Saturday 4 May 2024

தூதனைக் கொல்லாதீர் என்ற விபீஷணன் | சுந்தர காண்டம் சர்க்கம் - 52 (27)

Messenger not to be killed - Vibhishana said | Sundara-Kanda-Sarga-52 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தூதனை வதம் செய்வது தகாது என்று ராவணனுக்கு அறிவுரை கூறிய விபீஷணன்...

Vibhishana speaking to Ravana not to kill Hanuman

மஹாத்மாவான அந்த வானரனின் அந்த வசனத்தைக் கேட்டு, குரோதத்தில் மூர்ச்சித்த {கோபத்தில் தன்னை மறந்த} ராவணன், ஹனுமானை வதம் செய்ய ஆணையிட்டான்.(1) துராத்மாவான ராவணன், அவனை வதம் செய்ய உத்தரவிட்டபோது, தூதனைக் கொல்வதை விபீஷணன் ஏற்கவில்லை.(2) காரியங்களின் விதங்களில் உறுதியுடன் இருப்பவனான அவன் {விபீஷணன்}, அந்த ரக்ஷோதிபதி {ராவணன்} குரோதமடைந்திருப்பதையும், எழுந்திருக்கும் அந்தக் காரியத்தையும் அறிந்து, செய்ய வேண்டிய காரியத்தைக் குறித்துச் சிந்தித்தான்.(3)

சுந்தர காண்டம் 52ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே ஸுந்த³ரகாண்டே³ த்³விபஞ்சாஷ²꞉ ஸர்க³꞉

Vibhishana speaking to Ravana not to kill Hanuman

தஸ்ய தத் வசநம் ஷ்²ருத்வா வாநரஸ்ய மஹாத்மந꞉ |
ஆஜ்ஞாபயத் வத⁴ம் தஸ்ய ராவண꞉ க்ரோத⁴ மூர்சித꞉ || 5-52-1

வதே⁴ தஸ்ய ஸமாஜ்ஞப்தே ராவணேந து³ராத்மநா |
நிவேதி³தவதோ தௌ³த்யம் ந அநுமேநே விபீ⁴ஷண꞉ || 5-52-2

தம் ரக்ஷோ அதி⁴பதிம் க்ருத்³த⁴ம் தச் ச கார்யம் உபஸ்தி²தம் |
விதி³த்வா சிந்தயாமாஸ கார்யம் கார்ய விதௌ⁴ ஸ்தி²த꞉ || 5-52-3

நிஷ்²சித அர்த²꞉ தத꞉ ஸாம்நா ஆபூஜ்ய ஷ²த்ருஜித் அக்³ரஜம் |
உவாச ஹிதம் அத்யர்த²ம் வாக்யம் வாக்ய விஷா²ரத³꞉ || 5-52-4

Thursday 2 May 2024

கடும் எச்சரிக்கை | சுந்தர காண்டம் சர்க்கம் - 51 (46)

Stern warning | Sundara-Kanda-Sarga-51 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனுக்கு நல்ல ஆலோசனை வழங்கவும், அவனைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்த ஹனுமான்...

Hanuman warns Ravana

சத்வவானான ஹரிசத்தமன் {பலம்நிறைந்தவனும், குரங்குகளில் சிறந்தவனுமான ஹனுமான்}, பெரும்பலம் கொண்ட அந்த தசானனனை {பத்து முகம் கொண்ட ராவணனைக்} கண்டு, அவனிடம் அர்த்தம் பொதிந்த {பின்வரும்} வாக்கியத்தைத் தயக்கமின்றி சொன்னான்:(1) "இராக்ஷசேந்திரா, சுக்ரீவரின் ஆணையின் பேரில் நான் இங்கே உன் ஆலயத்திற்கு {வசிப்பிடத்திற்கு} வந்தேன். உன் சகோதரரான ஹரீசர் {குரங்குகளின் தலைவர் சுக்ரீவர்}[1], உன் குசலத்தை {நலத்தை} விசாரித்தார்.(2) உன் சகோதரரான மஹாத்மா சுக்ரீவர் அனுப்பிய செய்தியும், இம்மையிலும், மறுமையிலும் தர்மத்தையும், அர்த்தத்தையும் ஈட்டுவதில் நன்மை பயக்கக்கூடியதுமான வாக்கியத்தைக் கேட்பாயாக.(3)

சுந்தர காண்டம் 51ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே ஸுந்த³ரகாண்டே³ ஏகபங்சஷ²꞉ ஸர்க³꞉

Hanuman warns Ravana

தம் ஸமீக்ஷ்ய மஹாஸத்த்வம் ஸத்த்வவான் ஹாரி ஸத்தம꞉ |
வாக்யம் அர்த²வத் அவ்யக்³ர꞉ தம் உவாச த³ஷ² ஆநநம் || 5-51-1

அஹம் ஸுக்³ரீவ ஸந்தே³ஷா²த் இஹ ப்ராப்த꞉ தவ ஆலயம் |
ராக்ஷஸ இந்த்³ர ஹரி ஈஷ²꞉ த்வாம் ப்⁴ராதா குஷ²லம் அப்³ரவீத் || 5-51-2

ப்⁴ராது꞉ ஷ்²ருணு ஸமாதே³ஷ²ம் ஸுக்³ரீவஸ்ய மஹாத்மந꞉ |
த⁴ர்ம அர்த² உபஹிதம் வாக்யம் இஹ ச அமுத்ர ச க்ஷமம் || 5-51-3

ராஜா த³ஷ²ரதோ² நாம ரத² குந்ஜர வாஜிமான் |
பிதா இவ ப³ந்து⁴꞉ லோகஸ்ய ஸுர ஈஷ்²வர ஸம த்³யுதி꞉ || 5-51-4

Tuesday 30 April 2024

பிரஹஸ்தனின் விசாரணை | சுந்தர காண்டம் சர்க்கம் - 50 (19)

Prahasta's enquiry | Sundara-Kanda-Sarga-50 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: ஹனுமானை விசாரித்த பிரஹஸ்தன்; இராமனின் தூதனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட ஹனுமான்...

Hanuman enquired by Ravana and Prahasta

மஹாபாஹுவும், உலகத்தை ராவணஞ் செய்ய {கதறி அழ} வைப்பவனுமான அந்த ராவணன், தன் எதிரில் நிற்கும் அந்த பிங்காக்ஷனை {மஞ்சள் நிறக் கண்களைக் கொண்ட ஹனுமானைப்} பார்த்து, மஹத்தான கோபத்தை அடைந்தான். தேஜஸ்ஸால் நிறைந்த கபீந்திரனைக் குறித்த சந்தேகத்தால் மனம் பீடிக்கப்பட்டவனாக {பின்வருமாறு} ஆலோசித்தான்:(1,2அ) "சாக்ஷாத் நந்தி பகவானே இங்கே வந்திருக்கிறானா என்ன? பூர்வத்தில் கைலாசத்தை நான் அசைத்தபோது, எவன் என்னை சபித்தானோ அவனா {அதே நந்தியா} இவன்? அல்லது மஹாசுரன் பாணன் {பாணாசுரன்} வானர மூர்த்தியாக வந்திருக்கிறானா என்ன?" {என்று நினைத்தான் ராவணன்}.(2ஆ,3)

சுந்தர காண்டம் 50ம் ஸர்கம்

வால்மீகி ராமாயணே ஆதி³ காவ்யே ஸுந்த³ரகாண்டே³ பங்சாஷ²꞉ ஸர்க³꞉

Hanuman enquired by Ravana and Prahasta

தம் உத்³வீக்ஷ்ய மஹாபா³ஹு꞉ பிந்க³ அக்ஷம் புரத꞉ ஸ்தி²தம் |
ரோஷேண மஹதா ஆவிஷ்டோ ராவணோ லோக ராவண꞉ || 5-50-1
ஸ ராஜா ரோஷ தாம்ர அக்ஷ꞉ ப்ரஹஸ்தம் மந்த்ரி ஸத்தமம் |

கிமேஷ ப⁴க³வாந்நந்தீ³ ப⁴வேத்ஸாக்ஷாதி³ஹாக³த꞉ || 5-50-2
யேந ஷ²ப்தோ(அ)ஸ்மி கைலாஸே மயா ஸஞ்சாலிதே புரா |
ஸோ(அ)யம் வாநரமூர்தி꞉ ஸ்யாத்கிம்ஸ்வித்³பா³ணோ மஹாஸுர꞉ || 5-50-3

ஸ ராஜா ரோஷதாம்ராக்ஷ꞉ ப்ரஹஸ்தம் மந்த்ரிஸத்தமம் |
கால யுக்தம் உவாச இத³ம் வசோ விபுலம் அர்த²வத் || 5-50-4

து³ராத்மா ப்ருச்ச்²யதாம் ஏஷ குத꞉ கிம் வா அஸ்ய காரணம் |
வந ப⁴ந்கே³ ச கோ அஸ்ய அர்தோ² ராக்ஷஸீநாம் ச தர்ஜநே || 5-50-5

ஹனுமானின் ஆச்சரியம் | சுந்தர காண்டம் சர்க்கம் - 49 (20)

Hanuman wondered | Sundara-Kanda-Sarga-49 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராவணனின் தேஜஸ்ஸையும், மகிமையையும் கண்டு ஆச்சரியமடையும் ஹனுமான்...

Hanuman dragged in before Ravana

பிறகு, பீமவிக்கிரமனான அந்த ஹனுமான், அவனுடைய {இந்திரஜித்தின்} கர்மத்தால் வியப்படைந்து, குரோதத்தில் சிவந்த கண்களுடன் ரக்ஷோதிபனை {ராவணனைக்} கண்டான்.(1)

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை