Showing posts with label ஹனுமான். Show all posts
Showing posts with label ஹனுமான். Show all posts

Friday, 31 October 2025

பரதனின் ஏற்பாடு | யுத்த காண்டம் சர்க்கம் – 127 (62)

The arrangements of Bharata | Yuddha-Kanda-Sarga-127 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை வரவேற்பதற்கு அயோத்தியில் நடந்த ஏற்பாடுகள்; இராமனை வரவேற்கச் சென்ற பரதன்; புஷ்பக விமானத்தை குபேரனிடம் திருப்பி அனுப்பிய ராமன்...

Bharata carries Rama's sandals in his head

சத்தியவிக்ரமனும், பகை வீரரை அழிப்பவனுமான பரதன், அதைக் கேட்டுப் பரமானந்தம் அடைந்து, மகிழ்ச்சியுடன் இருந்த சத்ருக்னனைப் பார்த்து {பின்வருமாறு} ஆணையிட்டான்:(1) "நகரத்தின் சைத்யங்களிலுள்ள சர்வ தைவதங்களும் {கோவில்களில் உள்ள அனைத்து தெய்வங்களும்} சுகந்த மாலைகளாலும், வாத்தியங்களாலும் சுசயர்களான நரர்களால் {தூய மனிதர்களால்} அர்ச்சிக்கப்படட்டும்.(2) ஸ்துதி புராணஜ்ஞர்களான {துதிகளையும், புராணங்களையும் அறிந்தவர்களான} சூதர்கள், அதேபோல சர்வ வைதாளிகர்கள் {அரசரைப் புகழ்ந்து பாடுபவர்கள்}, சர்வ வாதித்ரகுசலர்களின் சங்கங்கள் {வாத்தியங்களில் திறன்பெற்றவர்களின் கூட்டங்கள்}, கணிகையர் {விலைமாதர்கள்},{3} ராஜதாரங்கள் {அரசரின் மனைவியர்}, அதே போல அமைச்சர்கள், சேனாகண அங்கத்தினரான சைனியத்தார் {படைப்பிரிவுகளைச் சேர்ந்த படைவீரர்கள்}, ராஜர்கள் {க்ஷத்ரியர்கள்}, பிராமணர்கள், சிறந்த தலைவர்கள் {வைசியர்கள்},{4} அதேபோல கணங்கள் {பின்தொடர்பவர்கள் / சூத்திரர்கள்} ஆகியோர் சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான ராமரின் முகத்தைக் காணச் செல்லட்டும்" {என்றான் பரதன்}.(3-5அ) 

ஹனுமான் சொன்ன விருத்தாந்தம் | யுத்த காண்டம் சர்க்கம் – 126 (55)

Story told by Hanuman | Yuddha-Kanda-Sarga-126 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் நீண்ட பயணத்தையும், அவன் சந்தித்தவர்களையும் குறித்து விளக்கிச் சொன்ன ஹனுமான்...

Lord Hanuman speaking to Bharata

{பரதன்}, "பல வருஷங்களாக மஹத்தான வனத்திற்குள் சென்றிருக்கும் என் நாதரின் பிரீதிகரமான கீர்த்தனத்தை {இனிமையான துதியை} இப்போது நான் கேட்கிறேன்.(1) "ஒரு நரன் ஜீவந்தனாக இருந்தால் {ஒரு மனிதன் பிழைத்திருந்னானால்}, நூறு வருஷங்களுக்குப் பிறகாவது ஆனந்தத்தை அடைவான்" என்ற இந்த லௌகிகக் கதை {உலகமொழி} எனக்கு கல்யாணமாக {மங்கலமாக} ஒலிக்கிறது {உண்மையாகத் தெரிகிறது}.(2) இராகவருக்கும், கபிக்களுக்கும் {குரங்குகளுக்கும்} இடையிலான சந்திப்பு எந்த தேசத்தில், ஏன் ஏற்பட்டது? கேட்கும் எனக்கு உள்ளபடி தெரிவிப்பாயாக[1]" {என்றான் பரதன்}.(3)

Wednesday, 29 October 2025

நந்திகிராமம் | யுத்த காண்டம் சர்க்கம் – 125 (46)

Nandigrama | Yuddha-Kanda-Sarga-125 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் அனுப்பப்பட்ட ஹனுமான், ராமனின் வரவை குஹனிடமும், பரதனிடமும் அறிவிப்பது...

Hanuman Bharata and Shatrugna

பிறகு, துரிதவிக்ரமனும், பிரியத்தை விரும்புகிறவனுமான ராகவ ராமன், அயோத்தியை நினைத்து பிரியமானதைக் குறித்துச் சிந்தித்தான்.(1) மதிமிக்கவனும், தேஜஸ்வியுமான அவன் இவ்வாறு சிந்தித்துவிட்டு, வானரர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தி, பிலவங்கமனான ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, சீக்கிரம் துரித கதியில் அயோத்திக்குச் சென்று, நிருபதிமந்திரத்தில் {அரசமாளிகையில்} உள்ள ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிவாயாக.(3) 

Sunday, 12 October 2025

இராமனின் இங்கிதங்கள் | யுத்த காண்டம் சர்க்கம் – 114 (36)

The gestures of Rama | Yuddha-Kanda-Sarga-114 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனால் பணிக்கப்பட்ட விபீஷணன் சீதையை ராமன் முன்பு அழைத்து வந்தது; லக்ஷ்மணன், சுக்ரீவன், ஹனுமான் ஆகியோர் ராமனின் இங்கிதங்களைக் கண்டு வருந்துவது...

Sita Rama Vibheeshana and Lakshmana

மஹாபிராஜ்ஞனான பிலவங்கம் {பெரும் புத்திசாலியும், தாவிச் செல்பவனுமான ஹனுமான்}, சர்வதனுஷ்மதர்களில் {வில்லாளிகள் அனைவரிலும்} சிறந்தவனும், வசனமர்த்தஜ்ஞனுமான {வசனங்களின் பொருளை அறிந்தவனுமான} அந்த ராமனை அணுகி {பின்வருமாறு} சொன்னான்:(1) "எவளின் நிமித்தம் இந்தக் கர்மங்களை ஆரம்பித்தீரோ, எவளுக்கான பலன் கிடைத்திருக்கிறதோ, அந்த மைதிலி தேவியின் சோகசந்தாபத்தை நீர் காண்பதே தகும்.(2) கண்ணீர் நிறைந்த கண்களுடன் சோகத்தில் மூழ்கியிருக்கும் அந்த மைதிலி, உமது விஜயத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள்.(3) பூர்வத்தில் என் மீது கொண்ட பற்றுறுதியில் விளைந்த விசுவாசத்தால் அவள் என்னிடம், "கிருதார்த்தரும் {காரியம் நிறைவேறியவரும்}, லக்ஷ்மணருடன் கூடியவருமான என் பர்த்தாவை {கணவரை} நான் காண விரும்புகிறேன்" என்று கூறினாள்" {என்றான் ஹனுமான்}.(4)

Friday, 10 October 2025

கரடியின் கீதம் | யுத்த காண்டம் சர்க்கம் – 113 (54)

A song of a bear | Yuddha-Kanda-Sarga-113 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் வெற்றிச் செய்தியை சீதையிடம் சொன்ன ஹனுமான்; செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த சீதை; கரடி பாடிய கீதம்...

Hanuman speaking to Sita

இவ்வாறு ஆணையிடப்பட்ட மாருதாத்மஜன் {வாயு மைந்தன்} ஹனுமான், நிசாசரர்களால் {இரவுலாவிகளான ராக்ஷசர்களால்} பூஜிக்கப்படும் லங்காம்புரீக்குள் பிரவேசித்தான்.(1) அவன் லங்காம்புரீக்குள் பிரவேசித்து, விபீஷணனைப் பின்தொடர்ந்தான். அப்போது அந்த ஹனுமான் விருக்ஷவாடிகைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டான்.{2} சீதைக்குத் தெரிந்தவனான அந்த ஹரி {குரங்கான ஹனுமான்} எது நியாயமோ அந்த விதிப்படியே உள்ளே பிரவேசித்தான். சசி {சந்திரன்} இல்லாமல் {நீராடாமல்} களையிழந்த ரோகிணியைப் போலிருந்தவளைக் கண்டான்.{3} அவள், ராக்ஷசிகள் சூழ விருக்ஷமூலத்தில் {மரத்தடியில்} ஆனந்தமற்றவளாக இருந்தாள். அவன் அமைதியாக அவளை அணுகி, பணிவுடன் வணங்கி நின்றான்.(2-4)

மீண்டும் விபீஷணப் பட்டாபிஷேகம் | யுத்த காண்டம் சர்க்கம் – 112 (27)

Vibheeshana's coronation yet again | Yuddha-Kanda-Sarga-112 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தேவலோகம் திரும்பிய மாதலி; இலங்கையின் மன்னனாக நிறுவப்பட்ட விபீஷணன்; ஹனுமான் மூலம் சீதைக்கு செய்தி அனுப்பிய ராமன்...

Lakshmana consecrating Vibheeshana

அதே வேளையில் ராவண வதத்தைக் கண்ட அந்த தேவ, கந்தர்வ, தானவர்கள், சுப கதைகளைக் கதைத்துக் கொண்டே {மங்கல பேச்சுக்களைத் தங்களுக்குள் பேசிக் கொண்டே} தங்கள் தங்கள் விமானங்களில் சென்றனர்.(1) இராவணனின் வதத்தையும், ராகவனின் பராக்கிரமத்தையும், வானரர்களின் நல்ல யுத்தத்தையும், சுக்ரீவனின் மந்திரத்தையும் {ஆலோசனைகளையும்},{2} சௌமித்ரியான லக்ஷ்மணனின் பற்றையும், வீரியத்தையும், சீதையின் பதிவிரதாத்வத்தையும் {பதிவிரதா தன்மையையும்}, ஹனூமதனின் பராக்கிரமத்தையும்{3} மகிழ்ச்சியுடனும், பெரும் மதிப்புடனும் பேசிக் கொண்டே வந்த வழியே அவர்கள் திரும்பிச் சென்றனர்.(2-4அ) 

Tuesday, 23 September 2025

உயிர் மீண்ட லக்ஷ்மணன் | யுத்த காண்டம் சர்க்கம் – 101 (57)

The fall of Lakshmana | Yuddha-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் புலம்பல்; ஹனுமானை மூலிகை மலைக்கு அனுப்பி வைத்த சுஷேணன்; ஹனுமான் கொண்டு வந்த மூலிகைகளை முகர்ந்து நலமடைந்த லக்ஷ்மணன்...

Hanuman Uproots the Mighty Herbal Mountain

சூரனான லக்ஷ்மணன், பலவானான ராவணனின் சக்தியால் {வேலாயுதத்தால்} சமரில் வீழ்த்தப்பட்டு, சோணிதத்தில் {குருதியில்} நனைந்திருப்பதைக் கண்டு,{1} துராத்மாவான ராவணனுக்கு கொந்தளிப்பான யுத்தத்தை தத்தம் செய்த அவன் {ராமன்}, பாண ஓகங்களை ஏவுகையில் சுஷேணனிடம் இதைச் சொன்னான்:(1,2) "இராவணனின் வீரியத்தால் புவியில் விழுந்திருக்கும் வீரனான இந்த லக்ஷ்மணன், சர்ப்பத்தைப் போல பூமியில் புரள்வது என் சோகத்தை அதிகரிக்கிறது.(3) என் பிராணனைவிடப் பிரியமான இந்த வீரனை சோணிதத்தில் நனைந்தவனாகப் பார்த்து, மனஞ்சிதறும் எனக்குள், யுத்தம் செய்ய இருக்கும் சக்தி என்ன?(4) 

Thursday, 21 August 2025

மூல பல யுத்தம் | யுத்த காண்டம் சர்க்கம் - 093 (39)

The battle of the primary army | Yuddha-Kanda-Sarga-093 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுடைய ஆணையின் பேரில் போர்க்களம் சென்ற ராக்ஷசப் படை; இராமனின் வலிமைமிக்க கணைகளால் அழிவை அடைந்தது...

Ravana orders the rakshasa army and a terribe war between Vanaras and Rakshasa break

தீனனும், பரம துக்கத்தில் இருந்தவனுமான அந்த ராஜா {ராவணன்}, சபைக்குள் பிரவேசித்து, சிம்ஹத்தைப் போலப் பெருமூச்சுவிட்டபடியே முக்கிய ஆசனத்தில் அமர்ந்தான்.(1) மஹாபலவானான அந்த ராவணன், புத்திர விசனத்தால் உண்டான  வேதனையுடன் கைகளைக் கூப்பிக் கொண்டு, அந்த சர்வ பலமுக்கியர்களிடமும் {படைத்தலைவர்களான அவர்கள் அனைவரிடமும், பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) "சர்வ ஹஸ்த அஷ்வங்களால் {யானைகள், குதிரைகள் அனைத்தாலும்} சூழப்பட்ட, ரத சங்கங்களும், பதாதிகளுமான {தேர்ப்படையையும், காலாட்படையையும் சேர்ந்தவர்களான} நீங்கள் அனைவரும் புறப்படுவீராக.(3) இராமனைத் தனியாகச் சுற்றி வளைத்து, மழைக்காலத்து மேகங்களைப் போல, சர வர்ஷங்களை வர்ஷித்து {கணை மழைகளைப் பொழிந்து}, அவனைக் கொல்வீராக.(4) அல்லது, நான், நாளைய பெரும்போரில், உலகம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, உங்கள் கூரிய சரங்களால் காத்திரங்கள் {கணைகளால் உடல் உறுப்புகள்} பிளக்கப்பட்ட ராமனைக் கொல்வேன்" {என்றான் ராவணன்}.(5)

Friday, 15 August 2025

நலமடைந்த லக்ஷ்மணன் | யுத்த காண்டம் சர்க்கம் - 091 (28)

Lakshmana healed | Yuddha-Kanda-Sarga-091 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித்தைக் கொன்றதற்காக லக்ஷ்மணனைப் பாராட்டிய ராமன்; இலக்ஷ்மணனின் காயங்களுக்கு சிகிச்சை அளித்து, அவனை குணப்படுத்திய சுஷேணன்...

Rama embracing wounded Lakshmana

சுப லக்ஷணங்களைக் கொண்டவனும், உதிரத்தால் நனைந்த காத்திரங்களுடன் {உடல் உறுப்புகளுடன்} கூடியவனுமான லக்ஷ்மணன், போரில் அந்த இந்திரஜித்தைக் கொன்றதில் பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(1)  பிறகு ஜாம்பவந்தன், ஹனூமந்தன், சர்வ வனௌகசர்களையும் அழைத்த அந்த வீரியவான்{2} லக்ஷ்மணன், விபீஷணனையும், ஹனூமந்தனையும் ஊன்றிக் கொண்டு {அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு}, ஸுக்ரீவனும், ராகவனும் {ராமனும்} எங்கிருந்தனரோ அங்கே சென்றான்.(2,3) இராமனை அணுகி வணங்கியவன் {லக்ஷ்மணன்}, சக்ரனிடம் இந்திரானுஜன் எப்படியோ {இந்திரனின் அருகில் இந்திரனின் தம்பியான உபேந்திரன் எப்படி நிற்பானோ}[1], அப்படியே தன் பிராதாவின் சமீபத்தில் நின்றான்.(4) மஹாத்மாவான ராகவனை அடைந்தபிறகு, அந்த வீரன், இந்திரஜித்தின் கோர வதத்தைக் குறித்து சோர்வுடன் சொன்னான்.(5) அப்போது, மகிழ்ச்சியுடன் கூடிய விபீஷணன், மஹாத்மாவான லக்ஷ்மணனால் ராவணியின் சிரம் {இந்திரஜித்தின் தலை} துண்டிக்கப்பட்டதைத் தெரிவித்தான்[2].(6)

Thursday, 14 August 2025

இந்திரஜித் வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 090 (97)

Indrajith killed | Yuddha-Kanda-Sarga-090 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையில் இருந்து வேறொரு தேரில் வந்த இந்திரஜித்; விபீஷணனைத் தாக்கியது; அவனது குதிரைகளைக் கொன்ற விபீஷணன்; இலக்ஷ்மணனிடம் வீழ்ந்த இந்திரஜித்...

Lakshmana kills Indrajith

அஷ்வங்கள் {குதிரைகள்} கொல்லப்பட்டதால், மஹாதேஜஸ்வியான அந்த நிசாசரன் {வலிமைமிக்க இரவுலாவியான இந்திரஜித்} பூமியில் நின்றான். பரம குரோதத்தில் எரிந்த இந்திரஜித் தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(1) தனு தரித்தவர்களான அவ்விருவரும், விஜயத்திற்காக வனத்தைவிட்டு வெளிப்படும் இரு கஜங்களை {யானைகளைப்} போல, அன்யோன்யம் கொல்லும் நோக்கம் அதிகம் கொண்டவர்களாக தங்கள் கணைகளை ஏவினர்.(2) எங்குமிருந்து விரையும் அந்த ராக்ஷசவனௌகசர்கள் {ராக்ஷசர்களும், வனத்தில் வசிப்பவர்களான வானரர்களும்}, அன்யோன்யம் {ஒருவரையொருவர்} கொன்று, யுத்தத்தில் தங்கள் தலைவர்களைக் கைவிடாதிருந்தனர்.(3) 

Saturday, 9 August 2025

இந்திரஜித் செய்த அற்புதப்போர் | யுத்த காண்டம் சர்க்கம் - 089 (54)

Wonderful battle fought by Indrajith | Yuddha-Kanda-Sarga-089 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களைப் போரிடத் தூண்டிய விபீஷணன்; இந்திரஜித்தின் சாரதியைக் கொன்ற லக்ஷ்மணன்; அவனுடைய குதிரைகளைக் கொன்ற வானரர்கள்; நம்பிக்கையிழந்த இந்திரஜித்...

Battle between Indrajith and Lakshmana

பிறகு,[1] பரஸ்பரம் ஜயத்தில் விருப்பங்கொண்டு, மதங்கொண்ட மாதங்கங்களை {யானைகளைப்} போல யுத்தத்தில் ஈடுபட்டுவரும் நரராக்ஷசர்கள் இருவரையும் {இலக்ஷ்மணனையும், இந்திரஜித்தையும்} கண்டு,{1} பலவானும், சூரனுமான அந்த ராவணபிராதா {ராவணனுடன் பிறந்தவனான அந்த விபீஷணன்}, அவர்களுக்கிடையிலான யுத்தத்தைக் காணும் விருப்பத்தில், தன் சிறந்த சாபத்தை {வில்லைத்} தரித்துக் கொண்டு, போர்க்களத்தின் முன்னணியில் நின்று கொண்டிருந்தான்[2].(1,2) அங்கே நின்று கொண்டு, மஹாதனுவை வளைத்து, கூர்முனைகளைக் கொண்ட மஹா சரங்களை ராக்ஷசர்கள் மீது ஏவினான்.(3) நெருப்பின் தீண்டலைக் கொண்ட அந்த சரங்கள், மஹாகிரிகளில் வஜ்ரத்தை {பெரும் மலைகளில் விழும் இந்திரனின் வஜ்ராயுதத்தைப்} போல் இலக்குத் தவறாமல் பாய்ந்து, ராக்ஷசர்களைப் பிளந்தன.(4) 

Tuesday, 29 July 2025

விபீஷணனின் வேண்டுகோள் | யுத்த காண்டம் சர்க்கம் - 084 (23)

The request of Vibheeshana | Yuddha-Kanda-Sarga-084 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாயா சீதையைக் கொன்ற இந்திரஜித்தின் தந்திரத்தை ராமனிடம் சொன்ன விபீஷணன்; நிகும்பிலைக்குச் செல்லும்படி லக்ஷ்மணனை வற்புறுத்தியது...

Vibheeshana clarifies the Maya of Indrajith to Rama

பிராதாவிடம் {தன்னுடன் பிறந்த ராமனிடம்} அன்பு கொண்ட லக்ஷ்மணன் ராமனை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தபோது, விபீஷணன் குல்மங்களை {படைப்பிரிவுகளை} அவற்றுக்குரிய இடங்களில் விட்டு அங்கே வந்தான்.(1) நானாவித ஆயுதங்களைத் தரித்தவர்களும், கரிய அஞ்சன மைக் குவியல்களைப் போலத் தெரிந்தவர்களும், யூதபனுடன் கூடிய மாதங்கங்களை {தலைமை யானையைச் சூழ்ந்த யானைகளைப்} போன்றவர்களுமான நான்கு வீரர்களால் சூழப்பட்ட அவன் {விபீஷணன்},{2} சோகத்தில் மூழ்கியிருக்கும் மஹாத்மாவான ராகவனை {லக்ஷ்மணனை} அணுகி, வானரர்களும் கண்கள் நிறைந்த கண்ணீருடன் இருப்பதைக் கண்டான்.(2,3) லக்ஷ்மணனின் அங்கத்தில் சாய்ந்து, மயக்க நிலையில் கிடக்கும் இக்ஷ்வாகுகுலநந்தனனான மஹாத்மாவையும் {ராமனையும் விபீஷணன்} கண்டான்.(4) சோக சந்தாபத்தில் வெட்கமடைந்து ராமனைக் கண்ட அந்த விபீஷணன், தீனமடைந்தவனாக உள்ளார்ந்த துக்கத்துடன், "இஃது என்ன?" என்று கேட்டான்.(5)

Monday, 28 July 2025

உத்திஷ்ட நரசார்தூலா | யுத்த காண்டம் சர்க்கம் - 083 (44)

Arise, O Tiger among men | Yuddha-Kanda-Sarga-083 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதை கொல்லப்பட்டாள் என்ற செய்தியை ஹனுமான் சொல்லக் கேட்டு மயக்கமடைந்த ராமன்; இந்திரஜித்துடன் போரிட ஆயத்தமான லக்ஷ்மணன்...

Rama faints as Hanuman say Sita is killed

இராக்ஷச வனௌகசர்களுக்கு இடையிலான அந்தப் பெரும்போரின் ஆரவாரத்தைக் கேட்ட ராகவன், ஜாம்பவந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) "சௌம்யா, எப்படி மகத்தான, பயங்கரமான ஆயுத ஸ்வனம் கேட்கிறதோ அத்தகைய அடைதற்கரிய கர்மத்தை ஹனுமதன் செய்து கொண்டிருக்கிறான். இது நிச்சயம்.(2) எனவே, ரிக்ஷபதே {கரடிகளின் தலைவா}, உன் பலத்துடன் {படையுடன்} சீக்கிரம் சென்று, யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அந்த கபிசிரேஷ்டனுக்கு சஹாயம் {உதவி} செய்வாயாக" {என்றான் ராமன்}.(3)

Monday, 21 July 2025

நிகும்பிலைக் கோயில் | யுத்த காண்டம் சர்க்கம் - 082 (28)

The sanctuary of Nikumbhila | Yuddha-Kanda-Sarga-082 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களைத் தடுத்து, ராமனிருக்கும் இடத்தை நோக்கி அழைத்துச் சென்ற ஹனுமான்; நிகும்பிலைக்குச் சென்று வேள்வி நெருப்பில் காணிக்கைகள் செலுத்திய இந்திரஜித்...

Hanuman stops the monkeys running away from battlefield

சக்ரனின் அசனிக்கு சமமான ஸ்வனத்துடன் கூடிய {இந்திரனின் இடிக்கு இணையான ஒலியுடன் கூடிய} அந்த பயங்கர முழக்கத்தைக் கேட்ட வானரரிஷபர்கள் {குரங்குகளில் காளைகள்} ஏராளமானோர் {அங்கேயும், இங்கேயும்} பார்த்தபடியே சர்வ திசைகளிலும் ஓடினர்.(1) அப்போது மாருதாத்மஜனான {வாயுவின் மைந்தனான} ஹனுமான், தீனமடைந்தவர்களாக, விசன வதனத்துடன் தீனமடைந்து அச்சத்துடன் {தனித்தனியாக} சிதறி ஓடும் அவர்கள் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, யுத்தத்தில் உற்சாகத்தைக் கைவிட்டு தீனவதனங்களுடன் ஏன் ஓடுகிறீர்கள்? உங்கள் சூரத்தனம் எங்கே போனது?(3) நான் போரில் முன்னேறிச் செல்கையில், என்னைப் பின்தொடர்வீராக. பின்வாங்குவது, நற்குலத்தில் பிறந்த சூரர்களுக்குப் பொருத்தமானதல்ல" {என்றான் ஹனுமான்}.(4)

Friday, 18 July 2025

மாயாசீதாவதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 081 (35)

Killing of illusionary Sita | Yuddha-Kanda-Sarga-081 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையின் மாயத் தோற்றத்துடன் போர்க்களம் புகுந்த இந்திரஜித்; இந்திரஜித்துக்கும் ஹனுமானுக்கும் இடையில் நடந்த வாக்குவாதம்; மாய சீதையைக் கொன்ற இந்திரஜித்...

Indrajit brings maya sita in front of Hanuman

அவன் {இந்திரஜித்}, மஹாத்மாவான அந்த ராகவனின் மனத்தைப் புரிந்து கொண்டபோது, அந்தப் போரில் இருந்து விலகிச்சென்று, புரத்திற்குள் {லங்காபுரிக்குள்} பிரவேசித்தான்.(1) பிறகு, சூரனான அந்த ராவணி {ராவணனின் மகனான இந்திரஜித்}, வலிமைமிக்க ராக்ஷசர்களின் வதத்தை நினைத்து, அந்தக் குரோதத்தால் கண்கள் சிவந்தவனாக வெளிப்பட்டான்.(2) மஹாவீரியனும், தேவகண்டகனும் {தேவர்களுக்கு முள் போன்றவனும்}, பௌலஸ்தியனுமான {புலஸ்தியரின் வழி வந்தவனுமான} அந்த இந்திரஜித், ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாக பஷ்சிம துவாரத்தில் {மேற்கு வாயிலில்} வெளிப்பட்டான்.(3) 

Sunday, 6 July 2025

நிகும்ப வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 077 (24)

Nikumbha killed | Yuddha-Kanda-Sarga-077 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நிகும்பனைத் தாக்கிய ஹனுமான்; ஹனுமானால் கொல்லப்பட்ட நிகும்பன்...

Hanuman killing Nikumbha

நிகும்பன், தன் பிராதா {தன்னுடன் பிறந்த கும்பன்} சுக்ரீவனால் வீழ்த்தப்பட்டதைக் கண்டு, கோபத்தில் வானரேந்திரனை {சுக்ரீவனை} எரித்து விடுபவனைப் போலப் பார்த்தான்.(1) பிறகு அந்த தீரன் {நிகும்பன்}, மஹேந்திர சிகரத்திற்கு {மகேந்திரமலைச் சிகரத்திற்கு} ஒப்பானதும், சுபமானதும், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், ஐந்து விரல்களின் முத்திரையைக் கொண்டதுமான பரிகத்தை எடுத்துக் கொண்டான்.(2) ஹேமப்பட்டங்கள் {பொற்பட்டைகள்} பதிக்கப்பெற்றும், வஜ்ரம், மாணிக்கத்தால் அலங்கரிக்கப்பட்டும், யமதண்டத்திற்கு ஒப்பானதாகவும் இருந்த அது {அந்தப் பரிகம்}, பயங்கர ராக்ஷசர்களின் பயத்திற்கு நாசத்தை ஏற்படுத்தியது {ராட்சரர்களை பயத்தில் இருந்து விடுவித்தது}.(3) அளவில் சக்ரதுவஜத்திற்கு {இந்திரனின் கொடிக்கம்பத்திற்கு} ஒப்பான அதை {பரிகத்தை} ஏந்திக் கொண்டவனும், பீம விக்ரமனுமான {பயங்கர ஆற்றல்படைத்தவனுமான} நிகும்பன், தன் வாயை விரித்து உரக்க நாதம் செய்தான்.(4) 

Friday, 20 June 2025

ஔஷதி பர்வதமும், கந்தவஹாத்மஜனும் | யுத்த காண்டம் சர்க்கம் - 074 (77)

Mountain of herbs and the son of the carrier of fragrance | Yuddha-Kanda-Sarga-074 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இமய மலைக்குச் சென்று, மூலிகைகளுடன் கூடிய மலைச்சிகரத்தை எடுத்து வந்த ஹனுமான்; மூலிகையின் மகிமையால் உணர்வு மீண்ட வானரர்களும், ராமலக்ஷ்மணர்களும்...

Hanuman and Vibheeshan speaking to Jambhavan

போர்க்களத்தில் அவ்விருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்} விழுந்துகிடந்தபோது, ஹரியூதபர்களின் சைனியம் திகைத்திருந்தது. சுக்ரீவன், நீலன், அங்கதன், ஜாம்பவந்தன் ஆகியோரும் ஏது செய்வதெனக் கொஞ்சமும் அறியாதிருந்தனர்.(1) புத்திமான்களில் சிறந்தவனான விபீஷணன், அனைத்தையும் கண்டு விசனமடைந்தான். பிறகு, ஒப்பற்ற சொற்களால், சாகை மிருக ராஜ வீரர்களை ஆசுவாசப்படுத்தும் வகையில் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பயம் வேண்டாம். மனச்சோர்வடைவதற்கான காலம் இதுவல்ல. ஸ்வயம்பூவின் {பிரம்மாவின்} வாக்கியத்தை மதிக்கும் வகையிலேயே ஆரியபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் இந்திரஜித்தின் அஸ்திரஜாலங்களால் பீடிக்கப்பட்டிருக்கின்றனர். அதன்காரணமாக, சுதந்திரத்தை இழந்து உணர்விழந்துள்ளனர்.(3) அமோக {வீண்போகாத} வீரியம் கொண்ட பிரம்மம் என்ற இந்தப் பரமாஸ்திரம், ஸ்வயம்பூவால் அவனுக்கு {பிரம்மனால் இந்திரஜித்துக்கு} தத்தம் செய்யப்பட்டது. அதற்கு மதிப்பளிக்கவே ராஜபுத்திரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் யுத்தத்தில் விழுந்தனர். இங்கே விஷாதகாலம் ஏது? {இது வருந்துவதற்கான காலமல்ல)" {என்றான் விபீஷணன்}.(4)

Monday, 19 May 2025

வந்தவரில் எஞ்சியோரின் நிலை | யுத்த காண்டம் சர்க்கம் - 070 (67)

The situation of the rest who came | Yuddha-Kanda-Sarga-070 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அதிகாயனைத் தவிர்த்து, தேவாந்தகன், மஹோதரன், திரிசிரன், மஹாபார்ஷ்வன் ஆகியோர் ஹனுமான், நீலன், ரிஷபன் ஆகியோரால் கொல்லப்படுவது...

Rishabha's final blow to Mahaparshva

A digital art made by CopilotAI, inspired by a Chandamama Image

நராந்தகன் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், நைர்ருதரிஷபர்களுமான {ராக்ஷசர்களில் காளைகளுமான} தேவாந்தகன், திரிமூர்த்தன் {திரிசிரஸ்},  பௌலஸ்தியன் {புலஸ்தியர் வழி வந்தவனான} மஹோதரன் ஆகியோர் அழுது கூச்சலிட்டனர்.(1) மஹோதரன், மேகத்திற்கு ஒப்பான வாரணேந்திரத்தில் {தலைமை யானையின் மீது} ஏறிச் சென்று, மஹாவீரியனான வாலிபுத்திரனை {அங்கதனை} வேகமாகத் தாக்கினான்.(2) பிறகு, பலவானான தேவாந்தகன், பிராதாவுக்கான விசனத்துடன் {உடன் பிறந்தவனுக்கான வேதனையுடன்}, ஒளிரும் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டு, அங்கதனை நோக்கி விரைந்தான்.(3) பிறகு, வீரனான திரிசிரன், ஆதித்யனுக்கு ஒப்பானதும், பரம வாஜிகள் {மிகச் சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்தில் ஏறிச் சென்று வாலிபுத்திரனை {அங்கதனை} எதிர்த்தான்.(4)

Tuesday, 8 April 2025

கும்பகர்ண வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 067 (179)

Kumbhakarna killed | Yuddha-Kanda-Sarga-067 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனுடன் துவிவிதன், ஹனுமான், அங்கதன், சுக்ரீவன், லக்ஷ்மணன் ஆகியோர் போரிட்டது; கடும் மோதலில் ராமனால் கொல்லப்பட்ட கும்பகர்ணன்...

Kumbhakarna fighting a fierce battle

அங்கதனின் சொற்களைக் கேட்டுத் திரும்பி வந்த அந்த சர்வ மஹாகாயர்களும் {பேருடல்களைக் கொண்ட அனைவரும்} நைஷ்டிக புத்தியை {நம்பிக்கையுடன் கூடிய மனத்தை} அடைந்து போரிடக் காத்திருந்தனர்.(1) பலவானான அங்கதனின் வாக்கியத்தைக் கேட்டு நம்பிக்கையடைந்தவர்களும், வீரியம் நினைவூட்டப்பட்டவர்களும், போரில் விக்ரமர்களுமான அந்த வானரர்கள்,{2} ஜீவிதத்தைத் தியாகம் செய்யத் துணிந்து, மரணத்தை நிச்சயித்துக் கொண்டு, மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்று கடுமையான யுத்தத்தில் ஈடுபட்டனர்.(2,3) மஹாகாயம் {பேருடல்} படைத்த வானரர்கள், விருக்ஷங்களையும், மஹத்தான மலையுச்சிகளையும் பெயர்த்துக் கொண்டு, துரிதமாக ஓடிச் சென்று கும்பகர்ணனைத் தாக்கினர்.(4)

Sunday, 19 January 2025

அகம்பன வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 056 (39)

Akampana killed | Yuddha-Kanda-Sarga-056 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அகம்பனனுக்கும், ஹனுமானுக்கும் இடையில் நடந்த பெரும்போர்; அகம்பனனைக் கொன்ற ஹனுமான்...

Hanuman killing Akampana

அகம்பனன், யுத்தத்தில் வானரசத்தமர்களால் {வலிமைமிக்க வானரர்களால்} செய்யப்பட்ட அந்த மஹத்தான கர்மத்தைக் கண்டு, தீவிரமான கோபத்தால் பீடிக்கப்பட்டான்.(1) சத்ருக்களின் கர்மத்தைக் கண்டு, குரோதத்தில் மூர்ச்சித்த ரூபத்துடன், தன் பரம கார்முகத்தை {கோபத்தில் மெய்மறந்த வடிவத்துடன், தன் பெரும் வில்லை} அசைத்தபடி சாரதியிடம் {பின்வரும்} வாக்கியத்தைக் கூறினான்:(2) “சாரதியே, பலவான்களான இவர்கள், ரணத்தில் {வானரர்கள், போரில்} ஏராளமான ராக்ஷசர்களைக் கொல்வதெங்கேயோ, அங்கே ரதத்தைத் துரிதமாகச் செலுத்துவாயாக.(3) பலவான்களும், பயங்கரக் கோபம் கொண்டவர்களுமான இந்த வானரர்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்டு, அதோ என் முன் நிற்கின்றனர்.(4) சமரில் சிலாகித்துக் கொள்ளும் {தற்புகழ்ச்சி செய்யும்} இவர்களைக் கொல்ல நான் இச்சிக்கிறேன். இவர்கள் சர்வ ராக்ஷச பலத்தையும் {படையையும்} சிதைப்பதாகத் தெரிகிறது” {என்றான் அகம்பனன்}.(5)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை