Lament of Mandodari and the funeral rite | Yuddha-Kanda-Sarga-111 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணன் இறப்புக்காக அழுது புலம்பிய மந்தோதரி; இராமனின் வேண்டுகோளுக்கிணங்க ராவணனுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்த விபீஷணன்...
இராக்ஷசயோசிதைகளான {ராக்ஷச மகளிரான} அவர்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, பிரியையான ஜேஷ்டபத்னி தீனமாகப் பர்த்தாவை உற்று நோக்கினாள் {ராவணனின் அன்புக்குரிய மூத்த மனைவி மண்டோதரி பரிதாபத்திற்குரியவளாகத் தன் கணவனைப் பார்த்தாள்}.(1) மந்தோதரி, சிந்தனைக்கப்பாற்பட்ட கர்மங்களைச் செய்பவனான ராமனால் கொல்லப்பட்ட தன் பதியான தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட தன் கணவன் ராவணனைக்} கண்டு, அங்கே கிருபைக்குரிய வகையில் {பின்வருமாறு} பரிதபித்தாள்[1]:(2) "மஹோபாஹோ, வைஷ்ரவணானுஜரே {குபேரனின் தம்பியே}, புரந்தரனும் கூட குரோதம் கொண்ட உமது முன்னால் நிற்க நிச்சயம் அஞ்சுவானே.(3) உமது உத்வேகத்தால் {உம்மிடம் கொண்ட அச்சத்தால்} மஹான்களான ரிஷிகளும், புகழ்பெற்ற கந்தர்வர்களும், சாரணர்களும் திசைகளெங்கும் ஓடினார்களே.(4)



















