Showing posts with label திரிஜடை. Show all posts
Showing posts with label திரிஜடை. Show all posts

Tuesday, 12 November 2024

திரிஜடையின் ஆறுதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 048 (37)

Consolation of Trijata | Yuddha-Kanda-Sarga-048 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சோகத்தில் மூழ்கிய சீதை; அவளுக்கு நம்பிக்கை அளித்து மீண்டும் அசோக வனிகைக்கு இட்டுச் சென்ற திரிஜடை...

Trijata consoling Seetha in Pushpaka vimana

சீதை, தன் பர்த்தாவையும் {ராமனையும்}, மஹாபலவானான லக்ஷ்மணனையும் கொல்லப்பட்டவர்களாகக் கண்டு சோகத்தில் மூழ்கி கருணைக்குரிய வகையில் {பின்வருமாறு} அழுது புலம்பினாள்[1]:(1) “எந்த லக்ஷணிகர்கள் {லக்ஷணம் தெரிந்தவர்கள்}, என்னை புத்ரிணீ என்றும், அவிதவேதி என்றும் {புத்திர பாக்கியமுள்ளவள் என்றும், விதவையாகாத நித்யசுமங்கலி என்றும்} சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும், ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(2) யாவர் என்னை யஜ்ஞங்கள் செய்பவரின் மஹிஷி {பட்டத்து ராணி} என்றும், சாஸ்திரங்களை அறிந்தவரின் பத்தினி {மனைவி} என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(3) யாவர் என்னை பர்த்தாவால் {கணவனால்} பூஜிக்கப்படுபவள் என்றும், வீர பார்த்திபனின் பத்தினி என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(4) கார்தாந்திகர்களான  எந்த துவிஜர்கள் {சோதிடர்களான இருபிறப்பாளர்கள் யாவர்} என்னை சுபமானவள் என்று உறுதியாகச் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(5) 

Tuesday, 20 February 2024

திரிஜடையின் கனவு | சுந்தர காண்டம் சர்க்கம் - 27 (51)

Dream of Trijata | Sundara-Kanda-Sarga-27 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் கனவை விவரித்துச் சொன்ன திரிஜடை; ராமனின் வெற்றியையும், ராவணனின் தோல்வியையும் கனவாகக் கண்டது...

Trijata's dream Seetha Rama and Lakshmana riding in a four tusked elephant

இவ்வாறு சீதை சொன்னதும், ராக்ஷசிகள் கோபத்தால் மூர்ச்சித்தனர். அவர்களில் சிலர், துராத்மாவான ராவணனிடம் அதைச் சொல்லச் சென்றனர்.(1) பிறகு, கோரதரிசனந்தரும் ராக்ஷசிகள், சீதையை அணுகியபோது, ஒரே அர்த்தத்துடன் கூடிய அனர்த்த அர்த்தங்களை {பின்வருமாறு} கடுமையாகப் பேசினார்கள்:(2) “அநாரியையே, பாபவிநிஷ்சயே {பாபம் செய்வதில் உறுதியாக இருப்பவளே}, சீதே, இன்றே, இப்போதே, உன்னுடைய இந்த மாமிசத்தை இவர்கள் சுகமாக பக்ஷிப்பார்கள்” என்றனர்.(3)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை