Virtues of Rama | Ayodhya-Kanda-Sarga-001 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் ஆலோசித்தது; பரதனும், சத்ருக்னனும் தாய்மாமனுடன் சென்றது; இராமனின் நற்குணங்கள்...
க³ச்ச²தா மாதுலகுலம் ப⁴ரதேந ததா³(அ)நக⁴꞉
ஷ²த்ருக்⁴நோ நித்யஷ²த்ருக்⁴நோ நீத꞉ ப்ரீதிபுரஸ்க்ருத꞉ || 2-1-1
பதப்பிரிப்பு: க³ச்ச²தா = போகும்போது; மாதுலகுலம் = தாய்மாமனின் குலம் {வீடு}; ப⁴ரதேந ததா³ = பரதன் அப்போது; (அ)நக⁴: பாவமற்றவன்;
ஷ²த்ருக்⁴நோ = சத்ருக்னன்; நித்யஷ²த்ருக்⁴நோ: பகைவரை எப்போதும் அழிப்பவன்; நீத꞉ ப்ரீதிபுரஸ்க்ருத꞉ = அன்புடன்; நீத꞉ ஏற்றுக் கொள்ளப்படான்.
மாற்றியமைத்தால்: ப⁴ரதேந = பரதன்; மாதுலகுலம் = தாய் மாமனின் குலத்திற்கு {வீட்டுக்குச்}; க³ச்ச²தா = செல்லும்போது; (அ)நக⁴: பாவமற்றவனும்; நித்யஷ²த்ருக்⁴நோ: பகைவரை எப்போதும் அழிப்பவனுமான; ஷ²த்ருக்⁴நோ = சத்ருக்னனை; ததா³ = அப்போது; ப்ரீதிபுரஸ்க்ருத꞉ = அன்புடன்; நீத꞉ அழைத்துச் சென்றான்.
பொருள்: பரதன், தன் மாதுலன் {தாய் மாமனான யுதாஜித்தின்} வீட்டுக்குச் சென்ற போது, பாவமற்றவனும், பகைவரை எப்போதும் அழிப்பவனுமான சத்ருக்னனை அன்போடு தன்னுடன் அழைத்துச் சென்றான்.(1)
ஸ தத்ர ந்யவஸத்³ப்⁴ராத்ரா ஸஹ ஸத்காரஸத்க்ருத꞉ |
மாதுலேநாஷ்²வபதிநா புத்ரஸ்நேஹேந லாலித꞉ || 2-1-2
பதப்பிரிப்பு: ஸ தத்ர = அங்கே அவன்; ந்யவஸத்³; வசித்து வந்தபோது; ப்⁴ராத்ரா ஸஹ = சகோதரனுடன்; ஸத்காரஸத்க்ருத꞉ = விருந்தோம்பலுடன் நன்கு கவனிக்கப்பட்ட;
மாதுலேநா = தன் மாதுலன் (அ)ஷ்²வபதிநா = குதிரைப்படைத் தலைவனால்; புத்ரஸ்நேஹேந= புத்திரஸ்நேஹத்துடன்; லாலித꞉ பேணப்பட்டான்.
மாற்றியமைத்தால்: ஸ தத்ர = அங்கே அவன்; ப்⁴ராத்ரா ஸஹ = சகோதரனுடன்; ந்யவஸத்³; வசித்து வந்தபோது; (அ)ஷ்²வபதிநா = குதிரைப்படைத் தலைவனான; மாதுலேநா = தன் மாதுலனால்; புத்ரஸ்நேஹேந= புத்திரஸ்நேஹத்துடனும்; ஸத்காரஸத்க்ருத꞉ = விருந்தோம்பலுடன் நன்கு கவனிக்கப்பட்டு; லாலித꞉ பேணப்பட்டான்;
பொருள்: அங்கே அவன் {பரதன்}, சகோதரனுடன் {சத்ருக்னனுடன்} வசித்து வந்தபோது, அஷ்வபதியான {குதிரைப் படைத் தலைவனான} தன் மாதுலனால் {தாய்மாமன் யுதாஜித்தால்}, புத்திரசினேகத்துடனும், நல்ல விருந்தோம்பலுடனும் நன்கு பேணப்பட்டான்.(2)
தத்ராபி நிவஸந்தௌ தௌ தர்ப்யமாணௌ ச காமத꞉ |
ப்⁴ராதரௌ ஸ்மரதாம் வீரௌ வ்ருத்³த⁴ம் த³ஷ²ரத²ம் ந்ருபம் || 2-1-3
பதப்பிரிப்பு: தத்ராபி = அங்கே; நிவஸந்தௌ = வசித்திருந்தாலும்; தௌ; தர்ப்யமாணௌ ச = நிறைவுடன் இருந்தாலும்; காமத꞉ = விருப்பங்கள் அனைத்தும்
ப்⁴ராதரௌ = சகோதரர்கள் இருவரும்; ஸ்மரதாம் = நினைத்தனர்; வீரௌ = வீரர்கள் இருவரும்; வ்ருத்³த⁴ம் = முதிர்ந்தவனான த³ஷ²ரத²ம் = தசரத; ந்ருபம் = மன்னனை || 2-1-3
மாற்றியமைத்தால்: ப்⁴ராதரௌ = சகோதரர்கள் இருவரும்; வீரௌ = வீரர்கள் இருவரும்; காமத꞉ = விருப்பங்கள் அனைத்தும்; தர்ப்யமாணௌ ச = நிறைவேறியவர்களாக; தத்ராபி = அங்கே; நிவஸந்தௌ = வசித்திருந்தாலும்; வ்ருத்³த⁴ம் = முதிர்ந்தவனான; த³ஷ²ரத²ம் = தசரத; ந்ருபம் = மன்னனை; ஸ்மரதாம் = நினைத்தனர்;
பொருள்: சகோதரர்களான அந்த வீரர்கள் இருவரும், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறியவர்களாக அங்கே வசித்திருந்தாலும், முதிர்ந்தவனான தசரத நிருபனை {மன்னனை} நினைத்துக் கொண்டேயிருந்தனர்.(3)
ராஜாபி தௌ மஹாதேஜா꞉ ஸஸ்மார ப்ரோஷிதௌ ஸுதௌ |
உபௌ⁴ ப⁴ரதஷ²த்ருக்⁴நௌ மஹேந்த்³ரவருணோபமௌ || 2-1-4
பதப்பிரிப்பு: ராஜாபி = மன்னன் {தசரதன்}; தௌ; மஹாதேஜா꞉ = மஹாதேஜஸ்வி; ஸஸ்மார = நினைத்தான்; ப்ரோஷிதௌ = நாட்டுக்கு வெளியே இருந்த; ஸுதௌ = மகன்கள் இருவரையும்
உபௌ⁴ ப⁴ரதஷ²த்ருக்⁴நௌ = பரதசத்ருக்னர்கள் இருவரையும்; மஹேந்த்³ரவருணோபமௌ = மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையான|| 2-1-4
மாற்றியமைத்தால்: மஹாதேஜா꞉ = மஹாதேஜஸ்வியான; ராஜாபி = மன்னனும் {தசரதனும்}; ப்ரோஷிதௌ = நாட்டுக்கு வெளியே இருந்தவர்களும்; மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்களும்; ஸுதௌ = மகன்களுமான; ப⁴ரதஷ²த்ருக்⁴நௌ = பரதசத்ருக்னர்கள் இருவரையும்; ஸஸ்மார = நினைத்தான்.
பொருள்: மஹாதேஜஸ்வியான அந்த ராஜனும் {தசரதனும்}, வெளிநாட்டில் {கேகய நாட்டில்} இருந்தவர்களும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் இணையானவர்களும், சுதர்களுமான {மகன்களுமான} பரதசத்ருக்னர்கள் இருவரையும் நினைத்தவாறே இருந்தான்.(4).
ஸர்வ ஏவ து தஸ்யேஷ்டாஷ்²சத்வார꞉ புருஷர்ஷபா⁴꞉ |
ஸ்வஷ²ரீராத்³விநிர்வ்ருத்தாஷ்²சத்வார இவ பா³ஹவ꞉ || 2-1-5
பதப்பிரிப்பு: ஸர்வ ஏவ து = அவர்கள் அனைவரும்; தஸ்யே = அவனது {தசரதனின்}; (இ)ஷ்டாஷ்²= அன்புக்குரிய; சத்வார꞉ = நான்கு; புருஷர்ஷபா⁴꞉ = புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}
ஸ்வஷ²ரீராத்³வி = தன் உடலில் இருந்து; நிர்வ்ருத்தா ஷ்² = வெளிப்பட்ட; சத்வார இவ பா³ஹவ꞉ = நான்கு கைகளைப் போல || 2-1-5
மாற்றியமைத்தால்: சத்வார꞉ = நான்கு; புருஷர்ஷபா⁴꞉ = புருஷரிஷபர்களான; ஸர்வ ஏவ து = அவர்கள் அனைவரரையும்ம்; ஸ்வஷ²ரீராத்³வி = தன் உடலில் இருந்து; நிர்வ்ருத்தா ஷ்² = வெளிப்பட்ட; தஸ்யே = தனது {தசரதனின்}; சத்வார இவ பா³ஹவ꞉ = நான்கு கைகளைப் போல; (இ)ஷ்டாஷ்²= விரும்பினான்
பொருள்: அவன் {தசரதன்}, அந்தப் புருஷரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்} நால்வரையும், தன் சரீரத்தில் {உடலில்} இருந்து வெளிப்பட்ட நான்கு கைகளைப் போல விரும்பினான்.(5)
தேஷாமபி மஹாதேஜா ராமோ ரதிகர꞉ பிது꞉ |
ஸ்வயம்பூ⁴ரிவ பூ⁴தாநாம் ப³பூ⁴வ கு³ணவத்தர꞉ || 2-1-6
பதப்பிரிப்பு: தேஷாமபி = அவர்களில்; மஹாதேஜா = மஹாதேஜஸ்வியான; ராமோ = ராமன்; ரதிகர꞉ = மகிழ்ச்சிக்கு; பிது꞉ = தந்தையின்
ஸ்வயம்பூ⁴ரிவ = ஸ்வயம்பூவை போல; பூ⁴தாநாம் = பூதங்கள் அனைத்திலும்; ப³பூ⁴வ = பிறப்பிடமாகவும்; கு³ணவத்தர꞉ = குணத்திற்சிறந்தவனாகவும்.
மாற்றியமைத்தால்: தேஷாமபி = அவர்களில்; மஹாதேஜா = மஹாதேஜஸ்வி; கு³ணவத்தர꞉ = குணத்தில் சிறந்தவன்; ராமோ = ராமன்; பூ⁴தாநாம் = பூதங்களில்; ஸ்வயம்பூ⁴ரிவ = ஸ்வயம்பூவை {பிரம்மனைப்} போல; பிது꞉ = தந்தையின்; ரதிகர꞉ = மகிழ்ச்சிக்கு; ப³பூ⁴வ = பிறப்பிடம்.
பொருள்: அவர்களில் மஹாதேஜஸ்வியும், குணத்திற் சிறந்தவனும், பூதங்களில் {உயிரினங்கள் அனைத்திலும்} ஸ்வயம்பூவை {பிரம்மனைப்} போன்றவனுமான ராமன் தந்தையின் மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாகத் திகழ்ந்தான்.(6)
ஸ ஹி தே³வைருதீ³ர்ணஸ்ய ராவணஸ்ய வதா⁴ர்தி²பி⁴꞉ |
அர்தி²தோ மாநுஷே லோகே ஜஜ்ஞே விஷ்ணு꞉ ஸநாதந꞉ || 2-1-7
பதப்பிரிப்பு: ஸ = அவன் {ராமன்}; ஹி = உண்மையில்; தே³வை = தேவர்களால்; ருதீ³ர்ணஸ்ய ராவணஸ்ய = ஆணவக்காரனான ராவணனை; வதா⁴ர்தி²பி⁴꞉ = வதம் செய்ய விரும்பிய
அர்தி²தோ = தூண்டப்பட்டு; மாநுஷே லோகே = மனுஷ லோகத்தில் ஜஜ்ஞே = பிறந்த விஷ்ணு꞉ ஸநாதந꞉ = சனாதனவிஷ்ணு.
மாற்றியமைத்தால்: ஸ = அவன் {ராமன்}; ருதீ³ர்ணஸ்ய ராவணஸ்ய = ஆணவக்காரனான ராவணனை; வதா⁴ர்தி²பி⁴꞉ = வதம் செய்ய விரும்பிய; தே³வை = தேவர்களால்; அர்தி²தோ = தூண்டப்பட்டு; மாநுஷே லோகே = மனுஷ லோகத்தில் ஜஜ்ஞே = பிறந்த விஷ்ணு꞉ ஸநாதந꞉ = சனாதனவிஷ்ணு; ஹி = உண்மையில்.
பொருள்: அவன் {ராமன்}, ஆணவக்காரனான ராவணனை வதம் செய்ய விரும்பிய தேவர்களால் தூண்டப்பட்டு மனிதர்களின் உலகத்தில் பிறந்த சநாதன விஷ்ணுவல்லவா?(7)
கௌஸல்யா ஷு²ஷு²பே⁴ தேந புத்ரேணாமிததேஜஸா |
யதா² வரேண தே³வாநாமதி³திர்வஜ்ரபாணிநா || 2-1-8
பதப்பிரிப்பு: கௌஸல்யா = கௌசல்யை; ஷு²ஷு²பே⁴ = ஒளிர்ந்தாள்; தேந புத்ரேண = அந்த மகனால்; (அ)மிததேஜஸா = வலிமைமிக்க;
யதா² = போல; வரேண தே³வாநாம் = தேவர்களிற் சிறந்த; அதி³திர் = அதிதி; வஜ்ரபாணிநா = வஜ்ரபாணியால்
மாற்றியமைத்தால்: தே³வாநாம் = தேவர்களிற் சிறந்த; வஜ்ரபாணிநா = வஜ்ரபாணியால்; அதி³திர் = அதிதி; யதா² = போல; கௌஸல்யா = கௌசல்யை; (அ)மிததேஜஸா = வலிமைமிக்க; தேந புத்ரேண = அந்த மகனால்; ஷு²ஷு²பே⁴ = ஒளிர்ந்தாள்.
பொருள்: தேவர்களிற்சிறந்த வஜ்ரபாணியால் {இந்திரனால் ஒளிர்ந்த} அதிதியைப் போலவே, கௌசல்யை வலிமைமிக்கவனான தன் மகனால் {ராமனால்} ஒளிர்ந்தாள்.(8)
ஸ ஹி ரூபோபபந்நஷ்²ச வீர்யவாநநஸூயக꞉ |
பூ⁴மாவநுபம꞉ ஸூநுர்கு³ணைர்த³ஷ²ரதோ²பம꞉ || 2-1-9
பதப்பிரிப்பு: ஸ = அவன் {ராமன்}; ஹி = உண்மையில்; ரூபோபபந்நஷ்²ச = அழகிய ரூபம் கொண்டவன்; வீர்யவாந = வீரியவான்; அநஸூயக꞉ = பொறாமையற்றவன்;
பூ⁴மௌ = பூமியில்; அநுபம꞉ = ஒப்பற்றவன்; ஸூநுர் = மகன்; கு³ணைர் = குணங்களால்; த³ஷ²ரதோ²பம꞉ = தசரதனக்கு ஒப்பானவன்.
மாற்றியமைத்தால்: ரூபோபபந்நஷ்²ச = அழகிய ரூபம் கொண்டவன்; வீர்யவாந = வீரியவான்; அநஸூயக꞉ = பொறாமையற்றவன்; ஸ = அவன் {ராமன்}; கு³ணைர் = குணங்களில்; த³ஷ²ரதோ²பம꞉ = தசரதனக்கு ஒப்பானவன்; ஹி = உண்மையில்; பூ⁴மௌ = பூமியில்; அநுபம꞉ = ஒப்பற்றவன்; ஸூநுர் = மகன்.
பொருள்: அழகிய ரூபம் கொண்டவனும், வீரியவானும், பொறாமையற்றவனுமான அவன் {ராமன்}, குணத்தில் தசரதனைப் போன்றவனாகவும், உண்மையில் பூமியில் ஒப்பற்ற மகனாகவும் திகழ்ந்தான்.(9)
ஸ ச நித்யம் ப்ரஷா²ந்தாத்மா ம்ருது³பூர்வம் து பா⁴ஷதே |
உச்யமாநோ(அ)பி பருஷம் நோத்தரம் ப்ரதிபத்³யதே || 2-1-10
பதப்பிரிப்பு: ஸ = அவன் {ராமன்}; ச நித்யம் = எப்போதும்; ப்ரஷா²ந்தாத்மா = அமைதியான ஆன்மா {மனம்} கொண்டவன்; ம்ருது³பூர்வம் து = உண்மையில் மென்மையாக; பா⁴ஷதே = பேசுபவன்;
உச்யமாநோ(அ)பி : பிறரால் சொல்லப்படும்; பருஷம் = கொடுஞ்சொற்கள்; {அபி} = கூட; நோத்தரம் ப்ரதிபத்³யதே = பதிலளிக்காதவன்.
மாற்றியமைத்தால்: ப்ரஷா²ந்தாத்மா = அமைதியான ஆன்மா {மனம்} கொண்டவன்; ம்ருது³பூர்வம் து = உண்மையில் மென்மையாக; ச நித்யம் = எப்போதும்; பா⁴ஷதே = பேசுபவன்; ஸ = அவன் {ராமன்}; உச்யமாநோ(அ)பி : பிறரால் சொல்லப்படும்; பருஷம் = கொடுஞ்சொற்கள்; {அபி} = கூட; நோத்தரம் ப்ரதிபத்³யதே = பதிலளிக்காதவன்.
பொருள்: பிரசாந்தாத்மாவும் {அமைதியான மனம் கொண்டவனும்}, உண்மையில் எப்போதும் மென்மையாக {இனிமையாகப்} பேசுபவனுமான அவன் {ராமன்}, பிறரால் சொல்லப்படும் வன்சொற்களுக்குப் பதிலளிக்காதவனாகவும் {பதிலுக்குத் தானும் வன்சொற்கள் பேசாதவனாகவும்} இருந்தான்.(10)
கத²ஞ்சிது³பகாரேண க்ருதேநைகேந துஷ்யதி |
ந ஸ்மரத்யபகாராணாம் ஷ²தமப்யாத்மவத்தயா || 2-1-11
பதப்பிரிப்பு: கத²ஞ்சிது³= இருப்பினும்; (உ)பகாரேண = நல்ல காரியம்; க்ருதேநை = செய்த; கேந துஷ்யதி = மகிழ்ச்சியடைவான்
ந ஸ்மரத்ய = நினைக்க மாட்டான்; {அ}பகாராணாம் = கெட்ட காரியங்கள்; ஷ²தமப்இ = நூறாயினும்; ஆத்மவத்தயா = அவனுடைய நல்ல மனத்தால் || 2-1-11
மாற்றியமைத்தால்: ஆத்மவத்தயா = அவனுடைய நல்ல மனத்தால்; க்ருதேநை = செய்த; (உ)பகாரேண = நல்ல காரியம்; கேந துஷ்யதி = மகிழ்ச்சியடைவான்; {அ}பகாராணாம் = கெட்ட காரியங்கள்; ஷ²தமப்இ = நூறாயினும்; ந ஸ்மரத்ய = நினைக்க மாட்டான்.
பொருள்: அவனுடைய {ராமன்} நல்ல மனத்தால், {ஒருவன்} செய்த நல்ல காரியத்தில் மகிழ்ச்சியடைவானேயன்றி, கெட்ட காரியங்கள் நூறாயினும் {அவற்றை} நினைவில் கொள்ள மாட்டான்.(11)
ஷீ²லவ்ருத்³தை⁴ர்ஜ்ஞாநவ்ருத்³தை⁴ர்வயோவ்ருத்³தை⁴ஷ்²ச ஸஜ்ஜநை꞉ |
கத²யந்நாஸ்த வை நித்யமஸ்த்ரயோக்³யாந்தரேஷ்வபி || 2-1-12
பதப்பிரிப்பு: ஷீ²லவ்ருத்³தை⁴ர் = ஒழுக்கத்தில் முதியோரிடம்; ஜ்ஞாநவ்ருத்³தை⁴ர் = ஞானத்தில் முதியோரிடம்; வயோவ்ருத்³தை⁴ஷ்²ச = வயதில் முதியோரிடம்; ஸஜ்ஜநை꞉ =நல்லோரிடம்;
கத²யந்நாஸ்த வை = உரையாடுவான்; நித்யம் = எப்போதும்; அஸ்த்ரயோக்³யாந்தரேஷ்வபி = அஸ்திர யோகம் {வில்வித்தை} பயிலும் இடைவேளைகளில்;
மாற்றியமைத்தால்: அஸ்த்ரயோக்³யாந்தரேஷ்வபி = அஸ்திர யோகம் {வில்வித்தை} பயிலும் இடைவேளைகளில்; ஷீ²லவ்ருத்³தை⁴ர் = ஒழுக்கத்தில் முதியோரிடம்; ஜ்ஞாநவ்ருத்³தை⁴ர் = ஞானத்தில் முதியோரிடம்; வயோவ்ருத்³தை⁴ஷ்²ச = வயதில் முதியோரிடம்; ஸஜ்ஜநை꞉ =நல்லோரிடம்; கத²யந்நாஸ்த வை = உரையாடுவான்;
பொருள்: அஸ்திரயோகம் பயிலும்போது கிட்டும் இடைவேளைகளில், அவன் {ராமன்}, சீலத்தில் {ஒழுக்கத்தில்} பெரியோரிடமும், ஞானத்தில் பெரியோரிடமும், வயதில் பெரியோரிடமும், நல்லோரிடமும் உரையாடிக் கொண்டிருப்பான்.(12)
பு³த்³தி⁴மாந்மது⁴ராபா⁴ஷீ பூர்வபா⁴ஷீ ப்ரியம்வத³꞉ |
வீர்யவாந்ந ச வீர்யேண மஹதா ஸ்வேந விஸ்மித꞉ || 2-1-13
பதப்பிரிப்பு: பு³த்³தி⁴மாந் = புத்திமான்; மது⁴ராபா⁴ஷீ = இன்மொழி பேசுபவன்; பூர்வபா⁴ஷீ = உரையாடலைத் தொடங்குபவன்; ப்ரியம்வத³꞉ = அன்பு மொழி பேசுபவன்;
வீர்யவாந்ந ச = வீரியவான்; வீர்யேண = வீரத்தில்; மஹதா = பெரிதான; ஸ்வேந = தன்; விஸ்மித꞉ = அகங்காரமற்றவன்;
மாற்றியமைத்தால்: மேற்கண்டவாறே அமையும்
பொருள்: {இராமன்} புத்திமான்; மதுரபாஷை {இனிய மொழி} பேசுபவன்; உரையாடலைத் தொடங்குபவன்; அன்புமொழி பேசுபவன்; வீரியவான்; வீரமிக்கவனாக இருப்பினும் அகங்காரமற்றவன்.(13)
ந சாந்ருதகதோ² வித்³வான் வ்ருத்³தா⁴நாம் ப்ரதிபூஜக꞉ |
அநுரக்த꞉ ப்ரஜாபி⁴ஷ்²ச ப்ரஜாஷ்²சாப்யநுரஜ்யதே || 2-1-14
பதப்பிரிப்பு: ந ச = இல்லை; அந்ருதகத = பொய்ம்மை பேசுபவன்; வித்³வான் = கல்விமான்; வ்ருத்³தா⁴நாம் = பெரியோரை ப்ரதிபூஜக꞉ வழிபடத்தகுந்தவன், வணங்குபவன்;
அநுரக்த꞉ = விரும்பப்படுபவன்; ப்ரஜாபி⁴ஷ்²ச = பிரஜைகளால் / மக்களால்; ப்ரஜாஷ்²சாபி =மக்களையும்; அநுரஜ்யதே = விரும்புபவன்;
மாற்றியமைத்தால்: அந்ருதகத = பொய்ம்மை பேசுபவன்; ந ச = இல்லை; வித்³வான் = கல்விமான்; வ்ருத்³தா⁴நாம் = பெரியோரை; ப்ரதிபூஜக꞉ வழிபடதகுந்தவனாக இருப்பினும் வணங்குபவன்; ப்ரஜாபி⁴ஷ்²ச = பிரஜைகளால் / மக்களால்; அநுரக்த꞉ = விரும்பப்படுபவன்; ப்ரஜாஷ்²சாபி =மக்களையும்; அநுரஜ்யதே = விரும்புபவன்;
பொருள்: {அவன்}, பொய்ம்மை பேசாதவன்; வித்வான் {கல்விமான்}; வழிபடத்தகுந்தவனாக இருப்பினும் பெரியோரை வணங்குபவன்; பிரஜைகளால் {மக்களால்} விரும்பப்படுபவன்; பிரஜைகளிடம் அன்பு கொண்டவன்.(14)
ஸாநுக்ரோஷோ² ஜிதக்ரோதோ⁴ ப்³ராஹ்மணப்ரதிபூஜக꞉ |
தீ³நாநுகம்பீ த⁴ர்மஜ்ஞோ நித்யம் ப்ரக்³ரஹவாஞ்ஷு²சி꞉ || 2-1-15
பதப்பிரிப்பு: ஸாநுக்ரோஷோ²= கருணையுள்ளவன்; ஜிதக்ரோதோ⁴ = கோபத்தை வென்றவன்; ப்³ராஹ்மணப்ரதிபூஜக꞉ = பிராணர்களை வழிபடுபவன், அவர்களால் வழிபடப்படுபவன்;
தீ³நாநுகம்பீ = தீனர்களிடம் இரக்கம் கொண்டவன்; த⁴ர்மஜ்ஞோ = தர்மத்தை அறிந்தவன்; நித்யம் ப்ரக்³ரஹவாஞ் = எப்போதும் தற்கட்டுப்பாட்டுடன் இருப்பவன்; ஷு²சி꞉ = தூய்மையானவன்;
மாற்றியமைத்தால்: மேற்கண்டவாறே அமையும்
பொருள்: கருணையுள்ளவன்; குரோதத்தை வென்றவன்; பிராமணர்களை வழிபடுபவன்; அவர்களால் வழிபடப்படுபவன்; தீனர்களிடம் {வலுவற்றவர்களிடம்} இரக்கம் கொண்டவன்; தர்மத்தை அறிந்தவன்; எப்போதும் தற்கட்டுப்பாட்டுடன் இருப்பவன்; {ஒழுக்கத்தில்} தூய்மையானவன்.(15)
குலோசிதமதி꞉ ஸ்வம் ப³ஹுமந்யதே |
மந்யதே பரயா கீர்த்யா மஹத்ஸ்வர்க³ப²லம் தத꞉ || 2-1-16
பதப்பிரிப்பு: குலோசிதமதி꞉ = குலத்திற்குத் தகுந்த மதி; க்ஷாத்ரம் த⁴ர்மம் = க்ஷத்திரிய தர்மத்திற்கு; ஸ்வம் = தன்; ப³ஹுமந்யதே = உரிய மதிப்பளிப்பவன்;
மந்யதே = நினைத்தான்; பரயா கீர்த்யா = பெரும்புகழையும்; மஹத் = பெரிய; ஸ்வர்க³ப²லம் தத꞉ = ஸ்வர்க்க பலத்தையும்
மாற்றியமைத்தால்: ஸ்வம் = தன்; குலோசிதமதி꞉ = குலத்திற்குத் தகுந்த மதி; க்ஷாத்ரம் த⁴ர்மம் = க்ஷத்திரிய தர்மத்திற்கு; ப³ஹுமந்யதே = உரிய மதிப்பளிப்பவன்; பரயா கீர்த்யா = பெரும்புகழையும்; மஹத் = பெரிய; ஸ்வர்க³ப²லம் தத꞉ = ஸ்வர்க்க பலத்தையும்; மந்யதே = நினைத்தான்;
பொருள்: தன் குலத்திற்குத் தகுந்த மதியைக் கொண்டவனும், க்ஷத்திரிய தர்மத்திற்கு உரிய மதிப்பளிப்பவனுமான அவன், இவற்றின் {மேற்கண்ட குணங்களின்} மூலம் பெருங்கீர்த்தியையும், மகத்தான ஸ்வர்க்கபலத்தையும் அடையலாம் என்று நினைத்தான் {நம்பினான்}.(16)
நாஷ்²ரேயஸி ரதோ வித்³வாந்ந விருத்³த⁴கதா²ருசி꞉ |
உத்தரோத்தரயுக்தீநாம் வக்தா வாசஸ்பதிர்யதா²|| 2-1-17
பதப்பிரிப்பு: ந = இல்லை; அஷ்²ரேயஸி = நன்மையற்றதில்; ரதோ = விருப்பம்; வித்³வாந் = அறிஞன்; ந விருத்³த⁴கதா²ருசி꞉ = தர்மத்திற்கு முரணான கதைகளில் சுவையற்றவன்;
உத்தரோத்தரயுக்தௌ = உத்திகளை வெளிப்படுத்துவதில்; வக்தா = தடையின்றி பேசுபவன்; வாசஸ்பதிர்யதா² = வாக்கின் தலைவனைப் போன்றவன்;
மாற்றியமைத்தால்: அஷ்²ரேயஸி = நன்மையற்றதில்; ரதோ = விருப்பம்; ந = இல்லை; வித்³வாந் = அறிஞன்; ந விருத்³த⁴கதா²ருசி꞉ = தர்மத்திற்கு முரணான கதைகளில் சுவையற்றவன்; வாசஸ்பதிர்யதா² = வாக்கின் தலைவனைப் போன்றவன்; உத்தரோத்தரயுக்தௌ = உத்திகளை வெளிப்படுத்துவதில்; வக்தா = தடையின்றி பேசுபவன்;
பொருள்: {அவன்} நன்மையற்ற செயல்பாடுகளில் விருப்பமில்லாதவன்; வித்வான் {அறிஞன்}; தர்மத்திற்கு முரணான கதைகளில் விருப்பமில்லாதவன்; வாசஸ்பதியை {பேச்சின் தலைவனைப்} போல உத்திகளை வெளிப்படுத்தும் வக்தன் {தடையின்றி பேசுபவன்}.(17)
அரோக³ஸ்தருணோ வாக்³மீ வபுஷ்மாந்தே³ஷ²காலவித் |
லோகே புருஷஸாரஜ்ஞஸ்ஸாது⁴ரேகோ விநிர்மித꞉ || 2-1-18
பதப்பிரிப்பு: அரோக³= பிணியற்றவன்; தருணோ = இளைஞன்; வாக்³மீ = நல்ல பேச்சாளன்; வபுஷ்மாந் = நல்ல மேனியைக் கொண்டவன்; தே³ஷ²காலவித் = தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்;
லோகே = உலகத்தில்; புருஷஸாரஜ்ஞஸ் = மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; ஸாது⁴ = மென்மையான மனிதன்; ஏகோ = ஒருவன் விநிர்மித꞉ = படைக்கப்பட்ட
மாற்றியமைத்தால்: பிணியற்றவன்; தருணோ = இளைஞன்; வாக்³மீ = நல்ல பேச்சாளன்; வபுஷ்மாந் = நல்ல மேனியைக் கொண்டவன்; தே³ஷ²காலவித் = தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்; புருஷஸாரஜ்ஞஸ் = மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; லோகே = உலகத்தில்; விநிர்மித꞉ = படைக்கப்பட்ட ; ஏகோ = ஒருவன்; ஸாது⁴ = மென்மையான மனிதன்;
பொருள்: அவன், பிணியற்ற இளைஞன்; நல்ல பேச்சாளன்; நல்ல மேனியைக் கொண்டவன்; தேச காலம் {இடமும், நேரமும்} அறிந்தவன்; மனிதர்களின் புத்தியைப் புரிந்து கொள்பவன்; இந்த உலகத்தில் படைக்கப்பட்ட சாது {மென்மையான நல்ல மனிதன்}.(18)
ஸ து ஷ்²ரேஷ்டை²ர்கு³ணைர்யுக்த꞉ ப்ரஜாநாம் பார்தி²வாத்மஜ꞉ |
ப³ஹிஷ்²சர இவ ப்ராணோ ப³பூ⁴வ கு³ணத꞉ ப்ரிய꞉ || 2-1-19
பதப்பிரிப்பு: ஸ = அவன்; ஷ்²ரேஷ்டை²ர் = சிறந்த; கு³ணைர் = குணங்களை; யுக்த꞉ = கொண்ட; ப்ரஜாநாம் = பிரஜைகளுக்கு; பார்தி²வாத்மஜ꞉ = மன்னனின் மகன்;
ப³ஹிஷ்²சர = வெளியே உலவும்; இவ ப்ராணோ = பிராணனைப் போல; ப³பூ⁴வ = இருந்தது; கு³ணத꞉ = குணங்களில்; ப்ரிய꞉ = அன்பு;
மாற்றியமைத்தால்: பார்தி²வாத்மஜ꞉ = மன்னனின் மகன்; ஷ்²ரேஷ்டை²ர் = சிறந்த; கு³ணைர் = குணங்களை; யுக்த꞉ = கொண்ட; ஸ = அவன்; ப³ஹிஷ்²சர = வெளியே உலவும்; இவ ப்ராணோ = பிராணனைப் போல; ப³பூ⁴வ = இருந்தது; கு³ணத꞉ = குணங்களில்; ப்ரிய꞉ = அன்பு;
பொருள்: பார்த்திவாத்மஜனும் {மன்னனின் மகனும்}, சிறந்த குணங்களைக் கொண்டவனுமான அவனை {ராமனை}, வெளியே உலவும் தங்கள் பிராணனை {உயிரைப்} போலக் கருதி பிரஜைகள் அன்பு செலுத்தினர்.(19)
ஸம்யக்³வித்³யாவ்ரதஸ்நாதோ யதா²வத்ஸாங்க³வேத³வித் |
இஷ்வஸ்த்ரே ச பிது꞉ ஷ்²ரேஷ்டோ² ப³பூ⁴வ ப⁴ரதாக்³ரஜ꞉ || 2-1-20
பதப்பிரிப்பு: ஸம்யக்³= உரிய; வித்³யாவ்ரதஸ்நாதோ = வித்தை விரத ஸ்நானம் முடித்து; யதா²வத் = பரிந்துரைக்கப்பட்ட; ஸாங்க³வேத³வித் = வேதங்களையும், வேதாங்கங்களையும் அறிந்தவன்;
இஷ்வஸ்த்ரே = வில்வித்தையில்; ச பிது꞉ = தன் பிதாவைவிட; ஷ்²ரேஷ்டோ² = சிறந்த; ப³பூ⁴வ = ஆனான்; ப⁴ரதாக்³ரஜ꞉ = பரதனின் அண்ணன்;
மாற்றியமைத்தால்: யதா²வத் = பரிந்துரைக்கப்பட்ட; ஸம்யக்³= உரிய; வித்³யாவ்ரதஸ்நாதோ = வித்தை விரத ஸ்நானம் முடித்து; ஸாங்க³வேத³வித் = வேதங்களையும், வேதாங்கங்களையும் அறிந்தவன்; ப⁴ரதாக்³ரஜ꞉ = பரதனின் அண்ணன்; இஷ்வஸ்த்ரே = வில்வித்தையில்; ச பிது꞉ = தன் பிதாவைவிட; ஷ்²ரேஷ்டோ² = சிறந்த; ப³பூ⁴வ = ஆனான்;
பொருள்: பரிந்துரைக்கப்பட்ட முறைக்கு உரிய வித்யாவிரத ஸ்நாநம் செய்தவனும் {கல்வி முடித்து உரிய முறையில் நீராடியவனும்}, வேத வேதாங்கங்களை அறிந்தவனுமான அந்த பரதாக்ரஜன் {பரதனின் அண்ணனான ராமன்}, அஸ்திரங்களில் தன் பிதாவை {தன் தந்தை தசரதனைக்} காட்டிலும் சிரேஷ்டனாக {சிறந்தவனாகத்} திகழ்ந்தான்.(20)
கல்யாணாபி⁴ஜந꞉ ஸாது⁴ரதீ³ந꞉ ஸத்யவாக்³ருஜு꞉ |
வ்ருத்³தை⁴ரபி⁴விநீதஷ்²ச த்³விஜைர்த⁴ர்மார்த²த³ர்ஷி²பி⁴꞉|| 2-1-21
பதப்பிரிப்பு: கல்யாணாபி⁴ஜந꞉ = நல்ல குலத்தில் பிறந்தவன்; ஸாது⁴ர் = மென்மையானவன் / நல்லவன்; அதீ³ந꞉ = தீனமற்றவன்; ஸத்யவாக்³= சத்திய வாக்கியம்: ருஜு꞉ = நேர்மையானவன்;
வ்ருத்³தை⁴ர் = பெரியோர்; அபி⁴விநீதஷ்²ச = உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்ட; த்³விஜைர் = துவிஜர்கள் / இருபிறப்பாளர்கள்; த⁴ர்மார்த²த³ர்ஷி²பி⁴꞉ = தர்ம்ம அர்த்தங்களை உணர்ந்தவர்கள்;
மாற்றியமைத்தால்: நல்ல குலத்தில் பிறந்தவன்; ஸாது⁴ர் = மென்மையானவன் / நல்லவன்; அதீ³ந꞉ = தீனமற்றவன்; ஸத்யவாக்³= சத்திய வாக்கியம்: ருஜு꞉ = நேர்மையானவன்; த⁴ர்மார்த²த³ர்ஷி²பி⁴꞉ = தர்ம்ம அர்த்தங்களை உணர்ந்தவர்கள்; வ்ருத்³தை⁴ர் = பெரியோர்; த்³விஜைர் = துவிஜர்கள் / இருபிறப்பாளர்களால்; அபி⁴விநீதஷ்²ச = உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டவன்;
பொருள்: நல்ல குலத்தில் பிறந்தவனான அந்த சாது {மென்மையான ராமன்}, தீனமற்றவனாகவும் {வலிமைமிக்கவனாகவும்}, சத்தியவாக்கியம் சொல்லும் ஒளிவுமறைவற்ற நேர்மையாளனாகவும், தர்ம அர்த்தங்களை {அறம்பொருளை} உணர்ந்த முதிய துவிஜர்களால் {இரு பிறப்பாளர்களால்} முறையான பயிற்சி அளிக்கப்பட்டவனாகவும் இருந்தான்.(21)
த⁴ர்மகாமார்த²தத்த்வஜ்ஞ꞉ ஸ்ம்ருதிமாந்ப்ரதிபா⁴நவான் |
லௌகிகே ஸமயாசாரே க்ருதகல்போ விஷா²ரத³꞉ || 2-1-22
பதப்பிரிப்பு: த⁴ர்மகாமார்த²தத்த்வஜ்ஞ꞉ = தர்ம, காம, அர்த்தங்களினின் உண்மைப் பொருளை அறிந்தவன்; ஸ்ம்ருதிமாந் = நல்ல நினைவுத்திறன் கொண்டவன்; ப்ரதிபா⁴நவான் = அளவில்லா விவேகம் கொண்டவன்;
லௌகிகே = சமூகத்தில்; ஸமயாசாரே = சமயத்திற்குத் தகுந்த; க்ருதகல்போ : = காரியங்களை உண்டாக்கும்; விஷா²ரத³꞉ = திறன் கொண்டவன்;
மாற்றியமைத்தால்: த⁴ர்மகாமார்த²தத்த்வஜ்ஞ꞉ = தர்ம, காம, அர்த்தங்களினின் உண்மைப் பொருளை அறிந்தவன்; ஸ்ம்ருதிமாந் = நல்ல நினைவுத்திறன் கொண்டவன்; ப்ரதிபா⁴நவான் = அளவில்லா விவேகம் கொண்டவன்; லௌகிகே = சமூகத்தில்; ஸமயாசாரே = சமயத்திற்குத் தகுந்த; க்ருதகல்போ : = காரியங்களை உண்டாக்கும்; ஸமயாசாரே = சமயத்திற்குத் தகுந்த; க்ருதகல்போ : = காரியங்களை உண்டாக்கும்; விஷா²ரத³꞉ = திறன் கொண்டவன்;
பொருள்: தர்ம காம அர்த்தங்களின் {அறம், பொருள், இன்பங்களின்} உண்மையான வடிவை அறிந்தவனாகவும், ஸ்மிருதிமானாகவும் {நல்ல நினைவுத்திறன் கொண்டவனாகவும்}, அளவில்லா விவேகம் கொண்டவனாகவும், சமூகத்தில் சமயத்திற்குத் தகுந்த சடங்குகளை உண்டாக்குவதில் விசாரதனாகவும் {திறன் கொண்டவனாகவும், [பெரியோர் பயின்ற ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்துவதில் சமர்த்தனாகவும்] இருந்தான்}.(22)
நிப்⁴ருத꞉ ஸம்வ்ருதாகாரோ கு³ப்தமந்த்ர꞉ ஸஹாயவான் |
அமோக⁴க்ரோத⁴ஹர்ஷஷ்²ச த்யாக³ஸம்யமகாலவித் || 2-1-23
பதப்பிரிப்பு: நிப்⁴ருத꞉ = பணிவுள்ளவன்; ஸம்வ்ருதாகாரோ = அடக்கமானவன்; கு³ப்தமந்த்ர꞉ = தான் நினைப்பவற்றைத் தன்னுள் வைத்துக் கொள்பவன்; ஸஹாயவான் = பிறருக்கு உதவி செய்பவன்;
அமோக⁴க்ரோத⁴ஹர்ஷஷ்²ச = வீணாகாத கோபத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டவன்; த்யாக³ஸம்யமகாலவித் = கொடையளிக்கும் காலத்தை அறிந்தவன்;
மாற்றியமைத்தால்: அதே
பொருள்: {அவன்}, பணிவுள்ளவனாகவும், அடக்கமானவனாகவும், எண்ணங்களைத் தன்னுள் வைத்துக் கொள்பவனாகவும், சகாயவானாகவும் {பிறருக்கு உதவி செய்பவனாகவும்}, வீணாகாத {பயனுள்ள} கோபமும், மகிழ்ச்சியும் அடைபவனாகவும், கொடைக்கான {கொடுக்கவும், திறை வாங்கவும் உரிய} காலத்தை அறிந்தவனாகவும் இருந்தான்.(23)
த்³ருட⁴ப⁴க்தி꞉ ஸ்தி²ரப்ரஜ்ஞோ நாஸத்³க்³ராஹீ ந து³ர்வசா꞉ |
நிஸ்தந்த்³ரிரப்ரமத்தஷ்²ச ஸ்வதோ³ஷபரதோ³ஷவித் || 2-1-24
பதப்பிரிப்பு: த்³ருட⁴ப⁴க்தி꞉ = திட பக்தி கொண்டவன்; ஸ்தி²ரப்ரஜ்ஞோ = உறுதியான மனம் கொண்டவன்; அஸத்³க்³ராஹீ =பிடிவாதமற்றவன்; ந து³ர்வசா꞉ = துர்வசனம் பேசாதவன்;
நிஸ்தந்த்³ரி = சோம்பலற்றவன்; அப்ரமத்தஷ்²ச = விழிப்புடையவன்; ஸ்வதோ³ஷபரதோ³ஷவித் : பிறர் செய்யும் பிழைகளையும், தன் பிழைகளையும் அறிபவன்;
மாற்றியமைத்தால்: அதே
பொருள்: அவன் திடபக்தி கொண்டவனாகவும், உறுதியான மனம் கொண்டவனாகவும், பிடிவாதமற்றவனாகவும், துர்வசனம் பேசாதவனாகவும் {தீச்சொற்கள் சொல்லாதவனாகவும்}, சோம்பலற்றவனாகவும், விழிப்புடையவனாகவும், பிறர் செய்யும் பிழைகளை அறிவது போல் தன் பிழைகளை அறிபவனாகவும் இருந்தான்.(24)
ஷா²ஸ்த்ரஜ்ஞஷ்²ச க்ருதஜ்ஞஷ்²ச புருஷாந்தரகோவித³꞉ |
ய꞉ ப்ரக்³ரஹாநுக்³ரஹயோர்யதா²ந்யாயம் விசக்ஷண꞉ || 2-1-25
பதப்பிரிப்பு: ஷா²ஸ்த்ரஜ்ஞஷ்²ச = சாத்திரங்களை அறிந்தவன்; க்ருதஜ்ஞஷ்²ச = அவற்றின் நடைமுறையை அறிந்தவன்; புருஷாந்தரகோவித³꞉ = மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவன்;
ய꞉ ப்ரக்³ரஹாநுக்³ரஹயோர் = தண்டனையும் பாதுகாப்பும்; யதா²ந்யாயம் = நியாயப்படி; விசக்ஷண꞉ = பகுத்தாய்பவன்;
மாற்றியமைத்தால்: ஷா²ஸ்த்ரஜ்ஞஷ்²ச = சாத்திரங்களை அறிந்தவன்; க்ருதஜ்ஞஷ்²ச = அவற்றின் நடைமுறையை அறிந்தவன்; புருஷாந்தரகோவித³꞉ = மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவன்; யதா²ந்யாயம் = நியாயப்படி; யதா²ந்யாயம் = நியாயப்படி; விசக்ஷண꞉ = பகுத்தாய்பவன்;
பொருள்: அவன் சாஸ்திரமறிந்தவனாகவும், அவற்றின் நடைமுறை அறிந்தவனாகவும், மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புரிந்து கொண்டவனாகவும், யாரைப் பாதுகாப்பது, யாரைத் தண்டிப்பது என்பதை நியாயப்படி பகுத்தாராய்பவனாகவும் இருந்தான்.(25)
ஸத்ஸங்க்³ரஹப்ரக்³ரஹணே ஸ்தா²நவிந்நிக்³ரஹஸ்ய ச |
ஆயகர்மண்யுபாயஜ்ஞ꞉ ஸந்த்³ருஷ்டவ்யயகர்மவித் || 2-1-26
பதப்பிரிப்பு: ஸத்ஸங்க்³ரஹப்ரக்³ரஹணே = நல்லோரை அடையாளம் கண்டு பாதுகாப்பவனாக; ஸ்தா²நவிந் = மக்களை அறிந்தவன்; நிக்³ரஹஸ்ய ச = கண்டிக்கத்தகுந்த;
ஆயகர்மண் = வருமானத்திற்கான வழிகளையும்; உபாயஜ்ஞ꞉ = அதன் வழிமுறைகளையும்; ஸந்த்³ருஷ்டவ்யயகர்மவித் = சாத்திரங்கள் குறிப்புடன் வகையில் செலவிடும் முறையையும் அறிந்தவன்;
மாற்றியமைத்தால்: அதே
பொருள்: நல்லோரை அடையாளம் கண்டு பாதுகாப்பவனாகவும், கண்டிக்கத் தகுந்தவர்களை அறிபவனாகவும், வருமானம் ஈட்டும் வழிகளையும், வழிமுறைகளையும் அறிந்தவனாகவும், சாத்திரம் குறிப்பிடும் வகையில் செலவிடும் முறையை அறிந்தவனாகவும் {தக்காரை அறிந்து கொடை அளிப்பவனாகவும்} இருந்தான்.(26)
ஷ்²ரைஷ்ட்²யம் ஷா²ஸ்த்ரஸமூஹேஷு ப்ராப்தோ வ்யாமிஷ்²ரகேஷு ச |
அர்த²த⁴ர்மௌ ச ஸங்க்³ருஹ்ய ஸுக²தந்த்ரோ ந சாலஸ꞉ || 2-1-27
பதப்பிரிப்பு: ஷ்²ரைஷ்ட்²யம் = பெரும் நிபுணத்துவம்; ஷா²ஸ்த்ரஸமூஹேஷு = சாஸ்திரங்கள் பலவற்றில்; ப்ராப்தோ = கொண்ட; வ்யாமிஷ்²ரகேஷு ச = அவற்றுக்குத் துணையானவற்றிலும்;
அர்த²த⁴ர்மௌ ச = அர்த்தமும், தர்மமும்; ஸங்க்³ருஹ்ய = ஈட்டியபிறகு; ஸுக²தந்த்ரோ = சுகத்தில் விருப்பம்; ந சாலஸ꞉ = செயலற்றுக் கிடக்காதவன்;
மாற்றியமைத்தால்: ஷா²ஸ்த்ரஸமூஹேஷு = சாஸ்திரங்கள் பலவற்றில்; வ்யாமிஷ்²ரகேஷு ச = அவற்றுக்குத் துணையானவற்றிலும்; ஷ்²ரைஷ்ட்²யம் = பெரும் நிபுணத்துவம்; ப்ராப்தோ = கொண்ட; அர்த²த⁴ர்மௌ ச = அர்த்தமும், தர்மமும்; ஸங்க்³ருஹ்ய = ஈட்டியபிறகு; ஸுக²தந்த்ரோ = சுகத்தில் விருப்பம்; ந சாலஸ꞉ = செயலற்றுக் கிடக்காதவன்;
பொருள்: சாஸ்திரங்களிலும், துணை சாஸ்திரங்களிலும் பெரும் நிபுணத்துவம் வாய்ந்தவனாகவும், பொருளும் {அர்த்தமும்}, அறமும் {தர்மமும்} ஈட்டிய பிறகு சுகத்தில் விருப்பம் கொண்டவனாகவும், ஒருபோதும் செயலற்றுக் கிடக்காதவனாகவும் இருந்தான்.(27)
வைஹாரிகாணாம் ஷி²ல்பாநாம் விஜ்ஞாதார்த²விபா⁴க³வித் |
ஆரோஹே விநயே சைவ யுக்தோ வாரணவாஜிநாம் || 2-1-28
பதப்பிரிப்பு: வைஹாரிகாணாம் = கேளிக்கைகளுக்குப் பயன்படும்; ஷி²ல்பாநாம் = நுண்கலைகள்; விஜ்ஞாதார்த²விபா⁴க³வித் = செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் முறையை அறிந்தவன்;
ஆரோஹே = செலுத்துபவன்; விநயே சைவ = பழக்குவதிலும்; யுக்தோ = திறன்மிக்கவன்; வாரணவாஜிநாம் = யானைகளையும், குதிரைகளையும்;
மாற்றியமைத்தால்: விஜ்ஞாதார்த²விபா⁴க³வித் = செல்வத்தைப் பகிர்ந்தளிக்கும் முறையை அறிந்தவன்; வைஹாரிகாணாம் = கேளிக்கைகளுக்குப் பயன்படும்; ஷி²ல்பாநாம் = நுண்கலைகள்; வாரணவாஜிநாம் = யானைகளையும், குதிரைகளையும்; ஆரோஹே = செலுத்துபவன்; விநயே சைவ = பழக்குவதிலும்; யுக்தோ = திறன்மிக்கவன்;
பொருள்: அவன் செல்வத்தைப் பகிர்ந்தளிப்பது எவ்வாறு என்பதையும், கேளிக்கைக்கான நுண்கலைகளையும் {இசைக்கருவிகள் இசைப்பது, ஓவியம் வரைவது முதலிய கலைகளை} நன்கறிந்தவனாகவும், வாரணம் {யானை}, வாஜிகளை {குதிரைகளைப்} பயிற்றுவித்துத் திறம்படச் செலுத்துபவனாகவும் இருந்தான்.(28)
த⁴நுர்வேத³விதா³ம் ஷ்²ரேஷ்டோ² லோகே(அ)திரத²ஸம்மத꞉ |
அபி⁴யாதா ப்ரஹர்தா ச ஸேநாநயவிஷா²ரத³꞉ || 2-1-29
பதப்பிரிப்பு: த⁴நுர்வேத³விதா³ம் = தனுர்வேதமறிந்தவர்களில்; ஷ்²ரேஷ்டோ² = சிறந்தவன்; லோகே = உலகத்தின்; (அ)திரத²ஸம்மத꞉ = வில்வித்தை அறிந்தவர்களால் பாராட்டப்படுபவன்;
அபி⁴யாதா= பகைவர்களை எதிர்ப்பவன்; ப்ரஹர்தா ச = அவர்களைக் கொல்பவன்; ஸேநாநயவிஷா²ரத³꞉ = சேனைகளை முறையாக வழிநடத்தும் திறன் கொண்டவன்;
மாற்றியமைத்தால்: அதே
பொருள்: தனுர்வேதமறிந்தவர்களில் சிரேஷ்டனாக {சிறந்தவனாக}, உலகத்தின் அதிரதர்களால் பாராட்டப்படுபவனாகவும், பகைவரை எதிர்த்துக் கொல்பவனாகவும், சேனைகளை முறையாக வழிநடத்தும் {அணிவகுப்பில்} திறன் கொண்டவனாகவும் இருந்தான்.(29)
அப்ரத்⁴ருஷ்யஷ்²ச ஸங்க்³ராமே க்ருத்³தை⁴ரபி ஸுராஸுரை꞉ |
அநஸூயோ ஜிதக்ரோதோ⁴ ந த்³ருப்தோ ந ச மத்ஸரீ |
ந சாவமந்தா பூ⁴தாநாம் ந ச காலவஷா²நுக³꞉ || 2-1-30
பதப்பிரிப்பு: அப்ரத்⁴ருஷ்ய = வீழ்த்தப்பட முடியாதவன்; ஸங்க்³ராமே = போரில்; க்ருத்³தை⁴ரபி = கோபமடைந்த; ஸுராஸுரை꞉ = தேவர்கள், அசுரர்களாலும்
அநஸூயோ = பொறாமையற்றவன்; ஜிதக்ரோதோ⁴ = குரோதத்தை வென்றவன்; ந த்³ருப்தோ = ஆணவமற்றவன்; ந ச மத்ஸரீ = பகையற்றவன்;
ந சாவமந்தா = அவமதிக்காதவன்; பூ⁴தாநாம் = உயிரினங்களை; ந ச காலவஷா²நுக³꞉ = காலத்தின் வசப்படாதவன்;
மாற்றியமைத்தால்: க்ருத்³தை⁴ரபி = கோபமடைந்த; ஸுராஸுரை꞉ = தேவர்கள், அசுரர்களாலும்; ஸங்க்³ராமே = போரில்; அப்ரத்⁴ருஷ்ய = வீழ்த்தப்பட முடியாதவன்; அநஸூயோ = பொறாமையற்றவன்; ஜிதக்ரோதோ⁴ = குரோதத்தை வென்றவன்; ந த்³ருப்தோ = ஆணவமற்றவன்; ந ச மத்ஸரீ = பகையற்றவன்; பூ⁴தாநாம் = உயிரினங்களை; ந சாவமந்தா = அவமதிக்காதவன்; ந ச காலவஷா²நுக³꞉ = காலத்தின் வசப்படாதவன்;
பொருள்: அவன், கோபமடைந்த ஸுராஸுரர்களாலும் {தேவாசுரர்களாலும்} போரில் வீழ்த்தப்பட முடியாதவனாகவும், அநசூயனாகவும் {பொறாமையற்றவனாகவும்}, ஜிதக்ரோதனாகவும் {கோபத்தை வென்றவனாகவும்}, ஆணவமற்றவனாகவும், பகையற்றவனாகவும், எந்த உயிரினத்தையும் அவமதிக்காதவனாகவும், காலத்திற்கு வசப்படாதவனாகவும் இருந்தான்.(30)
ஏவம் ஷ்²ரேஷ்ட²கு³ணைர்யுக்த꞉ ப்ரஜாநாம் பார்தி²வாத்மஜ꞉ |
ஸம்மதஸ்த்ரிஷு லோகேஷு வஸுதா⁴யா꞉ க்ஷமாகு³ணை꞉ || 2-1-31
பு³த்³த்⁴யா ப்³ருஹஸ்பதேஸ்துல்யோ வீர்யேணாபி ஷ²சீபதே꞉ |
பதப்பிரிப்பு: ஏவம் ஷ்²ரேஷ்ட²கு³ணைர் = இந்த சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட; யுக்த꞉ நல்லவன்; ப்ரஜாநாம்: பிரஜைகளுக்கு; பார்தி²வாத்மஜ꞉ = பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்};
ஸம்மதஸ் = ஏற்புடையவன்; த்ரிஷு லோகேஷு = மூவுலகங்களுக்கும்; வஸுதா⁴யா꞉ = வசுதைக்கும் {பூமிக்கும்}; க்ஷமாகு³ணை꞉ = பொறுமை குணத்தில்;
பு³த்³த்⁴யா = புத்தியில்; ப்³ருஹஸ்பதேஸ் = பிருஹஸ்பதிக்கும்; துல்யோ வீர்யேணாபி ² = துல்லியமான வீரத்தில்; சசீபதே꞉ = சசீபதிக்கும்
மாற்றியமைத்தால்: ஏவம் ஷ்²ரேஷ்ட²கு³ணைர் = இந்த சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட; பார்தி²வாத்மஜ꞉ = பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்}; ப்ரஜாநாம்: பிரஜைகளுக்கு; யுக்த꞉ நல்லவன்; த்ரிஷு லோகேஷு = மூவுலகங்களுக்கும்; ஸம்மதஸ் = ஏற்புடையவன்; க்ஷமாகு³ணை꞉ = பொறுமை குணத்தில்; வஸுதா⁴யா꞉ = வசுதைக்கும் {பூமிக்கும்}; ³த்³த்⁴யா = புத்தியில்; ப்³ருஹஸ்பதேஸ் = பிருஹஸ்பதிக்கும்; துல்யோ வீர்யேணாபி ² = துல்லியமான வீரத்தில்; சசீபதே꞉ = சசீபதிக்கும்
பொருள்: இந்த சிரேஷ்டகுணங்களை {சிறந்த குணங்களைக்} கொண்ட அந்தப் பார்த்திவாத்மஜன் {மன்னனின் மகன்}, பிரஜைகளுக்கு {மக்களுக்கு} நல்லவனாகவும், மூவுலகங்களுக்கும் ஏற்புடையவனாகவும் இருந்தான். அவன், பொறுமை குணத்தில் வசுதைக்கும் {பூமிக்கும்}, புத்தியில் பிருஹஸ்பதிக்கும், துல்லியமான வீரியத்தில் சதிபதிக்கும் {இந்திரனுக்கும்} ஒப்பானவனாக இருந்தான்.(31,32அ)
ததா² ஸர்வப்ரஜாகாந்தை꞉ ப்ரீதிஸஞ்ஜநநை꞉ பிது꞉ || 2-1-32
கு³ணைர்விருருசே ராமோ தீ³ப்த꞉ ஸூர்ய இவாம்ஷு²பி⁴꞉ |
பதப்பிரிப்பு: ததா² = அதைப்போல; ஸர்வப்ரஜாகாந்தை꞉ = மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரிய; ப்ரீதிஸஞ்ஜநநை꞉ = மகிழ்ச்சியின் பிறப்பிடம்; பிது꞉ = பிதா;
கு³ணைர் = குணங்களால்; விருருசே = ஒளிர்ந்து கொண்டிருந்தான்; ராமோ = ராமன்; தீ³ப்த꞉ = ஒளிரும்; ஸூர்ய இவ = சூரியனைப் போல; அம்ஷு²பி⁴꞉ = கதிர்களால்;
மாற்றியமைத்தால்: அம்ஷு²பி⁴꞉ = கதிர்களால்; தீ³ப்த꞉ = ஒளிரும்; ஸூர்ய இவ = சூரியனைப் போல; ஸர்வப்ரஜாகாந்தை꞉ = மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரிய; பிது꞉ = பிதா; ப்ரீதிஸஞ்ஜநநை꞉ = மகிழ்ச்சியின் பிறப்பிடம்; கு³ணைர் = குணங்களால்; ராமோ = ராமன்; விருருசே = ஒளிர்ந்து கொண்டிருந்தான்;
பொருள்: கதிர்களால் ஒளிரும் சூரியனைப் போலவே மக்கள் அனைவரின் விருப்பத்திற்குரியவையும், பிதாவின் {தந்தையான தசரதனின்} மகிழ்ச்சிக்குப் பிறப்பிடமாகத் திகழ்ந்தவையுமான குணங்களால் ராமன் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32ஆ,33அ)
தமேவம் வ்ரத்தஸம்பந்நமப்ரத்⁴ருஷ்யபராக்ரமம் || 2-1-33
லோகபாலோபமம் நாத²மகாமயத மேதி³நீ |
பதப்பிரிப்பு: ஏவம் வ்ரத்தஸம்பந்நம் = விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், அப்ரத்⁴ருஷ்யபராக்ரமம் =வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவன்;
லோகபாலோபமம் = லோகபாலர்களுக்கு ஒப்பான; தம் = அவனே; நாத²ம் = நாதனாக; அகாமயத = விரும்பினாள்; மேதி³நீ = பூமாதேவி;
மாற்றியமைத்தால்: ஏவம் வ்ரத்தஸம்பந்நம் = விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், அப்ரத்⁴ருஷ்யபராக்ரமம் =வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவன்;
லோகபாலோபமம் = லோகபாலர்களுக்கு ஒப்பான; தம் = அவன்; நாத²ம் = நாதனாக; நாத²ம் = நாதனாக; அகாமயத = விரும்பினாள்; மேதி³நீ = பூமாதேவி; அகாமயத = விரும்பினாள்;
பொருள்: விரதக் கட்டுப்பாடுள்ளவனாகவும், வீழ்த்தப்பட முடியாத பராக்கிரமம் கொண்டவனாகவும், லோகபாலர்களுக்கு ஒப்பானவனாகவும் இருந்த அவனே {ராமனே} தன் நாதனாக வேண்டுமென மேதினி {பூமாதேவி} விரும்பினாள்.(33ஆ,34அ)
ஏதைஸ்து ப³ஹுபி⁴ர்யுக்தம் கு³ணைரநுபமை꞉ ஸுதம் || 2-1-34
த்³ருஷ்ட்வா த³ஷ²ரதோ² ராஜா சக்ரே சிந்தாம் பரந்தப꞉ |
பதப்பிரிப்பு: ஏதைஸ்து = இந்த; ப³ஹுபி⁴ர் = பலவற்றை; யுக்தம் = கண்டு; கு³ணைர்= குணங்கள்; அநுபமை꞉ = ஒப்பற்ற; ஸுதம் = மகனிடம்;
த்³ருஷ்ட்வா = கண்ட; த³ஷ²ரதோ²= தசரதன்; ராஜா = ராஜா; சக்ரே = வளர்த்தான்; சிந்தாம் = சிந்தனையை; பரந்தப꞉ = பகைவரை அழிப்பவன்;
மாற்றியமைத்தால்: பரந்தப꞉ = பகைவரை அழிப்பவன்; ராஜா = ராஜா; த³ஷ²ரதோ²= தசரதன்; ஸுதம் = மகனிடம்; அநுபமை꞉ = ஒப்பற்ற; கு³ணைர்= குணங்கள்; ப³ஹுபி⁴ர் = பலவற்றை; யுக்தம் = கண்டு; சிந்தாம் = சிந்தனையை; சக்ரே = வளர்த்தான்;
பொருள்: பரந்தபனான {பகைவரை அழிப்பவனான} ராஜா {தசரதன்}, தன் மகனிடம் {ராமனிடம்} இவ்வாறான ஒப்பற்ற குணங்கள் பலவற்றையும் கண்டு சிந்திக்கத் தொடங்கினான்.(34ஆ,35அ)
அத² ராஜ்ஞோ ப³பூ⁴வைவம் வ்ருத்³த⁴ஸ்ய சிரஜீவிந꞉ || 2-1-35
ப்ரீதிரேஷா கத²ம் ராமோ ராஜா ஸ்யாந்மயி ஜீவதி |
பதப்பிரிப்பு: அத² = பின்னர்; ராஜ்ஞோ = ராஜா தசரதன்; ப³பூ⁴வைவம் = இவ்வாறு ஆனான்; வ்ருத்³த⁴ஸ்ய = முதிர்ந்தவன்; சிரஜீவிந꞉ = நீண்ட ஆயுள் கொண்டவன்;
ப்ரீதிரேஷா = இந்த மகிழ்ச்சி; கத²ம் =ஆவதை; ராமோ = ராமன்; ராஜா = ராஜாவாகும்; ஸ்யாந்மயி = எவ்வாறு; ஜீவதி = ஜீவித்திருக்கும்போதே;
மாற்றியமைத்தால்: அத² = பின்னர்; சிரஜீவிந꞉ = நீண்ட ஆயுள் கொண்டவன்; வ்ருத்³த⁴ஸ்ய = முதிர்ந்தவன்; ராஜ்ஞோ = ராஜா தசரதன்; ஜீவதி = ஜீவித்திருக்கும்போதே; ராமோ = ராமன்; ராஜா = ராஜாவாகும்; கத²ம் =ஆவதை; ப்ரீதிரேஷா = இந்த மகிழ்ச்சி; ஸ்யாந்மயி = எவ்வாறு {மகிழ்வேனா};
பொருள்: பிறகு, சிரஞ்சீவியும், முதிர்ந்தவனுமான அந்த ராஜா {தசரதன்}, "நான் ஜீவித்திருக்கும்போதே ராமன் ராஜனாகி இவ்வாறு மகிழ்வேனா?" {என்று நினைத்தான்}.(35ஆ,36அ)
ஏஷா ஹ்யஸ்ய பரா ப்ரீதிர்ஹ்ருதி³ ஸம்பரிவர்ததே
கதா³ நாம ஸுதம் த்³ரக்ஷ்யாம்யபி⁴ஷிக்தமஹம் ப்ரியம் |
பதப்பிரிப்பு: ஏஷா = விருப்பம்; அஸ்ய = அவனது; பரா ப்ரீதிர் = பரம மகிழ்ச்சி; ஹ்ருதி³ = இதயத்தில்; ஸம்பரிவர்ததே = உண்மையில் எழுந்தது;
கதா³ நாம = எப்போது; ஸுதம் = மகன்; த்³ரக்ஷ்யாமி = காண்போம்; அபி⁴ஷிக்தம் = மகுடம் சூடும்; அஹம் ப்ரியம் = தன் அன்பு;
மாற்றியமைத்தால்: தன் அன்பு; ஸுதம் = மகன்; அபி⁴ஷிக்தம் = மகுடம் சூடும்; கதா³ நாம = எப்போது; த்³ரக்ஷ்யாமி = காண்போம்; பரா ப்ரீதிர் = பரம மகிழ்ச்சி; ஏஷா = விருப்பம்; அஸ்ய = அவனது; ஹ்ருதி³ = இதயத்தில்; ஸம்பரிவர்ததே = உண்மையில் எழுந்தது;
பொருள்: தன் பிரிய சுதனின் அபிஷேகத்தை {அன்பு மகனின் பட்டாபிஷேகத்தை} எப்போது காண்போம் என்ற பரம மகிழ்ச்சியான விருப்பம் அவனது இதயத்தில் உண்மையில் எழுந்தது.(36ஆ,37அ)
வ்ருத்³தி⁴காமோ ஹி லோகஸ்ய ஸர்வபூ⁴தாநுகம்பந꞉ || 2-1-37
மத்த꞉ ப்ரியதரோ லோகே பர்ஜந்ய இவ வ்ருஷ்டிமான் |
பதப்பிரிப்பு: வ்ருத்³தி⁴காமோ = வளர்ச்சியை விரும்புபவன்; ஹி லோகஸ்ய = உண்மையில் உலகத்தின்; ஸர்வபூ⁴தாநுகம்பந꞉= வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவன்;
மத்த꞉ = என்னைவிட; ப்ரியதரோ = விரும்பப்படுபவன்; லோகே = இவ்வுலகில்; பர்ஜந்ய இவ = பர்ஜன்யனைப் போல்; வ்ருஷ்டிமான் = மழையைக் கொண்ட;
மாற்றியமைத்தால்: லோகே = இவ்வுலகில்; மத்த꞉ = என்னைவிட; ப்ரியதரோ = விரும்பப்படுபவன்; வ்ருஷ்டிமான் = மழையைக் கொண்ட; பர்ஜந்ய இவ = பர்ஜன்யனைப் போல்; ஹி லோகஸ்ய = உண்மையில் உலகத்தின்; வ்ருத்³தி⁴காமோ = வளர்ச்சியை விரும்புபவன்; ஸர்வபூ⁴தாநுகம்பந꞉= வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவன்;
பொருள்: இந்த உலகில் என்னைவிட அதிகம் விரும்பப்படுபனாகவும், மழையைக் கொண்ட பர்ஜன்யனைப் போல, உண்மையில் உலகத்தின் வளர்ச்சியை விரும்புகிறவனாகவும், வாழும் உயிரினங்கள் அனைத்திடம் அன்பு பாராட்டுபவனுமாகவும் இருக்கிறான்.(37ஆ,38அ)
யமஷ²க்ரஸமோ வீர்யே ப்³ருஹஸ்பதிஸமோ மதௌ || 2-1-38
மஹீத⁴ரஸமோ த்⁴ருத்யாம் மத்தஷ்²ச கு³ணவத்தர꞉ |
பதப்பிரிப்பு: யமஷ²க்ரஸமோ = யமனுக்கும், சக்ரனுக்கும் சமமானவன்; வீர்யே = வீரத்தில்; ப்³ருஹஸ்பதிஸமோ = பிருஹஸ்பதிக்கு இணையானவன்; மதௌ = மதியில்;
மஹீத⁴ரஸமோ = மலைக்கு இணையானவன்; த்⁴ருத்யாம் = துணிவில்; மத்தஷ்²ச = என்னிலும்; கு³ணவத்தர꞉ குணங்களில் மேலானவான்
மாற்றியமைத்தால்: வீர்யே = வீரத்தில்; யமஷ²க்ரஸமோ = யமனுக்கும், சக்ரனுக்கும் சமமானவன்; மதௌ = மதியில்; ப்³ருஹஸ்பதிஸமோ = பிருஹஸ்பதிக்கு இணையானவன்; த்⁴ருத்யாம் = துணிவில்; மஹீத⁴ரஸமோ = மலைக்கு இணையானவன்; கு³ணவத்தர꞉ குணங்களில் மேலானவான்; மத்தஷ்²ச = என்னிலும்;
பொருள்: வீரத்தில் யமனுக்கும், சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்} இணையானவனாகவும், மதியில் {அறிவில்} பிருஹஸ்பதிக்கு இணையானவனும், துணிவில் மலைக்கு இணையானவனுமாக இருக்கிறான். குணங்களில் என்னிலும் மேலானவனாகவும் திகழ்கிறான்.(38ஆ,39அ)
மஹீமஹமிமாம் க்ருத்ஸ்நாமதி⁴திஷ்ட²ந்தமாத்மஜம் || 2-1-39
அநேந வயஸா த்³ருஷ்ட்வா யதா² ஸ்வர்க³மவாப்நுயாம் |
பதப்பிரிப்பு: மஹீ = பூமி; அஹம் = என்; இமாம் = இந்த; க்ருத்ஸ்நாம் = முழுவதும்; அதி⁴திஷ்ட²ந்தம் = ஆள்வதை; ஆத்மஜம் = மகன்;
அநேந வயஸா = இந்த வயதில்; த்³ருஷ்ட்வா = கண்ட பிறகு; யதா² = எவ்வாறு; ஸ்வர்க³ம் = சுவர்க்கம்; அவாப்நுயாம் = அடைவேன்;
மாற்றியமைத்தால்: இமாம் = இந்த; மஹீ = பூமி; க்ருத்ஸ்நாம் = முழுவதும்; அஹம் = என்; ஆத்மஜம் = மகன்; அதி⁴திஷ்ட²ந்தம் = ஆள்வதை; அநேந வயஸா = இந்த வயதில்; த்³ருஷ்ட்வா = கண்ட பிறகு; யதா² = எவ்வாறு; ஸ்வர்க³ம் = சுவர்க்கம்; அவாப்நுயாம் = அடைவேன்;
பொருள்: இந்த மஹீ {பூமி} முழுவதையும் என் மகன் ஆள்வதை இந்த வயதில் கண்டு சுவர்க்கத்தை அடைவேனா?" {என்றும் நினைத்தான்}.(39ஆ,40அ)
இத்யேதைர்விவிதை⁴ஸ்தைஸ்தைரந்யபார்தி²வது³ர்லபை⁴꞉ || 2-1-40
ஷி²ஷ்டைரபரிமேயைஷ்²ச லோகே லோகோத்தரைர்கு³ணை꞉ |
தம் ஸமீக்ஷ்ய மஹாராஜோ யுக்தம் ஸமுதி³தை꞉ ஷு²பை⁴꞉ || 2-1-41
நிஷ்²சித்ய ஸசிவை꞉ ஸார்த⁴ம் யுவராஜமமந்யத |
பதப்பிரிப்பு: இதி = இவ்வாறு; ஏதைர் = இந்த; விவிதை⁴ஸ் = பல்வேறு; தைஸ்தைர் = அந்தந்த; அந்யபார்தி²வ = அந்நிய பார்த்திபர்களுக்கு; து³ர்லபை⁴꞉ = வாய்க்காத
ஷி²ஷ்டைர் = எஞ்சிய; அபரிமேயை = அளவிடப்பட முடியாத; அஷ்²ச லோகே = உலகில்; லோகோத்தரைர் = உலகில் சிறந்த; கு³ணை꞉ = குணங்களும்;
தம் = அவனிம் {ராமனிடம்}; ஸமீக்ஷ்ய = முழுமையாகக் கண்ட; மஹாராஜோ = மஹாராஜன் {தசரதன்}; யுக்தம் = கொண்ட; ஸமுதி³தை꞉ = திரண்ட; ஷு²பை⁴꞉ = மங்கலமான;
நிஷ்²சித்ய = நிச்சயித்து; ஸசிவை꞉ ஸார்த⁴ம் = ஆலோசகர்களுடன் கூடி; யுவராஜம் = யுவராஜனாக்க; அமந்யத = துணிந்தான்;
மாற்றியமைத்தால்: இத்யே = இவ்வாறே; மஹாராஜோ = மஹாராஜன் {தசரதன்}; தைஸ்தைர் = அந்தந்த; அந்யபார்தி²வ = அந்நிய பார்த்திபர்களுக்கு; து³ர்லபை⁴꞉ = வாய்க்காத; ஏதைர் = இந்த; விவிதை⁴ஸ் = பல்வேறு; லோகே = உலகில்; அபரிமேயை = அளவிடப்பட முடியாத; லோகோத்தரைர் = உலகில் எஞ்சிய; ஷு²பை⁴꞉ = மங்கலமான; கு³ணை꞉ = குணங்களும்; தம் = அவனிம் {ராமனிடம்}; ஸமுதி³தை꞉ = திரண்டிருப்பதை; ஸமீக்ஷ்ய = முழுமையாகக் கண்ட; நிஷ்²சித்ய = நிச்சயித்து; ஸசிவை꞉ ஸார்த⁴ம் = ஆலோசகர்களுடன் கூடி; யுவராஜம் = யுவராஜனாக; அமந்யத = துணிந்தான்;
பொருள்: இவ்வாறே அந்த மஹாராஜன் {தசரதன்}, அந்நிய பார்த்திபர்களுக்கு {வேறு மன்னர்களுக்கு} வாய்க்காத இந்தப் பல்வேறு குணங்களும், உலகிற் சிறந்தவர்களாலும் அளவிடப்பட முடியாத இன்னும் சிறந்த பல மங்கல குணங்களும் அவனிடம் திரண்டிருப்பதை முழுமையாகக் கண்டு நிச்சயித்து, ஆலோசகர்களுடன் கூடி யுவராஜனாக்கத் துணிந்தான்.(40ஆ,41,42அ)
தி³வ்யந்தரிக்ஷே பூ⁴மௌ ச கோ⁴ரமுத்பாதஜம் ப⁴யம்
ஸஞ்சசக்ஷே(அ)த² மேதா⁴வீ ஷ²ரீரே சாத்மநோ ஜராம்
பதப்பிரிப்பு: தி³வி = {சுவர்க்கத்தில்}; அந்தரிக்ஷே = அந்தரத்தில் {வானத்தில்}; பூ⁴மௌ ச = பூமியில்; கோ⁴ரம் = கோரமான {பயங்கரமான}; உத்பாதஜம் = தீய சகுனங்கள்; ப⁴யம் = அஞ்சி
ஸஞ்சசக்ஷே = உணர்ந்து {கண்டு}; (அ)த² = அதன்பிறகு; மேதா⁴வீ = மேதாவி; ஷ²ரீரே = உடலில்; ஆத்மநோ = தன்; ஜராம் = முதுமை;
மாற்றியமைத்தால்: (அ)த² = அதன்பிறகு; மேதா⁴வீ = மேதாவி; தி³வி = {சுவர்க்கத்தில்}; அந்தரிக்ஷே = அந்தரத்தில் {வானத்தில்}; பூ⁴மௌ ச = பூமியில்; உத்பாதஜம் = தீய சகுனங்கள்; ஆத்மநோ = தன்; ஷ²ரீரே = உடலில்; ஜராம் = முதுமை; கோ⁴ரம் = கோரமான {பயங்கரமான}; ப⁴யம் = அஞ்சி
பொருள்: அதன்பிறகு அந்த மேதாவி {தசரதன்}, சொர்க்கத்திலும், அந்தரத்திலும் {வானத்திலும்}, பூமியிலும் உண்டாகும் உத்பாதங்களையும் {தீய சகுனங்களையும்}, தன் சரீரம் அடையும் முதுமையையும் உணர்ந்து கோரமான பயத்தை அடைந்து {பேரச்சம் கொண்டு},(42ஆ,43அ)
பூர்ணசந்த்³ராநநஸ்யாத² ஷோ²காபநுத³மாத்மந꞉ || 2-1-43
லோகே ராமஸ்ய பு³பு³தே⁴ ஸம்ப்ரியத்வம் மஹாத்மந꞉ |
பதப்பிரிப்பு: பூர்ணசந்த்³ராநநஸ்ய = = பூர்ண சந்திரனைப் போன்ற முகம்; அத² = மேலும்; ஷோ²காபநுத³ம் = சோகம் விலகும்; ஆத்மந꞉ = தன்;
லோகே = உலகத்தில்; ராமஸ்ய = ராமனால்; பு³பு³தே⁴ = அறிந்தான்; ஸம்ப்ரியத்வம் = விரும்பப்படுபவன்; மஹாத்மந꞉ = மஹாத்மா;
மாற்றியமைத்தால்: பூர்ணசந்த்³ராநநஸ்ய = = பூர்ண சந்திரனைப் போன்ற முகம்; மஹாத்மந꞉ = மஹாத்மா; லோகே = உலகத்தில்; ஸம்ப்ரியத்வம் = விரும்பப்படுபவன்; ராமஸ்ய = ராமனால்; ஆத்மந꞉ = தன்; ஷோ²காபநுத³ம் = சோகம் விலகும்; பு³பு³தே⁴ = அறிந்தான்;
பொருள்: பூர்ணசந்திரனைப் போன்ற முகம் படைத்தவனும், மஹாத்மாவும், உலகத்தால் விரும்பப்படுபவனுமான ராமனால் தன் சோகம் விலகுமென அறிந்து,(43ஆ,44அ)
ஆத்மநஷ்²ச ப்ரஜாநாம் ச ஷ்²ரேயஸே ச ப்ரியேண ச || 2-1-44
ப்ராப்தகாலேந த⁴ர்மாத்மா ப⁴க்த்யா த்வரிதவான் ந்ருப꞉ |
பதப்பிரிப்பு: ஆத்மநஷ்²ச = தனக்கும்; ப்ரஜாநாம் ச = பிரஜைகளுக்கும்; ஷ்²ரேயஸே ச = நன்மையை; ப்ரியேண ச = விரும்பி;
ப்ராப்தகாலேந = காலங்கனிந்ததென; த⁴ர்மாத்மா = தர்மாத்மா; ப⁴க்த்யா = கருதி; த்வரிதவான் = விரைந்து; ந்ருப꞉ = மன்னன்;
மாற்றியமைத்தால்: த⁴ர்மாத்மா = தர்மாத்மா; ந்ருப꞉ = மன்னன்; ஆத்மநஷ்²ச = தனக்கும்; ப்ரஜாநாம் ச = பிரஜைகளுக்கும்; ஷ்²ரேயஸே ச = நன்மையை; ப்ரியேண ச = விரும்பி; ப்ராப்தகாலேந = காலங்கனிந்ததென; ப⁴க்த்யா = கருதி; த்வரிதவான் = விரைந்து;
பொருள்: தர்மாத்மாவான அந்த நிருபன் {தசரதன்}, தனக்கும், பிரஜைகளுக்கும் நன்மையை விரும்பி, அதற்கான காலமும் கனிந்துவிட்டதைக் கருதி விரைந்து,(44ஆ,45அ)
நாநாநக³ரவாஸ்தவ்யான் ப்ருத²க்³ஜாநபதா³நபி || 2-1-45
ஸமாநிநாய மேதி³ந்யா꞉ ப்ரதா⁴நாந்ப்ருதி²வீபதீன் |
பதப்பிரிப்பு: நாநாநக³ரவாஸ்தவ்யான் = பல்வேறு நகரங்களில் வசிப்பவர்களுக்கும்; ப்ருத²க்³ = தனித்தனியாக; ஜாநபதா³நபி = ஜானபதங்களில் {கிராமங்களில்} வசிப்பவர்களுக்கும்;
ஸமாநிநாய = அழைப்பு விடுத்தான்; மேதி³ந்யா꞉ = நிலங்களின்; ப்ரதா⁴நாந் = பிரதான அதிகாரிகளுக்கும்; ப்ருதி²வீபதீன் = பூமியின் தலைவர்களுக்கும்;
மாற்றியமைத்தால்: நாநாநக³ரவாஸ்தவ்யான் = பல்வேறு நகரங்களில் வசிப்பவர்களுக்கும்; ஜாநபதா³நபி = ஜானபதங்களில் {கிராமங்களில்} வசிப்பவர்களுக்கும்; மேதி³ந்யா꞉ = நிலங்களின்; ப்ரதா⁴நாந் = பிரதான அதிகாரிகளுக்கும்; ப்ருதி²வீபதீன் = பூமியின் தலைவர்களுக்கும்; ப்ருத²க்³ = தனித்தனியாக; ஸமாநிநாய = அழைப்பு விடுத்தான்;
பொருள்: பல்வேறு நகரங்களிலும், ஜானபதங்களிலும் {கிராமங்களிலும்} வசிப்பவர்களுக்கும், மேதினியில் பிரதானமானவர்களுக்கும், பிருத்வீபதிகளுக்கும் {பூமியின் தலைவர்களுக்கும்} தனித்தனியாக அழைப்பு விடுத்தான்.(45ஆ,46அ)
ந து கேகயராஜாநம் ஜநகம் வா நராதி⁴ப꞉ || 2-1-46
த்வரயா சாநயாமாஸ பஷ்²சாத்தௌ ஷ்²ரோஷ்யத꞉ ப்ரியம் |
பதப்பிரிப்பு: ந து = இல்லை; கேகயராஜாநம் = கேகய ராஜனையும்; ஜநகம் வா = ஜனகனையும்; நராதி⁴ப꞉ = மனிதர்களின் தலைவன்;
த்வரயா = அவசரமடைந்த; ஆநயாமாஸ = அழைக்க; பஷ்²சாத் பிறகு; தௌ = இருவரும்; ஷ்²ரோஷ்யத꞉ = கேட்கட்டும்; ப்ரியம் = நல்லது
மாற்றியமைத்தால்: த்வரயா = அவசரமடைந்த; நராதி⁴ப꞉ = மனிதர்களின் தலைவன்; கேகயராஜாநம் = கேகய ராஜன்; ஜநகம் வா = ஜனகன்; தௌ = இருவரும்; ப்ரியம் = நல்லது; பஷ்²சாத் பிறகு ஷ்²ரோஷ்யத꞉ = கேட்கட்டும்; ஆநயாமாஸ = அழைக்க; ந து = இல்லை;
பொருள்: அவசரமடைந்த அந்த நராதிபன் {மனிதர்களின் தலைவன்}, கேகயராஜனும் {பரதனின் தாய்மாமனான யுதாஜித்தும்}, ஜனகனும் {வருவதற்குக் காலதாமதமாகும் என்பதால்} இந்த நல்ல செய்தியை பிறகு அறிந்து கொள்ளட்டும் என்று நினைத்து அவர்களை அழைக்காதிருந்தான்.(46ஆ,47அ)
தாந்வேஷ்²மநாநாப⁴ரணைர்யதா²ர்ஹம் ப்ரதிபூஜிதான் || 2-1-47
த³த³ர்ஷா²லங்க்ருதோ ராஜா ப்ரஜாபதிரிவ ப்ரஜா꞉ |
பதப்பிரிப்பு: தாந் = அனைவருக்கும்; வேஷ்²மநாநாப⁴ரணைர் = வசிப்பிடங்களும், பல்வேறு ஆபரணங்களும் கொடுத்து; யதா²ர்ஹம் = தகுந்த; ப்ரதிபூஜிதான் = வந்தவர்களை மதிப்புடன் அழைத்து;
த³த³ர்ஷா²= பார்த்துக் கொண்டான்; அலங்க்ருதோ = அலங்கரித்துக் கொண்டு; ராஜா = ராஜா; ப்ரஜாபதிர் = பிரஜாபதி போல்; இவ ப்ரஜா꞉ = பிரஜைகளை;
மாற்றியமைத்தால்: ராஜா = ராஜா; ப்ரதிபூஜிதான் = அங்கு வந்தவர்களை மதிப்புடன் அழைத்து; தாந் = அனைவருக்கும்; யதா²ர்ஹம் = தகுந்த; வேஷ்²மநாநாப⁴ரணைர் = வசிப்பிடங்களும், பல்வேறு ஆபரணங்களும் கொடுத்து; அலங்க்ருதோ = அலங்கரித்துக் கொண்டு; இவ ப்ரஜா꞉ = பிரஜைகளை கவனிக்கும்; ப்ரஜாபதிர் = பிரஜாபதி போல்; த³த³ர்ஷா²= பார்த்துக் கொண்டான்;
பொருள்: அந்த ராஜா, அங்கு வந்தவர்களை மதிப்புடன் அழைத்து தகுந்த வசிப்பிடங்களையும், ஆபரணங்களையும் அளித்து, தன்னையும் அலங்கரித்துக் கொண்டு, பிரஜைகளை {பிள்ளைகளைக்} கவனிக்கும் பிரஜாபதி போல {பிரம்மனைப் போல} அவர்களைப் பார்த்துக் கொண்டான்.(47ஆ,48அ)
அதோ²பவிஷ்டே ந்ருபதௌ தஸ்மிந்பரப³லார்த³நே || 2-1-48
தத꞉ ப்ரவிவிஷு²꞉ ஷே²ஷா ராஜாநோ லோகஸம்மதா꞉ |
பதப்பிரிப்பு: அத²= அதன்பிறகு; உபவிஷ்டே = அமர்ந்த; ந்ருபதௌ = மன்னன்; தஸ்மிந் = அவ்விடத்தில்; பரப³லார்த³நே = பகைவரின் படையை அழிக்கும்;
தத꞉ = பிறகு; ப்ரவிவிஷு²꞉ = பிரவேசித்தனர்; ஷே²ஷா = எஞ்சிய; ராஜாநோ = ராஜர்கள்; லோகஸம்மதா꞉ = உலகத்தால் விரும்பப்படும்;
மாற்றியமைத்தால்: அத²= அதன்பிறகு; லோகஸம்மதா꞉ = உலகத்தால் விரும்பப்படும்; ஷே²ஷா = எஞ்சிய; ராஜாநோ = ராஜர்கள்; பரப³லார்த³நே = பகைவரின் படையை அழிக்கும்; ந்ருபதௌ = மன்னன்; உபவிஷ்டே =அமர்ந்த; தத꞉ = பிறகு; தஸ்மிந் = அவ்விடத்தில்; ப்ரவிவிஷு²꞉ = பிரவேசித்தனர்;
பொருள்: அதன் பிறகு, உலகத்தால் விரும்பப்படுபவர்களான எஞ்சிய ராஜர்கள், பகைவரின் படையை அழிப்பவனான அந்த நிருபதி {தசரத ராஜன்} அமர்ந்ததும் அவ்விடத்தில் பிரவேசித்தனர்.(48ஆ,49அ)
அத² ராஜவிதீர்ணேஷு விவிதே⁴ஷ்வாஸநேஷு ச || 2-1-49
ராஜாநமேவாபி⁴முகா² நிஷேது³ர்நியதா ந்ருபா꞉ |
பதப்பிரிப்பு: அத² = பிறகு; ராஜவிதீர்ணேஷு = ராஜனால் ஒதுக்கப்பட்ட; விவிதே⁴ஷ் = பல்வேறு; ஆஸநேஷு ச = ஆசனங்களில்
ராஜாநமேவ = ராஜனையே; அபி⁴முகா² = பார்த்தவாறு; நிஷேது³ர் = அமர்ந்தனர்; நியதா = விதிப்படி; ந்ருபா꞉ = மன்னர்கள்
மாற்றியமைத்தால்: அத² = பிறகு; ந்ருபா꞉ = மன்னர்கள்; ராஜவிதீர்ணேஷு = ராஜனால் ஒதுக்கப்பட்ட; விவிதே⁴ஷ் = பல்வேறு; ஆஸநேஷு ச = ஆசனங்களில்; ராஜாநமேவ = ராஜனையே; அபி⁴முகா² = பார்த்தவாறு; நியதா = விதிப்படி; நிஷேது³ர் = அமர்ந்தனர்;
பொருள்: பிறகு, அந்த நிருபர்கள், ராஜனால் ஒதுக்கப்பட்ட பல்வேறு ஆசனங்களில் அந்த ராஜனைப் பார்த்தவாறு விதிப்படி அமர்ந்தனர்.(49ஆ,50அ)
ஸ லப்³த⁴மாநைர்விநயாந்விதைர்ந்ருபை꞉ |
புராலயைர்ஜாநபதை³ஷ்²ச மாநவை꞉ |
உபோபவிஷ்டைர்ந்ருபதிர்வ்ருதோ ப³பௌ⁴ |
ஸஹஸ்ரசக்ஷுர்ப⁴க³வாநிவாமரை꞉ || 2-1-50
பதப்பிரிப்பு: லப்³த⁴மாநைர் = மதிக்கப்பட்டவர்கள்; விநயாந்விதைர் = எளிமையானவர்கள்; ந்ருபை꞉ = மன்னர்களால்;
புராலயைர் = நகரத்தார்; ஜாநபதை³= ஜானபதத்தார் {கிராமத்தார்}; ஷ்²ச மாநவை = குடிமக்கள்꞉ |
உபோபவிஷ்டைர் = நெருக்கமாக அமர்ந்திருந்தவர்கள்; ந்ருபதிர் = நிருபதி; வ்ருதோ = சூழப்பட்டு; ப³பௌ⁴ = ஒளிர்ந்தான்;
ஸஹஸ்ரசக்ஷுர் ப⁴க³வாநிவ = பகவான் ஸஹஸ்ரசக்ஷுவைப் போல; அமரை꞉ = அமரர்களால்;
மாற்றியமைத்தால்: லப்³த⁴மாநைர் = மதிக்கப்பட்டவர்கள்; விநயாந்விதைர் = எளிமையானவர்கள்; உபோபவிஷ்டைர் = நெருக்கமாக அமர்ந்திருந்தவர்கள்; ந்ருபை꞉ = மன்னர்களால்; புராலயைர் = நகரத்தாரால்; ஜாநபதை³= ஜானபதத்தாரால் {கிராமத்தாரால்}; மாநவை = குடிமக்களால்; வ்ருதோ = சூழப்பட்ட; ந்ருபதிர் = நிருபதி; அமரை꞉ = அமரர்களால் சூழப்பட்ட; ஸஹஸ்ரசக்ஷுர் ப⁴க³வாநிவ = பகவான் ஸஹஸ்ரசக்ஷுவைப் போல; ப³பௌ⁴ = ஒளிர்ந்தான்;
பொருள்: மதிக்கப்படுபவர்களும், எளிமையானவர்களும், நெருக்கமாக அமர்ந்தவர்களுமான அந்த நிருபர்களாலும், நகர மக்களாலும், ஜானபதர்களாலும் சூழப்பட்டிருந்த அந்த நிருபதி {தசரதன்}, அமரர்களால் சூழப்பட்ட பகவான் ஸஹஸ்ரசக்ஷுவை {ஆயிரங்கண்களைக் கொண்ட இந்திரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(50ஆ,இ,ஈ,உ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 001ல் உள்ள சுலோகங்கள் : 50
Previous | | Sanskrit | | TamilOnly | | English | | Next |