Showing posts with label சுகன். Show all posts
Showing posts with label சுகன். Show all posts

Monday, 9 September 2024

மீண்டும் சார்தூலன் | யுத்த காண்டம் சர்க்கம் - 029 (30)

Shardula again | Yuddha-Kanda-Sarga-029 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரப் படையைப் புகழ்ந்ததற்காக சுகனையும், சாரணனையும் கண்டித்து, மற்றொரு ஒற்றனான சார்தூலனை அனுப்பிவைத்த ராவணன்...

Ravana sending spies


சுகனால் சொல்லப்பட்ட ஹரியூதபர்களை {குரங்குக் குழுத் தலைவர்களைக்} கண்டும், ராமனின் தக்ஷிணபுஜமாக {வலது கையாகத்} திகழ்பவனும், மஹாவீரியம் கொண்டவனுமான லக்ஷ்மணனையும்,{1} ராமனின் சமீபத்திலிருப்பவனும், தன்னுடன் பிறந்தவனுமான விபீஷணனையும், பீமவிக்கிரமனும், சர்வ வானரர்களின் ராஜாவுமான சுக்ரீவனையும்,{2} வஜ்ரஹஸ்தாத்மஜாத்மஜனுமான {கையில் வஜ்ரத்துடன் கூடிய இந்திரனுடைய மகனான வாலியின் மகன்} அங்கதனையும், விக்ராந்தனான ஹனூமந்தனையும், வெல்வதற்கரிய ஜாம்பவந்தனையும்,{3} சுஷேணன், குமுதன், நீலன், பிலவகரிஷபனான {தாவிச் செல்பவர்களில் காளையான} நளன் ஆகியோரையும், கஜன், கவாக்ஷன், சரபன், மைந்தன், துவிவிதன் ஆகியோரையும் கண்டும்,{4} சற்றே கலங்கிய ஹிருதயத்துடன் கூடிய ராவணன் குரோதம் அடைந்து, மேற்படி சொல்லிமுடித்த வீரர்களான அந்த சுகசாரணர்கள் இருவரையும் கண்டித்தான்.(1-5)

Saturday, 7 September 2024

சுகன் வர்ணனை | யுத்த காண்டம் சர்க்கம் - 028 (44)

Commentary of Suka | Yuddha-Kanda-Sarga-028 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரப் படையில் உள்ள வானரர்கள், ஹனுமான், ராமன், லக்ஷ்மணன், சுக்ரீவன் ஆகியோரைக் குறித்து ராவணனிடம் விளக்கிச் சொன்ன சுகன்...

Ramas army


சுகன், சாரணனின் சொற்களைக் கேட்ட பிறகு, ராக்ஷசாதிபனான ராவணனிடம் அந்தப் படையைச் சுட்டிக் காட்டியபடியே {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(1) "எவர்களை நீர் பார்த்துக் கொண்டிருக்கிறீரோ, இவர்கள் மதங்கொண்ட மஹாத்வீபங்களை {பெரும் யானைகளைப்} போன்றவர்கள்; காங்கேயே ஆலங்களை {கங்கையின் ஆலமரங்களைப்} போன்றவர்கள், ஹைமவத சாலங்களை {இமயத்தின் ஆச்சா மரங்களை/ மராமரங்களைப்} போன்றவர்கள்.{2} இராஜரே, இவர்கள் தடுப்பதற்கரிய பலவான்கள்; காமரூபிகள் {விரும்பிய வடிவை ஏற்க வல்லவர்கள்}; தைத்திய, தானவர்களுக்கு ஒப்பானவர்கள்; யுத்தத்தில் தேவ பராக்கிரமர்கள்.(2,3) இவர்கள் நவ, பஞ்ச, சப்த கோடி சஹஸ்ரங்களாகவும், ஆயிரம் சங்குகளாகவும், நூறு விருந்தங்களாகவும் இருக்கின்றனர்[1].(4) சுக்ரீவனின் தொண்டர்களான {அமைச்சர்களான} இவர்கள் தேவ, கந்தர்வர்களுக்குப் பிறந்தவர்களாவர். காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} இவர்கள், சதா கிஷ்கிந்தையையே {ஹம்பியையே; துங்கபத்திரா ஆற்றின் கரையில் உள்ள இன்றைய ஹம்பி நகரம் விஜயநகர மாவட்டம், கர்நாடக மாநிலம்} தங்கள் நிலயமாகக் கொண்டிருக்கின்றனர்.(5)

Wednesday, 28 August 2024

மீண்டும் ஒற்றர்கள் | யுத்த காண்டம் சர்க்கம் - 025 (34)

Spies again | Yuddha-Kanda-Sarga-025 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுகனையும், சாரணனையும் ஒற்றர்களாக அனுப்பிய ராவணன்; வானர வடிவை ஏற்று வானரப்படைக்குள் அவர்கள் நுழைந்தது; விபீஷணன் அடையாளம் கண்டது; அவர்களை விடுவித்த ராமன்...

Vibheeshana pointing out the spies to Rama


தசரதாத்மஜனான {தசரதனின் மகனான} ராமன், தன் படையுடன் சாகரத்தைக் கடந்ததும், ஸ்ரீமானான ராவணன் தன் அமைச்சர்களான சுக, சாரணர்களிடம் {பின்வருமாறு} கூறினான்:(1) "சர்வ வானரப் படையும், கடப்பதற்கரிய சாகரத்தைக் கடந்திருக்கிறது. இதுவரையில்லாத சேதுபந்தனத்தை சாகரத்தில் ராமன் செய்திருக்கிறான்.(2) சாகரத்தில் அந்த சேதுபந்தனத்தை எச்சூழ்நிலையிலும் நம்பியிருக்கமாட்டேன். அவசியம் அந்த வானரப் படையை நான் கணக்கில் கொள்ள வேண்டும்.(3) 

Tuesday, 27 August 2024

இராவணனின் தற்புகழ்ச்சி | யுத்த காண்டம் சர்க்கம் - 024 (45)

Ravana's boast | Yuddha-Kanda-Sarga-024 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையின் சிறப்பை லக்ஷ்மணனிடம் சுட்டிக்காட்டிய ராமன்; சுகனை விடுவிக்க ஆணையிட்டது; இராமனின் படையைக் குறித்து ராவணனிடம் விவரித்த சுகன்; இராவணனின் தற்புகழ்ச்சி...

Ravana boasting to Sukha

இராஜனால்[1] அணிவகுக்கப்பட்ட அந்த வீர சமிதி {வீரர்களின் கூட்டம்}, சசியுடனும் {சந்திரனுடனும்}, சுப நக்ஷத்திரங்களுடனும் கூடிய சரத்கால பௌர்ணமி இரவைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(1) வசுந்தரை {பூமியானது}, சாகரத்திற்கு ஒப்பான அந்தப் படையால் கடுமையாக பீடிக்கப்பட்டு,  அதன் வேகத்தால் அச்சமடைந்து நடுங்கியது.(2) அப்போது, கானனௌசர்கள், ரோமஹர்ஷணத்தை {காட்டுவாசிகளான வானரர்கள், மயிர்க்கூச்சத்தை} ஏற்படுத்தும் பேரிகை, மிருதங்க ஒலிகளுடன் கூடிய பயங்கர ஆரவாரத்தை லங்கையில் கேட்டனர்.(3) அந்த கோஷத்தால் மகிழ்ச்சியடைந்த ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத் தலைவர்கள்}, பொறுத்துக் கொள்ள முடியாத அந்த கோஷத்தைவிட அதிக கோஷத்தைச் செய்து மகிழ்ச்சியில் முழங்கினர்.(4) செருக்குடன் கூடிய பிலவங்கமர்கள், அம்பரத்தின் மேக ஸ்வனத்திற்கு {தாவிச் செல்பவர்களான குரங்குகள், வானத்து மேக ஒலிக்கு} ஒப்பாக முழங்கிய கர்ஜனையை ராக்ஷசர்களும் கேட்டனர்.(5)

Friday, 9 August 2024

ஒற்றன் சார்தூலன், தூதன் சுகன் | யுத்த காண்டம் சர்க்கம் - 020 (37)

The envoy, Suka | Yuddha-Kanda-Sarga-020 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சுகனை சுக்ரீவனிடம் தூதனுப்பிய ராவணன்; சுகனைக் கைப்பற்றிய வானரர்கள்; கொல்லப்படுவதைத் தடுத்து அவனை விடுவித்த ராமன்...

Suka speaking to Sugreeva

பிறகு, வீரியவானும், சார்தூலன் என்ற பெயரைக் கொண்டவனுமான ராக்ஷசன், முகாமிட்டு, சுக்ரீவனால் பாலிக்கப்பட்ட துவஜனீயை {கொடிகளுடன் கூடிய படையை} நெருங்கி வந்து பார்த்தான்[1].(1) துராத்மாவான ராக்ஷசராஜன் ராவணனின் சாரனான {ஒற்றனான} அந்த ராக்ஷசன், பதற்றமின்றி அனைத்துப் பக்கங்களில் இருந்து அதை {படையைக்} கண்டு, வேகமாகத் திரும்பி,{2} லங்கையை அடைந்து, ராஜனிடம் இதைச் சொன்னான்:(2,3அ) "இரண்டாம் சாகரத்தைப் போல, ஆழம் மிகுந்ததும், அளவிடமுடியாததுமான இந்த வானர, ரிக்ஷௌகம் {வானரர்களும், கரடிகளும் அடங்கிய கூட்டம்} லங்கையை நெருங்குகிறது.(3ஆ,4அ) உத்தமர் தசரதரின் புத்திரர்களும், ரூபசம்பன்னர்களும் {அழகு நிறைந்தவர்களும்}, மனவலிமைமிக்கவர்களும், உடன்பிறந்தவர்களுமான இந்த ராமலக்ஷ்மணர்கள், சீதையின் பதம் வர, சாகரத்தை அடைந்து முகாமிட்டிருக்கின்றனர்.(4ஆ,5) மஹாராஜாவே, ஆகாசத்தில் வலம்வந்தால், பலம் {படை}, பத்து யோஜனைகள் எங்கும் பரவியிருப்பதாகத் தெரிகிறது. சீக்கிரம் தத்துவபூதத்தை {உண்மையை} அறிந்து கொள்வதே உமக்குத் தகும்.(6) மஹாராஜாவே, உம்முடைய தூதர்களை சீக்கிரமே அனுப்பி கவனித்து அறிந்து கொள்வதே தகும். இதில் தானத்தையாவது, சாமத்தையாவது, பேதத்தையாவது பயன்படுத்த வேண்டும்" {என்றான் சார்தூலன்}.(7)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை