Wednesday, 20 November 2024

தூம்ராக்ஷன் | யுத்த காண்டம் சர்க்கம் - 051 (36)

Dhumraksha | Yuddha-Kanda-Sarga-051 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்கள் கட்டில் இருந்து விடுபட்டதை அறிந்த ராவணன் ஏமாற்றமடைந்து தூம்ராக்ஷனை போருக்கு அனுப்பி வைத்தது...

Ravana commanding

அப்போது பேரொலி எழுப்புகிறவர்களும், வேகம் கொண்டவர்களான அந்த வானரர்களின் ஆரவார சப்தத்தை ராக்ஷசர்களுடன் கூடிய ராவணன் கேட்டான்.(1)  அவன் {ராவணன்}, மென்மையாகவும் கம்பீரமாகவும் கோஷிக்கும் அந்தப் பெரும் நாதத்தைக் கேட்டு, அந்த ஆலோசகர்களின் {அமைச்சர்களின்} மத்தியில் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(2) “பெரும் மகிழ்ச்சியில் மூழ்கித் திரண்டிருக்கும் பல வானரர்களின் இந்த மஹத்தான நாதம், மேகங்களின் கர்ஜனை எப்படியோ, அப்படியே எழுகிறது.{3} அவர்களின் பிரீதி மஹத்தானது என்பது வெளிப்படையானது. இதில் சந்தேகமில்லை. இந்தப் பெரும் சப்தத்தால் வருணாலயமும் {பெருங்கடலும்} கலங்குகிறது.(3,4) உடன்பிறந்தோரான அந்த ராமலக்ஷ்மணர்கள், கூரிய சரங்களால் கட்டப்பட்டுக் கிடக்கின்றனர். இந்த மஹத்தான நாதம் என்னில் சந்தேகத்தை ஜனிக்கச் செய்கிறது” {என்றான் ராவணன்}.(5)

யுத்த காண்டம் 051ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகபஞ்சஷ²꞉ ஸர்க³꞉

Ravana commanding

தேஷாம் ஸுதுமுலம் ஷ²ப்³த³ம் வானராணாம் தரஸ்வினாம் |
நர்த³தாம் ராக்ஷஸைஹ் ஸார்த⁴ம் ததா³ ஷு²ஷ்²ராவ ராவண꞉ || 6-51-1

ஸ்னிக்³த⁴ க³ம்பீ⁴ர நிர்கோ⁴ஷம் ஷ்²ருத்வா ஸ நினத³ம் ப்⁴ருஷ²ம் |
ஸசிவானாம் ததஸ் தேஷாம் மத்⁴யே வசனம் அப்³ரவீத் || 6-51-2

யதா² அஸௌ ஸம்ப்ரஹ்ருஷ்டானாம் வானராணாம் ஸமுத்தி²த꞉ |
ப³ஹூனாம் ஸுமஹான் நாதோ³ மேகா⁴னாம் இவ க³ர்ஜதாம் || 6-51-3
வ்யக்தம் ஸுமஹதீ ப்ரீதிர் ஏதேஷாம் ந அத்ர ஸம்ஷ²ய꞉ |
ததா² ஹி விபுலைர் நாதை³ஷ்² சுக்ஷுபே⁴ வருண ஆலய꞉ || 6-51-4

தௌ து ப³த்³தௌ⁴ ஷ²ரைஸ் தீஷ்க்ணைர் ப்⁴ராதரௌ ராம லக்ஷ்மணௌ |
அயம் ச ஸுமஹான் நாத³ஹ் ஷ²ன்காம் ஜனயதி இவ மே || 6-51-5

Thursday, 14 November 2024

வந்தான் கருடன் | யுத்த காண்டம் சர்க்கம் - 050 (65)

Enter Garuda | Yuddha-Kanda-Sarga-050 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: வானரர்களுக்கு நம்பிக்கையளித்த ஜாம்பவான்; விபீஷணனின் அழுகை; சுக்ரீவன் சொன்ன ஆறுதல்; கருடன் வந்து, ராமலக்ஷ்மணர்களை நாகபாசத்தில் இருந்து விடுவித்தது...

Eagle king Garuda Speaking to Rama

அப்போது, மஹாதேஜஸ்வியும், மஹாபலவானுமான ஹரிராஜன் {சுக்ரீவன், பின்வருமாறு} சொன்னான் “ஏன் இந்த சேனை ஜலத்தில் காற்றால் நிலைதடுமாறும் நாவத்தை {ஓடத்தைப்} போலக் கலக்கமடைகிறது?” {என்றான் சுக்ரீவன்}.(1)

சுக்ரீவனின் சொற்களைக் கேட்ட வாலிபுத்ரன் அங்கதன், {பின்வருமாறு} கூறினான், “இராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணரையும் நீர் பார்க்கவில்லையா?{2} மஹாத்மாக்களும், தசரதாத்மஜர்களுமான இந்த வீரர்கள் இருவரும், சரஜாலத்தால் {கணை வலையால்} மறைக்கப்பட்டு, உதிரத்தால் நனைந்து, சரதல்பத்தில் {கணைப்படுக்கையில்} சயனிக்கின்றனர்” {என்றான் அங்கதன்}.(2,3) 

யுத்த காண்டம் 050ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ பஞ்சஷ²꞉ ஸர்க³꞉

Eagle king Garuda Speaking to Rama

அத² உவாச மஹா தேஜா ஹரி ராஜோ மஹா ப³ல꞉ |
கிம் இயம் வ்யதி²தா ஸேனா மூட⁴ வாதா இவ நௌர் ஜலே || 6-50-1

ஸுக்³ரீவஸ்ய வசஹ் ஷ்²ருத்வா வாலி புத்ரோ அன்க³தோ³ அப்³ரவீத் |
ந த்வம் பஷ்²யஸி ராமம் ச லக்ஷ்மணம் ச மஹா ப³லம் || 6-50-2
ஷ²ர ஜால ஆசிதௌ வீராவ் உபௌ⁴ த³ஷ²ரத² ஆத்மஜௌ |
ஷ²ர தல்பே மஹாத்மானௌ ஷ²யானாஉ ருதி⁴ர உக்ஷிதௌ || 6-50-3

Wednesday, 13 November 2024

இராமனின் புலம்பல் | யுத்த காண்டம் சர்க்கம் - 049 (33)

Lamentation of Rama | Yuddha-Kanda-Sarga-049 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நனவு மீண்ட ராமன், லக்ஷ்மணனைக் கண்டு அழுது புலம்புவது...

Rama crying for his brother in battlefield

கோரமான சரபந்தனத்தில் கட்டப்பட்ட தசரதாத்மஜர்கள் {தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள்}, நாகங்களைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு, உதிரத்தில் நனைந்தபடியே சயனித்திருந்தனர்.{1} மஹாபலவானான சுக்ரீவனும், அந்த வானர சிரேஷ்டர்கள் அனைவரும், அந்த மஹாத்மாக்களை {ராமலக்ஷ்மணர்களைச்} சூழ்ந்து கொண்டு சோகத்தில் மூழ்கியிருந்தனர்.(1,2) அதேவேளையில், வீரியவானான ராமன், சரங்களால் கட்டப்பட்டிருந்தாலும், சத்வ யோகத்தில் {வலிமையைத் திரட்டுவதில்} கொண்ட தன் ஸ்திரத்தன்மையினால் நனவுமீண்டான் {மயக்கம் தெளிந்தான்}.(3)

யுத்த காண்டம் 049ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஏகோனபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Rama crying for his brother in battlefield

கோ⁴ரேண ஷ²ர ப³ந்தே⁴ன ப³த்³தௌ⁴ த³ஷ²ரத² ஆத்மஜௌ |
நிஷ்²வஸந்தௌ யதா² நாகௌ³ ஷ²யானௌ ருதி⁴ர உக்ஷிதௌ || 6-49-1
ஸர்வே தே வானர ஷ்²ரேஷ்டா²ஹ் ஸஸுக்³ரீவா மஹா ப³லா꞉ |
பரிவார்ய மஹாத்மானௌ தஸ்து²ஹ் ஷோ²க பரிப்லுதா꞉ || 6-49-2

ஏதஸ்மின்ன் அந்தேரே ராமஹ் ப்ரத்யபு³த்⁴யத வீர்யவான் |
ஸ்தி²ரத்வாத் ஸத்த்வ யோகா³ச் ச ஷ²ரைஹ் ஸந்தா³னிதோ அபி ஸன் || 6-49-3

ததோ த்³ருஷ்ட்வா ஸருதி⁴ரம் விஷண்ணம் கா³ட⁴ம் அர்பிதம் |
ப்⁴ராதரம் தீ³ன வத³னம் பர்யதே³வயத்³ ஆதுர꞉ || 6-49-4

கிம் நு மே ஸீதயா கார்யம் கிம் கார்யம் ஜீவிதேன வா |
ஷ²யானம் யோ அத்³ய பஷ்²யாமி ப்⁴ராதரம் யுதி⁴ நிர்ஜிதம் || 6-49-5

Tuesday, 12 November 2024

திரிஜடையின் ஆறுதல் | யுத்த காண்டம் சர்க்கம் - 048 (37)

Consolation of Trijata | Yuddha-Kanda-Sarga-048 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சோகத்தில் மூழ்கிய சீதை; அவளுக்கு நம்பிக்கை அளித்து மீண்டும் அசோக வனிகைக்கு இட்டுச் சென்ற திரிஜடை...

Trijata consoling Seetha in Pushpaka vimana

சீதை, தன் பர்த்தாவையும் {ராமனையும்}, மஹாபலவானான லக்ஷ்மணனையும் கொல்லப்பட்டவர்களாகக் கண்டு சோகத்தில் மூழ்கி கருணைக்குரிய வகையில் {பின்வருமாறு} அழுது புலம்பினாள்[1]:(1) “எந்த லக்ஷணிகர்கள் {லக்ஷணம் தெரிந்தவர்கள்}, என்னை புத்ரிணீ என்றும், அவிதவேதி என்றும் {புத்திர பாக்கியமுள்ளவள் என்றும், விதவையாகாத நித்யசுமங்கலி என்றும்} சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும், ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(2) யாவர் என்னை யஜ்ஞங்கள் செய்பவரின் மஹிஷி {பட்டத்து ராணி} என்றும், சாஸ்திரங்களை அறிந்தவரின் பத்தினி {மனைவி} என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(3) யாவர் என்னை பர்த்தாவால் {கணவனால்} பூஜிக்கப்படுபவள் என்றும், வீர பார்த்திபனின் பத்தினி என்றும் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(4) கார்தாந்திகர்களான  எந்த துவிஜர்கள் {சோதிடர்களான இருபிறப்பாளர்கள் யாவர்} என்னை சுபமானவள் என்று உறுதியாகச் சொன்னார்களோ, அந்த ஞானிகள் அனைவரும் ராமர் கொல்லப்பட்டதால் ஏதுமறியாத பொய்யர்களாகிவிட்டனர்.(5) 

யுத்த காண்டம் 048ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ அஷ்டசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

Trijata consoling Seetha in Pushpaka vimana

ப⁴ர்தாரம் நிஹதம் த்³ருஷ்ட்வா லக்ஷ்மணம் ச மஹா ப³லம் |
விளலாப ப்⁴ருஷ²ம் ஸீதா கருணம் ஷோ²க கர்ஷி²தா || 6-48-1

ஊசுர் லக்ஷணிகா யே மாம் புத்ரிண்ய் அவித⁴வா இதி ச |
தே அஸ்ய ஸர்வே ஹதே ராமே அஜ்னானினோ அந்ருத வாதி³ன꞉ || 6-48-2

யஜ்வனோ மஹிஷீம் யே மாம் ஊசுஹ் பத்னீம் ச ஸத்ரிண꞉ |
தே அத்³ய ஸர்வே ஹதே ராமே அஜ்னானினோ அந்ருத வாதி³ன꞉ || 6-48-3

வீர பார்தி²வ பத்னீ த்வம் யே த⁴ன்யா இதி ச மாம் விது³꞉ |
தே அத்³ய ஸர்வே ஹதே ராமே அஜ்னானினோ அந்ருத வாதி³ன꞉ || 6-48-4

ஊசு꞉ ஸம்ஷ்²ரவணே யே மாம் த்³விஜாஹ் கார்தாந்திகாஹ் ஷு²பா⁴ம் |
தே அத்³ய ஸர்வே ஹதே ராமே அஜ்னானினோ அந்ருத வாதி³ன꞉ || 6-48-5

Monday, 11 November 2024

புஷ்பக விமானத்தில் சீதை | யுத்த காண்டம் சர்க்கம் - 047 (24)

Seetha in Pushpaka | Yuddha-Kanda-Sarga-047 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்களைக் காத்த வானரர்கள்; சீதையை அழைத்துச் சென்று போர்க்களத்தைக் காட்டுமாறு ஆணையிட்ட ராவணன்; இராமன் தரையில் கிடப்பதைக் கண்டு அழுத சீதை...

Seetha sobs seeing the Battle field

அந்த ராவணாத்மஜன் {இந்திரஜித்}, தன் அர்த்தத்தை நிறைவேற்றிவிட்டு, லங்கைக்குள் நுழைந்த போது, வானரரிஷபர்கள் ராகவனைச் சூழ்ந்து கொண்டு ரக்ஷித்தனர்.(1) ஹனுமான், அங்கதன், நீலன், சுஷேணன், குமுதன், கஜன், கவாக்ஷன், சரபன், கந்தமாதனன்,{2} ஜாம்பவான், ரிஷபன், சுந்தன், ரம்பன், சதபலி, பிருது உள்ளிட்டோர் அனைத்து இடங்களில் இருந்தும் மரங்களை எடுத்துக் கொண்டனர்.{3} திசைகள் எங்கும் கிடைமட்டமாகவும், மேல்நோக்கியும் விழிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வானரர்கள், ஒரு புல் அசைந்தாலும் ராக்ஷசர்கள் நடமாடுகின்றனர் என்று நினைத்தனர்.(2-4) 

யுத்த காண்டம் 047ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

Seetha sobs seeing the Battle field

தஸ்மின் ப்ரதிப்ரவிஷ்டே லன்காம் து க்ருத அர்தே² ராவண ஆத்மஜே |
ராக⁴வம் பரிவார்ய ஆர்தா ரரக்ஷுர் வானர ருஷபா⁴꞉ || 6-47-1

ஹனூமான் அன்க³தோ³ நீலஹ் ஸுஷேணஹ் குமுதோ³ ள꞉ |
க³ஜோ க³வ அக்ஷோ க³வயஹ் ஷ²ரபோ⁴ க³ந்த⁴ மாத³ன꞉ || 6-47-2
ஜாம்ப³வான் ருஷப⁴ஹ் ஸுந்தோ³ ரம்ப⁴ஹ் ஷ²த ப³லிஹ் ப்ருது²꞉ |
வ்யூட⁴ அனீகாஷ்² ச யத்தாஷ்² ச த்³ருமான் ஆதா³ய ஸர்வத꞉ || 6-47-3
வீக்ஷமாணா தி³ஷ²ஹ் ஸர்வாஸ் திர்யக்³ ஊர்த்⁴வம் ச வானரா꞉ |
த்ருணேஷ்வ் அபி ச சேஷ்டத்ஸு ராக்ஷஸா;இதி மேநிரே || 6-47-4

ராவணஷ்² ச அபி ஸம்ஹ்ருஷ்டோ விஸ்ருஜ்ய இந்த்³ரஜிதம் ஸுதம் |
ஆஜுஹாவ ததஹ் ஸீதா ரக்ஷணீ ராக்ஷஸீஸ் ததா³ || 6-47-5

ராக்ஷஸ்யஸ் த்ரிஜடா ச அபி ஷா²ஸனாத் தம் உபஸ்தி²தா꞉ |
தா உவாச ததோ ஹ்ருஷ்டோ ராக்ஷஸீ ராக்ஷஸ ஈஷ்²வர꞉ || 6-47-6

ஹதாவ் இந்த்³ரஜிதா ஆக்²யாத வைதே³ஹ்யா ராம லக்ஷ்மணௌ |
புஷ்பகம் ச ஸமாரோப்ய த³ர்ஷ²யத்⁴வம் ஹதௌ ரணே || 6-47-7

யத்³ ஆஷ்²ரயாத்³ அவஷ்டப்³தோ⁴ ந இயம் மாம் உபதிஷ்ட²தி |
ஸோ அஸ்யா ப⁴ர்தா ஸஹ ப்⁴ராத்ரா நிரஸ்தோ ரண மூர்த⁴னி || 6-47-8

நிர்விஷ²ன்கா நிருத்³விக்³னா நிரபேக்ஷா ச மைதி²லீ |
மாம் உபஸ்தா²ஸ்யதே ஸீதா ஸர்வ ஆப⁴ரண பூ⁴ஷிதா || 6-47-9

அத்³ய கால வஷ²ம் ப்ராப்தம் ரணே ராமம் ஸலக்ஷ்மணம் |
அவேக்ஷ்ய விநிவ்ருத்த ஆஷா² ந அன்யாம் க³திம் அபஷ்²யதீ || 6-47-10
அனபேக்ஷா விஷா²லாக்ஷீ மாமுபஸ்த²ஸ்யதே ஸ்வயம் |

தஸ்ய தத்³ வசனம் ஷ்²ருத்வா ராவணஸ்ய து³ராத்மன꞉ || 6-47-11
ராக்ஷஸ்யஸ் தாஸ் ததா² இத்ய் உக்த்வா ப்ரஜக்³முர் யத்ர புஷ்பகம் |

தத꞉ புஷ்பகம் ஆத³ய ராக்ஷஸ்யோ ராவண ஆஜ்னயா || 6-47-12
அஷோ²க வனிகாஸ்தா²ம் தாம் மைதி²லீம் ஸமுபாநயன் |

தாம் ஆதா³ய து ராக்ஷஸ்யோ ப⁴ர்த்ரு ஷோ²க பராயணாம் || 6-47-13
ஸீதாம் ஆரோபயாம் ஆஸுர் விமானம் புஷ்பகம் ததா³ |

தத꞉ புஷ்பகம் ஆரோப்ய ஸீதாம் த்ரிஜடயா ஸஹ || 6-47-14
ஜக்³முர்த³ர்ஷ²யிதும் தஸ்யை ராக்ஷஸ்யோ ராமலக்ஷ்மணௌ |

ராவணோ அகாரயல் லன்காம் பதாகா த்⁴வஜ மாலினீம் || 6-47-15
ப்ராகோ⁴ஷயத ஹ்ருஷ்டஷ்² ச லன்காயாம் ராக்ஷஸ ஈஷ்²வர꞉ |
ராக⁴வோ லக்ஷ்மணஷ்² சைவ ஹதாவ் இந்த்³ரஜிதா ரணே || 6-47-16

விமானேன அபி ஸீதா து க³த்வா த்ரிஜடயா ஸஹ |
த³த³ர்ஷ² வானராணாம் து ஸர்வம் ஸின்யம் நிபாதிதம் || 6-47-17

ப்ரஹ்ருஷ்ட மனஸஷ்² ச அபி த³த³ர்ஷ² பிஷி²த அஷ²னான் |
வானராம்ஷ்² ச அபி து³ஹ்க² ஆர்தான் ராம லக்ஷ்மண பார்ஷ்²வத꞉ || 6-47-18

தத꞉ ஸீதா த³த³ர்ஷ² உபௌ⁴ ஷ²யானௌ ஷ²ர தல்பயோ꞉ |
லக்ஷ்மணம் சைவ ராமம் ச விஸம்ஜ்னௌ ஷ²ர பீடி³தௌ || 6-47-19
வித்⁴வஸ்த கவசௌ வீரௌ விப்ரவித்³த⁴ ஷ²ர ஆஸனௌ |
ஸாயகைஷ்² சின்ன ஸர்வ அன்கௌ³ ஷ²ர ஸ்தம்ப⁴மயௌ க்ஷிதௌ || 6-47-20

தௌ த்³ருஷ்ட்வா ப்⁴ராதரௌ தத்ர ப்ரவீரௌ புருஷ ருஷபௌ⁴ |
ஷ²யானௌ புண்ட³ரீகாக்ஷௌ குமாராவிவ பாவகீ || 6-47-21
ஷ²ரதல்பக³தௌ வீரௌ ததா²பூ⁴தௌ நரர்ஷபௌ⁴ |
து³ஹ்க² ஆர்தா ஸுப்⁴ருஷ²ம் ஸீதா கருணம் விளலாப ஹ || 6-47-22

ப⁴ர்தாரமனவத்³யாங்கீ³ லக்ஷ்மணம் சாஸிதேக்ஷணா |
ப்ரேக்ஷ்ய பாம்ஸுஷு சேஷ்டந்தௌ ருரோத³ ஜனகாத்மஜா || 6-47-23

ஸா பா³ஷ்ப ஷோ²க அபி⁴ஹதா ஸமீக்ஷ்ய |
தௌ ப்⁴ராதரௌ தே³வ ஸம ப்ரபா⁴வௌ |
விதர்கயந்தீ நித⁴னம் தயோஹ் ஸா |
து³ஹ்க² அன்விதா வாக்யம் இத³ம் ஜகா³த³ || 6-47-24

இத்யார்ஷே ஶ்ரீமத்³ராமாயணே ஆதி³காவ்யே யுத்³த⁴காண்டே³ ஸப்தசத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉


Source: https://valmikiramayan.net/   

Converted to Tamil Script using Akshara Mukha: 
Script Converter: http://aksharamukha.appspot.com/converter   

Friday, 8 November 2024

கண்ணீரைத் துடைத்தல் | யுத்த காண்டம் சர்க்கம் - 046 (50)

Tears wiped | Yuddha-Kanda-Sarga-046 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இந்திரஜித் மறைந்திருப்பதைக் கண்ட விபீஷணன்; சுக்ரீவனைத் தேற்றியது; இராமலக்ஷ்மணர்களைக் கொன்றுவிட்டதாக ராவனிடம் அறிவித்த இந்திரஜித்...

Vibheeshana wiping the tears from Sugreevas face
பிறகு வானத்தையும், பிருத்வியையும் பார்த்துக் கொண்டிருந்த வனௌகசர்கள் {வனத்தை வசிப்பிடமாகக் கொண்ட வானரர்கள்}, உடன்பிறந்தவர்களான ராமலக்ஷ்மணர்கள் பாணங்களால் முழுமையாக மறைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர்.(1) அப்போது, மழை பொழியும் தேவனை {இந்திரனைப்} போலத் தன் கர்மத்தைச் செய்துவிட்டு ராக்ஷசன் {இந்திரஜித்} ஓய்ந்ததும், அந்த தேசத்திற்கு {இடத்திற்கு} சுக்ரீவனுடன் சேர்ந்து விபீஷணனும் வந்தான்.(2) நீலன், துவிவிதன், மைந்தன், சுஷேணன், குமுதன், அங்கதன் ஆகியோரும் ஹனுமதனுடன் சேர்ந்து விரைவில் கூடி ராகவர்களுக்காக {ராமலக்ஷ்மணர்களுக்காக} வருந்திக் கொண்டிருந்தனர்.(3)

யுத்த காண்டம் 046ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே யுத்³த⁴காண்டே³ ஷட்சத்வாரிம்ஷ²꞉ ஸர்க³꞉

Vibheeshana wiping the tears from Sugreevas face

ததோ த்³யாம் ப்ருதி²வீம் சைவ வீக்ஷமாணா வன ஓகஸ꞉ |
த³த்³ருஷு²꞉ ஸம்ததௌ பா³ணைர் ப்⁴ராதரௌ ராம லக்ஷ்மணௌ || 6-46-1

வ்ருஷ்ட்வா இவ உபரதே தே³வே க்ருத கர்மணி ராக்ஷஸே |
ஆஜகா³ம அத² தம் தே³ஷ²ம் ஸஸுக்³ரீவோ விபீ⁴ஷண꞉ || 6-46-2

நீல த்³விவித³ மைந்தா³ஷ்² ச ஸுஷேண ஸுமுக² அன்க³தா³꞉ |
தூர்ணம் ஹனுமதா ஸார்த⁴ம் அன்வஷோ²சந்த ராக⁴வௌ || 6-46-3

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஜாமுகீ அஞ்சனை அதிகாயன் அத்ரி அனசூயை அனலை அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் கருடன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் கும்பன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுனசேபன் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுஷேணன் சுஹோத்ரன் சூரியன் சூர்ப்பணகை சூளி சோணிதாக்ஷன் ஜடாயு ஜனகன் ஜம்புமாலி ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் தசரதன் ததிமுகன் தனு தர்ம்பிருதர் தாடகை தான்யமாலினி தாரன் தாரை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவாந்தகன் நந்தி நராந்தகன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பனஸன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரஜங்கன் பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மகராக்ஷன் மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாதலி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷபன் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் வினதன் வினதை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹனுமான் ஹரிஜடை ஹிமவான் ஹேமை