Friday, 31 March 2023

மாயமான் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 42 (35)

Illusory deer | Aranya-Kanda-Sarga-42 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் குடிலுக்குச் சென்று அற்புதமான மானாக மாறித் திரிந்த மாரீசன்; மானைக் கண்டு வியப்படைந்த சீதை...

Maricha as a golden deer

இவ்வாறு கடுஞ்சொல் பேசினாலும், அந்த ராத்ரிசரர்களின் பிரபுவிடம் {இரவுலாவிகளின் தலைவனான ராவணனிடம்} கொண்ட பயத்தினால் மனம் நொந்து, "போகலாம்" என்ற மாரீசன், மீண்டும் ராவணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(1) "சரங்கள், வில், வாள் ஆகியவற்றைத் தரித்து என்னை வதம் செய்யப் போகிறவன் எவனோ அவன் சஸ்திரத்தை உயர்த்தாமல் என்னை மீண்டும் கண்டாலே என் ஜீவிதம் நாசமடையும்.(2) இராமன் முன் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி, ஜீவனுடன் திரும்புகிறவன் எவனும் இல்லை. யமதண்டத்தால் {ஏற்கனவே} கொல்லப்பட்டவனான உனக்கு, அவன் அதன் {ராமன் யமதண்டத்தின்} பிரதிரூபமாகவே வந்திருக்கிறான்.(3) நீ இவ்வாறான துர் ஆத்மாவாக இருக்கும்போது, எனக்கு செய்ய சாத்தியமானது என்ன? {என்னால் என்ன செய்ய முடியும்?} தாதா {குழந்தாய்}, நிசாசரா {இரவுலாவியே}, இதோ நான் போகிறேன். உனக்கு நன்மை நேரட்டும்" {என்றான் மாரீசன்}.(4)

அந்த ராக்ஷசன் {ராவணன்}, இந்த சொற்களால் பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை {மாரீசனை} இறுக அணைத்துக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னான்:(5) "என் விருப்பத்தின் வசப்பட்டு செயல்படுவதே உன் வீரத்திற்குத்[1] தகுந்தது. பூர்வத்தில் நீ வேறு ராக்ஷசனாக இருந்தாய். இப்போதே மாரீசனாகி இருக்கிறாய்.(6) பிசாச வதனங்கொண்ட கோவேறு கழுதைகள் பூட்டப்பட்டதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான இந்த ககன ரதத்தில் {ஆகாயத்தில் செல்லவல்ல தேரில்} சீக்கிரம் என்னுடன் ஏறுவாயாக[2].(7) வைதேஹியை லோபங்கொள்ளச் செய்த பிறகு {மயக்கியபிறகு} உன் இஷ்டப்படி நீ செல்வாயாக. அந்த சூனியத்தில் {வெற்றிடத்தில்} இருந்து மைதிலியான அந்த சீதையை நான் பலவந்தமாகக் கொண்டு வருவேன்" {என்றான் ராவணன்}.(8)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில பதிப்புகள், "ஷௌ²ண்டீ³ர்ய" என்பதற்கு பதில், "சௌத்திர்ய" என்ற சொல்லைக் கொண்டிருக்கின்றன. ஷௌண்டீர்யம் என்பது வீரம் என்ற பொருளைக் கொண்டது. சௌந்திர்யம் என்பதற்கு பிடிவாதம் என்று பொருள். இந்தப் பிடிவாதம் என்ற அர்த்தத்தைக் கொண்டால், இந்த சுலோகத்திற்கு, "உன் சொற்கள் என் அதிகாரத்திடம் கொண்ட அச்சத்தை வெளிப்படுத்தினாலும், பிடிவாதமான என் சொற்களால், ராமனைப் பகைவனாகத் தீர்மானித்து, மீண்டும் ராக்ஷசத் தன்மையை அடைந்து இவ்வாறு நீ பேசுகிறாய் என்று தெரிகிறது" என்ற அர்த்தத்தில் பொருள் கொள்ள வேண்டும். இதன் மூலம் மாரீசன் கொல்லப்பட்டால் தான் ஏற்க வேண்டிய பொறுப்பை ராவணன் தட்டிக்கழிக்கிறான்" என்றிருக்கிறது.

[2] ஆரண்ய காண்டம் 40ம் சர்க்கம் 24ம் சுலோகத்தில், "இந்தக் காரியத்தை நிறைவேற்ற இடையூறற்ற நல்ல வழியில் நீ செல். நான் ரதத்தில் பின்தொடர்ந்து வருகிறேன்" என்று சொன்ன ராவணன், இப்போது தன்னுடன் தேரில் ஏறிக் கொள்ளுமாறு மாரீசனைக் கேட்கிறான். மாயாவியான மாரீசனை தனியாக விட்டால் தப்பிவிடுவான் என்ற அச்சத்த்தைக் தவிர்க்க உடன் அழைத்துச் செல்வது ஓர் உத்தியாக இருக்கலாம்.

இராவணன் இவ்வாறு சொன்னதும், அந்தத் தாடகை மகன் {மாரீசன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னான். பிறகு ராவணனும், மாரீசனும் விமானம் போன்ற அந்த ரதத்தில் ஆரோஹித்து {ஏறி}, அந்த {மாரீசனின்} ஆசிரம மண்டலத்திலிருந்து சீக்கிரமாக வெளியேறினர்.(9,10அ) அங்கிருந்து சென்ற வழியில் பட்டினங்கள், வனங்கள்[3], கிரிகள், சர்வ சரிதங்கள் {அனைத்து ஆறுகள்}, ராஷ்டிரங்கள், நகரங்கள்[4] ஆகியவற்றை அவர்கள் பார்த்தனர்.(10ஆ,11அ) மாரீசனுடன் கூடிய ராக்ஷசாதிபன் ராவணன், தண்டகாரண்யத்தை அடைந்ததும், அந்த ராகவனின் {ராமனின்} ஆசிரமத்தைக் கண்டான்.(11ஆ,12அ)

[3] சம்ஸ்கிருத மூலத்தில், "பத்தநாநி வநாநி" என்றிருக்கிறது. தமிழில் உள்ள பட்டணம், பட்டினம் என்ற சொற்களுக்கு நெருக்கமாக இந்த பத்தநம் இருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இங்கே பத்தநாநி என்ற பதத்திற்கு, "துறைமுகநகரங்கள்" என்று பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி மற்றும் கோரக்பூர் பதிப்புகளில், "நகரங்கள்" என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்ப்பதிப்புகளான தர்மாலயப் பதிப்பில், "பட்டணங்கள்" என்றும், தாதாசாரியர் பதிப்பில், "நகரங்கள்" என்றும் இருக்கிறது. தமிழ் மொழியில் பட்டணம் என்றால் "பெருநகரம்" என்றும், பட்டினம் என்றால் கடற்கரை நகரம் என்றும் வேறுபட்ட பொருள்களில் கொள்ளப்பட்டாலும், பட்டணம் என்பதும் பட்டினத்தின் மரூஉ தான் என்றும், பட்டினம் என்பதன் கொச்சைச் வடிவமே பட்டணம் என்றும் சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருதத்தில் நகரங்களுக்கு இந்த 11ம் சுலோகத்திலேயே [4]ம் அடிக்குறிப்பிற்குரிய சொல்லாக வரும் நகரங்கள் என்ற நேரடியான சொல்லும், புரி, புரம் என்ற சொற்களும் இருக்கின்றன. தென்னாட்டில் பட்டினம் என்ற பெயரில் முடியும் துறைமுகநகரங்கள் பல இருக்கின்றன என்பதாலும், பட்டணம் என்றும் பெரும்பாலும் தென்னாட்டு நகரங்களே அழைக்கப்படுகின்றன; அந்தப் பட்டணமும் பட்டினம் என்பதன் மரூஉ ஆக இருக்கலாம் என்பதாலும் மேலே பட்டினம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாரீசன் இருந்தது தென்னகம் என்பதற்கான ஆய்வுகளில் இதையும் {பத்தநம் என்ற சொல்லையும்} ஒரு சான்றாக முன்வைக்கலாம்.

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், இந்த சர்க்கத்தின் முடிவில் ஓர் அடிக்குறிப்பு இருக்கிறது. அது பின்வருமாறு, "பண்டைய இந்தியாவில், கிராமங்கள், நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவற்றின் வகைப்பாடு பின்வருமாறு. 

க்³ராம꞉ ச நக³ரம் சைவ பத்தநம் க²ர்வடம் புரம் .
கே²டகம் குஸுமம் சைவ ஷி²பி³ரம் ராஜ வாஸிகம் .
ஸேநா முகம் இதி ஏவ த³ஷ²தா⁴ கீர்திதம் பு³தை⁴꞉ ..

{இதன் பொருள்: கிராமம், நகரம், பட்டணம் {சிறு நகரம்}, கர்வடம் {புறநகரம்}, புரம், கேடகம், குஸுமம், சிபிரம் {முகாம்}, ராஜவாசிகம் {அரசக் குடியிருப்பு}, சேனாமுகம் {படைகள் தங்குமிடம்} ஆகியவை இவை அனைத்தும் ஞானிகளால் சொல்லப்பட்டுள்ள பத்து வகை நகர்ப்புறங்களாகும்}.

வாஸ்து சாஸ்திரம், அல்லது பண்டைய இந்தியாவின் கட்டடக்கலையானது, நகரங்கள், பெருநகரங்கள் முதலியவற்றிற்குச் சில அளவுகோல்களை வகுத்துள்ளது.

நகரங்களைக் குறித்துச் சொல்வதற்கு
அநேக நாரீ ஸம்ப³த்³த⁴ம் நநா ஷி²ல்பி ஜநை꞉ வ்ருʼதம் . க்ரய விக்ரயை꞉ கீர்ணம் ஸர்வ தே³வை꞉ ஸமந்விதம் நக³ரம் து இதி விக்²யாதம்

இதன் பொருள்: பல நாரீகளாலும் {பெண்களாலும்}, சிற்பி ஜனங்களாலும், அல்லது கட்டடக்கலைஞர்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், பல தெய்வங்களுடன் போற்றப்படுவதும். கிரயமும் {கொள்முதலும்}, விக்கிரயமும் {விற்பனையும்} நடைபெறுவதுமான ஓரிடம் நகரம் என்று அழைக்கப்படும்.

மேலும் கடற்கரை நகரங்களைச் சொல்வதற்கு
பத்தநம் ஷ்²ருʼணு ஸாம்ப்ரதம் . த்³வீபாந்தர க³த த்³ரவ்ய க்ரய விக்ரயிகை꞉ யுதம் . பத்தநம் து அப்³தி⁴ தீரே ஸ்யாத் .

மேற்கண்ட நகரத்திற்குரிய அனைத்தையும் கொண்டதும், {அதாவது, பல நாரீகளாலும், சிற்பிகளால், அல்லது கட்டடக்கலைஞர்களாலும் அலங்கரிக்கப்பட்டதும், பல தெய்வங்களுடன் போற்றப்படுவதும். கொள்முதலும், விற்பனையும் நடைபெறுவதும்} கடற்கரையில் இருப்பதுமான இடமே பட்டணமாகும். நகரத்திற்கும், புரத்திற்கும் இடைப்பட்டதே கர்வடமாகும்.

இனி புரம் என்பதைப் பார்ப்போம்
க்ரய விக்ரயை꞉ யுதம் நாநா ஜாதி ஸமந்விதம் . தந்துவாய ஸமாயுக்தம் தத் புரம் து விகத்²யதே

மேற்கண்ட அனைத்தையும் கொண்டதும், {அதாவது கிரயமும் [வாங்குவதும்], விக்கிரயமும் [விற்பதும்] நடைபெறுவதும், பல்வேறு இனங்களும் கூடியிருப்பதும்}, நெசவாளர்களும், கலைஞர்களும் இருப்பதும் புரீ, அல்லது புரம் என்று அழைக்கப்படும். இதைத்தவிர, அரசமாளிகைகள் இருப்பதும், படைகள் இருப்பதுமென அனைத்தையும் சேர்த்து பத்து வகையான நகர்ப்புறங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் கிராமங்களே முதன்மையானவை" என்றிருக்கிறது.

இராவணன், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்ட அந்த ரதத்தில் இருந்து இறங்கியதும், மாரீசனின் கைகளைப் பிடித்துக் கொண்டு {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(12ஆ,13அ) "சகாவே {தோழா}, ராம ஆசிரமபதம் கதலியால் {வாழை மரங்களால்} சூழப்பட்டதாக இதோ தெரிகிறது. நாம் வந்த காரியத்தை சீக்கிரமாகச் செய்வாயாக" {என்றான் ராவணன்}.(13ஆ,14அ)

அப்போது  மாரீசன் என்ற அந்த ராக்ஷசன், ராவணனின் சொற்களைக் கேட்டு, மிருக பூதமாகி {மான் என்ற உயிரினமாகி} ராமனின் ஆசிரம வாயிலில் சுற்றித் திரிந்தான்.(14ஆ,15அ) அற்புதத் தோற்றத்தில் இருந்த அவன் {மாரீசன்}, மணிகள் {ரத்தினங்கள்} பதிக்கப்பட்ட சிருங்க நுனிகளுடனும், வெள்ளை, கருப்பு புள்ளிகளைக் கொண்ட முகத்துடனும் கூடிய மஹத்தான ரூபத்தை ஏற்றிருந்தான்.(15ஆ,16அ)  சிவந்த பத்மங்களைப் போன்ற மோவாயுடனும், இந்திர நீலோத்பலம் போன்ற காதுகளுடனும், சற்றே உயர்ந்த கிரீவத்துடனும் {கழுத்துடனும்}, இந்திர நீலோத்பலம் போன்ற உதடுகளுடனும்,(16ஆ,17அ) மதூகத்தை {இலுப்பை மலரைப்} போன்றும், தாமரை இதழ்களுக்கு ஒப்பாகவும் ஒளிரும் விலாப்பகுதிகளுடனும், வைடூரியப் பிரகாசத்துடன் கூடிய குளம்புகளுடனும், மெல்லிய பின் கால்களுடனும், அழகிய அங்கங்களுடனும்,(17ஆ,18அ) இந்திர ஆயுத {வானவில்லின்} வர்ணத்தில் மேல்நோக்கி நிற்கும் வாலுடனும், நானாவித ரத்னங்கள் பதிக்கப்பட்டு மனோஹரமாக {மனத்தைக் கவரும் வகையில்} அவன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(18ஆ,19அ) 

ராக்ஷசன் {மாரீசன்} அந்த ராம ஆசிரம பதத்தில், பரம சோபனத்துடன் அந்த வனத்தில் ஜுவலிக்கும் ரம்மியமான மிருகமாக {மானாக} க்ஷணப் பொழுதில் தோன்றினான்.(19ஆ,20அ) அந்த ராக்ஷசன் {மாரீசன்}, நானாவித தாதுக்களின் வண்ணத்தில் விசித்திரமான, காண்பதற்கினிய மனோஹரமான ரூபத்தை ஏற்று, வைதேஹியை மயங்கச் செய்வதற்காக, {மானின் இயல்பில்} தளிர்களை மேய்ந்தபடியே புல்வெளியெங்கும் திரிந்து கொண்டிருந்தான்.(20ஆ,21) நூற்றுக்கணக்கான வெள்ளிப்புள்ளிகளுடன் சித்திரமயமாகி, காண்பதற்கினிய தோற்றத்துடன், மரங்களின் புதிய தளிர்களை மேய்ந்து கொண்டிருந்தான்.(22) 

அடர்த்தியான கதலிகளால் {வாழை மரங்களால்} சூழப்பட்டதும், கர்ணீகாரங்களை {கோங்கு மரங்களைக்} கொண்டதுமான கிருஹத்தை {அந்த ஆசிரமத்தை} அடைந்து, சீதை பார்வையைப் பெறுவதற்காக ஆங்காங்கே மந்த கதியில் சுற்றி வந்தான் {மெதுவாக உலவிக் கொண்டிருந்தான்}.(23) அந்த மஹாமிருகமானவன் {பெரும் மானானவன்}, ராஜீவத்தைப் போன்ற சித்திரமான பிருஷ்டத்துடனும் {தாமரையைப் போன்ற அழகிய பின்புறத்துடனும்}, மினுமினுப்புடனும் ராம ஆசிரம பதத்தின் சுற்றுவட்டாரத்தில் சுகமாகத் திரிந்து கொண்டிருந்தான்.(24)

அந்த மிருகோத்தமன் {மாரீசன்}, ஓடிச்சென்றும், மீண்டும் திரும்பியும் திரிந்து கொண்டிருந்தும், சிறிது நேரம் எங்கேயும் சென்றுவிட்டும், பிறகு துரிதமாகத் திரும்பியும் வந்தான்.(25) துள்ளிக் கொண்டும், மீண்டும் பூமியில் படுத்துக் கொண்டும், ஆசிரமத்தின் வாயிலுக்கு வந்து, அங்கிருந்த மான் கூட்டங்களில் சேர்ந்து கொண்டான்.(26) மிருகமான அந்த ராக்ஷசன், சீதையின் பார்வையில் அகப்படுவதற்காக, மான் கூட்டங்களைப் பின்தொடர்ந்து சென்று மீண்டும் திரும்பி, துள்ளிக் குதித்து, சித்திர மண்டல கதியில் {வேடிக்கை காட்டும் வகையில் வட்டகதியில்} சுழன்று கொண்டிருந்தான்.(27,28அ) வனத்தில் திரியும் மற்ற மிருகங்கள் அனைத்தும், இவன் கழுத்து உயர்ந்திருப்பதைக் கண்டு அருகில் வந்து, முகர்ந்து பார்த்ததும் பத்துத் திக்குகளிலும் தெறித்து ஓடின[5].(28ஆ,29அ) மிருக வதம் செய்பவனான அந்த ராக்ஷசனும், அந்த வனத்தின் மிருகங்களைத் தன் சுபாவத்தால்  தீண்டினாலும் {அவற்றை உண்ணும் தன் இயல்பான விருப்பத்துடன் அவற்றை நக்கினாலும்}, தன்னை மறைத்துக் கொள்வதற்காக அவற்றை பக்ஷிக்காதிருந்தான் {உண்ணாதிருந்தான்}.(29ஆ,30அ)

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ராக்ஷசர்களை அடையாளங்காண்பதில் மனிதர்களைவிட மிருகங்கள் சிறந்தவையாகக் காட்டப்படுகின்றன. அவை தெய்வத்தை அறியாதவையாகவோ, அறிய விரும்பாதவையாகவோ இருந்தாலும் ராக்ஷசர்கள் அவற்றை அச்சுறுத்துகின்றனர். தெய்வமாகவோ, ராக்ஷசனாகவோ இல்லாத மனிதர்களால் அவர்கள் இருவரையும் உணர முடிவதில்லை" என்றிருக்கிறது.

Maricha becomes a golden deer presents himself before Sita

சரியாக அதே காலத்தில், சுபலோசனையான {அழகிய விழிகளைக் கொண்டவளான} வைதேஹி, மலர்கள் கொய்யும் எண்ணத்துடன் செடிகளின் பக்கம் திரும்பினாள்[5].(30ஆ,31அ) மதிரேக்ஷணையும் {மயக்கும் விழிகளைக் கொண்டவளும்}, மகிழ்ச்சிகரமான முகத்தையும் கொண்ட அவள், மலர்களைக் கொய்தபடியே கர்ணீகாரம், அசோகம், மா உள்ளிட்ட மரங்களைச் சுற்றி நடந்தாள்.(31ஆ,32அ) ஆரண்யவாசத்திற்குத் தகாதவளான அந்தப் பரமாங்கனை {உயர்ந்த பெண்மணி}, ரத்னமயமானதும், முத்து, மணிகளாலான விசித்திர அங்கங்களைக் கொண்டதுமான அந்த மிருகத்தை {மானைக்} கண்டாள்.(32ஆ,33அ) அழகிய பற்களையும், உதடுகளையும் கொண்டதும், தாமிரத் தாதில் பிறந்த மயிர்களைக் கொண்டதுமான அதை {அந்த மானை} ஆச்சரியத்தில் அகன்ற விழிகளை உயர்த்தி, சினேகத்துடன் பார்த்தாள்.(33ஆ,34அ) மாயாமயமான அந்த மிருகமும், ராமனின் மனைவியான அவளைப் பார்த்து, அந்த வனத்தையே ஒளிரச் செய்வதைப் போல அப்போது அங்கே திரிந்து கொண்டிருந்தது.(34ஆ,35அ) ஜனகாத்மஜையான சீதை, எண்ணற்ற ரத்தினங்களுடன் கூடிய அந்த மிருகத்தை {மானைக்} கண்டு பரம ஆச்சரியம் அடைந்தாள்.(35ஆ,இ)

[6] பொய் ஆம் என ஓது புறஞ்சொலினால்
நையா இடை நோவ நடந்தனளால்
வைதேவி தன் வால் வளை மென் கை எனும்
கொய்யா மலரால் மலர் கொய்குறுவாள்.

- கம்பராமாயணம் 3281ம் பாடல், மாரீசன் வதைப்படலம்

பொருள்: இவளுக்கு இடை இருப்பது பொய்யே என்று சொல்பவர்கள் சொல்லுக்கேற்ப வருத்தம் கொண்டு விளங்கும் இடை நோகும்படி நடந்த வைதேகி, ஒளி பொருந்திய தன் வளையல் அணிந்த மெல்லிய கரங்கள் எனும் கொய்யப்படாத மலர்களால் மலர் கொய்ய முற்பட்டாள்.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 42ல் உள்ள சுலோகங்கள்: 35

Previous | Sanskrit | English | Next

ஆரண்ய காண்டம் 42ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ த்³வி சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Maricha as a golden deer

ஏவம் உக்த்வா து பருஷம் மாரீசோ ராவணம் தத꞉ |
க³ச்சா²வ꞉ இதி அப்³ரவீத் தீ³நோ ப⁴யாத் ராத்ரிம் சர ப்ரபோ⁴꞉ || 3-42-1

த்³ருʼஷ்டா꞉ ச அஹம் புந꞉ தேந ஷ²ர சாப அஸி தா⁴ரிணா |
மத்³வதோ⁴ உத்³யத ஷ²ஸ்த்ரேண விநஷ்டம் ஜீவிதம் ச மே || 3-42-2

ந ஹி ராமம் பராக்ரம்ய ஜீவன் ப்ரதி நிவர்ததே |
வர்ததே ப்ரதி ரூபோ அஸௌ யம த³ண்ட³ ஹதஸ்ய தே || 3-42-3

கிம் நு கர்தும் மயா ஷ²க்யம் ஏவம் த்வயி து³ராத்மநி |
ஏஷ க³ச்சா²மி அஹம் தாத ஸ்வஸ்தி தே அஸ்து நிஷா²சர꞉ || 3-42-4

ப்ரஹ்ருʼஷ்ட꞉ து அப⁴வத் தேந வசநேந ஸ ராக்ஷஸ꞉ |
பரிஷ்வஜ்ய ஸுஸம்ʼஷ்²லிஷ்டம் இத³ம் வசநம் அப்³ரவீத் || 3-42-5

ஏதத் ஷௌ²ண்டீ³ர்ய - சௌத்திர்ய -ந்யுக்தம் தே மத் ச்ச²ம்ʼத³ வஷ² வர்திந꞉ |
இதா³நீம் அஸி மாரீச꞉ பூர்வம் அந்யோ நிஷா²சர꞉ || 3-42-6

ஆருஹ்யதாம் ஷீ²க்⁴ரம் க²கோ³ ரத்ந விபூ⁴ஷித꞉ |
மயா ஸஹ ரதோ² யுக்த꞉ பிஷா²ச வத³நை꞉ க²ரை꞉ || 3-42-7

ப்ரளோப⁴யித்வா வைதே³ஹீம் யதா² இஷ்டம் க³ந்தும் அர்ஹஸி |
தாம் ஷூ²ந்யே ப்ரஸப⁴ம் ஸீதாம் ஆநயிஷ்யாமி மைதி²லீம் || 3-42-8

ததா² இதி உவாச ஏநம் ராவணம் தாடகா ஸுத꞉ |
ததோ ராவண மாரீசௌ விமாநம் இவ தம் ரத²ம் || 3-42-9

ஆருஹ்ய யயது꞉ ஷீ²க்⁴ரம் தஸ்மாத் ஆஷ்²ரம மண்ட³லாத் |
ததை²வ தத்ர பஷ்²யந்தௌ பத்தநாநி வநாநி ச || 3-42-10

கி³ரீம் ச ஸரிதா꞉ ஸர்வா ராஷ்ட்ராணி நக³ராணி ச |
ஸமேத்ய த³ண்ட³க அரண்யம் ராக⁴வஸ்ய ஆஷ்²ரமம் தத꞉ || 3-42-11

த³த³ர்ஷ² ஸஹ மரீசோ ராவணோ ராக்ஷஸாதி⁴ப꞉ |
அவதீர்ய ரதா²த் தஸ்மாத் தத꞉ காம்ʼசந பூ⁴ஷணாத் || 3-42-12

ஹஸ்தே க்³ருʼஹீத்வா மாரீசம் ராவணோ வாக்யம் அப்³ரவீத் |
ஏதத் ராம ஆஷ்²ரம பத³ம் த்³ருʼஷ்²யதே கத³ளீ வ்ருʼதம் || 3-42-13

க்ரியதாம் தத் ஸகே² ஷீ²க்⁴ரம் யத் அர்த²ம் வயம் ஆக³தா꞉ |
ஸ ராவண வச꞉ ஷ்²ருத்வா மாரீசோ ராக்ஷஸ꞉ ததா³ || 3-42-14

ம்ருʼகோ³ பூ⁴த்வா ஆஷ்²ரம த்³வாரி ராமஸ்ய விசசார ஹ |
ஸ து ரூபம் ஸமாஸ்தா²ய மஹத் அத்³பு⁴த த³ர்ஷ²நம் || 3-42-15

மணிப்ரவர ஷ்²ருʼம்ʼகா³க்³ர꞉ ஸித அஸித முகா²க்ருʼதி꞉ |
ரக்தபத்³மோத்பல முக² இந்த்³ரநீலோத்பல ஷ்²ரவா꞉ || 3-42-16

கிம்ʼசித் அப்⁴யுந்நத க்³ரீவ இந்த்³ரநீல நிப⁴ உத³ர꞉ |
மதூ⁴க நிப⁴ பார்ஷ்²வ꞉ ச கம்ʼஜ கிம்ʼஜல்க ஸம்நிப⁴꞉ || 3-42-17

வைதூ³ர்ய ஸம்ʼகாஷ² கு²ர꞉ தநு ஜம்ʼக⁴꞉ ஸுஸம்ʼஹத꞉ |
இந்த்³ர ஆயுத⁴ ஸவர்ணேந புச்சே²ந ஊர்த்⁴வம் விராஜித꞉ || 3-42-18

மநோஹர ஸ்நிக்³த⁴ வர்ணோ ரத்நை꞉ நாநா விதை⁴꞉ வ்ருʼத꞉ |
க்ஷணேந ராக்ஷஸோ ஜாதோ ம்ருʼக³꞉ பரம ஷோ²ப⁴ந꞉ || 3-42-19

வநம் ப்ரஜ்வலயன் ரம்யம் ராம ஆஷ்²ரம பத³ம் ச தத் |
மநோஹரம் த³ர்ஷ²நீயம் ரூபம் க்ருʼத்வா ஸ ராக்ஷஸ꞉ || 3-42-20

ப்ரளோப⁴நார்த²ம் வைதே³ஹ்யா நாநா தா⁴து விசித்ரிதம் |
விசரன் க³ச்ச²தே ஸம்யக் ஷா²த்³வலாநி ஸமம்ʼதத꞉ || 3-42-21

ரோப்யை꞉ பி³ந்து³ ஷ²தை꞉ சித்ரோ பூ⁴த்வா ச ப்ரிய த³ர்ஷ²ந꞉ |
விடபீநாம் கிஸலயான் ப⁴க்ஷயன் விசசார ஹ || 3-42-22

கத³ளீ க்³ருʼஹகம் க³த்வா கர்ணிகாராநி தத꞉ தத꞉ |
ஸமாஷ்²ரயன் மம்ʼத³க³தி꞉ ஸீதா ஸம்ʼத³ர்ஷ²நம் தத꞉ || 3-42-23

ராஜீவ சித்ர ப்ருʼஷ்ட²꞉ ஸ விரராஜ மஹாம்ருʼக³꞉ |
ராம ஆஷ்²ரம பத³ அப்⁴யாஷே² விசசார யதா² ஸுக²ம் || 3-42-24

புநர் க³த்வா நிவ்ருʼத்த꞉ ச விசசார ம்ருʼகோ³த்தம꞉ |
க³த்வா முஹூர்தம் த்வரயா புந꞉ ப்ரதி நிவர்ததே || 3-42-25

விக்ரீட³ன் ச புநர் பூ⁴மௌ புநர் ஏவ நிஷீத³தி |
ஆஷ்²ரம த்³வாரம் ஆக³ம்ய ம்ருʼக³ யூதா²நி க³ச்ச²தி || 3-42-26

ம்ருʼக³ யூதை²꞉ அநுக³த꞉ புநர் ஏவ நிவர்ததே |
ஸீதா த³ர்ஷ²நம் ஆகாம்ʼக்ஷன் ராக்ஷஸோ ம்ருʼக³தாம் க³த꞉ || 3-42-27

பரிப்⁴ரமதி சித்ராணி மண்ட³லாநி விநிஷ்பதன் |
ஸமுத்³வீக்ஷ்ய ச ஸர்வே தம் ம்ருʼகா³ யே அந்யே வநேசரா꞉ || 3-42-28

உபக³ம்ய ஸமாக்⁴ராய வித்³ரவந்தி தி³ஷோ² த³ஷ² |
ராக்ஷஸ꞉ ஸோ அபி தான் வந்யான் ம்ருʼகா³ன் ம்ருʼக³வதே⁴ ரத꞉ || 3-42-29

ப்ரச்சா²த³நார்த²ம் பா⁴வஸ்ய ந ப⁴க்ஷயதி ஸம்ʼஸ்ப்ருʼஷ²ன் |
தஸ்மின் ஏவ தத꞉ காலே வைதே³ஹீ ஷு²ப⁴லோசநா || 3-42-30

Maricha becomes a golden deer presents himself before Sita

குஸும அபசயே வ்யக்³ரா பாத³பான் அப்⁴யவர்தத |
கர்ணிகாரான் அஷோ²கான் ச சூதாம் ச மதி³ரேக்ஷணா || 3-42-31

குஸுமாநி அபசிந்வந்தீ சசார ருசிராநநா |
அநர்ஹா அரண்ய வாஸஸ்ய ஸா தம் ரத்நமயம் ம்ருʼக³ம் || 3-42-32

முக்தா மணி விசித்ர அம்ʼக³ம் த³த³ர்ஷ² பரம அம்ʼக³நா |
தம் வை ருசிர த³ம்ʼத ஓஷ்ட²ம் ரூப்ய தா⁴து தநூ ருஹம் || 3-42-33

விஸ்மயாத் உத்பு²ல்ல நயநா ஸ ஸ்நேஹம் ஸமுதை³க்ஷத |
ஸ ச தாம் ராம த³யிதாம் பஷ்²யன் மாயாமயோ ம்ருʼக³꞉ || 3-42-34

விசசார தத꞉ தத்ர தீ³பயன் இவ தத் வநம் |
அத்³ருʼஷ்ட பூர்வம் த்³ருʼஷ்ட்வா தம் நாநா ரத்நமயம் ம்ருʼக³ம் |
விஸ்மயம் பரமம் ஸீதா ஜகா³ம ஜநக ஆத்மஜா || 3-42-35

இதி வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ த்³வி சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

காகதாலீய நியாயம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 41 (20)

Crow and Palm Tree syndrome | Aranya-Kanda-Sarga-41 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு மாரீசனின் அறிவுரைகளும், எச்சரிக்கைகளும்...

Crow palm tree syndrome - kaaka taaleeya Nyayam

இராவணன் இவ்வாறு ராஜாவாகப் பிரதிகூலமாக {சாதகமில்லாமல்} ஆணையிட்டதும், {மாரீசன்} ராக்ஷசாதிபனிடம் {பின்வரும்} கடும் வாக்கியங்களைத் தயக்கமின்றி பேசினான்:(1) "நிசாசரா {இரவுலாவியே}, புத்திரர்களுடனும், ராஜ்ஜியத்துடனும், அமைச்சர்களுடனும் நாசத்தை அடைவதற்குரிய இந்தப் பாப கர்மத்தை உனக்குக் கற்பித்தவன் எவன்?(2) இராஜாவே, உன் சுகத்தில் ஆனந்திக்காத பாபி எவன்? இந்த மிருத்யு துவாரமே {மரண வாயிலே} உனக்கு உபாயமெனக் கற்பித்தவன் எவன்?(3)  நிசாசரா, வீரியமற்ற உன் சத்ருக்களில் எவரோ, நீ பலமிக்க ஒருவனுடன் மோதி நாசமடைய வேண்டுமென விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.(4) நிசாரசா, எவன் உன் செயலாலேயே நீ நாசமடைய வேண்டுமென விரும்புகிறானோ அவன் ஹித புத்தி {நற்புத்தி} இல்லாத க்ஷுத்ரனாவான் {இழிந்தவனாவான்}. எவன் இதை உனக்கு உபதேசித்தான்?(5) 

இராவணா, தவறான பாதையில் செல்லும் உன்னை எவ்வகையிலேனும் தடுக்காதவர்களான அமைச்சர்கள் யாவரோ அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்களாக இருப்பினும் கொல்லப்படாதிருக்கின்றனர்.(6) விரும்பியவாறு நடந்து கொண்டு, தவறான பாதையில் செல்லும் ராஜாவை நல்ல அமைச்சர்கள் எப்போதும் தடுப்பார்கள். ஆனால் தடுக்கப்பட வேண்டியவனான நீ தடுக்கப்படாமல் இருக்கிறாய்.(7) ஜயதாம்வரா {வெற்றியாளர்களில் சிறந்தவனே}, நிசாசரா {இரவுலாவியே}, தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றையும், புகழையும் தங்கள் சுவாமியின் {தலைவனின்} அருளாலேயே அமைச்சர்கள் அடைகின்றனர்.(8) இராவணா, மாறாக நடக்கும் சுவாமியின் {தலைவனின்} குணமற்ற தன்மையால் அவை அனைத்தும் வீணாகின்றன. இதர ஜனங்களும் துன்பத்தையே அடைவார்கள்.(9) ஜயதாம்வரா, தர்மத்திற்கும், ஜயத்திற்கும்  ராஜாவே மூலமல்லவா? எனவே, அவஸ்தைகள் அனைத்தில் இருந்தும் நராதிபர்கள் ரக்ஷிக்கப்பட வேண்டும்.(10)

இராக்ஷசா, நிசாசரா, ராஜ்ஜியத்தை பாலிப்பது {ஆள்வது} கடுமையானவனால் சாத்தியமல்ல; பிரதிகூலனாலும் {பாதகமாக நடப்பவனாலும்} அது முடியாது; நீதிநயமற்றவனாலும் முடியாது.(11) கொடும் எண்ணங்களைக் கொண்ட அமைச்சர்கள், சமமற்ற தளத்தில், மந்தமான சாரதியால் செலுத்தப்பட்டு, சீக்கிரமாகச் செல்லும்  துரகங்களைப் போலவே அழிவடைவார்கள் {மந்தமாகச் செலுத்திய சாரதியுடனும், கலகலத்த ரதத்துடனும் மேடுபள்ளமான சாலையில் விரைவாகச் சென்று அழியும் குதிரைகளைப் போலவே ராஜனுடனும், ராஜ்ஜியத்துடனும் அந்த அமைச்சர்கள் வீழ்ந்தழிவார்கள்}.(12) உலகத்தில் தர்மத்தைப் பின்பற்றும் நேர்மையான சாதுக்கள் பலரும், பிறர் செய்யும் அபராதங்களால் {தவறுகளால்} தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து நாசமடைகிறார்கள்.(13)  

இராவணா, பிரதிகூலமாக {பாதகமாக} நடக்கும் கொடுமையான சுவாமியால் ரக்ஷிக்கப்படும் பிரஜைகள், நரியால் {பாதுகாக்கப்படும்} மேஷங்களை {ஆடுகளைப்} போல வளர்ச்சியடையமாட்டார்கள்.(14) இராவணா, கடுமையும், துர்புத்தியும் கொண்டவனும், அஜிதேந்திரியனும் {புலன்களை வெல்லாதவனுமான} உன்னைப் போன்ற ராஜா, சர்வ ராக்ஷசர்களையும் அவசியம் நாசமடையச் செய்வான்.(15) காகதாலீயம் போல {காகம் அமர விழுந்த பனம்பழத்தைப் போல}[1] கோரமாகத் திரண்டிருக்கும் அவற்றையும் இவற்றையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.  {உன் தவறுகளால்} பரிதாபத்திற்குரிய நிலையை அடைந்து உன் சைனியத்துடன் நீ அழிவடையப் போகிறாய்.(16)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தற்செயலாக நடைபெறும் நிகழ்வுகள் சம்ஸ்கிருதத்தில் "காகதாலீய நியாயம்" என்றழைக்கப்படுகிறது. காலுடைந்த ஒரு நரி, சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து தப்பிக்க, நிழல்தரும் மரங்களைத் தேடியும் கிட்டாததால், ஒரு பனை மரத்தினடியில் உறைவிடம் நாடி வந்தது. அதே நேரத்தில், ஒரு காகமும் அந்த மரத்தின் உச்சியில் வந்து அமர்ந்தது. அப்போது, கனமுள்ள பெரிய பனம்பழம் ஒன்று அந்த நரியின் தலையில் வந்து விழுந்தது. {காலுடைந்த வலியையும், வெயிலையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் திணறிக் கொண்டு, நிழல் நாடி, மரமேதும் கிட்டாமல், அந்தப் பனை மரத்தினடியில் வந்து ஓய்ந்தால், மேலும் அதிக துன்பமாக பனம்பழத்தால் அடியும் விழுகிறது}. இங்கே அந்த நரியின் துன்பம் விளக்க முடியாதது. நரி வந்ததும், காகம் அமர்ந்ததும், பழம் விழுந்ததும் என அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்வதால் எவரும் பிறரைப் பழிகூற இயலாது. இதுபோன்ற தற்செயலான நிகழ்வுகள் காகதாலீய நியாயம் என்ற பெயராலேயே அழைக்கப்படுகின்றன" என்றிருக்கிறது. "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை" என்ற இந்தப் பழமொழி தமிழிலும் வெகு பிரபலமானதுதான். முத்துக்கள், சந்தன, வாழை, தென்னை மரங்கள், மிளகு போலப் பனைமரமும் தென்னகம் சார்ந்த மரம்தான். மாரீசன் இருந்தது தென்னகம் என்பதற்கான ஆய்வுகளில் இதையும் ஒரு சான்றாக முன்வைக்கலாம்.

அந்த இராமன், என்னைக் கொன்றதும், சீக்கிரமாகவே உன்னையும் கொல்லப் போகிறான். பகைவனால் கொல்லப்பட்டு நான் மரிப்பதன் மூலம் நோக்கம் நிறைவேறியவன் ஆவேன்.(17) இராமனைக் கண்ட உடனேயே நான் கொல்லப்பட்டேன் என்று அறியும் நீயும் சீதையை அபகரித்ததும் பந்துக்களுடன் கொல்லப்படுவாய் என்பதைப் புரிந்து கொள்வாயாக.(18) என்னுடன் சேர்ந்து ஆசிரமத்திலிருந்து சீதையைக் கொண்டு வந்தால், நீயும் பிழைக்க மாட்டாய், நானும் இருக்க {பிழைக்க} மாட்டேன், லங்கையும் இருக்காது, ராக்ஷசர்களும் இருக்க மாட்டார்கள்.(19) நிசாசரா {இரவுலாவியே}, ஹிதத்தை {உன் நலனை} விரும்புகிறவனான நான் {தடுக்கும் வகையில்} எச்சரிக்கையாகச் சொல்லும் இந்த வாக்கியங்களை ஆயுள் குறைந்தவர்கள் இனிமையாக உணர மாட்டார்கள் {புரிந்து கொள்ள மாட்டார்கள்}. கிட்டத்தட்ட பிரேதமாகிவிட்ட நரர்கள், நல்ல ஹிருதயம் கொண்டோர் {நண்பர்கள்} சொல்லும் ஹிதமானவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்." {என்றான் மாரீசன்}.(20)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 41ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Thursday, 30 March 2023

ஆரண்ய காண்டம் 41ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ ஏக சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Crow palm tree syndrome - kaaka taaleeya Nyayam

ஆஜ்ஞப்தோ ராவணேந இத்த²ம் ப்ரதிகூலம் ச ராஜவத் |
அப்³ரவீத் பருஷம் வாக்யம் நி꞉ஷ²ந்கோ ராக்ஷஸாதி⁴பம் || 3-41-1

கேந அயம் உபதி³ஷ்ட꞉ தே விநாஷ²꞉ பாப கர்மணா |
ஸ புத்ரஸ்ய ஸ ராஜ்யஸ்ய ஸ அமாத்யஸ்ய நிஷா²சர || 3-41-2

க꞉ த்வயா ஸுகி²நா ராஜன் ந அபி⁴நந்த³தி பாபக்ருʼத் |
கேந இத³ம் உபதி³ஷ்டம் தே ம்ருʼத்யு த்³வாரம் உபாயத꞉ || 3-41-3

ஷ²த்ரவ꞉ தவ ஸுவ்யக்தம் ஹீந வீர்யா நிஷா² சர |
இச்ச²ந்தி த்வாம் விநஷ்²யந்தம் உபருத்³த⁴ம் ப³லீயஸா || 3-41-4

கேந இத³ம் உபதி³ஷ்டம் தே க்ஷுத்³ரேண அஹித பு³த்³தி⁴நா |
ய꞉ த்வாம் இச்ச²தி நஷ்²யந்தம் ஸ்வ க்ருʼதேந நிஷா²சர || 3-41-5

வத்⁴யா꞉ க²லு ந வத்⁴யந்தே ஸசிவா꞉ தவ ராவண |
யே த்வாம் உத்பத²ம் ஆரூட⁴ம் ந நிக்³ருʼஹ்ணந்தி ஸர்வஷ²꞉ || 3-41-6

அமாத்யை꞉ காம வ்ருʼத்தோ ஹி ராஜா காபத²ம் ஆஷ்²ரித꞉ |
நிக்³ராஹ்ய꞉ ஸர்வதா² ஸத்³பி⁴꞉ ந நிக்³ராஹ்யோ நிக்³ருʼஹ்யஸே || 3-41-7

த⁴ர்மம் அர்த²ம் ச காமம் ச யஷ²꞉ ச ஜயதாம் வர |
ஸ்வாமி ப்ரஸாதா³த் ஸசிவா꞉ ப்ராப்நுவந்தி நிஷா²சர || 3-41-8

விபர்யயே து தத் ஸர்வம் வ்யர்த²ம் ப⁴வதி ராவண |
வ்யஸநம் ஸ்வாமி வைகு³ண்யாத் ப்ராப்நுவந்தி இதரே ஜநா꞉ || 3-41-9

ராஜ மூலோ ஹி த⁴ர்ம꞉ ச ஜய꞉ ச ஜயதாம் வர |
தஸ்மாத் ஸர்வாஸு அவஸ்தா²ஸு ரக்ஷிதவ்யோ நராதி⁴பா꞉ || 3-41-10

ராஜ்யம் பாலயிதும் ஷ²க்யம் ந தீக்ஷ்ணேந நிஷா²சர |
ந ச அபி ப்ரதிகூலேந ந அவிநீதேந ராக்ஷஸ || 3-41-11

யே தீக்ஷ்ண மம்ʼத்ரா꞉ ஸசிவா ப⁴ஜ்யந்தே ஸஹ தேந வை |
விஷமே துரகா³꞉ ஷீ²க்⁴ரா மந்த³ ஸாரத²யோ யதா² || 3-41-12

ப³ஹவ꞉ ஸாத⁴வோ லோகே யுக்த த⁴ர்மம் அநுஷ்டி²தா꞉ |
பரேஷாம் அபராதே⁴ந விநஷ்டா꞉ ஸ பரிச்ச²தா³꞉ || 3-41-13

ஸ்வாமிநா ப்ரதிகூலேந ப்ரஜா꞉ தீக்ஷ்ணேந ராவண |
ரக்ஷ்யமாணா ந வர்த⁴ந்தே மேஷா கோ³மாயுநா யதா² || 3-41-14

அவஷ்²யம் விநஷி²ஷ்யந்தி ஸர்வே ராவண ராக்ஷஸா꞉ |
யேஷாம் த்வம் கர்கஷோ² ராஜா து³ர்பு³த்³தி⁴꞉ அஜித இந்த்³ரிய꞉ || 3-41-15

தத்³ இத³ம் காக தாலீயம் கோ⁴ரம் ஆஸாதி³தம் மயா |
அத்ர த்வம் ஷோ²சநீயோ அஸி ஸ ஸைந்யோ விநஷி²ஷ்யஸி || 3-41-16

மாம் நிஹத்ய து ராமோ அஸௌ அசிராத் த்வாம் வதி⁴ஷ்யதி |
அநேந க்ருʼத க்ருʼத்யோ அஸ்மி ம்ரியே ச அபி அரிணா ஹத꞉ || 3-41-17

த³ர்ஷ²நாத் ஏவ ராமஸ்ய ஹதம் மாம் அவதா⁴ரய |
ஆத்மாநம் ச ஹதம் வித்³தி⁴ ஹ்ருʼத்வா ஸீதாம் ஸ பா³ந்த⁴வம் || 3-41-18

ஆநயிஷ்யஸி சேத் ஸீதாம் ஆஷ்²ரமாத் ஸஹிதோ மயா |
ந ஏவ த்வம் அஸி ந ஏவ அஹம் ந ஏவ லம்ʼகா ந ராக்ஷஸா꞉ || 3-41-19

நிவார்யமாண꞉ து மயா ஹித ஏஷிணா
ந ம்ருʼஷ்யஸே வாக்யம் இத³ம் நிஷா²சர |
பரேத கல்பா ஹி க³த ஆயுஷோ நரா
ஹிதம் ந க்³ருʼஹ்ணந்தி ஸுஹ்ருʼத்³பி⁴꞉ ஈரிதம் || 3-41-20

இதி வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ ஏக சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

நின்னை ஒறுப்பேன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 40 (27)

I will kill you | Aranya-Kanda-Sarga-40 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மாரீசன் கீழ்ப்படியாவிட்டால் கொன்றுவிடப் போவதாக மிரட்டிய ராவணன்; பொன் மானாகும் திட்டத்தை நிறைவேற்றுவதில் தீர்மானமடைந்தது...

Ravana threatens to kill Mareecha

மாரீசன், தகுந்தவையும், பொருத்தமானவையுமான வாக்கியங்களை ராவணனிடம் பேசியபோது, மரிக்க விரும்புகிறவன் ஔஷதத்தை {சாகப் போகிறவன் விரும்பாத மூலிகை மருந்தைப்} போல அவன் அவற்றை ஏற்றுக் கொண்டானில்லை.(1) காலனால் தூண்டப்பட்ட ராக்ஷசாதிபன் {ராவணன்}, பத்தியமானவற்றையும் {தகுந்தவற்றையும்}, ஹிதமானவற்றையும் {நல்லவற்றையும்} பேசிக் கொண்டிருந்த அந்த மாரீசனிடம், தகாத, நயமற்ற வாக்கியங்களை {பின்வருமாறு} சொன்னான்:(2) "என்னிடம் நீ சொன்ன வாக்கியங்கள் தரிசு நிலத்தில் {தூவப்படும்} விதையைப் போலவே அதி அர்த்தமுள்ள பழங்கள் {பலன்கள்} எதையும் விளைவிக்காது.(3) பாப சீலனும் {ஒழுக்கத்தில் பாபியும்}, மூர்க்கனும், விசேஷமாக {அதிலுங்குறிப்பாக} மானுஷனுமான ராமனுடனான போர் குறித்த உன் வாக்கியங்கள் என்னை அச்சுறுத்தும்[1] சக்திகொண்டவையல்ல.(4)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே "பே⁴த்தும்" என்ற சொல் இருந்தால் "அழிக்கும்" என்றும், "பே⁴தும்" என்றிருந்தால் "அச்சுறுத்தும்" என்றும் பொருள் கொள்ள வேண்டும். கிழக்கத்திய பதிப்புகளில் உள்ளது போல, "பே⁴த்தும்" என்ற சொல்லை இங்கே எடுத்துக் கொண்டால், "மனிதனால் போரில் என்னை அழிக்க முடியாது" என்ற பொருள் வரும். வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "பாபியும், மூர்க்கனும், விசேஷமாக சாதாரண மானுஷனுமான ராமனுடன் நான் போரிடுவதை உன் வாக்கியங்களால் தடுத்துவிட முடியாது" என்றிருக்கிறது.

எவன் ஸ்திரீயின் சாதாரண வாக்கியத்தைக் கேட்டு நல்லிதயம் கொண்டவர்களையும் {நண்பர்களையும்}, ராஜ்ஜியத்தையும், மாதாக்களையும், பிதாவையும் கைவிட்டு ஒரே நிலையில் நின்று {பிடிவாதமாக / விரைவாக} வனம் வந்தானோ அத்தகையவனைக் கொண்டு என்னை அச்சுறுத்த நீ சக்தனல்ல.(5) போரில் கரனைக் கொன்றவனான அவனுடைய பிராணனை விடப் பிரியமிக்கவளான சீதையை உன் முன்னிலையிலேயே {உன் உதவியுடன்} அவசியம் நான் கடத்திச் செல்வேன்.(6) மாரீசா, என் புத்தியும், ஹிருதயமும் இவ்வாறே நிச்சயமடைந்திருக்கின்றன. இந்திரனுடன் கூடிய ஸுராஸுரர்களும் {தேவர்களும், அசுரர்களும்} கூட இதை மாற்றுவதற்கு சக்தர்களல்லர்.(7) அந்தக் காரியத்தை நிச்சயிப்பதில் உள்ள தோஷங்களையும், குணங்களையும், அபாயங்களையும், உபாயங்களையும் உன்னிடம் கேட்டால் நீ இவ்வாறு பேசுவது தகும்.(8)

எவன் தன் நலத்தை விரும்புகிறானோ, அந்த விவேகமுள்ள ஆலோசகன் தன்னைக் கேட்கும்போது {மட்டுமே, அதுவும்} தன் கைகளை உயர்த்திக் கூப்பிக் கொண்டு ராஜனிடம் சொல்லத் தகுந்தவனாவான்.(9) வசுதாதிபனிடம் {பூமியின் தலைவனிடம்}, பிரதிகூலமற்ற {அனுகூலமான / சாதகமான}, மிருதுப்பூர்வமான, ஹிதமான, சுபமான, உபசாரத்துடன் கூடிய தகுந்த வாக்கியங்களில் பேச வேண்டும்.(10) மாரீசா, அல்லது மதிப்பற்ற எந்த ஹிதமான {நல்ல} வாக்கியத்தையும், கண்டனத்துடன் சொல்வது மதிப்புக்குரிய ராஜாவுக்கு மகிழ்ச்சியைத் தராது.(11) 

அளவில்லா ஆற்றல் படைத்த ராஜர்கள், அக்னி, இந்திரன், சோமன், யமன், வருணன் என்ற ஐந்து ரூபங்களின் தன்மைகளைக்[2] கொண்டவர்களாவர்.(12) க்ஷணதாசரா {இரவுலாவியே}, மஹாத்மாக்களான ராஜர்கள், {அக்னியின்} உஷ்ணத்தையும், {இந்திரனின்} விக்கிரமத்தையும், {சோமனின் மென்மையையும்} சௌம்யத்தையும், {யமனின்} தண்டத்தையும், {வருணனின் அருளையும்} பிரசன்னத்தையும் தரித்தவர்கள். எனவே, அந்தப் பார்த்திபர்கள் அனைத்துச் சூழ்நிலைகளிலும் மதித்துப் பூஜிக்கப்படத் தகுந்தவர்களாவர்.(13,14அ) ஆனால் தர்மத்தை அறியாத நீயோ, கேவலம் மோஹத்தை {அறியாமையை மட்டுமே} நாடி என் அருகே வந்து தீய விருப்பத்துடன் இவ்வாறு கடுமையாக வாதம் செய்து கொண்டிருக்கிறாய்.(14ஆ,15அ) 

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில் "நெருப்பு, காற்று, நிலம், வெளி, நீர் என்ற ஐம்பூதங்களே இந்தத் தன்மைகள்" என்றிருக்கிறது.

இராக்ஷசா, என் குணதோஷங்களையோ, எனக்குத் தகுந்தவற்றையோ நான் கேட்கவில்லை. அளவில்லா விக்கிரமம் கொண்டவனே,  உன்னிடம் இச்சமயத்தில் நான் சொல்வது இவ்வளவுதான்.(15ஆ,16அ) இந்தக் காரியத்தில் சகாயம் செய்வதே உனக்குத் தகும். நான் சொல்லும் சொற்களின்படி நீ செய்ய வேண்டிய சகாய காரியத்தைச் சொல்கிறேன், அந்த கர்மத்தை {செயலைக்} குறித்துக் கேட்பாயாக.(16ஆ,17அ) நீ ரஜத பிந்துக்களுடன் கூடிய சித்திர சுவர்ண மிருகமாகி {வெள்ளிப் புள்ளிகளால் அழகுற்று விளங்கும் பொன்மயமான மானாகி} அந்த ராமனின் ஆசிரமத்தில் சீதையின் முகத்திற்கு நேரே திரிய வேண்டும். வைதேஹியை லோபங்கொள்ள {மயக்கி ஆசையுறச்} செய்த பிறகு இஷ்டப்படி செல்வதே உனக்குத் தகும்.(17ஆ,18)

மைதிலி, காஞ்சன மாயாமயனான உன்னை {பொன்மான் போன்ற மாயா தோற்றத்தில் உள்ள உன்னைக்} கண்டு ஆவலுற்று "இதை சீக்கிரம் கொண்டு வருவீராக" என்று ராமனிடம் நிச்சயம் சொல்வாள்.(19) காகுத்ஸ்தன் {இந்த ராமன்} வெளியே புறப்பட்டு தூரத்தில் சென்றதும் ராமனின் வாக்கியங்களை ஒத்த வகையில், "ஹா சீதா, லக்ஷ்மணா" என்று உரக்கக் கதறுவாயாக.(20) அதைக் கேட்டும், சீதையால் தூண்டப்பட்டும் நல்ல ஹிருதயத்துடன் {நட்புடன்} கூடிய சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்} ஐயுற்று அஞ்சி {குழப்பத்துடன்} ராமனின் பாதையில் பின்தொடர்ந்து செல்வான்.(21) காகுத்ஸ்தனும், லக்ஷ்மணனும் சென்ற பிறகு, சஹஸ்ராக்ஷன் சசியை {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரன் இந்திராணியைக் கடத்தியதைப்} போல[3] வைதேஹியை சுகமாகக் கவர்ந்து செல்வேன்.(22) 

[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சசி {இந்திராணி} புலோமன் என்ற அசுரனின் மகளாவாள். இந்திரன் புலோமனைக் கொன்று, சசியை அபகரித்துச் சென்றான்" என்றிருக்கிறது.

இராக்ஷசா, இந்த காரியத்தைச் செய்த பிறகு, நீ இஷ்டம்போல் எப்படியும் செல்வாயாக. நல்விரதம் நோற்கும் மாரீசா, உனக்கு ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுப்பேன்.(23) சௌம்யா, இந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக சிவமார்க்கத்தில் {இடையூறற்ற நல்ல வழியில்} செல்வாயாக. நான் தண்டகவனத்திற்கு ரதத்தில் பின்தொடர்ந்து வருவேன்.(24) இராகவனை வஞ்சித்துவிட்டு, யுத்தமின்றி சீதையை அடைந்து, காரியத்தை நிறைவேற்றிக் கொண்டு உன்னுடன் சேர்ந்து லங்கையை அடைவேன்.(25)

மாரீசா, இதைச் செய்யவில்லையென்றால் உன்னை நான் இப்போதே வதம் செய்வேன்[4]. பலத்தைப் பயன்படுத்தியாவது என்னுடைய இந்த காரியத்தை அவசியம் உன்னைச் செய்ய வைப்பேன். இராஜனுக்கு பிரதிகூலமாக {விருப்பத்திற்கு எதிராக} இருப்பவன் ஒருபோதும் சுகத்தை அடையமாட்டான்.(26) அவனை {ராமனை} அடைந்தால், உன் ஜீவிதம் நிச்சயமற்றதாகும். என்னுடன் முரண்பட்டால் உண்மையில் இப்போதே உனக்கு மிருத்யு {மரணம்} நிச்சயம். உள்ளபடியே இதைப் புத்தியில் கொண்டு, தகுந்த பத்தியமான {விரும்பத்தக்க} தீர்மானத்தை அடைந்து, அதன்படியே நீ செயல்படுவாயாக" {என்றான் ராவணன்}.(27)

[4] மறுத்தனை எனப் பெறினும் நின்னை வடி வாளால்
ஒறுத்து மனம் உற்றது முடிப்பென் ஒழிகல்லேன்
வெறுப்பன கிளத்தலுறும் இத் தொழிலை விட்டு என்
குறிப்பின் வழி நிற்றி உயிர் கொண்டு உழலின் என்றான்

- கம்பராமாயணம் 3266ம் பாடல்,  மாரீசன் வதைப்படலம்

பொருள்: "நான் சொல்வதை நீ மறுத்தால் உன்னை என் கூர்வாளால் வெட்டி, என் மனம் கருதியதைச் செய்து முடிப்பேன். காரியத்தில் இருந்து விலகமாட்டேன். நான் வெறுக்கும் அறிவுரைகளை எடுத்துக் கூறும் இந்தச் செயலை விட்டால் நீ உயிர் பிழைக்கலாம். என் குறிப்பின் வழியில் நின்று செயல்புரிவாயாக என்றான் {ராவணன்}.

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 40ல் உள்ள சுலோகங்கள்: 27

Previous | Sanskrit | English | Next

ஆரண்ய காண்டம் 40ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Ravana threatens to kill Mareecha

மாரீசஸ்ய து தத் வாக்யம் க்ஷமம் யுக்தம் ச ராவண꞉ |
உக்தோ ந ப்ரதிஜக்³ராஹ மர்து காம இவ ஔஷத⁴ம் || 3-40-1

தம் பத்²ய ஹித வக்தாரம் மாரீசம் ராக்ஷஸாதி⁴ப꞉ |
அப்³ரவீத் பருஷம் வாக்யம் அயுக்தம் கால சோதி³த꞉ || 3-40-2

யத் கில ஏதத் அயுக்தார்த²ம் மாரீச மயி கத்²யதே |
வாக்யம் நிஷ்ப²லம் அத்யர்த²ம் பீ³ஜம் உப்தம் இவ ஊஷரே || 3-40-3

த்வத் வாக்யை꞉ ந து மாம் ஷ²க்யம் - பே⁴தும் - பே⁴த்தும் ராமஸ்ய ஸம்ʼயுகே³ |
பாப ஷீ²லஸ்ய மூர்க²ஸ்ய மாநுஷஸ்ய விஷே²ஷத꞉ || 3-40-4

ய꞉ த்யக்த்வா ஸுஹ்ருʼதோ³ ராஜ்யம் மாதரம் பிதரம் ததா² |
ஸ்த்ரீ வாக்யம் ப்ராக்ருʼதம் ஷ்²ருத்வா வநம் ஏக பதே³ க³த꞉ || 3-40-5

அவஷ்²யம் து மயா தஸ்ய ஸம்ʼயுகே³ க²ர கா⁴திந꞉ |
ப்ராணை꞉ ப்ரியதரா ஸீதா ஹர்தவ்யா தவ ஸம்ʼநிதௌ⁴ || 3-40-6

ஏவம் மே நிஷ்²சிதா பு³த்³தி⁴꞉ ஹ்ருʼதி³ மாரீச வித்³யதே |
ந வ்யாவர்தயிதும் ஷ²க்யா ஸ இந்த்³ரை꞉ அபி ஸுர அஸுரை꞉ || 3-40-7

தோ³ஷம் கு³ணம் வா ஸம்ʼப்ருʼஷ்ட꞉ த்வம் ஏவம் வக்தும் அர்ஹஸி |
அபாயம் வா அபி உபாயம் வா கார்யஸ்ய அஸ்ய விநிஷ்²சயே || 3-40-8

ஸம்ʼப்ருʼஷ்டேந து வக்தவ்யம் ஸசிவேந விபஷ்²சிதா |
உத்³யத அம்ʼஜலிநா ராஜ்ஞே ய இச்சே²த் பூ⁴திம் ஆத்மந꞉ || 3-40-9

வாக்யம் அப்ரதிகூலம் து ம்ருʼது³ பூர்வம் ஷு²ப⁴ம் ஹிதம் |
உபசாரேண யுக்தம் ச வக்தவ்யோ வஸுதா⁴ அதி⁴ப꞉ || 3-40-10

ஸ அவமர்த³ம் து யத் வாக்யம் அத²வா மாரீச ஹிதம் உச்யதே |
ந அபி⁴நம்ʼத³தி தத் ராஜா மாநார்தீ² மாந வர்ஜிதம் || 3-40-11

பம்ʼச ரூபாணி ராஜாநோ தா⁴ரயந்தி அமித ஓஜஸ꞉ |
அக்³நே꞉ இந்த்³ரஸ்ய ஸோமஸ்ய யமஸ்ய வருணஸ்ய ச || 3-40-12

ஔஷ்ண்யம் ததா² விக்ரமம் ச ஸௌம்யம் த³ண்ட³ம் ப்ரஸந்நதாம் |
தா⁴ரயந்தி மஹாதாம்நோ ராஜாந꞉ க்ஷணதா³சர || 3-40-13

தஸ்மாத் ஸர்வாஸு அவஸ்தா²ஸு மாந்யா꞉ பூஜ்யா꞉ ச பார்தி²வா꞉ |
த்வம் து த⁴ர்மம் அவிஜ்ஞாய கேவலம் மோஹம் ஆஷ்²ரித꞉ || 3-40-14

அப்⁴யாக³தம் மாம் தௌ³ராத்ம்யாத் பருஷம் வத³ஸி ஈத்³ருʼஷ²ம் |
கு³ண தோ³ஷௌ ந ப்ருʼச்சா²மி க்ஷமம் ச ஆத்மநி ராக்ஷஸ || 3-40-15

மயா உக்தம் அபி ச ஏதாவத் த்வாம் ப்ரதி அமிதவிக்ரம |
அஸ்மின் து ஸ ப⁴வான் க்ருʼத்யே ஸாஹாய்யம் கர்தும் அர்ஹஸி || 3-40-16

ஷ்²ருணு தத் கர்ம ஸாஹாய்யே யத் கார்யம் வசநாத் மம |
ஸௌவர்ண꞉ த்வம் ம்ருʼகோ³ பூ⁴த்வா சித்ரோ ரஜத பி³ந்து³பி⁴꞉ || 3-40-17

ஆஷ்²ரமே தஸ்ய ராமஸ்ய ஸீதாயா꞉ ப்ரமுகே² சர |
ப்ரளோப⁴யித்வா வைதே³ஹீம் யதா² இஷ்டம் க³ந்தும் அர்ஹஸி || 3-40-18

த்வாம் ஹி மாயா மயம் த்³ருʼஷ்ட்வா காம்ʼசநம் ஜாத விஸ்மயா |
ஆநய ஏநம் இதி க்ஷிப்ரம் ராமம் வக்ஷ்யதி மைதி²லீ || 3-40-19

அபக்ராந்தே ச காகுத்ஸ்தே² தூ³ரம் ச யாத்வா அபி உதா³ஹர |
ஹா ஸீதே லக்ஷ்மணே இதி ஏவம் ராம வாக்ய அநுரூபகம் || 3-40-20

தத் ஷ்²ருத்வா ராம பத³வீம் ஸீதாயா ச ப்ரசோதி³த꞉ |
அநுக³ச்ச²தி ஸம்ʼப்⁴ராம்ʼதம் ஸௌமித்ரி꞉ அபி ஸௌஹ்ருʼதா³த் || 3-40-21

அபக்ராந்தே ச காகுத்ஸ்தே² லக்ஷ்மண ச யதா² ஸுக²ம் |
ஆஹரிஷ்யாமி வைதே³ஹீம் ஸஹஸ்ராக்ஷ꞉ ஷ²சீம் இவ || 3-40-22

ஏவம் க்ருʼத்வா து இத³ம் கார்யம் யதா² இஷ்டம் க³ச்ச² ராக்ஷஸ |
ராஜ்யஸ்ய அர்த⁴ம் ப்ரதா³ஸ்யாமி மாரீச தவ ஸுவ்ரத || 3-40-23

க³ச்ச² ஸௌம்ய ஷி²வம் மார்க³ம் கார்யஸ்ய அஸ்ய விவ்ருʼத்³த⁴யே |
அஹம் து அநுக³மிஷ்யாமி ஸ ரதோ² த³ண்ட³கா வநம் || 3-40-24

ப்ராப்ய ஸீதாம் அயுத்³தே⁴ந வம்ʼசயித்வா து ராக⁴வம் |
லம்ʼகாம் ப்ரதி க³மிஷ்யாமி க்ருʼத கார்ய꞉ ஸஹ த்வயா || 3-40-25

நோ சேத் கரோஷி மாரீச ஹந்மி த்வாம் அஹம் அத்³ய வை |
ஏதத் கார்யம் அவஷ்²யம் மே ப³லாத்³ அபி கரிஷ்யஸி |
ராஜ்ஞோ ஹி ப்ரதிகூலஸ்தோ² ந ஜாது ஸுக²ம் ஏத⁴தே || 3-40-26

ஆஸாத்³யா தம் ஜீவித ஸம்ʼஷ²ய꞉ தே
ம்ருʼத்யுர் த்⁴ருவோ ஹி அத்³ய மயா விருத்⁴யத꞉ |
ஏதத் யதா²வத் பரிக்³ருʼஹ்ய பு³த்³த்⁴யா
யத் அத்ர பத்²யம் குரு தத் ததா² த்வம் || 3-40-27

இதி வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Tuesday, 28 March 2023

மாரீசன் தப்பிய இரண்டாம் முறை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 39 (25)

The second escape of Mareecha | Aranya-Kanda-Sarga-39 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரண்டாம் முறை தண்டக வனத்தில் தப்பியதை விவரித்த மாரீசன்; இராமனுடன் மோதும் கருத்துக்கு எதிராக ஆலோசனை கூறியது...

Second Escape of Mareecha

{மாரீசன் ராவணனிடம்}, "அப்போது அந்தப் போரில் எப்படியோ நான் அவனால் {ராமனால்}  விடுவிக்கப்பட்டேன். அதன்பிறகு சமீபத்தில் என்ன நடந்தது என்பதை பதிலுக்கு ஏதும் சொல்லாமல் கேட்பாயாக.(1) இவ்வாறு நடந்த பிறகும், வெட்கமில்லாமல் மிருக ரூபம் {மானின் வடிவம்} ஏற்று இரு ராக்ஷசர்களுடன் சேர்ந்து தண்டகவனத்திற்குள் நான் பிரவேசித்தேன்.(2) 

எரிக்கும் நாவுடனும், பெரும்பற்களுடனும், கூரிய சிருங்கங்களுடனும் {கொம்புகளுடனும்}, மஹா பலத்துடனும், மாமிசம் பக்ஷிக்கும் மஹா மிருகமாகி {பெரும் மானாகி} தண்டகாரண்யத்திற்குள் திரிந்து கொண்டிருந்தேன்.(3) இராவணா, அக்னி ஹோத்ரங்களிலும், தீர்த்தங்களிலும், சரணாலயங்களிலும், விருக்ஷங்களின் அடியிலும் தபஸ்விகளை மிக மோசமாக, மிக கோரமாகத் தாக்கிக் கொண்டும்,(4) தண்டகாரண்யத்தில் தர்மசாரிகளான {தர்மவழியில் நடக்கும்} தபஸ்விகளைக் கொன்றும், அவர்களின் உதிரத்தைப் பருகியும், அவர்களின் மாமிசங்களை பக்ஷித்துக் கொண்டும்[1],(5) ரிஷி மாமிசம் உண்டு வந்த குரூரனான நான், வனகோசரர்களை {காட்டுவாசிகளை} அச்சுறுத்தியபடியே இவ்வாறான உதிரமத்தத்துடன் {ரத்தவெறியுடன்} தண்டக வனத்தில் திரிந்து கொண்டிருந்தேன்.(6)

[1] மான் எவ்வாறு மாமிசத்தை உண்ணும்? ராக்ஷச மான் என்பதால் உண்கிறது என்பது சமாதானமாக இருக்கலாம். மூலத்தில் மிருகம் என்று இருப்பதே, அனைத்து மொழிபெயர்ப்புகளிலும் மான் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சம்ஸ்கிருதத்தில் மானைக் குறிப்பிடுவதற்கு "மிருகம்" என்ற சொல்லே பெரும்பாலும் கையாளப்படுகிறது. அவ்வாறு அமைந்ததுதான் மஹாபாரதம், வன பர்வம், 256ம் அத்தியாயத்தில் வரும் "மிருகஸ்வப்னம் {கனவில் கண்ட மான்}" என்ற உபபர்வமாகும். ஒருவேளை மாரீசன் மானின் வடிவில் இருந்து கொண்டு, முனிவர்களைக் கண்டதும் ராக்ஷசனாக சுய வடிவை அடைந்து அவர்களைக் கொன்று மாமிசம் உண்டு, பின்பு மீண்டும் மானாவதே கூட மேற்கண்டவாறு சொல்லப்பட்டிருக்கலாம். இதுவும் ஒரு சமாதானம் தான். இந்த சர்க்கத்தின் மேலுள்ள ஓவியம் டிசம்பர் 1962ல் சந்தமாமா இதழில் 54ம் பக்கத்தில் வெளிவந்ததாகும். அதிலும் மான்களே இருப்பதைக் காணலாம்.

தர்ம தூஷகனான {தர்மத்தை நிந்திப்பவனான} நான், அவ்வாறு தண்டகாரண்யத்தில் திரிந்து வந்த போது, தர்மத்தைப் பின்பற்றி தபம் செய்து கொண்டிருந்த ராமனையும், மஹாபாக்கியவதியான வைதேஹியையும், மஹாரதனான லக்ஷ்மணனையும் அடைந்தேன்.(7,8அ) தபஸ்விகளுக்குரிய ஆஹாரக் கட்டுப்பாட்டுடன் கூடியவனும், சர்வ பூத ஹித ரதத்துடன் {அனைத்து உயிரினங்களுக்கான நன்மையில் விருப்பத்துடன்} வனத்திற்கு வந்தவனும்,{8ஆ} மஹாபலம் பொருந்தியவனுமான ராமனை, "இவன் தபஸ்வி" என்று கருதியதால், பழைய தாக்குதலை நினைவுகூர்ந்தாலும் அலட்சியம் செய்தேன்.{9} கூரிய சிருங்கங்களுடன் கூடிய மிருக வடிவில் இருந்த நான், பூர்வ வைரத்தை {பழைய பகையை} நினைவுகூர்ந்து, கொல்லும் நோக்குடன் மிகக் கடுங் குரோதத்துடன் பாகுபாடு ஏதும் பாராமல் {கண்மூடித்தனமாக} அவனை நோக்கி விரைந்தேன்.(8ஆ-10) 

அவன் {ராமன்}, தன் மஹத்தான வில்லில் நாணேற்றி, சத்ருக்களை அழிக்கவல்லவையும், கூர்மையானவையும், வேகத்தில் சுபர்ணனுக்கும் {கருடன்}, அநிலனுக்கும் {வாயுவுக்கும்} இணையானவையுமான மூன்று பாணங்களை ஏவினான்.(11) வஜ்ரத்திற்கு ஒப்பானவையும், ரத்தத்தையே போஜனமாக {உணவாகக்} கொண்டவையும், வளைந்த கணுக்களைக் கொண்டவையும, மிக கோரமானவையுமான அந்த மூன்று பாணங்களும் ஒன்று சேர்ந்து {எங்களை நோக்கி} வந்து கொண்டிருந்தன.(12) {இராமனின் கணைகளைப்} பூர்வத்தில் கண்ட பயத்தாலும், ராமனின் பராக்கிரமத்தை அறிந்ததாலும் இறுதியில் வஞ்சிக்கவல்லவனாக {அந்த சரத்திடம் இருந்து} தப்பி வந்தேன். அந்த ராக்ஷசர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்[2].(13) இராமனின் சரத்தில் இருந்து எப்படியோ தப்பித்து ஜீவனை மீட்டுக் கொண்ட நான், இங்கே வந்து மனத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டு, தபஸ்வியாகத் துறவு வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.(14)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமனின் கணை பகைவரின் முதுகைத் தைக்காது. வாலியைக் கொல்லும்போதும் கூட, ராமன் மறைந்திருந்து தாக்கினாலும் வாலியின் மார்பையே தாக்கினான். இங்கே மாரீசன் திரும்பி ஓடியதால் ராமனின் மூன்றாவது கணை மாரீசனைக் கொல்லவில்லை. இராமனின் கணை மகிமையை அறியாத ராக்ஷசர்கள் இருவரும் அவற்றை எதிர்த்து மாண்டனர். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் "சட" என்ற சொல்லுக்கு "வஞ்சிக்கவல்ல" என்ற பொருள் உண்டு, சில பதிப்புகளில் இந்த சொல் "சர" என்று பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவ்வாறெனில் இங்கே, "அந்த சரத்திடம் இருந்து தப்பி வந்தேன்" என்று பொருள் கொள்ள வேண்டும்" என்றும் இன்னும் அதிகமும் இருக்கிறது.

மரவுரிகளும், கருப்பு மான்தோலும் உடுத்தியவனும், பாசஹஸ்தனான அந்தகனைப் போலக் கையில் தனுசை ஏந்தியவனுமான ராமனையே இந்த விருக்ஷத்திலும், அந்த விருக்ஷத்திலும் {மரத்திலும், அதுமுதல்} கண்டுவருகிறேன்.(15) இராவணா, இவ்வாறு பீடிக்கப்பட்டவனான நான் {அதுமுதல்} ஆயிரம் ராமர்களைக் கண்டு வருகிறேன். மொத்த அரண்யமும் ராம பூதமாகவே {ராமனெனும் ஒரே உயிரினமாகவே / ராமனால் நிறைந்திருப்பதாக} எனக்குத் தெரிகிறது.(16) இராக்ஷசேசுவரா, யாரும் இல்லாத இடத்திலும் ராமனை மட்டுமே கண்டு வருகிறேன். ஸ்வப்னத்திலும் ராமன் வருவதைக் கண்டு உணர்விழந்து குழம்புகிறேன்.(17) இராவணா, ராமனிடம் அச்சங்கொண்ட எனக்கு ரத்தினங்கள், ரதங்கள் முதலிய ரகாரத்தை ஆதியாகக் கொண்ட பெயர்களே கூட பேரச்சத்தைத் தருகின்றன.(18) அவனது பிரபாவத்தை {ஆற்றலை} அறிந்தவன் நான். அவனுடன் யுத்தம் செய்வது உனக்குத் தகாது. அந்த ரகுநந்தனன், பலியையும்[3], நமுசியையும் கூடக் கொன்றுவிடுவான்.(19)

[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பலி சக்கரவர்த்தி, ராவணனை விட பலமும், வலிமையுனும் மிக்கவனாவான். ஆனந்த ராமாயணத்தில், "ராவண பரஜயம் {ராவணனின் தோல்விகள்}" என்ற அத்தியாயத்தில், பின்வருமாறு சொல்லப்படுகிறது. ராவணன் பாதாள லோகத்தைக் கைப்பற்ற நுழைந்தான். அங்கே பலி, திரிவிக்கிரமனின் {விஷ்ணுவின்} கைதியாக இருந்தான். அவன் நுழைந்த நேரத்தில் பலியும், அவனது ராணியும் பகடை விளையாடிக் கொண்டிருந்தனர். இராவணன் நுழைந்தபோது, பலியின் கைகளில் இருந்த பகடை நழுவி தரையில் விழுந்தது. பாதாளத்தைக் கைப்பற்றுவதற்கு முன் அதை எடுத்துத் தன்னிடம் கொடுக்குமாறு ராவணனிடம் பலி கேட்கிறான். கைலாச மலையையே உயர்த்திய ராவணனால், இவ்வளவு நேரம் பலி விளையாட்டாகக் கையாண்ட அந்த இரண்டு அங்குலப் பகடையைத் தூக்க முடியவில்லை. அத்தகைய வலிமைமிக்கவன் பலி" என்றிருக்கிறது.

இராவணா, நீ ரணத்தில் {போரில்} ராமனுடன் யுத்தம் செய்தாலும் {போரிட்டாலும்}, {அனைத்தையும்} மறந்து பொறுமையுடனும் இருந்தாலும் ராம கதையில் நீ செய்யப் போகும் காரியத்தை நான் காண விரும்புகிறேன்.(20) உலகத்தில் யுக்தமானவர்களும் {நீதிமான்களும்}, தர்மத்தை அனுஷ்டிப்பவர்களுமான சாதுக்கள் {நல்லவர்கள்} பலர், பிறரின் அபராதங்களால் {செய்யும் தவறுகளால்} உற்றார் உறவினர்கள் அனைவரையும் இழக்கிறார்கள்.(21) நிசாசரா {இரவுலாவியே}, அத்தகையவனான நானும், பிறரின் அபராதத்தால் நாசமடையக்கூடும். {எனவே} உனக்குத் தகுந்ததென நீ கருதுவதைச் செய்வாயாக. நான் உன்னைப் பின்தொடர மாட்டேன்.(22) 

மஹாதேஜஸ்வியும், மஹாசத்வனும் {துணிவுமிக்கவனும்}, மஹாபலவானுமான ராமன், நிச்சயம் ராக்ஷச லோகத்திற்கு முடிவுகட்டப் போகிறான்.(23) ஜனஸ்தானத்திலிருந்த கரன், சூர்ப்பணகைக்கு ஹேதுவாக, பூர்வத்தில் {முதலில்} வரம்பைக் கடந்து, குழப்பமற்ற {குற்றமற்ற} கர்மகளைச் செய்யும் ராமனால் கொல்லப்பட்டதில், ராமன் மீறிய வரம்பு எது என்பதை உள்ளபடியே சொல்வாயாக(24) பந்துக்களின் நலத்தை விரும்பும் நான் சொல்லும் இந்த சொற்களை உள்ளபடியே நீ ஏற்காமல் போனால், கோணலற்று {குறி தப்பாமல் நேராகச்} செல்லும் ராமனின் சரங்களால் பந்துக்களுடன் சேர்ந்து இப்போதே கொல்லப்பட்டவனாக, ரணத்தில் {போரில்} ஜீவிதத்தைக் கைவிடுவாய் {என் சொல்லை ஏற்காமல் போனால் இப்போதே உறவினர்களுடன் சேர்ந்து கொல்லப்பட்டவனாகிவிடுவாய். பிறகு போரில் உயிரை விடுவாய்}.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 39ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

ஆரண்ய காண்டம் 39ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ ஏகோந சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Second Escape of Mareecha

ஏவம் அஸ்மி ததா³ முக்த꞉ கத²ம்ʼசித் தேந ஸம்ʼயுகே³ |
இதா³நீம் அபி யத் வ்ருʼத்தம் தத் ஷ்²ருʼஉணுஷ்வ யத் உத்தரம் || 3-39-1

ராக்ஷாப்⁴யாம் அஹம் த்³வாப்⁴யாம் அநிர்விண்ண꞉ ததா² க்ருʼத꞉ |
ஸஹிதோ ம்ருʼக³ ரூபாப்⁴யாம் ப்ரவிஷ்டோ த³ம்ˮட³கா வநே || 3-39-2

தீ³ப்த ஜிஹ்வோ மஹாத³ம்ʼஷ்ட்ர꞉ தீக்ஷ்ண ஷ்²ருʼம்ʼகோ³ மஹாப³ல꞉ |
வ்யசரன் த³ம்ˮடா³காரண்யம் மாம்ʼஸ ப⁴க்ஷோ மஹாம்ருʼக³꞉ || 3-39-3

அக்³நிஹோத்ரேஷு தீர்தே²ஷு சைத்ய வ்ருʼக்ஷேஷு ராவண |
அத்யந்த கோ⁴ரோ வ்யசரன் தாபஸான் ஸம்ʼப்ரத⁴ர்ஷயன் || 3-39-4

நிஹத்ய த³ம்ˮட³காரண்யே தாபஸான் த⁴ர்மசரிண꞉ |
ருதி⁴ராணி பிப³ந்த꞉ தேஷாம் தன் மாம்ʼஸாநி ச ப⁴க்ஷயன் || 3-39-5

ருʼஷி மாஅம்ʼஸ அஷ²ந꞉ க்ரூர꞉ த்ராஸயன் வநகோ³சரான் |
ததா³ ருதி⁴ர மத்தோ அஹம் வ்யசரன் த³ம்ˮட³கா வநம் || 3-39-6

ததா³ அஹம் த³ம்ˮட³காரண்யே விசரன் த⁴ர்ம தூ³ஷக꞉ |
ஆஸாத³யம் ததா³ ராமம் தாபஸம் த⁴ர்மம் ஆஷ்²ரிதம் || 3-39-7

வைதே³ஹி ச மஹாபா⁴கா³ம் லக்ஷ்மணம் ச மஹரத²ம் |
தாபஸம் நியத ஆஹாரம் ஸர்வ பூ³த ஹிதே ரதம் || 3-39-8

ஸ꞉ அஹம் வந க³தம் ராமம் பரிபூ⁴ய மஹாப³லம் |
தாபஸோ அயம் இதி ஜ்ஞாத்வா பூர்வ வைரம் அநுஸ்மரன் || 3-39-9

அப்⁴யதா⁴வம் ஸுஸம்ʼக்ருத்³த⁴꞉ தீக்ஷ்ண ஷ்²ருʼம்ʼகோ³ ம்ருʼக³ ஆக்ருʼதி꞉ |
ஜிகா⁴ம்ʼஸு꞉ அக்ருʼதப்ரஜ்ஞ꞉ தம் ப்ரஹாரம் அநுஸ்மரன் || 3-39-10

தேந த்யக்தா꞉ த்ரயோ பா³ணா꞉ ஷி²தா꞉ ஷ²த்ரு நிப³ர்ஹணா꞉ |
விக்ருʼஷ்ய ஸுமஹத் சாபம் ஸுபர்ண அநில துல்ய கா³꞉ || 3-39-11

தே பா³ணா வஜ்ர ஸம்ʼகாஷா²꞉ ஸுகோ⁴ரா ரக்த போ⁴ஜநா꞉ |
ஆஜக்³மு꞉ ஸஹிதா꞉ ஸர்வே த்ரய꞉ ஸம்ʼநதபர்வண꞉ || 3-39-12

பராக்ரமஜ்ஞோ ராமஸ்ய ஷ²டோ² த்³ருʼஷ்ட ப⁴ய꞉ புரா |
ஸமுத்க்ராம்ʼத꞉ தத꞉ முக்த꞉ தௌ உபௌ⁴ ராக்ஷஸௌ ஹதௌ || 3-39-13

ஷ²ரேண முக்தோ ராமஸ்ய கத²ம்ʼசித் ப்ராப்யஜீவிதம் |
இஹ ப்ரவ்ராஜிதோ யுக்த꞉ தாபஸோ அஹம் ஸமாஹித꞉ || 3-39-14

வ்ருʼக்ஷே வ்ருʼக்ஷே ஹி பஷ்²யாமி சீர க்ருʼஷ்ண அஜிந அம்ʼப³ரம் |
க்³ருʼஹீத த⁴நுஷம் ராமம் பாஷ² ஹஸ்தம் இவ அம்ʼதகம் || 3-39-15

அபி ராம ஸஹஸ்ராணி பீ⁴த꞉ பஷ்²யாமி ராவண |
ராம பூ⁴தம் இத³ம் ஸர்வம் அரண்யம் ப்ரதிபா⁴தி மே || 3-39-16

ராமம் ஏவ ஹி பஷ்²யாமி ரஹிதே ராக்ஷஸேஷ்²வர |
த்³ருʼஷ்ட்வா ஸ்வப்ந க³தம் ராமம் உத்³ ப்⁴ரமாமி விசேதந꞉ || 3-39-17

ர கார அதீ³நி நாமாநி ராம த்ரஸ்தஸ்ய ரவண |
ரத்நாநி ச ரதா²꞉ ச ஏவ வித்ராஸம் ஜநயந்தி மே || 3-39-18

அஹம் தஸ்ய ப்ரபா⁴வஜ்ஞோ ந யுத்³த⁴ம் தேந தே க்ஷமம் |
ப³லிம் வா நமுசிம்ʼ வா அபி ஹந்யத்³தி⁴ ரகு⁴ந்ம்ʼஅம்ʼத³ந || 3-39-19 

ரணே ராமேண யுத்³த்⁴ஸ்வ க்ஷமாம் வா குரு ராவண |
ந தே ராம கதா² கார்யா யதி³ மாம் த்³ரஷ்டும் இச்ச²ஸி || 3-39-20

ப³ஹவ꞉ ஸாத⁴வோ லோகே யுக்தா த⁴ர்மம் அநுஷ்டிதா꞉ |
பரேஷாம் அபராதே⁴ந விநஷ்டா꞉ ஸ பரிச்ச²தா³꞉ || 3-39-21

ஸ꞉ அஹம் பர அபராதே⁴ந விநாஷே²யம் நிஷா²சர |
குரு யத் தே க்ஷமம் தத் த்வம் அஹம் த்வாம் ந அநுயாமி வை || 3-39-22

ராம꞉ ச ஹி மஹாதேஜா மஹாஸத்த்வோ மஹாப³ல꞉ |
அபி ராக்ஷஸ லோகஸ்ய ப⁴வேத் அந்தகரோ அபி ஹி || 3-39-23

யதி³ ஷூ²ர்பணகா² ஹேதோ꞉ ஜநஸ்தா²ந க³த க²ர꞉ |
அதி வ்ருʼத்தோ ஹத꞉ பூர்வம் ராமேண அக்லிஷ்ட கர்மணா |
அத்ர ப்³ரூஹி யதா²வத் த்வம் கோ ராமஸ்ய வ்யதிக்ரம꞉ || 3-39-24

இத³ம் வசோ ப³ந்து⁴ ஹித அர்தி²நா மயா
யதா² உச்யமாநம் யதி³ ந அபி⁴பத்ஸ்யஸே |
ஸ பா³ந்த⁴வ꞉ த்யக்ஷ்யஸி ஜீவிதம் ரணே
ஹதோ அத்³ய ராமேண ஷ²ரை꞉ ஜிஹ்மகை³꞉ || 3-39-25

இதி வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ ஏகோந சத்வாரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

மரபின் முந்தை மாதுலன் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 38 (33)

Born before in clan as your uncle | Aranya-Kanda-Sarga-38 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் பலம் குறித்த தன் அனுபவத்தைச் சொன்ன மாரீசன்; இராமனுடன் போரிடுவதன் விளைவுகளை ராவணனுக்கு விளக்கிச் சொன்னது...

Mareecha &  Ravana

{மாரீசன் இராவணனிடம்}, "ஒரு காலத்தில், பர்வதத்திற்கு ஒப்பானவனான நானும், ஆயிரம் நாகங்களின் {யானைகளின்} பலத்துடனும், வீரியத்துடனும், பரிகாயுதத்தால் உலகத்தாரை அச்சுறுத்திக் கொண்டும் இந்தப் பிருத்வியில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும் {தங்கக் காதணிகளுடனும்}, கிரீடங்களுடனும் கூடிய நான், நீல மேகத்தைப் போல ஒளிர்ந்தபடியே, தண்டகாரண்யத்தில் ரிஷிகளின் மாமிசங்களை பக்ஷித்துத் திரிந்து வந்தேன்.(1-3அ) 

அப்போது, தர்மாத்மாவான விசுவாமித்ரர், என்னிடம் பேரச்சம் கொண்டார். அந்த மஹாமுனிவர், நரேந்திரனான தசரதனிடம் தானே நேரடியாக சென்று இதைச் சொன்னார்:(3ஆ,4அ) "நரேசுவரா, இந்த மாரீசனிடமிருந்து எனக்கு கோர பயம் உண்டாகிறது. இனி, பர்வகாலத்தில் {அமாவாசை, பௌர்ணமிகளில் வேள்விகளைச் செய்யும்போது}, விழிப்புடன் கூடிய ராமன் என்னை ரக்ஷிக்கட்டும்" {என்றார் விசுவாமித்ரர்}.(4ஆ,5அ)

இவ்வாறு சொல்லப்பட்ட பிறகு, தர்மாத்மாவான ராஜா தசரதன், மஹாபாக்கியவானும், மஹாமுனியுமான விசுவாமித்ரரிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(5ஆ,6அ) "இந்த ராகவன், பனிரெண்டு வருஷங்களுக்கும் {வயதுக்கும்} குறைந்தவனாகவும்[1], அஸ்திரப் பயிற்சி இல்லாதவனாகவும் இருக்கிறான். நீர் விரும்பினால் என்னிடமுள்ள சைனியத்தை உடன் அனுப்புகிறேன்.(6ஆ,7அ) முனிசிரேஷ்டரே, சதுரங்க பலத்துடன் {நால்வகை படையுடன்} நானே நேரடியாக வந்து, நீர் குறிப்பிடும் உமது சத்ருக்களான நிசாசரர்களை வதம் செய்கிறேன்" {என்றான் தசரதன்}.(7ஆ,8அ)

[1] பாலகாண்டம் 20ம் சர்க்கம், 2ம் சுலோகத்தில், "ராமனுக்கு இன்னும் பதினாறு ஆண்டுகளாகவில்லை" என்று விசுவாமித்ரரிடம் தசரதன் சொல்கிறான். மேலதிக தகவலுக்கு பாலகாண்டத்தில் அந்தக் குறிப்பிட்ட சர்க்கத்தில் உள்ள [1] அடிக்குறிப்பையும், அயோத்தியா காண்டம் 20ம் சர்க்கம், 45ம் சுலோகத்தையும், அங்கே உள்ள [4]ம் அடிக்குறிப்பையும் பார்க்கவும். 

இவ்வாறு சொல்லப்பட்டதும், அந்த முனிவர் {விசுவாமித்ரர்}, அந்த ராஜனிடம் இதைச் சொன்னார், "இராமனைத் தவிர உலகில் வேறு எந்த பலமும் {படையும்}, அந்த ராக்ஷசர்களுக்குப் போதுமானதாக இருக்காது.(8ஆ,9அ) நிருபா {மன்னா},  சமரில் {போரில்} நீ தேவர்களின் அபிபாலகனாக {அரணாக, காவலனாக} இருந்தாய். நீ செய்த கர்மங்கள் மூன்று உலகங்களிலும் நன்கு அறியப்பட்டனவே.(9ஆ,10அ) பரந்தபா {பகைவரை எரிப்பவனே}, உன் சைனியம் மகத்தானதாகவே இருந்தாலும், அஃது அப்படியே இங்கேயே இருக்கட்டும். இந்த மஹாதேஜஸ்வி {ராமன்} பாலனாகவே இருப்பினும், அவனை நிக்ரகம் செய்வதில் {மாரீசனை தண்டிப்பதில்} சமர்த்தனாகவே இருப்பான். பரந்தபா, ராமனையே நான் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நீ நலமாக இருப்பாயாக" {என்றார் விசுவாமித்ரர்}.(10ஆ,11)

அந்த விசுவாமித்ர முனிவர், இவ்வாறு சொல்லிவிட்டு, நிருபாத்மஜனான அவனை {தசரத மன்னனின் மகனான ராமனை} அழைத்துக் கொண்டு, பரமபிரீதியுடன் தன் ஆசிரமத்திற்குச் சென்றார்.(12) பிறகு ராமன் தண்டகாரண்யத்தில் யஜ்ஞம் செய்யும் நோக்கத்திற்கான தீக்ஷையை பெற்று, சித்திர தனுசில் நாணொலி எழுப்பிக் கொண்டு அவர் அருகில் அங்கேயே இருந்தான்[2].(13) அந்த நேரத்தில் இளமைக்கான அறிகுறிகள் தோன்றாதவனும், ஸ்ரீமானும், நீல நிறத்தவனும், அழகிய தோற்றம் கொண்டவனும், ஏக வஸ்திரம் தரித்தவனும் {ஒரே துணியை உடுத்தியவனும்}, தன்வியும் {வில் தரித்தவனும்}, சிகியும் {கொண்டை அணிந்திருந்தவனும்}, கனக மாலை பூண்டவனும், தன்னொளியால் ஒளிர்ந்தபடியே தண்டகாரண்யத்தைப் பிரகாசிக்கச் செய்தவனுமான அந்த ராமபாலன், உதிக்கும் பாலசந்திரனைப் போல அங்கே காணப்பட்டான்.(14,15)

[2] மாரீசன் இந்த சர்க்கத்தில் ராமனின் வயதை மட்டும் தவறாகச் சொல்லவில்லை. விசுவாமித்ரர் வேள்வி செய்த சித்தாசிரமத்தையே தண்டகவனம் என்று சொல்கிறான். சித்தாசிரமம் {வட} கிழக்கில் உள்ளது. தண்டகாரண்யமோ தெற்கில் உள்ளது.

அப்போது, மேகத்திற்கு ஒப்பானவனும், புடம்போட்ட காஞ்சனக் குண்டலங்களுடனும், தத்தம் செய்யப்பட்ட வரத்தின் பலத்துடனும் கூடிய நான், செருக்குடன் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தேன்.(16) உயர்த்திய ஆயுதத்துடன் பிரவேசிக்கும் என்னை உடனே அவன் கண்டுவிட்டான். அவன் என்னைக் கண்டதும், கலக்கமடையாமல் தனுவில் நாண் பூட்டி ஒலி எழுப்பினான்.(17) நான் அவன் பாலன் என்ற மோஹத்தால் ராகவனைக் குறித்து ஆராயாமல் துரிதமாக விசுவாமித்ரரின் வேதியை நோக்கி விரைந்தேன்.(18) அப்போது அவன், சத்ருவை அழிக்கும் கூரிய பாணத்தை விடுத்தான். அதனால் தாக்கப்பட்ட நான் நூறு யோஜனைகளுக்கு {909 மைல் / 1463 கி.மீ.க்கு} அப்பால் சென்று சமுத்திரத்தில் மூழ்கினேன்.(19) தாதா {ஐயா}, அப்போது என்னைக் கொல்ல விரும்பாத அந்த வீரனால் ரக்ஷிக்கப்பட்டேன். இராம சர வேகத்தால் சித்தம் கலங்கி அடியற்றவனானேன்.(20) தாதா, இவ்வாறே நான் அடியாழமற்ற சாகரத்தின் நீரில் அவனால் வீசப்பட்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு நினைவு மீண்டு லங்காபுரிக்கு வந்து சேர்ந்தேன்.(21)

அப்போது, அஸ்திரப் பயிற்சி இல்லாமலேயே, குழப்பமில்லாத கர்மங்களைச் செய்த பாலனான ராமனால் இவ்வாறே நான் விடுவிக்கப்பட்டேன். ஆனால் சகாயர்கள் {சுபாஹுவும், உடன் வந்த பலரும்} கொல்லப்பட்டனர்.(22) எனவே, நான் தடை செய்தும், நீ ராமனுடன் விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தால், கோரமான ஆபத்தை அடைந்து, சீக்கிரமே நீ நாசமடைவாய்.(23) கிரீடா ரதி {கலவி விளையாட்டின்} விதிகளை அறிந்தவர்களும், சமாஜ உத்ஸவங்களை {சமூக விழாக்களைக்} கொண்டாடுபவர்களுமான ராக்ஷசர்களுக்கு அர்த்தமற்ற துன்பத்தையே நீ விளைவிக்கப் போகிறாய்.(24) மாடிவீடுகளாலும், அரண்மணைகளாலும் அடர்ந்ததும், நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான லங்காபுரி, மைதிலியின் நிமித்தமாக முற்றிலும் நாசமடைவதை நீ பார்க்கப் போகிறாய்.(25) 

பாபங்களைச் செய்யாத நல்லவர்களும், நாக மடுவில் உள்ள மத்ஸ்யத்தை {மீனைப்} போல பாபிகளுடன் கூடிய தொடர்பால் பிறர் செய்யும் பாபத்திற்காக நாசத்தை அடைவார்கள்.(26) திவ்ய சந்தனத்தால் பூசப்பட்ட அங்கங்களைக் கொண்டவர்களும், திவ்ய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான ராக்ஷசர்கள், உன் தோஷத்தின் காரணமாக பூமியில் வீழ்த்தப்படுவதை நீ காணப்போகிறாய்.(27) அழிவின் பிறகு எஞ்சும் நிசாசரர்கள், சிலர் தங்கள் தாரங்களைக் கைவிட்டும், சிலர் தங்கள் தாரங்களுடனும் பாதுகாவலன் இல்லாமல் பத்து திசைகளுக்கு ஓடப்போவதை நீ பார்ப்பாய்.(28) சர ஜாலங்களால் சூழப்பட்டதும், அக்னி ஜுவாலைகளால் மறைக்கப்பட்டதும், முற்றிலும் எரிந்த பவனங்களுடன் கூடியதுமான லங்கையை சந்தேகத்திற்கு இடமின்றி நீ பார்ப்பாய்.(29) இராஜாவே, ஆயிரக்கணக்கான பிரமதைகளை {பெண்களை, மனைவியராக} நீ கொண்டிருக்கிறாய். பரதார  அபிமானத்தைவிட  {மாற்றான் மனைவி மீது மயக்கம் கொள்வதைவிட} மஹத்தான பாபம் வேறேதும் கிடையாது[3].(30)

[3] வேதனை செய் காம விடம் மேலிட மெலிந்தாய்
தீது உரைசெய்தாய் இனைய செய்கை சிதைவு அன்றோ
மாதுலனும் ஆய் மரபின் முந்தை உற வந்தேன்
ஈது உரை செய்தேன் அதனை எந்தை தவிர்க என்றான்.

- கம்பராமாயணம் 3262ம் பாடல், மாரீசன் வதைப்படலம்

பொருள்: "வேதனை தரும் காமம் எனும் விஷம் மேலிட சோர்வுற்றாய். கொடுஞ்சொற்களையும் கூறினாய். இவ்வாறு செய்தல் அழிவைத் தருமன்றோ? உனக்கு மாமனாகவும், உன் குலத்தில் முந்திப் பிறந்தவனாகவும் இந்த உரையை நான் உனக்குச் செய்தேன். என் ஐயா, இத்தீய கருத்தை விட்டு விடுவாயாக" என்றான் {மாரீசன்}. இதுவரை கம்பன் மூலமாகத் தான் மாரீசன் ராவணனின் மாமன் என்று தெரிகிறதேயொழிய வால்மீகியில் இந்த சர்க்கம் வரையில் அதற்கான எந்தக் குறிப்பும் அகப்படவில்லை.

இராக்ஷசா, உன் சொந்த தாரங்களுடன் மகிழ்ந்திருப்பாயாக. உன் குலத்தை ரக்ஷிப்பாயாக. மானம், செல்வம், ராஜ்ஜியம் ஆகியவற்றையும் உனக்கு இஷ்டமான ஜீவனையும் ரக்ஷித்துக் கொள்வாயாக.(31) சௌம்யமான களத்திராணிகளுடனும் {மென்மையான அழகிய மனைவிகளுடனும்}, மித்திர வர்க்கத்துடனும் {நட்புக்குழாமுடனும்} நீண்ட காலம் இன்புற்றிருக்க விரும்பினால் ராமனுக்குப் பிரியமற்றதை நீ செய்யாதிருப்பாயாக.(32) நல்ல ஹிருதயத்துடன் கூடிய என்னால் இவ்வளவு தடுக்கப்பட்டும் சீதையை வலுக்கட்டாயமாக நீ அணுகினால் ராமனின் சரங்களால் பலம் ஒழிந்து, ஜீவனை இழந்து, பந்துக்களுடன் சேர்ந்து யமலோகத்தையே நீ அடைவாய்" {என்றான் மாரீசன்}.(33)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 38ல் உள்ள சுலோகங்கள்: 33

Previous | Sanskrit | English | Next

ஆரண்ய காண்டம் 38ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ அஷ்டா த்ரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉

Mareecha &  Ravana

கதா³சித் அபி அஹம் வீர்யாத் பர்யடன் ப்ருʼதி²வீம் இமாம் |
ப³லம் நாக³ ஸஹஸ்ரஸ்ய தா⁴ரயன் பர்வதோபம꞉ || 3-38-1

நீல ஜீமூத ஸம்ʼகாஷ²꞉ தப்த காம்ʼசந குண்ட³ல꞉ |
ப⁴யம் லோகஸ்ய ஜநயன் கிரீடீ பரிக⁴ ஆயுத⁴꞉ || 3-38-2

வ்யசரம் த³ண்ட³க அரண்யம் ருʼஷி மாம்ʼஸாநி ப⁴க்ஷயன் |
விஷ்²வாமித்ரோ அத² த⁴ர்மாத்மா மத் வித்ரஸ்தோ மஹாமுநி꞉ || 3-38-3

ஸ்வயம் க³த்வா த³ஷ²ரத²ம் நரேந்த்³ரம் இத³ம் அப்³ரவீத் |
அயம் ரக்ஷது மாம் ராம꞉ பர்வ காலே ஸமாஹித꞉ || 3-38-4

மாரீசாத் மே ப⁴யம் கோ⁴ரம் ஸமுத்பந்நம் நரேஷ்²வர |
இதி ஏவம் உக்தோ த⁴ர்மாத்மா ராஜா த³ஷ²ரத²꞉ ததா³ || 3-38-5

ப்ரத்யுவாச மஹாபா⁴க³ம் விஷ்²வாமித்ரம் மஹாமுநிம் |
ஊந த்³வாத³ஷ² வர்ஷோ அயம் அக்ருʼத அஸ்த்ர꞉ ச ராக⁴வ꞉ || 3-38-6

காமம் து மம யத் ஸைந்யம் மயா ஸஹ க³மிஷ்யதி |
ப³லேந சதுரம்ʼகே³ண ஸ்வயம் ஏத்ய நிஷா²சரம் || 3-38-7

வதி⁴ஷ்யாமி முநிஷ்²ரேஷ்ட² ஷ²த்ரும் தவ யதா² ஈப்ஸிதம் |
] ஏவம் உக்த꞉ ஸ து முநீ ராஜாநம் இத³ம் அப்³ரவீத் || 3-38-8

ராமாத் ந அந்யத் ப³லம் லோகே பர்யாப்தம் தஸ்ய ரக்ஷஸ꞉ |
தே³வதாநாம் அபி ப⁴வான் ஸமரேஷு அபி⁴பாலக꞉ || 3-38-9

ஆஸீத் தவ க்ருʼதே கர்ம த்ரிலோக விதி³தம் ந்ருʼப |
காமம் அஸ்தி மஹத் ஸைந்யம் திஷ்டது இஹ பரம்ʼதப || 3-38-10

பா³லோ அபி ஏஷ மஹாதேஜா꞉ ஸமர்த²꞉ தஸ்ய நிக்³ரஹே |
க³மிஷ்யே ராமம் ஆதா³ய ஸ்வஸ்தி தே அஸ்து பரம்ʼதப꞉ || 3-38-11

இதி ஏவம் உக்த்வா ஸ முநி꞉ தம் ஆதா³ய ந்ருʼபாத்மஜம் |
ஜகா³ம பரம ப்ரீதோ விஷ்²வாமித்ர꞉ ஸ்வம் ஆஷ்²ரமம் || 3-38-12

தம் ததா³ த³ண்ட³காரண்யே யஜ்ஞம் உத்³தி³ஷ்²ய தீ³க்ஷிதம் |
ப³பூ⁴வ உபஸ்தி²தோ ராம꞉ சித்ரம் விஸ்பா²ரயன் த⁴நு꞉ || 3-38-13

அஜாத வ்யம்ʼஜந꞉ ஷ்²ரீமான் பா³ல꞉ ஷ்²யாம꞉ ஷு²பே⁴க்ஷண꞉ |
ஏக வஸ்த்ர த⁴ரோ த⁴ந்வீ ஷி²கீ² கநக மாலயா || 3-38-14

ஷோ²ப⁴யன் த³ண்ட³காரண்யம் தீ³ப்தேந ஸ்வேந தேஜஸா |
அத்³ருʼஷ்²யத ததா³ ராமோ பா³ல சந்த்³ர இவ உதி³த꞉ || 3-38-15

ததோ அஹம் மேக⁴ ஸம்ʼகாஷ²꞉ தப்த காம்ʼசந குண்ட³ல꞉ |
ப³லீ த³த்த வரோ த³ர்பாத் ஆஜகா³ம ஆஷ்²ரம அம்ʼதரம் || 3-38-16

தேந த்³ருʼஷ்ட꞉ ப்ரவிஷ்டோ அஹம் ஸஹஸா ஏவ உத்³யத ஆயுத⁴꞉ |
மாம் து த்³ருʼஷ்ட்வா த⁴நு꞉ ஸஜ்யம் அஸம்ப்⁴ராந்த꞉ சகார ஹ || 3-38-17

அவஜாநன் அஹம் மோஹாத் பா³லோ அயம் இதி ராக⁴வம் |
விஷ்²வாமித்ரஸ்ய தாம் வேதி³ம் அப்⁴யதா⁴வம் க்ருʼத த்வர꞉ || 3-38-18

தேந முக்த꞉ ததோ பா³ண꞉ ஷி²த꞉ ஷ²த்ரு நிப³ர்ஹண꞉ |
தேந அஹம் தாடி³த꞉ க்ஷிப்த꞉ ஸமுத்³ரே ஷ²த யோஜநே || 3-38-19

ந இச்ச²தா தாத மாம் ஹந்தும் ததா³ வீரேண ரக்ஷித꞉ |
ராமஸ்ய ஷ²ர வேகே³ந நிரஸ்தோ ப்⁴ராந்த சேதந꞉ || 3-38-20

பாதிதோ அஹம் ததா³ தேந க³ம்ʼபீ⁴ரே ஸாக³ர அம்ʼப⁴ஸி |
ப்ராப்ய ஸம்ʼஜ்ஞாம் சிராத் தாத லம்ʼகாம் ப்ரதி க³த꞉ புரீம் || 3-38-21

ஏவம் அஸ்மி ததா³ முக்த꞉ ஸஹாயா꞉ தே - ஷா²யாஸ்து - நிபாதிதா꞉ |
அக்ருʼத அஸ்த்ரேண ராமேண பா³லேந அக்லிஷ்ட கர்மணா || 3-38-22

தத் மயா வார்யமாண꞉ த்வம் யதி³ ராமேண விக்³ரஹம் |
கரிஷ்யஸி ஆபத³ம் கோ⁴ராம் க்ஷிப்ரம் ப்ராப்ய ந ஷி²ஷ்யஸி || 3-38-23

க்ரீடா³ ரதி விதி⁴ஜ்ஞாநாம் ஸமாஜ உத்ஸவ ஷா²லிநாம் |
ரக்ஷஸாம் சைவ ஸம்ʼதாபம் அநர்த²ம் ச ஆஹரிஷ்யஸி || 3-38-24

ஹர்ம்ய ப்ராஸாத³ ஸம்ʼபா³தா⁴ம் நாநா ரத்ந விபூ⁴உஷிதாம் |
த்³ரக்ஷ்யஸி த்வம் புரீம் லம்ʼகாம் விநஷ்டாம் மைதி²லீ க்ருʼதே || 3-38-25

அகுர்வந்தோ அபி பாபாநி ஷு²சய꞉ பாப ஸம்ʼஷ்²ரயாத் |
பர பாபை꞉ விநஷ்²யந்தி மத்ஸ்யா நாக³ ஹ்ரதே³ யதா² || 3-38-26

தி³வ்யசம்ʼத³நதி³க்³தா⁴ம்ʼகா³ந்தி³வ்யாஅப⁴ரணபூ⁴ஷிதான் -யத்³வா-
தி³வ்ய சம்ʼத³ந தி³க்³த⁴ அம்ʼகா³ன் தி³வ்ய ஆப⁴ரண பூ⁴ஷிதான் |
த்³ரக்ஷ்யஸி அபி⁴ஹதான் பூ⁴மௌ தவ தோ³ஷாத் து ராக்ஷஸான் || 3-38-27

ஹ்ருʼத தா³ரான் ஸ தா³ரான் ச த³ஷ² வித்³ரவதோ தி³ஷ²꞉ |
ஹத ஷே²ஷான் அஷ²ரணான் த்³ரக்ஷ்யஸி த்வம் நிஷா²சரான் || 3-38-28

ஷ²ர ஜால பரிக்ஷிப்தாம் அக்³நி ஜ்வாலா ஸமாவ்ருʼதாம் |
ப்ரத³க்³த⁴ ப⁴வநாம் லம்ʼகாம் த்³ரக்ஷ்யஸி த்வம் அஸம்ʼஷ²யம் || 3-38-29

பர தா³ர அபி⁴மர்ஷாத் து ந அநயத் பாப தரம் மஹத் |
ப்ரமதா³நாம் ஸஹஸ்ராணி தவ ராஜன் பரிக்³ரஹே || 3-38-30

ப⁴வ ஸ்வ தா³ர நிரத꞉ ஸ்வ குலம் ரக்ஷ ராக்ஷஸ |
மாநம் வ்ருʼத்³தி⁴ம் ச ராஜ்யம் ச ஜீவிதம் ச இஷ்டம் ஆத்மந꞉ || 3-38-31

களத்ராணி ச ஸௌம்யாநி மித்ர வர்க³ம் ததை²வ ச |
யதி³ இச்ச²ஸி சிரம் போ⁴க்தும் மா க்ருʼதா² ராம விப்ரியம் || 3-38-32

நிவார்யமாண꞉ ஸுஹ்ருʼதா³ மயா ப்⁴ருʼஷ²ம்
ப்ரஸஹ்ய ஸீதாம் யதி³ த⁴ர்ஷயிஷ்யஸி |
க³மிஷ்யஸி க்ஷீண ப³ல꞉ ஸ பா³ந்த⁴வோ
யம க்ஷயம் ராம ஷ²ர ஆத்த ஜீவித꞉ || 3-38-33

இதி வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே அரண்ய காண்டே³ அஷ்டா த்ரிம்ʼஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Aksharamukha : 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Monday, 27 March 2023

நிருதர் தீவினை | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 37 (25)

The sin of the demons | Aranya-Kanda-Sarga-37 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை ஆகியோரின் குணங்களை ராவணனிடம் எடுத்துரைத்து, சீதையைக் கடத்தும் எண்ணத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்திய மாரீசன்...

Mareecha and Ravana

இராக்ஷசேந்திரனின் {ராவணனின்} அந்த வாக்கியங்களைக் கேட்டதும், வாக்கிய விசாரதனும் {வாக்கியங்களை அமைப்பதில் திறன்மிக்கவனும்}, பெரும் புத்திமானுமான மாரீசன் அந்த ராக்ஷசேசுவரனிடம் {பின்வருமாறு} மறுமொழிகூறினான்:(1) "இராஜாவே, பிரியவாதம் செய்யும் புருஷர்கள் {இனிமையாகப் பேசும் மனிதர்கள்} கிடைப்பது எப்போதும் சுலபமே. விரும்பத்தகாததாக இருந்தாலும் பத்தியமானதை {நன்மையளிப்பதைச்} சொல்பவனும், கேட்பவனும் கிடைப்பது துர்லபமே {அவர்கள் கிடைத்தற்கரியவர்களே}.(2) சாரர்கள் {ஒற்றர்கள்} இல்லாதவனான நீ சபலக்காரனாகவும் இருக்கிறாய். மஹாவீரியம் கொண்டவனும், உத்தம குணங்களைக் கொண்டவனும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பானவனுமான ராமனை நீ நிச்சயம் புரிந்து கொள்ளமாட்டாய்.(3)

தாதா {ஐயா / குழந்தாய்}, புவியில் சர்வ ராக்ஷசர்களுக்கும் நலம் விளையுமா? ராமன் பெருங்குரோதம் அடைந்தால் உலகத்தை ராக்ஷசர்களற்றதாக்கிவிடுவான்.(4) ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை} உன் ஜீவிதத்தை முடித்து வைக்கவே பிறந்திருக்கிறாளா என்ன? சீதையின் நிமித்தம் மஹத்தான விசனம் உண்டாக வேண்டாம்[1].(5) அங்குசமின்றி {கட்டுப்பாடின்றி} விரும்பியவாறெல்லாம் செயல்படும் உன்னைப் போன்ற ஈசுவரனை அடைந்த அந்த ராக்ஷசாபுரி லங்கை உன்னோடு சேர்ந்து நாசமடையப் போகிறது.(6) விரும்பியவாறு செயல்படுபவனும், தீய நடத்தை கொண்டவனும், தீய வழிகளில் ஆலோசனை வழங்கப்பட்டவனும், துர்மதியாளனுமான உன்னைப் போன்ற எந்த ராஜாவும் தன்னையும், தன் சொந்த ஜனங்களையும், ராஷ்டிரத்தையும் அழித்துவிடுவான்[2].(7)

[1] வெவ்வேறு பதிப்புகளில், "இந்த சீதையின் நிமித்தம் எனக்குத் துன்பம் உண்டாகப்போகிறதா சொல்" என்றும் இந்த வாக்கியத்திற்குப் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மூலங்களில் "மஹத்தான விசனம்" என்பது, "மம விசனம்" என்றிருக்கிறது.

[2] யாதும் அறியாய் உரை கொளாய் இகல் இராமன்
கோதை புனையாமுன் உயிர் கொள்ளைபடும் அன்றோ
பேதை மதியால் இஃது ஓர் பெண் உருவம் என்றாய்
சீதை உருவோ நிருதர் தீவினை அது அன்றோ

- கம்பராமாயணம் 3259ம் பாடல், மாரீசன் வதைப்படலம்

பொருள்: எதையும் முழுதும் அறியாதவன் நீ. எடுத்து சொல்லும் உரையையும் உணர மறுக்கிறாய். உன் பகையாக நீ கருதும் ராமன் போர் புரியத் தும்பை மாலையைச் சூடும் முன் அவன் பகைவர் உயிர் கொள்ளை போகும் அன்றோ? அறியாமை கொண்ட மதியால் இஃது ஒரு பெண்ணுருவம் என்று நீ மதியாதிருக்கிறாய். உண்மையில் அந்த சீதையின் வடிவமே அரக்கர் இழைத்த தீவினையின் {பாவத்தின்} வடிவம் அன்றோ.

கௌசல்யானந்தவர்தனன் {கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவனான ராமன்} தன் பிதாவால் முழுமையாகக் கைவிடப்பட்டவனல்லன்; மரியாதையற்றவனல்லன்; தீய நடத்தை கொண்டவனல்லன்; லுப்தனல்லன் {தன்னலம் கொண்டவனல்லன்}; க்ஷத்திரியர்களில் இழிந்தவனுமல்லன்; தர்ம குணங்களற்றவனல்லன்; பூதங்களிடம் {உயிரினங்களிடம்} கடுமையாக நடந்து கொள்பவனல்லன்; அவன் சர்வபூத ஹித ரதனாவான் {அனைத்து உயிரினங்களின் நன்மையில் மகிழ்ச்சியடைபவன் ஆவான்}.(8,9) சத்தியவாதியான தன் பிதா {தசரதர்}, கைகேயியால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்ட அந்த தர்மாத்மா {ராமன்}, தன் பிதாவை சத்தியவாதியாக்கவே அங்கிருந்து {அயோத்தியில் இருந்து} வனத்திற்கு வந்தான்.(10) பிதாவான தசரதனுக்காக கைகேயியின் பிரியத்தை நிறைவேற்ற ராஜ்ஜியத்தையும், போகங்களையும் கைவிட்டு, தண்டவனத்திற்குள் அவன் பிரவேசித்தான்.(11) 

தாதா {ஐயா}, ராமன் இரக்கமற்றவனல்லன்; வித்வத்தன்மை யற்றவனல்லன்; அஜிதேந்திரியனல்லன் {புலன்களை வெல்லாதவனல்லன்}; கேட்கப்படாதவையும், பொருத்தமற்றவையுமான இவற்றைப் பேசுவது உனக்குத் தகாது.(12) இராமன் தர்மத்தின் வடிவமாகத் திகழ்பவன்; சாது {நல்லவன்}; சத்திய பராக்கிரமன் {வாய்மையும், வீரமும் கொண்டவன்}; தேவர்களுக்கு வாசவனைப் போல சர்வ லோகங்களின் ராஜா அவன்.(13) சொந்த தேஜஸ்ஸிலேயே வைதேஹியைப் பாதுகாத்து வரும் அவனிடமிருந்து விவஸ்வானிடம் {சூரியனிடம் அபகரிக்கப்படும்} பிரபையைப் போல அவளை வலுக்கட்டாயமாக எவ்வாறு நீ அபகரிக்க விரும்புகிறாய்?(14) 

சரங்களையே தீப்பிழம்புகளாகக் கொண்டதும், வில்லையும், வாளையும் விறகுகளாகக் கொண்டதுமான ரணத்தில் {போரில்} எரியும் மீறவியலாத ராமன் எனும் அக்னிக்குள் திடீரெனப் பிரவேசிப்பது உனக்குத் தகாது.(15) தாதா {ஐயா}, தனுசெனும் அகன்று ஒளிரும் வாயையும், சரமெனும் நாவையும் உடையவனும், பொறுத்துக்கொள்ளப்பட முடியதாவனும், வில்லையும், கூரிய பாணங்களையும் தரித்தவனும், கடுமையானவனும், சத்ரு சேனைகளை அழிப்பவனுமான ராமன் எனும் அந்தகனை {காலனை}, உனக்கு இஷ்டமான ராஜ்யத்தையும், சுகத்தையும், ஜீவிதத்தையும் துறந்து {எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு} நெருங்குவது உனக்குத் தகாது.(16,17) 

அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை} எவனுக்கு உரியவளோ, அந்த அளவற்ற தேஜஸ் படைத்தவனான ராமனின் வில்லால் வனத்தில் பாதுகாக்கப்படும் அவளை அபகரிப்பதற்கு நீ சக்தனல்லன் {உன்னால் அவளை அபகரிக்க இயலாது}.(18) நித்தியம் அவனையே பின்தொடர்பவளான அந்த பாமினி {அழகிய பெண்}, சிங்க மார்பைக் கொண்ட அந்த நரசிம்மனுக்குப் பிராணனைவிடப் பிரியமான பாரியையாவாள்.(19) மைதிலியும் {மிதிலையின் இளவரசியும்}, வலிமைமிக்கவனின் மனைவியும், மெல்லிய இடையைக் கொண்டவளும், கொழுந்து விட்டெரியும் ஹுதாசனனின் {அக்னியின்} சிகையை {தழலைப்} போன்றவளுமான அந்த சீதையைத் தீண்டவும் நீ சக்தனல்லன் {உன்னால் சீதையைத் தீண்டவும் முடியாது}.(20) 

இராக்ஷசாதிபா, வீணான இம்முயற்சியைச் செய்வதால் என்ன விளையும்? உன்னை ரணத்தில் {போரில்} அவன் {ராமன்} கண்டாலே போதும், உன் ஜீவிதம் முடிந்துவிடும்.(21) ஜீவிதமும், ராஜ்ஜியமும் இவ்வாறே சுகமாக இருப்பது மிகவும் துர்லபம். நீண்ட காலம் இன்புற்றிருக்க நீ விரும்பினால், ராமனுக்குப் பிரியமற்றதைச் செய்யாதே.(22) இத்தகையவனான நீ, தர்மிஷ்டனான விபீஷணனை முன்னிட்டுக் கொண்டு, அமைச்சர்கள் அனைவருடன் சேர்ந்து ஆலோசனை செய்து, நீயே நிச்சயம் செய்வாயாக. உனக்கான தோஷகுணங்களையும் {தீமைகளையும், நன்மைகளையும்}, உன் பலாபலங்களையும் {பலங்களையும், பலவீனங்களையும்}, ராகவனின் பலத்தையும் உண்மையில் அறிந்து கொண்டு, உனக்கு ஹிதமானதை {நன்மையானதை} நிச்சயித்துக் கொண்டு தகுந்த செயலைச் செய்வாயாக.(23,24) நிசாசராதிபா {இரவுலாவிகளின் தலைவா}, நீ ரணத்தில் {போரில்} கோசலராஜன் மகனுடன் {ராமனுடன்} மோதுவதை நான் தகுந்ததாகக் கருதவில்லை. உத்தமமானதும், தகுந்ததும், யுக்தமானதுமான {முறையானதுமான} இந்த வாக்கியங்களை மேலும் கேட்பாயாக" {என்றான் மாரீசன்}.(25)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 37ல் உள்ள சுலோகங்கள்: 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை