Showing posts with label தூம்ராக்ஷன். Show all posts
Showing posts with label தூம்ராக்ஷன். Show all posts

Wednesday, 25 December 2024

தூம்ராக்ஷ வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 052 (38)

Dhumraksha killed | Yuddha-Kanda-Sarga-052 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களைத் தாக்கிய தூம்ராக்ஷன்; போரில் பெரும் எண்ணிக்கையிலான வானரர்களும், ராக்ஷசர்களும் கொல்லப்பட்டது; ஹனுமானுடன் போரிட்டு மடிந்த தூம்ராக்ஷன்...

Hanuman Throwing a Rock

யுத்தத்தை எதிர்பார்த்திருந்த சர்வ வானரர்களும், பீமவிக்கிரமனான ராக்ஷசன் தூம்ராக்ஷன் புறப்பட்டு வருவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சியில் முழக்கமிட்டனர்.(1)  பயங்கர யுத்தத்தை நடத்திய கபிராக்ஷசர்கள் {குரங்குகளும், ராக்ஷசர்களும்} மரங்கள், சூலங்கள், முத்கரங்கள் ஆகியவற்றைக் கொண்டு அன்யோன்யம் கோரமாகத் தாக்கிக் கொண்டனர்.(2) கோரமான வானரர்கள், அனைத்துப் பக்கங்களிலும், ராக்ஷசர்களால் வெட்டி அழிக்கப்பட்டனர். இராக்ஷசர்களும், மரங்களுடன் கூடிய வானரர்களால் பூமி மட்டமாக்கப்பட்டனர்.(3) குரோதமடைந்த ராக்ஷசர்கள், கங்கபத்ரங்களுடன் {கழுகின் இறகுகளுடன்} நேராகச் செல்லக் கூடிய, கோரமான தோற்றம் கொண்ட கூரிய சரங்களால் வானரர்களைத் துளைத்தனர்.(4)

Wednesday, 20 November 2024

தூம்ராக்ஷன் | யுத்த காண்டம் சர்க்கம் - 051 (36)

Dhumraksha | Yuddha-Kanda-Sarga-051 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்கள் கட்டில் இருந்து விடுபட்டதை அறிந்த ராவணன் ஏமாற்றமடைந்து தூம்ராக்ஷனை போருக்கு அனுப்பி வைத்தது...

Ravana commanding

அப்போது பேரொலி எழுப்புகிறவர்களும், வேகம் கொண்டவர்களான அந்த வானரர்களின் ஆரவார சப்தத்தை ராக்ஷசர்களுடன் கூடிய ராவணன் கேட்டான்.(1)  அவன் {ராவணன்}, மென்மையாகவும் கம்பீரமாகவும் கோஷிக்கும் அந்தப் பெரும் நாதத்தைக் கேட்டு, அந்த ஆலோசகர்களின் {அமைச்சர்களின்} மத்தியில் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(2) “பெரும் மகிழ்ச்சியில் மூழ்கித் திரண்டிருக்கும் பல வானரர்களின் இந்த மஹத்தான நாதம், மேகங்களின் கர்ஜனை எப்படியோ, அப்படியே எழுகிறது.{3} அவர்களின் பிரீதி மஹத்தானது என்பது வெளிப்படையானது. இதில் சந்தேகமில்லை. இந்தப் பெரும் சப்தத்தால் வருணாலயமும் {பெருங்கடலும்} கலங்குகிறது.(3,4) உடன்பிறந்தோரான அந்த ராமலக்ஷ்மணர்கள், கூரிய சரங்களால் கட்டப்பட்டுக் கிடக்கின்றனர். இந்த மஹத்தான நாதம் என்னில் சந்தேகத்தை ஜனிக்கச் செய்கிறது” {என்றான் ராவணன்}.(5)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை