Showing posts with label தான்யமாலினி. Show all posts
Showing posts with label தான்யமாலினி. Show all posts

Tuesday, 27 May 2025

அதிகாயனின் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 071 (116)

Atikaya killed | Yuddha-Kanda-Sarga-071 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனின் தோற்றம் கண்டு பயந்த வானரர்கள்; ராமனை நோக்கிச் சென்று தற்புகழ்ச்சி செய்த அதிகாயன்; பயங்கர யுத்தம் செய்து அதிகாயனைக் கொன்ற லக்ஷ்மணன்...

Atikaya Rama Vibheeshana, digital art made by copilot inspired by a Chandamama image

உரோமஹர்ஷணம் கொள்ளும் {மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும்} வகையில் தன் பலம் {படை} கொந்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டும், சக்ரனுக்கு {இந்திரனுக்குத்} துல்லியமான பராக்கிரமத்தைக் கொண்ட தன் பிராதாக்கள் {தன்னுடன் பிறந்தோர்} கொல்லப்படுவதைக் கண்டும்,{1} தன் பித்ருவ்யர்களும் {சிற்றப்பன்மாரும்}, ராக்ஷசரிஷப பிராதாக்களுமான {ராக்ஷசர்களில் உடன்பிறந்த காளைகளுமான} யுத்தோன்மத்தனும், மத்தனும் {மஹோதரனும், மஹாபார்ஷ்வனும்} போரில் வீழ்ந்ததைக் கண்டும்,{2} மஹாதேஜஸ்வியும், பிரம்மனால் வரங்கள் தத்தம் செய்யப்பட்டவனும், அத்ரிக்கு {மலைக்கு} ஒப்பானவனும், போரில் தேவதானவர்களின் செருக்கை அழிப்பவனுமான அதிகாயன் கோபமடைந்தான்.(1-3) சக்ராரியான அவன் {இந்திரனின் பகைவனான அதிகாயன்}, ஆயிரம் பாஸ்கரர்களின் {சூரியர்களின்} சங்கமத்தைப் போல் ஒளிரும் ஒரு ரதத்தில் ஏறி, வானரர்களை நோக்கி விரைந்தான்.(4) கிரீடியும் {கிரீடம் தரித்தவனும்}, தூய குண்டலங்களை அணிந்தவனுமான அவன் {அதிகாயன்}, சாபத்தை {வில்லை} வளைத்து, தன் நாமத்தை {பெயரை} உரக்க அறிவித்தபடியே மஹாஸ்வனத்துடன் நாதம் செய்தான்.(5) அவன், அந்த சிம்மநாதத்தாலும், உரக்க அறிவிக்கும் தன் பெயராலும், பயங்கரமான  நாணொலியாலும் பயத்தை விளைவித்தபடியே வானரர்களை அச்சுறுத்தினான்.(6)

Tuesday, 13 February 2024

தான்யமாலினி | சுந்தர காண்டம் சர்க்கம் - 22 (46)

Dhanyamalini | Sundara-Kanda-Sarga-22 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன்னை மணந்து கொள்ள சீதைக்கு இரண்டு மாதக் கெடு விதித்த ராவணன்; சீதையை அச்சுறுத்தி தன் வசப்படுத்த ராக்ஷசிகளுக்கு ஆணையிட்டது...

Seetha and Ravana's wives. Dhanyamalini hugging Ravana

இராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, கடுமைநிறைந்த சீதையின் வசனத்தைக் கேட்ட பிறகு, பிரியதரிசனங்கொண்ட பிரியமற்ற சொற்களில் {இனிமையாகத் தெரியும் கடுஞ்சொற்களில் பின்வருமாறு} சீதைக்கு மறுமொழி கூறினான்:(1) “எப்படி எப்படி ஒருவன் ஸ்திரீகளிடம் சாந்தமாகப் பேசுகிறானோ, அப்படி அப்படி {அவளது} வசமடைகிறான். எப்படி எப்படி பிரியமாகப் பேசுகிறானோ, அப்படி அப்படி புறக்கணிக்கப்படுகிறான்[1].(2) நல்ல சாரதி, அமார்க்கத்தை அடைந்து ஓடும் ஹயங்களை {அடக்குவதைப்} போல, உன்னைப் பொறுத்தவரையில் எழுந்த {என்} காமம், குரோதத்தை அடக்குகிறது.(3) மனுஷ்யர்களின் காமம், ஒருதலையானது. எந்த ஜனத்திடம் {காமம்} கட்டுண்டுள்ளதோ, அதில் {அவர்களிடம்} தயையும், சினேகமும் பிறக்கிறது.(4) அழகிய முகத்தவளே, இதனாலேயே, போலியாக நாடு கடந்து வந்தவனிடம் {போலி வானப்ரஸ்தனிடம்} விருப்பமுள்ளவளான நீ, வதத்திற்குத் தகுந்தவளாகவும், அவமானத்திற்குத் தகுந்தவளாகவும் இருந்தாலும் கொல்லாதிருக்கிறேன்.(5) மைதிலி, இங்கே நீ என்னைக் குறித்து என்னென்ன கடுமையான வாக்கியங்களைப் பேசினாயோ, அவை ஒவ்வொன்றும் உன் பயங்கர வதத்திற்குத் தகுந்தவை” {என்றான் ராவணன்}.(6)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை