மாதலி꞉ ஷ²க்ரஸாரதி²꞉ || 6-112-5
தி³வ்யம் தம் தத²மாஸ்தா²ய தி³வமேவோத்பபாத ஹ |

தஸ்மிம்ஸ்து தி³வமாருடே⁴ ஸரதே² ரதி²னாம் வர꞉ || 6-112-6
ராக⁴வ꞉ பரமப்ரீத꞉ ஸுக்³ரீவம் பரிஷஸ்வஜே |

பர்ஷ்வஜ்ய ச ஸுக்³ரீவம் லக்ஷ்மணேநாபி⁴வாதி³த꞉ || 6-112-7
பூஜ்யமானோ ஹரிக³ணைராஜகா³ம ப³லாலயம் |

அதோ²வாச ஸ காகுத்ஸ்த²꞉ ஸமீபபரிவர்தினம் || 6-112-8
ஸௌமித்ரிம் ஸத்த்வஸம்பன்னம் லக்ஷ்மணம் ஷு²ப⁴லக்ஷணம் |

விபீ⁴ஷணமிமம் ஸௌம்ய லங்காயாமபி⁴ஷேசய || 6-112-9
அனுரக்தம் ச ப⁴க்தம் ச ததா² பூர்வோபகாரிணம் |

ஏஷ மே பரம꞉ காமோ யதி³மம் ராவணானுஜம் || 6-112-10
லங்காயாம் ஸௌம்ய பஷ்²யேயமபி⁴ஷிக்தம் விபீ⁴ஷணம் |

ஏவமுக்தஸ்து ஸௌமித்ரீ ராக⁴வேண மஹாத்மனா || 6-112-11
ததே²த்யுக்த்வா ஸுஸம்ஹ்ருஷ்ட꞉ ஸௌவர்ணம் க⁴டமாத³தே³ |

தம் க⁴டம் வானரேந்த்³ராணாம் ஹஸ்தே த³த்த்வா மனோஜவான் || 6-112-12
வ்யாதி³தே³ஷ² மஹாஸத்த்வ꞉ ஸமுத்³ரஸலிலம் ததா³ |

அதிஷீ²க்⁴ரம் ததோ க³த்வா வானராஸ்தே மனோஜவா꞉ || 6-112-13
ஆக³தாஸ்து ஜலம் க்³ருஹ்ய ஸமுத்³ராத்³வானரோத்தமா꞉ |

ததஸ்த்வேகம் க⁴டம் க்³ருஹ்ய ஸம்ஸ்தா²ப்ய பரமாஸனே || 6-112-14
க⁴டேன தேன ஸௌமித்ரிரப்⁴யஷிஞ்சத்³விபீ⁴ஷணம் |
லங்காயாம் ரக்ஷஸாம் மத்⁴யே ராஜானம் ராமஷா²ஸனாத் || 6-112-15
விதி⁴னா மந்த்ரத்³ருஷ்டேன ஸுஹ்ருத்³க³ணஸமாவ்ருத꞉ |

அப்⁴யஷிஞ்சம்ஸ்ததா³ ஸர்வே ராக்ஷஸா வானராஸ்ததா² || 6-112-16
ப்ரஹர்ஷமதுலம் க³த்வா துஷ்டுவூ ராமமேவ ஹ |

தஸ்யாமாத்யா ஜஹ்ருஷிரே ப⁴க்தா யே சாஸ்ய ராக்ஷஸா꞉ || 6-112-17
த்³ருஷ்ட்வாபி⁴ஷ்க்தம் லங்காயாம் ராக்ஷஸேந்த்³ரம் விபீ⁴ஷணம் |

ராக⁴வ꞉ ப்ரமாம் ப்ரீதிம் ஜகா³ம ஸஹலக்ஷ்மண꞉ || 6-112-18
ஸ தத்³ராஜ்யம் மஹத்ப்ராப்ய ராமத³த்தம் விபீ⁴ஷண꞉ |

ப்ரக்ருதீ꞉ ஸாந்த்யயித்வா ச ததோ ராமமுபாக³மத் || 6-112-19
த³த்⁴யக்ஷதான் மோத³காம்ஷ்²ச லாஜா꞉ ஸுமனஸஸ்ததா² |
ஆஜஹ்ருரத² ஸந்துஷ்டா꞉ பௌராஸ்தஸ்மை நிஷா²சரா꞉ || 6-112-20

ஸ தான் க்³ருஹீத்வா து³ர்த⁴ர்ஷோ ராக⁴வாய ந்யவேத³யத் || 6-112-21
மாங்க³ல்யம் மங்க³ளம் ஸர்வம் லக்ஷ்மணாய ச வீர்யவான் |

க்ருதகார்யம் ஸம்ருத்³தா⁴ர்த²ம் த்³ருஷ்ட்வா ராமோ விபீ⁴ஷணம் || 6-112-22
ப்ரதிஜக்³ராஹ தத்ஸர்வம் தஸ்யைவ ப்ரியகாம்யயா |

ததஹ் ஷை²லோபமம் வீரம் ப்ராஞ்ஜலிம் ப்ரணதம் ஸ்தி²தம் || 6-112-23
உவாசேத³ம் வசோ ராமோ ஹனூமந்தம் ப்லவங்க³மம் |

அனுஜ்ஃஜ்னாப்ய மஹாராஜமிமம் ஸௌம்ய விபீ⁴ஷணம் || 6-112-24
ப்ரவிஷ்²ய நக³ரீம் லங்காம் கௌஷ²லம் ப்³ரூஹிமைதி²லீம் |

வைதே³ஹ்யை மாம் குஷ²லினம் ஸுக்³ரீவம் ச ஸலக்ஷ்மணம் || 6-112-25
அசக்ஷ்வ வத³தாம் ஷ்²ரேஷ்ட² ராவணம் ச ஹதம் ரணே |

ப்ரியமேதது³தா³ஹ்ருத்ய வைதே³ஹ்யஸ்த்வம் ஹரீஷ்²வர || 6-112-26
ப்ரதிக்³ருஹ்ய ச ஸந்தே³ஷ²முபாவர்திதுமர்ஹஸி | 6-112-27

இத்யார்ஷே ஶ்ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³வாத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Akshara Mukha: 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Thursday, 9 October 2025

மந்தோதரியின் புலம்பலும், இறுதிச் சடங்கும் | யுத்த காண்டம் சர்க்கம் – 111 (128)

Lament of Mandodari and the funeral rite | Yuddha-Kanda-Sarga-111 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணன் இறப்புக்காக அழுது புலம்பிய மந்தோதரி; இராமனின் வேண்டுகோளுக்கிணங்க ராவணனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்த விபீஷணன்...

The lament of Mandodari

இராக்ஷசயோசிதைகளான {ராக்ஷச மகளிரான} அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, பிரியையான ஜேஷ்டபத்னி தீனமாகப் பர்த்தாவை உற்று நோக்கினாள் {ராவணனின் அன்புக்குரிய மூத்த மனைவி மண்டோதரி பரிதாபத்திற்குரியவளாகத் தன் கணவனைப் பார்த்தாள்}.(1) மந்தோதரி, சிந்தனைக்கப்பாற்பட்ட கர்மங்களைச் செய்பவனான ராமனால் கொல்லப்பட்ட தன் பதியான தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட தன் கணவன் ராவணனைக்} கண்டு, அங்கே கிருபைக்குரிய வகையில் {பின்வருமாறு} பரிதபித்தாள்[1]:(2) "மஹோபாஹோ, வைஷ்ரவணானுஜரே {குபேரனின் தம்பியே}, புரந்தரனும் கூட குரோதம் கொண்ட உமது முன்னால் நிற்க நிச்சயம் அஞ்சுவானே.(3) உமது உத்வேகத்தால் {உம்மிடம் கொண்ட அச்சத்தால்} மஹான்களான ரிஷிகளும், புகழ்பெற்ற கந்தர்வர்களும், சாரணர்களும் திசைகளெங்கும் ஓடினார்களே.(4) 

யுத்த காண்டம் 111ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகாத³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

The lament of Mandodari

தாஸாம் விளபமானானாம் ததா² ராக்ஷஸயோஷிதாம் |
ஜ்யேஷ்டா² பத்னீ ப்ரியா தீ³னா ப⁴ர்தாரம் ஸமுதை³க்ஷத || 6-111-1

த³ஷ²க்³ரீவன் ஹதம் த்³ருஷ்ட்வா ராமேணாசிந்த்யகர்மணா |
பதிம் மந்தோ³த³ரீ தத்ர க்ருபணா பர்யதே³வயத் || 6-111-2

நனு நாம மஹாபா³ஹோ தவ வைஷ்²ரவணானுஜ |
க்ருத்³த⁴ஸ்ய ப்ரமுகே² ஸ்தா²துன் த்ரஸ்யத்யபி புரந்த³ர꞉ || 6-111-3

ருஷயஷ்²ச மஹீதே³வா க³ந்த⁴ர்வாஷ்²ச யஷ²ஸ்வின꞉ |
நனு நாம தவோத்³வேகா³ச்சாரணாஷ்²ச தி³ஷோ² க³தா꞉ || 6-111-4

ஸ த்வம் மானுஷமாத்ரேண ராமேண யுதி⁴ நிர்ஜித꞉ |
ந வ்யபத்ரபஸே ராஜன் கிமித³ம் ராக்ஷஸர்ஷப⁴ || 6-111-5

Monday, 6 October 2025

இராவணன் மனைவியரின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் – 110 (26)

Lament of the wives of Ravana | Yuddha-Kanda-Sarga-110 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் சடலத்தைக் கண்டு அழுது புலம்பிய அவனது மனைவியர்...

The lament of Ravana's wives

மஹாத்மாவான ராகவனால் ராவணன் கொல்லப்பட்டதைக் கண்ட ராக்ஷசிகள் சோகத்தால் வேதனையடைந்து அந்தப்புரத்தில் இருந்து வெளியே வந்தனர்[1].(1) அடிக்கடி அவர்கள் தடுக்கப்பட்டும், பூமியின் புழுதியில் புரண்டு, கேசம் அவிழ்ந்து, கன்றிழந்த பசுக்களைப் போல சோகத்தில் தவித்தனர்.(2) உத்தர துவாரத்தில் {வடக்கு வாயிலில்} ராக்ஷசர்களுடன் வெளிப்பட்டு, கோரமான போர்க்களத்திற்குள் பிரவேசித்து கொல்லப்பட்ட தங்கள் பதியை {கணவனை} அழுது கொண்டே தேடினர்.{3} "ஆரியபுத்திரரே", "ஹா, நாதரே" என்று புலம்பிக் கொண்டு, சோணிதச் சேற்றுடன் கூடியதும், கபந்தங்களால் நிறைந்ததுமான மஹீயெங்கும் {தலையற்ற உடல்களால் நிறைந்ததுமான பூமியெங்கும்} அவர்கள் திரிந்தனர்.(3,4) கண்ணீர் நிறைந்த கண்களுடன், பர்த்தாவை {கணவனைக்} குறித்த சோகத்தில் மூழ்கிய அவர்கள், யூதபன் {கூட்டத்தலைவன்} கொல்லப்பட்ட கரேணுக்களை {பெண் யானைகளைப்} போல உரக்கக் கதறினர்.(5) 

யுத்த காண்டம் 110ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த³ஷா²தி⁴கஷ²ததம꞉ ஸர்க³꞉

The lament of Ravana's wives

ராவணம் நிஹதம் த்³ருஷ்ட்வா ராக⁴வேண மஹாத்மனா |
அந்த꞉புராத்³விநிஷ்பேதூ ராக்ஷஸ்ய꞉ ஷோ²ககர்ஷி²தா꞉ || 6-110-1

வார்யமாண꞉ ஸுப³ஹுஷோ² வேஷ்டந்த்ய꞉ க்ஷிதிபாம்ஸுஷு |
விமுக்தகேஷ்²ய꞉ ஷோ²கார்தா கா³வோ வத்ஸஹதா யதா² || 6-110-2

உத்தரேண விநிஷ்க்ரம்ய த்³வாரேண ஸஹ ராக்ஷஸை꞉ |
ப்ரவிஷ்²யாயோத⁴னம் கோ⁴ரம் விசின்வந்த்யோ ஹதம் பதிம் || 6-110-3
ஆர்யபுத்ரேதி வாதி³ன்யோ ஹா நாதே²தி ச ஸர்வஷ²꞉ |
பரிபேது꞉ கப³ந்தா⁴ங்காம் மஹீம் ஷோ²ணிதகர்த³மாம் || 6-110-4

தா பா³ஷ்பபரிபூர்ணாக்ஷ்யோ ப⁴ர்த்ருஷோ²கபராஜிதா꞉ |
கரேண்வ இவ நர்த³ந்த்யோ வினேது³ர்ஹதயூத²பா꞉ || 6-110-5

விபீஷணனின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் – 109 (26)

Lament of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-109 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விபீஷணனின் புலம்பல்; விபீஷணனுக்கு ஆறுதல் கூறி ராவணனுக்குரிய ஈமக் காரியங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்ட ராமன்...

Vibheeshana lamenting for Ravana

விபீஷணன், ரணத்தில் வீழ்த்தப்பட்டு கொல்லப்பட்டு சயனிக்கும் தன் பிராதாவை {தன்னுடன் பிறந்த ராவணனைக்} கண்டு, சோகவேகத்தில் பரிதவிக்கும் ஆத்மாவுடன் {பின்வருமாறு} புலம்பினான்:(1) "வீரரே, விக்ராந்தரே {துணிச்சல்மிக்கவரே}, பெரும்புகழ்வாய்ந்தவரே, பிரவீணரே {திறன்மிக்கவரே}, நயகோவிதரே {ராஜநீதியில் பண்டிதரே}, விலையுயர்ந்த படுக்கையில் படுக்கத் தகுந்தவரே, நீர் கொல்லப்பட்டு பூமியில் கிடப்பதேன்?(2) அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டு விரிந்து நீண்ட கைகள் அசைவற்றும், பாஸ்கரனின் ஒளியுடன் கூடிய மகுடம் நழுவியும் கிடக்கின்றன.(3) வீரரே, எது பூர்வத்தில் என்னால் சொல்லப்பட்டதோ[1], அது காம, மோகத்தால் வெல்லப்பட்டவரான உமக்கு ருசிக்கவில்லை. அதுவே இதோ உமக்கு வாய்த்திருக்கிறது.(4) எந்த செருக்கினால் பிரஹஸ்தரோ, இந்திரஜித்தோ, வேறு ஜனங்களோ, கும்பகர்ணரோ, அதிரதனான அதிகாயனோ, நராந்தகனோ,{5} நீரோ {என் ஆலோசனைகளை} மனத்திற் கொள்ளவில்லையோ அதன் விளைவே இப்படி வாய்த்திருக்கிறது.(5,6அ)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை