Friday, 28 February 2025

இராவணனின் வேண்டுகோள் | யுத்த காண்டம் சர்க்கம் - 062 (23)

The request of Ravana | Yuddha-Kanda-Sarga-062 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன் மீது கொண்ட பயத்தைக் கும்பகர்ணனிடம் வெளிப்படுத்தி, ராமனை அழிக்குமாறு அவனைத் தூண்டிய ராவணன்...

Ravana speaks with Kumbhakarna

விபுலவிக்கிரமனான அந்த ராக்ஷசசார்தூலன் {பேராற்றல் வாய்ந்தவனும், ராக்ஷசர்களில் புலியுமான கும்பகர்ணன்}, நித்திரையினாலும், மதத்தினாலும் {மதுவெறியினாலும்} ஆட்கொள்ளப்பட்டவனாக, அழகுடன் விளங்கும் ராஜமார்க்கத்தில் நடந்து சென்றான்.(1) பிறகு, அந்தப் பரமதுர்ஜயன் {வெல்வதற்கரிய கும்பகர்ணன்}, கிருஹங்களில் இருந்து புஷ்பவர்ஷம் {மலர்மாரி} பொழிய, ஆயிரக்கணக்கான ராக்ஷசர்களால் சூழப்பட்டவனாகச் சென்றான்.(2) ஹேமஜாலங்களால் {பொற்சாளரங்களால்} நிறைந்ததும், பெரியதும், பானுவை {சூரியனைப்} போன்ற பிரகாசத் தோற்றம் கொண்டதுமான ராக்ஷசேந்திர நிவேசனத்தை அவன் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனின் வசிப்பிடத்தைக் கும்பகர்ணன்} கண்டான்.(3) மேகத்திரளுக்குள் சூரியனைப் போல ரக்ஷோதிபதியின் நிவேசனத்திற்குள் பிரவேசித்தவன், ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வயம்பூவை சக்ரன் போல {பிரம்மனைக் கண்ட இந்திரனைப் போல} ஆசனத்தில் அமர்ந்திருக்கும் தன் ஆக்ரஜனை {அண்ணன் ராவணனை} தூரத்தில் இருந்தே கண்டான்.(4)

யுத்த காண்டம் 062ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ த்³விஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Ravana speaks with Kumbhakarna

ஸ து ராக்ஷஸஷா²ர்தூ³ளோ நித்³ராமத³ஸமாகுல꞉ |
ராஜமார்க³ம் ஷ்²ரியா ஜுஷ்டம் யயௌ விபுலவிக்ரம꞉ || 6-62-1

ராக்ஷஸானாம் ஸஹஸ்ரைஷ்²ச வ்ருத꞉ பரமது³ர்ஜய꞉ |
க்³ருஹேப்⁴ய꞉ புஷ்பவர்ஷேண கீர்யமாணஸ்ததா³ யயௌ || 6-62-2

ஸ ஹேமஜாலவிததம் பா⁴னுபா⁴ஸ்வரத³ர்ஷ²னம் |
த³த³ர்ஷ² விபுலம் ரம்யம் ராக்ஷஸேந்த்³ரநிவேஷ²னம் || 6-62-3

ஸ தத்ததா³ ஸூர்ய இவாப்⁴ரஜாலம் |
ப்ரவிஷ்²ய ரக்ஷோதி⁴பதேர்நிவேஷ²னம் |
த³த³ர்ஷ² தூ³ரே(அ)க்³ரஜமாஸனஸ்த²ம் |
ஸ்வயம்பு⁴வம் ஷ²க்ர இவாஸனஸ்த²ம் || 6-62-4

ப்⁴ராது꞉ ஸ ப⁴வனம் க³ச்ச²ன் ரக்ஷோக³ணஸமன்வித꞉ |
கும்ப⁴கர்ண꞉ பத³ந்யாஸைரகம்பயத் மேதி³னீம் || 6-62-5

Thursday, 27 February 2025

ஆறுமாத நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 061 (40)

Six months of sleep | Yuddha-Kanda-Sarga-061 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனைக் குறித்து ராமனிடம் சொன்ன விபீஷணன்; இராமனின் ஆணையின் பேரில் லங்கையின் நுழைவாயில்களில் நிலைநின்ற வானரர்கள்...

Brahma curses Kumbhakarna

அப்போது, மஹாதேஜஸ்வியும், வீரியவானுமான ராமன், தன் தனுவை {வில்லை} எடுத்துக் கொண்டு, பேருடலுடனும், கிரீடத்துடனும் கூடியவனான கும்பகர்ணனைக் கண்டான்.(1) 

யுத்த காண்டம் 061ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Brahma curses Kumbhakarna

ததோ ராமோ மஹாதேஜா த⁴னுராதா³ய வீர்யவான் |
கிரீடினம் மஹாகாயம் கும்ப⁴கர்ணம் த³த³ர்ஷ² ஹ || 6-61-1

தம் த்³ருஷ்ட்வா ராக்ஷஸஷ்²ரேஷ்ட²ம் பர்வதாகாரத³ர்ஷ²னம் |
க்ரமமாணமிவாகாஷ²ம் புரா நாராயணம் ப்ரபு⁴ம் || 6-61-2

ஸதோயாம்பு³த³ஸம்காஷ²ம் காஞ்சனாங்க³த³பூ⁴ஷணம் |
த்³ருஷ்ட்வா புன꞉ ப்ரது³த்³ராவ வானராணாம் மஹாசமூ꞉ || 6-61-3

வித்³ருதாம் வாஹினீம் த்³ருஷ்ட்வா வர்த⁴மானம் ச ராக்ஷஸம் |
ஸவிஸ்மிதமித³ம் ராமோ விபீ⁴ஷணமுவாச ஹ || 6-61-4

கோ(அ)ஸு பர்வதஸம்காஷ²꞉ கிரீடீ ஹரிலோசன꞉ |
லங்காயாம் த்³ருஷ்²யேதே வீர꞉ ஸவித்³யுதி³வ தோயத³꞉ || 6-61-5

Wednesday, 26 February 2025

கும்பகர்ண நித்திரை | யுத்த காண்டம் சர்க்கம் - 060 (97)

Slumber of Kumbhakarna | Yuddha-Kanda-Sarga-060 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கும்பகர்ணனை எழுப்பச் சொல்லி ராக்ஷசர்களிடம் கேட்ட ராவணன்; இராட்சசர்களின் பெரும்முயற்சியால், உறக்கத்திலிருந்து எழுந்த கும்பகர்ணன்...

Kumbakarna sleeping

இராமபாணங்களால் பீடிக்கப்பட்ட அந்த ராஜா {ராவணன்}, லங்காம்புரீக்குள் பிரவேசித்த பிறகு, தன் செருக்கு பங்கமடைந்து, இந்திரியங்கள் கலங்கியவனானான்.(1) சிம்ஹத்தால் மாதங்கத்தை {யானையைப்} போலவும், கருடனால் பன்னகத்தை {பாம்பைப் போலவும்} மஹாத்மாவான ராகவனால் அந்த ராஜா சிறுமையை அடைந்தான் {வெற்றிகொள்ளப்பட்டான்}.(2) இராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, மின்னலைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவையும், பிரம்ம தண்டத்திற்கு ஒப்பானவையுமான ராகவ பாணங்களை நினைத்து வேதனையடைந்தான்.(3) 

யுத்த காண்டம் 060ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Kumbakarna sleeping

ஸ ப்ரவிஷ்²ய புரீம் லங்காம் ராமபா³ணப⁴யார்தி³த꞉ |
ப⁴க்³னத³ர்பஸ்ததா³ ராஜா ப³பூ⁴வ வ்யதி²தேந்த்³ரிய꞉ || 6-60-1

மாதங்க³ இவ ஸிம்ஹேன க³ருடே³னேவ பன்னக³꞉ |
அபி⁴பூ⁴தோ(அ)ப⁴வத்³ராஜா ராக⁴வேண மஹாத்மனா || 6-60-2

ப்³ரஹ்மத³ண்ட³ப்ரதீகானாம் வித்³யுச்சலிதவர்சஸாம் |
ஸ்மதன் ராக⁴வபா³ணானாம் விவ்யதே² ராக்ஷஸேஷ்²வர꞉ || 6-60-3

ஸ காஞ்சனமயம் தி³வ்யமாஷ்²ரித்ய பரமாஸனம் |
விப்ரேக்ஷமாணோ ரக்ஷாம்ஸி ராவணோ வாக்யமப்³ரவீத் || 6-60-4

ஸர்வம் தத்க²லு மே மோக⁴ம் யத்தப்தம் பரமம் தப꞉ |
யத்ஸமானோ மஹேந்த்³ரேண மானுஷேண விநிர்ஜித꞉ || 6-60-5

Saturday, 22 February 2025

இன்று போய் நாளை வாராய் | யுத்த காண்டம் சர்க்கம் - 059 (146)

Go today, and come tomorrow | Yuddha-Kanda-Sarga-059 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தானே நேரடியாகப் போர்க்களத்திற்கு வந்து, சுக்ரீவன், ஹனுமான், நீலன், லக்ஷ்மணன் ஆகியோரை எதிர்கொண்ட ராவணன்; போர்க்களத்தில் ராமனால் கிரீடம் முறிந்து, லங்கை திரும்பியது...

Rama in the shoulder of Hanuman in the war against Ravana

அந்த ராக்ஷச சைனியபாலன் {ராக்ஷசப் படையின் காவலனான பிரஹஸ்தன்}, பிலவங்கமரிஷபனால் {தாவிச் செல்லும் வானரர்களில் காளையான நீலனால்} யுத்தத்தில் கொல்லப்பட்டதும், பயங்கர ஆயுதங்களுடன் கூடிய ராக்ஷசராஜ சைனியம் சாகர வேகத்திற்குத் துல்லியமாக ஓடிப் போனது.(1) அப்படிச் சென்றவர்கள், சேனாபதி {பிரஹஸ்தன்}, பாவகனின் மகனால் {அக்னியின் மகனான நீலனால்} கொல்லப்பட்டதை ரக்ஷோதிபதியிடம் {ராக்ஷசர்களின் தலைவனான ராவணனிடம்} சொன்னதும், அந்த வசனத்தைக் கேட்ட ரக்ஷோதிபன் {ராவணன்} குரோதவசம் அடைந்தான்.(2) போரில் பிரஹஸ்தன் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதத்தால் பீடிக்கப்பட்டு, சோகத்தால் நிறைந்து, நிர்ஜரயூதமுக்கியர்களிடம் {மூப்பற்றவர்களான தேவர்களின் குழுத் தலைவர்களிடம்} இந்திரனைப் போல, அந்த ராக்ஷசயூத முக்கியர்களிடம் {ராக்ஷச குழுத் தலைவர்களிடம், ராவணன் பின்வருமாறு} சொன்னான்:(3) “எவரது தாக்குதலால் இந்திரபலம் {இந்திரனின் படை} அழிந்ததோ, அத்தகைய என் சைனியபாலரை {படைத்தலைவரான பிரஹஸ்தரைப்} பின்தொடர்ந்தோருடனும், குஞ்சரங்களுடனும் {யானைகளுடனும்} அழித்த பகைவரை இழிவாகக் கருதுவது {அலட்சியம் செய்வது} தகாது.(4) அப்படியிருக்கையில், சிந்தித்துக் கொண்டிராமல் பகைவரை நாசம் செய்து, விஜயமடைவதற்காக நான் ஸ்வயமாக {நேரடியாக} அந்த அற்புதப் போர்முனைக்குச் செல்ல விரும்புகிறேன்.(5) அக்னியால் எரியும் வனத்தைப் போல, ராமனுடனும், லக்ஷ்மணனுடன் கூடிய அந்த வானர அனீகத்தை {படையை} பாண வெள்ளத்தால் இதோ எரிக்கப் போகிறேன். இன்று பிருத்வியை கபிசோணிதத்தால் {பூமியை குரங்கு ரத்தத்தால்} திருப்தியடையச் செய்யப் போகிறேன்” {என்றான் ராவணன்}.(6)

யுத்த காண்டம் 059ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகோனஷஷ்டிதம꞉ ஸர்க³꞉

Rama in the shoulder of Hanuman in the war against Ravana

தஸ்மின் ஹதே ராக்ஷஸ ஸைன்ய பாலே |
ப்லவம் க³மானாம் ருஷபே⁴ண யுத்³தே⁴ |
பீ⁴ம ஆயுத⁴ம் ஸாக³ர துல்ய வேக³ம் |
விது³த்³ருவே ராக்ஷஸ ராஜ ஸைன்யம் || 6-59-1

க³த்வா து ரக்ஷோ அதி⁴பதேஹ் ஷ²ஷ²ம்ஸுஹ் |
ஸேனா பதிம் பாவக ஸூனு ஷ²ஸ்தம் |
தச் ச அபி தேஷாம் வசனம் நிஷ²ம்ய |
ரக்ஷோ அதி⁴பஹ் க்ரோத⁴ வஷ²ம் ஜகா³ம || 6-59-2

ஸம்க்²யே ப்ரஹஸ்தம் நிஹதம் நிஷ²ம்ய |
ஷோ²க அர்தி³தஹ் க்ரோத⁴ பரீத சேதாஹ் |
உவாச தான் நைர்ருத யோத⁴ முக்²யான் |
இந்த்³ரோ யதா² ச அமர யோத⁴ முக்²யான் || 6-59-3

ந அவஜ்னா ரிபவே கார்யா யைர் இந்த்³ர ப³ல ஸூத³னஹ் |
ஸூதி³தஹ் ஸைன்ய பாலோ மே ஸானுயாத்ரஹ் ஸகுன்ஜரஹ் || 6-59-4

ஸோ அஹம் ரிபு விநாஷா²ய விஜயாய அவிசாரயன் |
ஸ்வயம் ஏவ க³மிஷ்யாமி ரண ஷீ²ர்ஷம் தத்³ அத்³பு⁴தம் || 6-59-5

Monday, 17 February 2025

பிரஹஸ்த வதம் | யுத்த காண்டம் சர்க்கம் - 058 (61)

Prahasta killed | Yuddha-Kanda-Sarga-058 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பிரஹஸ்தனின் ஆற்றல்; பிரஹஸ்தனுடன் போரிட்டு அவனைக் கொன்ற நீலன்...

Prahasta coming for war

அரிந்தமனான {பகைவரை அடக்குபவனான} ராமன், போருக்குரிய ஆவலுடன் புறப்பட்டு வந்த பிரஹஸ்தனைக் கண்டு, புன்னகையுடன் விபீஷணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) “மஹத்தான பலம் {படை} சூழ மஹாவேகத்துடன் வரும் இந்த மஹாகாயன் {பேருடல் படைத்தவன்} யார்?{2} மஹாபாஹுவே, வீரியவந்தனான இந்த நிசாசரனை {இரவுலாவியைக்} குறித்து எனக்குச் சொல்வாயாக” {என்று கேட்டான் ராமன்}.(2,3அ)

யுத்த காண்டம் 058ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Prahasta coming for war

தத꞉ ப்ரஹஸ்தம் நிர்யாந்தம் த்³ருஷ்ட்வா ரணக்ருதோத்³யமம் |
உவாச பஸ்மிதம் ராமோ விபீ⁴ஷணமரிந்த³ம꞉ || 6-58-1

க ஏஷ ஸுமஹாகாயோ ப³லேன மஹதா வ்ருத꞉ |
ஆக³ச்ச²தி மஹாவேக³꞉ கிம்ரூபப³லபௌருஷ꞉ || 6-58-2
ஆசக்ஷ்வ மே மஹாபா³ஹோ வீர்யவந்தம் நிஷா²சரம் |

ராக⁴வஸ்ய வச꞉ ஷ்²ருத்வா ப்ரத்யுவாச விபீ⁴ஷண꞉ || 6-58-3
ஏஷ ஸேனாபதிஸ்தஸ்ய ப்ரஹஸ்தோ நாம ராக்ஸஸ꞉ |
லங்காயாம் ராக்ஷஸேந்த்³ரஸ்ய த்ரிபா⁴க³ப³லஸம்வ்ருத꞉ || 6-58-4
வீர்யவானஸ்த்ரவிச்சூ²ர꞉ ஸுப்ரக்²யாதபராக்ரம꞉ |

Tuesday, 11 February 2025

பிரஹஸ்தன் | யுத்த காண்டம் சர்க்கம் - 057 (46)

Prahasta | Yuddha-Kanda-Sarga-057 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தன் தலைமைத் தளபதியான பிரஹஸ்தனைப் போர்க்களத்திற்கு அனுப்பிய ராவணன்...

Ravana and Prahastha Speaking

அகம்பனன் வதம் செய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட ராக்ஷசேஷ்வரன் {ராவணன்}, சற்றே தீன முகத்துடன் தன் அமைச்சர்களைப் பார்த்தான்.(1) இராக்ஷசாதிபனான அந்த ராவணன், ஒரு முஹூர்த்தம் சிந்தித்து, மந்திரிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு, முற்பகலில்,{2} சர்வ குல்மங்களையும் {படைகள் அனைத்தையும்} பார்வையிட்டபடியே லங்காம்புரீயைச் சுற்றி வந்தான்.(2,3அ) ஏராளமான குல்மங்களால் {படைகளால்} சூழப்பட்டிருந்த அந்த ராக்ஷசகணங்கள், பதாகைகள், துவஜங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட லங்கா நகரத்தைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக்  கண்டான்.(3ஆ,4அ) 

யுத்த காண்டம் 057ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Ravana and Prahastha Speaking

அகம்பன வத⁴ம் ஷ்²ருத்வா க்ருத்³தோ⁴ வை ராக்ஷஸ ஈஷ்²வர꞉ |
கிஞ்சித்³ தீ³ன முக²ஷ்² ச அபி ஸசிவாம்ஸ் தான் உதை³க்ஷத || 6-57-1

ஸ து த்⁴யாத்வா முஹூர்தம் து மந்த்ரிபி⁴ஹ் ஸம்விசார்ய ச |
ததஸ்து ராவண꞉ பூர்வதி³வஸே ராக்ஷஸாதி⁴ப꞉ || 6-57-2
புரீம் பரியயௌ லன்காம் ஸர்வான் கு³ள்மான் அவேக்ஷிதும் |

தாம் ராக்ஷஸ க³ணைர் கு³ப்தாம் கு³ள்மைர் ப³ஹுபி⁴ர் ஆவ்ருதாம் || 6-57-3
த³த³ர்ஷ² நக³ரீம் லன்காம் பதாகா த்⁴வஜ மாலினீம் |

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை