Showing posts with label சுந்தர காண்டம். Show all posts
Showing posts with label சுந்தர காண்டம். Show all posts

Thursday, 27 June 2024

சந்தேகந்தீர்த்த ஹனுமான் | சுந்தர காண்டம் சர்க்கம் - 68 (29)

Doubt warded off by Hanuman | Sundara-Kanda-Sarga-68 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்கள் கடலைக் கடந்து, தன்னை மீட்பது குறித்த சீதையின் சந்தேகங்களை எப்படி தீர்த்துவைத்தான் என்பதை ராமனிடம் சொன்ன ஹனுமான்...

Hanuman narrating the situation of Seetha to Rama

{ஹனுமான் தொடர்ந்தான்}, "பிறகு, நரவியாகரரே {மனிதர்களில் புலியே, திரும்பி வருவதில்} பரபரப்பாக இருந்த என்னிடம், தான் கொண்டிருக்கும் மதிப்பினாலும், நான் உம்மிடம் கொண்டிருக்கும் சினேகத்தினாலும், நட்பினாலும், பின்நடக்க வேண்டியவை குறித்து மீண்டும் தேவி {பின்வருமாறு} பேசினாள்:(1) "போரில் ராவணனை சீக்கிரமே கொல்வதும், என்னை மீட்பதும் எப்படியோ, அப்படியே பல விதங்களில் தாசரதியான ராமரிடம் சொல்வாயாக.(2) அல்லது, வீரா, அரிந்தமா {பகைவரை வெல்பவனே}, நீ நினைத்தால் ஏதேனுமொரு தேசத்தில் {இடத்தில்} ஒரு நாள் வசித்து, ஓய்வெடுத்த பிறகு நாளை செல்வாயாக.(3) வீரியவானே, உன் இருப்பால், அல்ப பாக்யம் கொண்டவளான எனக்கு, ஒரு முஹூர்த்தமாவது சோகத்திலிருந்து விமோசனம் கிடைக்கும்.(4) விக்ராந்தனான நீ திரும்பிவரச் சென்றபிறகு, என் பிராணன்கள் நிலைப்பதும் சந்தேகமே. இதில் ஐயமில்லை.(5) துக்கத்தின் மேல் துக்கத்தையே பாகமாகக் கொண்டவளும், துக்கத்திலேயே மூழ்கிக் கிடப்பவளுமான எனக்கு, உன்னைக் காணாத சோகம், அதற்குமேலான துக்கத்தில் என்னைப் பரிதபிக்கவே செய்யும்.(6) 

Wednesday, 26 June 2024

சீதையின் செய்தி | சுந்தர காண்டம் சர்க்கம் - 67 (37)

The message by Seetha | Sundara-Kanda-Sarga-67 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையின் நிலையை மீண்டும் சொல்லி, அவள் அனுப்பிய செய்தியையும் ராமனிடம் சொன்ன ஹனுமான்...

Seetha's request to Hanuman

மஹாத்மாவான ராகவன் {ராமன்} இவ்வாறு சொன்னதும், ஹனுமான், சீதையின் சொற்கள் அனைத்தையும் ராகவனிடம் {பின்வருமாறு} அறிவித்தான்:(1) "புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, ஜானகி தேவி, பூர்வத்தில் சித்திரகூடத்தில் நடந்த நிகழ்வு எதுவோ, அதை அடையாளமாகக் கூறினார்.(2) ஜானகி, உமது அருகில் சுகமாக உறங்கி, {உமக்கு} முன்பே எழுந்திருக்கிறாள். திடீரெனப் பாய்ந்து வந்த வாயஸம் {காக்கை} ஒன்று ஸ்தனாந்தரத்தில் குத்தியிருக்கிறது.(3) 

Tuesday, 25 June 2024

இராமனின் புலம்பல் | சுந்தர காண்டம் சர்க்கம் - 66 (15)

The lamentation of Rama | Sundara-Kanda-Sarga-66 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அடையாளமாகத் தரப்பட்ட சூடாமணியைக் கண்டு பரிதாபகரமாக அழுது புலம்பிய ராமன்...

Rama's lament to Hanuman

ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், லக்ஷ்மணனுடன் கூடிய தசரதாத்மஜன் {ராமன்}, அந்த மணியைத் தன் ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு அழுதான்.(1) அந்தச் சிறந்த மணியைக் கண்டு சோகத்தில் ஆழ்ந்த ராகவன், கண்ணீர் நிறைந்த நேத்திரங்களுடன் {கண்களுடன்}, சுக்ரீவனிடம் இதைச் சொன்னான்:(2) "கன்றிடம் சினேகமுள்ள பசு, கன்றைக் கண்டதும் எப்படியோ, அப்படியே மணிரத்னத்தைக் கண்டதும் என் ஹிருதயம் உருகுகிறது.(3) 

சூடாமணியைக் கொடுத்தது | சுந்தர காண்டம் சர்க்கம் - 65 (27)

Presented the Jewel for head | Sundara-Kanda-Sarga-64 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராக்ஷசிகள் சூழ, சிறைபட்டிருக்கும் சீதையைக் குறித்து ராமனிடம் புகழ்ந்து சொன்ன ஹனுமான்; இராமனிடம் சூடாமணியைக் கொடுத்து சீதை சொல்லி அனுப்பிய செய்தியைச் சொன்னது...

Hanuman speaking to Rama

பிறகு, சித்திரக் கானனங்களுடன் {அழகிய காடுகளுடன்} கூடிய பிரஸ்ரவண சைலத்தில் {மலையில்} ராமனையும், மஹாபலவானான லக்ஷ்மணனையும் சிரத்தால் வணங்கியவர்களும்,{1} யுவராஜனை {அங்கதனை} முன்னிட்டுக் கொண்டு, சுக்ரீவனை மதிப்புடன் வணங்கியவர்களுமான அவர்கள் {வானரர்கள்}, சீதை குறித்த செய்தியைச் சொல்லத் தொடங்கினர்.(1,2) இராவண அந்தப்புரத்தில் {சீதை} சிறை வைக்கப்பட்டது, ராக்ஷசிகளால் மிரட்டப்படுவது, ராமனிடம் கொண்ட அனுராகம் {முற்று முழுதான பாசம்}, அவனால் கொடுக்கப்பட்ட சமயம் {ராவணன் கொடுத்த கெடு} ஆகியவற்றை அந்த ஹரயர்கள் {குரங்குகள்} அனைவரும் ராமனின் சன்னிதானத்தில் {முன்னிலையில்} கூறினர்.(3,4அ)

Sunday, 23 June 2024

இராமனின் மகிழ்ச்சி | சுந்தர காண்டம் சர்க்கம் - 64 (41)

The joy of Rama | Sundara-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானும், அங்கதனும், பிற வானரர்களும் சுக்ரீவனை அடைந்தது. சீதை காணப்பட்டதைக் குறித்து ராமனிடம் சொன்ன ஹனுமான்...

Dadhimukha requesting Angada and Hanuman to see Sugreeva

சுக்ரீவன் இவ்வாறு சொன்னதும், கபியான ததிமுகன், மகிழ்ச்சியடைந்தவனாக, ராகவனையும், லக்ஷ்மணனையும், சுக்ரீவனையும் வணங்கினான்.(1) அவன் {ததிமுகன்}, சுக்ரீவனையும், மஹாபலவான்களான ராகவர்களையும் வணங்கிய பிறகு, சூரர்களான வானரர்கள் சகிதனாக திவத்தில் எழுந்தான் {வானத்தில் உயர்ந்தான்}.(2) பூர்வத்தில் எப்படி வந்தானோ, அப்படியே துரிதமாகச் சென்ற அவன் {ததிமுகன்}, ககனத்திலிருந்து {வானத்தில் இருந்து}, பூமியில் இறங்கி அந்த வனத்தில் பிரவேசித்தான்.(3) மதுவனத்தில் பிரவேசித்த அவன் {ததிமுகன்}, ஹரியூதபர்கள் அனைவரையும் மதத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும், மதம் தெளிந்து, நீரைக் கழிப்பவர்களாகவும் கண்டான்.(4)

Saturday, 22 June 2024

சுக்ரீவனின் மகிழ்ச்சி | சுந்தர காண்டம் சர்க்கம் - 63 (29)

The joy of Sugreeva | Sundara-Kanda-Sarga-63 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மதுவன அழிவைக் குறித்துக் கவலையுற வேண்டாமென ததிமுகனிடம் சொன்ன சுக்ரீவன்; ஹனுமான், அங்கதன் உள்ளிட்டோரை உடனே அனுப்புமாறு கேட்டுக் கொண்டது...

Dadhimukha complaining to Sugreeva while Lakhsmana was watching

தலை {தன் காலில்பட} விழும் வானரத்தை {ததிமுகனைக்} கண்ட வானரரிஷபன் {சுக்ரீவன்}, கலங்கிய ஹிருதயத்துடன் இந்த வாக்கியங்களைக் கூறினான்:(1) "எழுவீர், எழுவீராக. நீர் என் பாதத்தில் விழுவது ஏன்? உமக்கு அபயம் அளிக்கிறேன். வீரரே, அனைத்தையும் உண்மையாகச் சொல்வீராக" {என்றான் சுக்ரீவன்}.(2)

Thursday, 20 June 2024

மதுவனக் காவலர்கள் | சுந்தர காண்டம் சர்க்கம் - 62 (40)

Guards of Madhuvanam | Sundara-Kanda-Sarga-62 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ததிமுகன் தலைமையிலான மதுவனத்தின் காவலர்கள் சுக்ரீவனிடம் புகாரளிக்கச் சென்றது...

Dadhimukha falling in the feet of Sugreeva

ஹரிசிரேஷ்டனும், வானரரிஷபனுமான ஹனூமான், அவர்களிடம் {வானரர்களிடம், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, கலங்காத மனத்துடன் மதுவை {தேனை} அருந்துங்கள்.{1} உங்கள் பாதையில் குறுக்கிடுபவர்களை நான் தடுத்துநிறுத்துவேன்" {என்றான் ஹனுமான்}.(1,2அ)

Wednesday, 19 June 2024

மதுவனம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 61 (23)

Madhuvanam | Sundara-Kanda-Sarga-61 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கிஷ்கிந்தையின் புறநகரில் உள்ள மதுவனத்திற்குள் நுழைந்த வானரர்கள், மதுவெறியால் அதை அழித்தது...

Monkeys ruining Madhuvana

அப்போது, அங்கதன் முதலிய வீர வனௌகஸர்களும் {காட்டுவாசிகளும்}, மஹாகபியான ஹனுமானும் ஜாம்பவானின் வாக்கியத்தை ஏற்றுக் கொண்டனர்[1].(1)

Saturday, 15 June 2024

ஜாம்பவானின் தீர்மானம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 60 (6)

Resolution of Jambavan | Sundara-Kanda-Sarga-60 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் சொன்னதைப் பின்பற்றுவதே சிறந்தது என்று அறிவுறுத்திய ஜாம்பவான்...

Angada and Jambavan conversing

அவனது {ஹனுமான் சொன்ன} அந்த வசனத்தைக் கேட்ட வாலிமகன் {அங்கதன், பின்வருமாறு} பேசினான், "வானரர்களே, தேவியைக் கண்டபிறகும் அவள் இல்லாமல் மஹாத்மாவான ராகவரின் சமீபத்திற்கு நாம் செல்வது முறையல்ல[1].(1,2அ) 

Saturday, 8 June 2024

ஹனுமானின் கோரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 59 (37)

Appeal of Hanuman | Sundara-Kanda-Sarga-59 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கையில் சீதையின் பரிதாப நிலையைக் குறித்துச் சொன்ன ஹனுமான்; சக வானரர்களின் வீரப் பிரதாபங்களை நினைவுகூர்ந்து அவர்களைத் தூண்டியது...

Hanuman inciting fellow vanaras

மாருதாத்மஜனான ஹனுமான், இவை யாவற்றையும் {ஜாம்பவானிடம்} சொல்லிவிட்டு, மேலும் {பிறரிடம்} பின்வரும் வசனத்தைச் சொல்லத் தொடங்கினான்:(1) "சீதையுடைய சீலத்தினால் {ஒழுக்கத்தினால்}, ராகவரின் உத்யோகமும், சுக்ரீவரின் பற்றார்வமும் பலனை அடைந்தன. என் மனம் சாய்கிறது {என் மனம் பக்தியுடன் சீதையிடம் செல்கிறது}.(2) இராக்ஷசாதிபனான இந்த ராவணன், அனைத்துவகையிலும் மேன்மைமிக்கவன்; தன் தபத்தால் உலகங்களை எரித்துவிடவல்லவன்; குரோதமடைந்தாலும் {தன் பகைவரை} எரித்துவிடுவான்.(3) அவளை {சீதையை} ஸ்பரிசித்த அவனது காத்ரம் {ராவணனின் உடல்}, அவனது தபஸ்ஸாலேயே நாசமடையவில்லை. ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, குரோதத்தால் தூண்டப்பட்டால் எதைச் செய்வாளோ, அதைக் கையால் முழுமையாக ஸ்பரிசிக்கப்பட்ட அக்னி சிகையாலும் செய்ய முடியாது.(4,5அ) இந்தக் காரியம், இந்த கதியிலேயே உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. ஜாம்பவான் முதலான சர்வ மஹா ஹரிக்களிடமும் {பெருங்குரங்கினர் அனைவரிடமும்} அனுமதி பெற்றுக் கொண்டு, வைதேஹியுடன் சேர்ந்து, அந்தப் பார்த்திவாத்மஜர்கள் {ராஜகுமாரர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரையும் காண்பதே நியாயமாகும்[1].(5ஆ,6)

Wednesday, 29 May 2024

இலங்கா விருத்தாந்தம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 58 (167)

Lanka report | Sundara-Kanda-Sarga-58 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலங்கைக்குச் சென்றது முதல், மஹேந்திர கிரிக்குத் திரும்பி வந்ததுவரை நடந்த நிகழ்வுகளை உரைத்த ஹனுமான்...

Jambavan and Angada enquiring Hanuman of his Lanka visit

பிறகு, மஹாபலமிக்க ஹனுமான் முதலான ஹரயர்கள் {குரங்குகள்}, அந்த மஹேந்திரகிரியில் உத்தம பிரீதியை அடைந்தனர்.(1) அப்போது, பிரீதியால் உண்டான மயிர்க்கூச்சத்துடன் கூடிய ஜாம்பவான், பிரீதியில் திளைத்த மஹாகபியிடம் {பெருங்குரங்கான ஹனுமானிடம்}, காரியத்தின் விருத்தாந்தம் குறித்து {பின்வருமாறு} விசாரித்தான்:(2) "தேவியை {சீதையை} எப்படி நீ சந்தித்தாய்? அங்கே அவள் எப்படி இருக்கிறாள்? குரூர கர்மங்களைச் செய்பவனான அந்த தசானனன் அவளிடம் {பத்து முகங்களைக் கொண்ட ராவணன் சீதையிடம்} எப்படி நடந்து கொள்கிறான்?(3) மஹாகபியே {பெருங்குரங்கே, ஹனுமானே}, இது குறித்து உள்ளபடியே முழுமையாக எங்களுக்கு நீ சொல்வாயாக. அவற்றைக் கேட்டுவிட்டு, {நடக்க வேண்டிய} காரியங்களை நிச்சயித்துக் கொள்வது குறித்து மீண்டும் நாம் சிந்திப்போம்.(4) நாம் அங்கே {ராமரிடம்} செல்லப் போகிறோம். ஆத்மவானான நீ, எந்த அர்த்தத்தை வெளிப்படுத்த வேண்டும், எதை ரக்ஷிக்க வேண்டும் {எதைச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லாமல் மறைக்க வேண்டும்} என்பதை எங்களுக்குத் தெளிவாகச் சொல்வாயாக" {என்று கேட்டான் ஜாம்பவான்}.(5)

Friday, 24 May 2024

மீண்டும் மஹேந்திர மலை | சுந்தர காண்டம் சர்க்கம் - 57 (51)

Mahendra mountain again | Sundara-Kanda-Sarga-57 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வடகரையை அடைந்து, சீதையைக் கண்டதாக அங்கதனிடமும், ஜாம்பவானிடமும் அறிவித்த ஹனுமான். சீதையைக் குறித்த செய்தியை அறிவதில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தது...

Hanuman alighting on Mahendra Mountain

இரம்மியமானதும், சந்திரன் என்ற குமுதத்தை உடையதும் {ஆம்பலுடையதும்}, சுபமானதும், அர்க்கன் {சூரியன்} என்ற நீர்க்கோழியை உடையதும், புஷ்யம், சிரவணம் {பூசம், திருவோணம்} என்ற கதம்பங்களைக் கொண்டதும்,  மேகங்கள் என்ற செழித்த பாசிகளுடன் கூடியதும்,{1} புனர்வசு என்ற மஹாமீனத்தை {புனர்பூசம் எனும் பெரும் மீனை} உடையதும், லோஹிதாங்கன் {சிவப்பு அங்கங்களைக் கொண்ட செவ்வாய் கிரகம்} என்ற பெரிய முதலையைக் கொண்டதும், ஐராவதம் என்ற பெரும் தீவுடன் கூடியதும், ஸ்வாதி என்ற அன்னம் உலாவப் பெற்றதும்,{2} வாதத்தால் {காற்றால்} உண்டான அலைத்திரள்களைக் கொண்டதும், சந்திரக் கதிர்கள் என்ற குளிர்ந்த நீரைக் கொண்டதும், புஜங்க, யக்ஷ, கந்தர்வர்கள் என்ற கமலங்களையும் {தாமரைகளையும்}, உத்பலங்களையும் {கருநெய்தல்களையும்} உடையதுமான{3} சாகரத்தை மஹாநவம் {பெருங்கடலைப் பெரிய மரக்கலம்} எப்படியோ, அப்படியே ஹனுமான் எல்லையற்ற ககணார்ணவத்தில், மாருத கதியில் {வானம் என்ற பெருங்கடலில், வாயு வேகத்தில்} தாவிச் சென்றான்.(1-4)

Wednesday, 22 May 2024

அரிஷ்ட மலை | சுந்தர காண்டம் சர்க்கம் - 56 (35)

Arishta mountain | Sundara-Kanda-Sarga-56 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையிடம் விடைபெற்றுக் கொண்ட ஹனுமான்; வடக்குக் கடற்கரை நோக்கிப் புறப்பட்டது; அரிஷ்ட மலை குறித்த வர்ணனை...

Hanuman on Arishta Mountain

பிறகு, சிம்சுபத்தினடியில் {நூக்கம் / கருங்காலி மரத்தினடியில்} நின்று கொண்டிருந்த ஜானகியை வணங்கிவிட்டு, "அதிர்ஷ்டவசமாக நீ இங்கு காயமின்றி இருப்பதைப் பார்க்கிறேன்" என்றான் {ஹனுமன்}.(1)

Monday, 20 May 2024

திகிலடைந்த ஹனுமான் | சுந்தர காண்டம் சர்க்கம் - 55 (34)

Hanuman fears | Sundara-Kanda-Sarga-54 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நகரம் சாம்பலானதைக் கண்ட ஹனுமான், சீதை உயிரிழந்திருக்கக்கூடும் என்று நினைத்தது; நல்ல சகுனங்களைக் கண்டும், அவள் நலமாக இருப்பதை சாரணர்கள் மூலம் அறிந்தும் ஆறுதலடைந்த ஹனுமான்...

Hanuman fears that Seetha would have been burnt

வானரனான ஹனுமான், அச்சத்தால் பீடிக்கப்பட்ட ராக்ஷசர்களுடன் கொழுந்துவிட்டெரியும் லங்காம்புரியைக் கண்டு, கவலையுடன் சிந்தனையில் ஆழ்ந்தான்.(1) பெருந்திகிலடைந்த அவன் {ஹனுமான்}, தன்னைத் தானே நிந்திக்கும் வகையில் தனக்குள்ளேயே, "இலங்கையை நான் எரித்துவிட்டேன். இஃது என்ன கர்மம் {செயல்}?(2) 

Thursday, 16 May 2024

இலங்கா தஹனம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 54 (50)

Lanka set on fire | Sundara-Kanda-Sarga-54 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விபீஷணனின் வீட்டைத் தவிர மொத்த லங்கையையும் எரித்த ஹனுமான்...

Hanuman sought Rama with his mind, while Lanka was burning

மனோரதம் நிறைவேறிய பிறகு, லங்கையைப் பார்த்த கபி {குரங்கான ஹனுமான்}, பெருகும் உற்சாகத்துடன் எஞ்சியிருக்கும் காரியத்தைக் குறித்து {பின்வருமாறு} சிந்தித்தான்:(1) "இங்கே நான் செய்வதற்கு உண்மையில் எஞ்சியிருக்கும் செயல் என்ன? இப்போது இந்த ராக்ஷசர்களுக்கு அதிக சந்தாபத்தை {மனத்துன்பத்தை} உண்டாக்கக்கூடியது எது?(2) வனம் முறிக்கப்பட்டது. மேலான ராக்ஷசர்கள் கொல்லப்பட்டனர். படையின் ஒரு பகுதி குறைக்கப்பட்டது. துர்கத்தை நாசஞ்செய்ய {கோட்டையை அழிக்க} வேண்டியதே எஞ்சியிருக்கிறது.(3) துர்கம் நாசமடைந்தால் {கோட்டை அழிந்தால், ராமரின்} கர்மம் சிரமமில்லாமல் சுகமாக அமையும். இந்தக் காரியத்தில் செய்யும் அற்ப யத்னமும் {முயற்சியும், கடல் தாண்டி வந்த என்} சிரமத்திற்கான பலனைக் கொடுக்கும்.(4) என் லாங்கூலத்தில் {வாலில்} எரிந்து கொண்டிருக்கும் இந்த ஹவ்யவாஹனனுக்கு {அக்னி தேவனுக்கு}, இந்த உத்தம கிருஹங்களை {சிறந்த வீடுகளை} தர்ப்பணம் செய்வதே நியாயமாகும்" {என்று நினைத்தான் ஹனுமான்}.(5)

Thursday, 9 May 2024

வாலைச் சுடுவீர் | சுந்தர காண்டம் சர்க்கம் - 53 (44)

Burn the tail | Sundara-Kanda-Sarga-53 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானின் வாலில் தீயிட்டு, லங்கை முழுவதும் அழைத்துச் செல்ல ஆணையிட்ட ராவணன்...

Seetha worshipping fire god

தேசகாலத்திற்கு ஹிதமான அந்த மஹாத்மாவின் {விபீஷணனின்}, அந்த வசனத்தைக் கேட்டு, அவனுடன் பிறந்தவனான தசக்ரீவன் {விபீஷணனுடன் பிறந்தவனும், பத்து கழுத்துகளைக் கொண்டவனுமான ராவணன், பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகக் கூறினான்:(1) "தூதவதம் நிந்திக்கத்தக்கது என்பதை நீ சரியாகவே சொன்னாய். வதத்தைத் தவிர வேறு நிக்கிரஹம் இவனுக்கு அவசியம் விதிக்கப்படவேண்டும்.(2) கபிக்களுக்கு லாங்கூலமே இஷ்டமான பூஷணம் {குரங்குகளுக்கு வாலே விரும்பத்தக்க ஆபரணம்} என்று சொல்லப்படுகிறது. இவனது லாங்கூலத்திற்கு {வால்} தீயிடப்படட்டும். சீக்கிரமே எரியும் அதனுடன் {வாலுடன் இவன்} செல்லட்டும்.(3) சர்வ பந்துக்களும், மித்ரர்களும், ஞாதிகளும், நண்பர்களும் அங்க ரூபம் சிதைந்த காயத்துடன் கூடிய தீனனாக இவனைப் பார்க்கட்டும்.(4) சந்திகள், வீதிகள் உள்ளிட்ட சர்வ புரத்திலும் {லங்கா நகரம் முழுவதும்}, நன்றாக எரியும் லாங்கூலத்துடன் {வாலுடன்} ராக்ஷசர்கள் {இவனை} இழுத்துச் செல்லட்டும்" என்று ஆணையிட்டான் ராக்ஷசேந்திரன் {ராவணன்}[1].(5)

Saturday, 4 May 2024

தூதனைக் கொல்லாதீர் என்ற விபீஷணன் | சுந்தர காண்டம் சர்க்கம் - 52 (27)

Messenger not to be killed - Vibhishana said | Sundara-Kanda-Sarga-52 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தூதனை வதம் செய்வது தகாது என்று ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...

Vibhishana speaking to Ravana not to kill Hanuman

மஹாத்மாவான அந்த வானரனின் அந்த வசனத்தைக் கேட்டு, குரோதத்தில் மூர்ச்சித்த {கோபத்தில் தன்னை மறந்த} ராவணன், ஹனுமானை வதம் செய்ய ஆணையிட்டான்.(1) துராத்மாவான ராவணன், அவனை வதம் செய்ய உத்தரவிட்டபோது, தூதனைக் கொல்வதை விபீஷணன் ஏற்கவில்லை.(2) காரியங்களின் விதங்களில் உறுதியுடன் இருப்பவனான அவன் {விபீஷணன்}, அந்த ரக்ஷோதிபதி {ராவணன்} குரோதமடைந்திருப்பதையும், எழுந்திருக்கும் அந்தக் காரியத்தையும் அறிந்து, செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சிந்தித்தான்.(3)

Thursday, 2 May 2024

கடும் எச்சரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 51 (46)

Stern warning | Sundara-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நல்ல ஆலோசனை வழங்கவும், அவனைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்த ஹனுமான்...

Hanuman warns Ravana

சத்வவானான ஹரிசத்தமன் {பலம்நிறைந்தவனும், குரங்குகளில் சிறந்தவனுமான ஹனுமான்}, பெரும்பலம் கொண்ட அந்த தசானனனை {பத்து முகம் கொண்ட ராவணனைக்} கண்டு, அவனிடம் அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைத் தயக்கமின்றி சொன்னான்:(1) "இராக்ஷசேந்திரா, சுக்ரீவரின் ஆணையின் பேரில் நான் இங்கே உன் ஆலயத்திற்கு {வசிப்பிடத்திற்கு} வந்தேன். உன் சகோதரரான ஹரீசர் {குரங்குகளின் தலைவர் சுக்ரீவர்}[1], உன் குசலத்தை {நலத்தை} விசாரித்தார்.(2) உன் சகோதரரான மஹாத்மா சுக்ரீவர் அனுப்பிய செய்தியும், இம்மையிலும், மறுமையிலும் தர்மத்தையும், அர்த்தத்தையும் ஈட்டுவதில் நன்மை பயக்கக்கூடியதுமான வாக்கியத்தைக் கேட்பாயாக.(3)

Tuesday, 30 April 2024

பிரஹஸ்தனின் விசாரணை | சுந்தர காண்டம் சர்க்கம் - 50 (19)

Prahasta's enquiry | Sundara-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானை விசாரித்த பிரஹஸ்தன்; இராமனின் தூதனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹனுமான்...

Hanuman enquired by Ravana and Prahasta

மஹாபாஹுவும், உலகத்தை ராவணஞ் செய்ய {கதறி அழ} வைப்பவனுமான அந்த ராவணன், தன் எதிரில் நிற்கும் அந்த பிங்காக்ஷனை {மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட ஹனுமானைப்} பார்த்து, மஹத்தான கோபத்தை அடைந்தான். தேஜஸ்ஸால் நிறைந்த கபீந்திரனைக் குறித்த சந்தேகத்தால் மனம் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} ஆலோசித்தான்:(1,2அ) "சாக்ஷாத் நந்தி பகவானே இங்கே வந்திருக்கிறானா என்ன? பூர்வத்தில் கைலாசத்தை நான் அசைத்தபோது, எவன் என்னை சபித்தானோ அவனா {அதே நந்தியா} இவன்? அல்லது மஹாசுரன் பாணன் {பாணாசுரன்} வானர மூர்த்தியாக வந்திருக்கிறானா என்ன?" {என்று நினைத்தான் ராவணன்}.(2ஆ,3)

ஹனுமானின் ஆச்சரியம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 49 (20)

Hanuman wondered | Sundara-Kanda-Sarga-49 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் தேஜஸ்ஸையும், மகிமையையும் கண்டு ஆச்சரியமடையும் ஹனுமான்...

Hanuman dragged in before Ravana

பிறகு, பீமவிக்கிரமனான அந்த ஹனுமான், அவனுடைய {இந்திரஜித்தின்} கர்மத்தால் வியப்படைந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன் ரக்ஷோதிபனை {ராவணனைக்} கண்டான்.(1)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை